Mhc orders january 3rd

[1/2, 20:35] Sekarreporter 1: சேவை வரி செலுத்தாதது தொடர்பான விவகாரத்தில் 10 முறை சம்மன் அனுப்பியும் ஜி.எஸ்.டி. அலுவலகத்தில் ஆஜராகாத நடிகர் விஷாலுக்கு 500 ரூபாய் அபராதம் விதித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு சரக்கு மற்றும் சேவை வரித்துறை அதிகாரிகள் நடிகர் விஷாலில் விசால் பிலிம் பேக்டரி அலுவலகத்தில் நடத்திய சோதனையில் ஒரு கோடி ரூபாய் வரை சேவை வரி செலுத்தாதது கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கான ஆவணங்கள் சிக்கியதையடுத்து, உரிமையாளர் விஷால் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க அதிகாரிகள் பல முறை சம்மன் அனுப்பினர்.

ஆனால் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்காததால், கடந்த 2018ஆம் ஆண்டு சேவை வரித்துறை சார்பில் விஷால் மீது சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நீதிபதி மீனாகுமாரி முன்னிலையில் நடந்தது.

அப்போது, 10 முறை சம்மன் அனுப்பியும் விஷால் ஆஜராகவில்லை என்றும், இதன்காரணமாக அவர் மீதான விசாரணையை முடிவுக்கு கொண்டு வர முடியவில்லை என்றும் சேவை வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில், சேவை வரித்துறையில் அவர் ஆஜராகாததாது விசாரணைக்கு இடையூறு விளைவித்து சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க வேண்டும் என்ற அவரது உள்நோக்கத்தை காட்டுவதாகவும், அதனால் நடிகர் விஷாலுக்கு 500 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார்.
[1/3, 11:47] Sekarreporter 1: தேசிய, மாநில சின்னங்களை தவறாக பயன்படுத்துவதை தடுப்பது தொடர்பான வழக்கில் நாளை மறுதினம் உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தேசிய, மாநில சின்னங்களை தவறாக பயன்படுத்துவதை தடுக்க வேண்டுமென தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் அறிவுறுத்திய வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சென்னை மாநகர காவல்துறை கூடுதல் ஆணையர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில், வாகனங்களிலும், நம்பர் ப்ளேட்களிலும் தேசிய சின்னங்களை தவறாக பயன்படுத்துவது தேசிய சின்னங்கள் பாதுகாப்பு சட்டம், இந்திய தண்டனை சட்டம் மற்றும் மோட்டார் வாகன சட்டம் ஆகியவற்றின் கீழ் தண்டனைக்குரியது என்பதால் உரிய வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு அபராதம், வழக்கு போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. தவறான வண்ணங்களிலான விளக்குகளை பயனடுத்தியதாக 4456 வழக்குகள், கருப்பு ஸ்டிக்கர்கள் தொடர்பாக 4697 வழக்குகள், தவறான நம்பர் பிளேட் தொடர்பாக 155331 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தெரிவிக்கப்பட்டிருந்தது.

அப்போது நீதிபதி குறுக்கிட்டு தேசிய மாநில சின்னங்களை தவறாக பயன்படுத்தபட்டதாக ஒரு வழக்கு கூட பதிவு செய்யப்பட்டதாக அறிக்கையில் இல்லை என நீதிபதி சுட்டிக்காட்டி, குற்றம் நடப்பதை காவல்துறையினர் வேடிக்கை பார்த்து கொண்டிருப்பது மிகவும் ஆபத்தானது என்றும், வழக்குபதிவு செய்யவும் நடவடிக்கை எடுக்கவும் வேண்டுமென அறிவுறுத்தினார். முன்னாள் நீதிபதிகள், அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.-க்கள், ஆகியோரால் தவறாக பயன்படுத்தப்படுவதையும் கட்டுப்படுத்த வேண்டுமெனவும் அறிவுறுத்தி உள்ளார்.

காவல்துறை தரப்பில் காவலர்களிடமிருந்து இதுபோன்ற புகார்கள் வரவில்லை என்றும், அப்படி வராதபோது உயர் அதிகாரி தாமாக முன்வந்து வழக்குப்பதிய முடியாது என விளக்கம் அளிக்கப்பட்டது.

