Mhc august 4th orders round up

[8/4, 14:53] Sekarreporter1: வி.கே.சசிகலாவிற்கு எதிரான செல்வ வரி வழக்கை கைவிடுவதாக வருமான வரித்துறை தெரிவித்ததை ஏற்றுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்றம், அவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த 1996-97ம் மதிப்பீட்டு ஆண்டிற்கான செல்வ வரி கணக்கை தாக்கல் செய்யவில்லை என கூறி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி வி.கே.சசிகலாவிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு 2001ம் ஆண்டு சசிகலாவின் அதிகாரம் பெற்ற நபர் பதில் அளித்திருந்தார்.

அந்த விளக்கத்தில் குறிப்பிட்டிருந்த தகவலின் அடிப்படையில், 1996-97ம் மதிப்பீட்டு ஆண்டில் சசிகலாவின் சொத்து மதிப்பு 4 கோடியே 97 லட்டத்து 52 ஆயிரத்து 100 ரூபாய் என தீர்மானித்த வருமான வரித்துறை மதிப்பீட்டு அதிகாரி, செல்வ வரியா 10 லட்சத்து 13 ஆயிரத்து 271 ரூபாயை செலுத்த சசிகலாவிற்கு உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து சசிகலா தாக்கல் செய்த விண்ணப்பத்தை பரிசீலித்து ஏற்றுக் கொண்ட வருமான வரித்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயம், சட்டத்திற்குட்பட்டு மீண்டும் மதிப்பீடு செய்யவும், 40 லட்ச ரூபாய் கடனை கணக்கீட்டில் சேர்த்துக்கொள்ளவும் மதிப்பீட்டு அதிகாரிக்கு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து வருமானவரித் துறை ஆணையர் தரப்பில் கடந்த 2018ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதேபோல சசிகலாவின் உறவினர் இளவரசிக்கு எதிராகவும் வழக்கு தொடரப்பட்டது.

நிலுவையில் இருந்த இந்த வழக்குகள் நீதிபதிகள் ஆர். மகாதேவன், முகமது சபீக் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வருமான வரித்துறை தரப்பில், வருமான வரித்துறையில் ஒரு கோடி ரூபாய்க்கு குறைவான மதிப்புடைய வழக்குகளை கைவிடுவது என மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்ட சுற்றறிக்கையின் அடிப்படையில் சசிகலா மற்றும் இளவரசி மீதான செல்வ வரி தொடர்பான நடவடிக்கையை கைவிடுவதாகவும், அதனடிப்படையில் வழக்குகளை திரும்பப்பெறுவதாக தெரிவிக்கப்பட்டது.

இதனை ஏற்ற நீதிபதிகள், வருமான வரித்துறை தரப்பில் சசிகலா மற்றும் இளவரசி ஆகியோருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.
[8/4, 15:23] Sekarreporter1: அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்குகளை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமியே விசாரிக்கிறார்…

வைரமுத்து தரப்பு கோரிக்கை ஏற்று வழக்கு விசாரணை நாளை 2:5க்கு விசாரணை…

நீதிபதியை மாற்ற தலைமை நீதிபதி யிடம் புகார் அளித்தது குறித்து பன்னீர்செல்வம் தரப்புக்கு தனி நீதிபதி கடும் கண்டனம்…

நீதித்துறையை களங்கப்படுத்தும் செயல், கீழ்த்தரமான செயல் எனவும் அதிருப்தி…

ஜூலை 11 உத்தரவில் குறிப்பிட்ட தனது கருத்துக்களை நியாயப்படுத்தும் வகையில் உங்கள் தரப்பு செயல்பாடு உள்ளது – நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி…

தன்னை பற்றி தனிப்பட்ட கருத்துக்களை கூறியதால் வேறு நீதிபதிக்கு மாற்ற கோரியதாக ஓ பி எஸ் தரப்பு விளக்கம்…

தீர்ப்பில் தவறு இருந்தால் மேல் முறையீடு செய்யலாம்; திருத்தம் இருந்தால் தன்னிடம் முறையீடு செய்திருக்கலாம் – நீதிபதி…
[8/4, 16:24] Sekarreporter1: உங்கள் கட்சிக்காரரை தவறாக வழிநடத்தாதீர்கள்.
ஓ.பன்னீர்செல்வம் வழக்கறிஞருக்கு உயர்நீதிமன்றம் அறிவுரை..
நீதிபதி மீது நம்பிக்கை இல்லை என்று கூறியதற்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர முடியும் என்னும் நீதிபதி எச்சரிக்கை..
செய்வதறியாது திகைத்த பன்னீர் வக்கீல்கள்.
நீதிபதியை சமாதானப்படுத்திய இ..பி.எஸ் வழக்கறிஞர் விஜய் நாராயணன்..
அறியாமையால் ஒருசில வழக்கறிஞர்கள் செயல்படலாம்.. தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள் என்று முன்னாள் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயணன் கோரிக்