அப்போது, அரசு வழக்கறிஞர் வங்கி மற்றும் காப்பீட்டு துறை ஊழியர்கள் மத்திய அரசின் முத்திரயை பயன்படுத்துகின்றனர் என்றும், இதற்கு தடை விதிக்கும் வகையில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

அதற்காகத்தான் கான்ஸ்டபிள் கண்டறிந்தால் கூட உடனடியாக நடவடிக்கை எடுக்க அறிவுறுத்துவதாக தெரிவித்த நீதிபதி, தகுந்த உயர் அதிகாரிகளிடம் அவர்கள் தெரிவித்தால் உடனடியாக வழக்குப்பதியப்பட வேண்டுமென அறிவுறுத்தினார். மேலும் நாட்டில் உள்ள அனைவரும் சமமாக பார்க்கப்படுகிறார்கள் என்பதை பொதுமக்கள் எதிர்பார்ப்பதாகவும், கிரிமினல்களும் இதுபோன்ற சின்னங்களை பயன்படுத்தி நடவடிக்கையிலிருந்து தப்பிப்பதாகவும் நீதிபதி தெரிவித்தார். அரசு, நீதித்துறை, காவல்துறை, வங்கி, காப்பீடு ஆகியவற்றில் பணிபுரிபவர்கள் தங்களின். தனியார் வாகனங்களில் பயன்படுத்தினார் நடவடிக்கைக்கு உள்ளாக்க வேண்டுமென காவல்துறைக்கு அறிவுறுத்தி உள்ளார்.

இதையடுத்து இந்த வழக்கில் நாளை மறுதினம் உத்தரவு பிறப்பிப்பதாக கூறி வழக்கை தள்ளிவைத்துள்ளார்.
[1/3, 12:41] Sekarreporter 1: அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பாவுக்கு எதிரான விசாரணை ஆணைய அறிக்கை நகலை அவருக்கு வழங்கலாமா என்பது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா, முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறி, அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் குழுவை நியமித்து முந்தைய அதிமுக அரசு உத்தரவிட்டது.

இந்த ஆணையத்தின் விசாரணையை எதிர்த்து சூரப்பா தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், விசாரணை அறிக்கை அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்க தடை விதித்து கடந்த பிப்ரவரியில் உத்தரவிட்டிருந்தது.

நீதிபதி கலையரசன் ஆணைய அறிக்கை மூடி முத்திரையிடப்பட்ட உறையில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, பல்கலைக்கழக வேந்தர் என்ற முறையில், சூரப்பா விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து தமிழக ஆளுநர் தான் முடிவெடுக்க வேண்டும் எனவும், அதற்காக ஆணைய அறிக்கை, ஆளுநருக்கு அனுப்ப உள்ளதாகவும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி பார்த்திபன் முன் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, விசாரணை ஆணையத்தின் அறிக்கை நகலை வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும், அத்ற்கு அளிக்கும் விளக்கத்தை ஆளுநருக்கு அனுப்பலாம் எனவும் சூரப்பா தரப்பில் கோரப்பட்டது.

இதையடுத்து, விசாரணை ஆணையத்தின் அறிக்கை நகலை சூரப்பாவுக்கு வழங்கலாமா என விளக்கமளிக்க தமிழக அரசு தலைமை வழககறிஞருக்கு அறிவுறுத்திய நீதிபதி, விசாரணையை திங்கள் கிழமைக்கு தள்ளிவைத்தார்.
[1/3, 16:08] Sekarreporter 1: நகர்புற உள்ளாட்சி தேர்தலின்போது வேட்புமனு தாக்கலில் தொடங்கி ஒவ்வொரு கட்டமும் வீடியோ பதிவு செய்யப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் உறுதியளித்துள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நேர்மையாகவும் நியாயமாக நடத்தக் கோரி மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தொடர்ந்த வழக்கில் மாநில தேர்தல் ஆணையம் பதிலளில்ல சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

15 மாநகராட்சிகளில் உள்ள 1064 வார்டுகளுக்கும், 121 நகராட்சிகளில் உள்ள  3468 வார்டுகளுக்கும், 528 பேரூராட்சிகளில்  உள்ள 8288 வார்டுகளுக்கும் நகர்ப்புற உள்ளாட்சி  தேர்தல் நடத்தப்பட வேண்டிய நிலையில், இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்த கோரி அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவர் மனுவில் ஊரக உள்ளாட்சி தேர்தலின்போது அதிமுக தொடர்ந்த வழக்கில்,

அனைத்து வாக்கு சாவடி,  வாக்குப்பெட்டி வைக்கப்படும் அறைகள், வாக்கு எண்ணும் மையங்களில் சிசிடிவி கேமரா பொறுத்தப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை உயர் நீதிமன்ற உத்தரவிட்டும், ஆளுங்கட்சிக்கு சாதகமாக பல்வேறு விதிமீறல்கள் அரங்கேறியதாக குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது தொடர்பாக கடந்த அக்டோபர் 20ஆம் தேதி ஆளுநரிடமும், ஊரக உள்ளாட்சி தேர்தலை போன்று தற்போதும் விதிமீறல் நடைபெற்றுவிட கூடாதென நவம்பர்  1ஆம் தேதி மாநில தேர்தல் ஆணையத்திடமும் அதிமுக சார்பில் மனு அளித்துள்ளதாகவும்,

 மனுவில், உரிய பரிந்துரைகளை அளிக்கும் வகையில் அனைத்து கட்சி கூட்டம் நடத்த வேண்டும், ஒரே கட்டமாக தேர்தலை நடத்த வேண்டும்,தேர்தல் நடவடிக்கைகள் முழுதும் சிசிடிவி பதிவு செய்யப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும், மத்திய அரசு அதிகாரிகளை தேர்தல் பார்வையாளராக நியமிக்க வேண்டும்,வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க மத்திய அரசு அதிகாரிகள் அல்லது வெளிமாநிலத்தை சேர்ந்த அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும்,.

வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்புக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படை அல்லது ரிசர்வ் படையை பயன்படுத்த வேண்டும் என கோரப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்

அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் அளித்த மனுவை பரீசிலித்து அதனை அமல்படுத்த உத்தரவிட வேண்டுமெனவும்,இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலை பின்பற்றி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த  உத்தரவிட வேண்டுமென கோரியுள்ளார்

இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது,
மாநில தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் பெற்று பதில் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தனர். இந்த நிலையில் வழக்கு இன்று மீண்டும் தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத்பண்டாரி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது,
மாநில தேர்தல் ஆணையம் சார்பில், வேட்புமனு தாக்கல் தொடங்கி ஒவ்வொரு கட்டமும் வீடியோ பதிவு செய்யப்படும் என்று தெரிவித்த து. வழக்கை விசாரித்த நீதிபதிகள் தேர்தலை, சுதந்திரமாகவும், மற்றும் நியாயமாகவும் நடத்துவது தொடர்பான அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளை யும் பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்..
[1/3, 18:38] Sekarreporter 1: அவதூறு வழக்கு தொடர்பாக சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுப்பிய சம்மனை ரத்து செய்யக்கோரி நடிகர் விஜய்சேதுபதி தொடர்ந்த வழக்கின் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த நடிகர் மகா காந்தி என்பவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், மருத்துவ பரிசோதனைக்காக மைசூர் செல்வதற்காக பெங்களூர் விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதியை எதிர்பாராத விதமாக சந்தித்ததாகவும், திரைத்துறையில் அவரின் சாதனைகளை பாராட்டி வாழ்த்து தெரிவித்ததாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார் ஆனால் தனது வாழ்த்துகளை ஏற்க மறுத்த விஜய் சேதுபதி பொதுவெளியில் தன்னை இழிவுபடுத்தி பேசியதுடன், தன்னையும் தனது சாதியையும் பற்றி தவறாக பேசியதாகவும் குறிப்பிட்டுள்ளார். விமான நிலையத்திலிருந்து வெளியேறிய தன் மீது, அவரது மேலாளர் ஜான்சன் மூலமாக தாக்கியதாகவும், காதில் அறைந்ததாகவும் மனுவில் குற்றம் சாட்டியுள்ளார். இவ்வாறிருக்க, ஊடகங்களில் தான் தாக்கப்பட்டதாக விஜய் சேதுபதி தரப்பில் அவதூறு பரப்புவதாக மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.
எனவே உண்மைக்கு புறம்பாக செய்தியாக்கிய நடிகர் விஜய் சேதுபதி மற்றும் அவரது மேலாளர் ஜான்சன் ஆகியோர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.
வழக்கை விசாரித்த
சென்னை சைதாப்பேட்டை 9வது பெருநகர உரிமையியல் நீதிமன்றம், நடிகர் விஜய் சேதுபதி, அவரது மேலாளர் ஜான்சன் ஆகியோர் ஜனவரி 4ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டிருந்த து. இந்த நிலையில் தனக்கு அனுப்பப்பட்ட சம்மனை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் விஜய்சேதுபதி வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில் பெங்களூர் விமான நிலையத்தில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக இங்கு அவதூறு வழக்கு தொடர முடியாது என்றும் மேலும் சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் சமரசம் செய்து கொண்ட நிலையில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றும்,எனவே வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும், சம்மனை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார் .இந்த வழக்கு நீதிபதிநிர்மல் குமார் முன் விசாரணைக்கு வந்தபோது, வழக்கை நாளை மறுதினம் விசாரிப்பதாக நீதிபதி தெரிவித்துள்ளார்..
[1/3, 18:39] Sekarreporter 1: குழந்தைகள் நலக் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்வுக் குழு நியமனம் தொடர்பான தமிழ்நாடு சிறார் நீதி சட்ட விதிகளை திருத்தாவிட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை ஆஜராகும்படி உத்தரவிட நேரிடும் என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

மத்திய அரசின் சிறார் நீதி சட்ட விதிகளைப் போல, தமிழ்நாடு சிறார் நீதி சட்ட விதிகளை திருத்தக் கோரி காஞ்சிபுரம் மாவட்ட குழந்தைகள் நலக் குழு உறுப்பினர் ஸஹிருதின் முகமது என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

மத்திய அரசின் சிறார் நீதி சட்டப்படி, குழந்தைகள் நலக் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில், இயக்குனர் அந்தஸ்துக்கு குறையாத அதிகாரி ஒருவர், தொண்டு நிறுவன பிரதிநிதிகள் இருவர் உள்பட ஏழு பேர் கொண்ட குழுவை நியமிக்க கூறும் நிலையில், தமிழக அரசு விதிகள், மாவட்ட நீதிபதி, ஆட்சியர் காவல் கண்காணிப்பாளர் அடங்கிய குழுவை அமைக்க கூறுவது சட்டவிரோதமானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, குழந்தைகள் காப்பகங்களை நடத்துவோர் குழுக்களில் இடம் பெறக்கூடாது என மத்திய அரசு விதிகள் வலியுறுத்தும் நிலையில், அவர்களை நியமிக்க தமிழக விதிகள் அனுமதியளிப்பதால் குழந்தைகள் நலம் பாதிக்கப்படும் என்பதால் இந்த விதிகளை மத்திய அரசு விதிகளுக்கு உடன்பட்டதாக திருத்தம் செய்ய வேண்டும் எனக் கோரியுள்ளார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, குழந்தைகள் நலக் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்வுக் குழு நியமனம் தொடர்பான தமிழ்நாடு சிறார் நீதி சட்ட விதிகளை திருத்துவது குறித்து விளக்கமளிக்க அரசுத்தரப்பில் ஒரு வார அவகாசம் கோரப்பட்டது.

இதை ஏற்று இரு வாரங்கள் அவகாசம் வழங்கிய நீதிபதிகள், விதிகளை திருத்த நடவடிக்கை எடுக்காவிட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை ஆஜராகும்படி உத்தரவிட நேரிடும் என அரசுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
[1/3, 18:41] Sekarreporter 1: திருப்பூர் ரயில் நிலையம் அருகே மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை வைக்க அனுமதி பெறப்பட்டுள்ளாதா என நாளை தமிழக அரசு விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொது இடங்களில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்ட சிலைகளை அகற்ற வேண்டுமெனவும், அனுமதி பெற்ற சிலைகளை தலைவர்களின் சிலை பூங்கா அமைத்து பராமரிக்கவும் நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கடந்த அக்டோபர் மாதம் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் திருப்பூரை சேர்ந்த ஏ.திருமுருக தினேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில், திருப்பூர் ரயில் நிலைய பேருந்து நிறுத்தம் அருகே விபத்துகள் அதிகம் நடக்கும் பகுதியில் திமுக-வின் மறைந்த தலைவர் மு.கருணாநிதியின் சிலை வைக்க திட்டமிடப்படுவதாகவும், இது நீதிமன்ற உத்தரவுகளுக்கு முரணானது என எழுதியிருந்தார்.

இந்த கடிதத்தை ஏற்கனவே உத்தரவு பிறப்பித்த வழக்குடன் இணைத்து விசாரணைக்கு எடுத்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், நீதிமன்ற உத்தரவுக்கு முரணாக பொது இடத்தில் வைக்க யாரும் முடிவெடுத்துள்ளார்களா, சிலை வைக்க அனுமதி பெறப்பட்டுள்ளதா என தமிழக உள்துறை செயலாளர், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் நாளை விளக்கம் அளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை தள்ளிவைத்துள்ளார்.

You may also like...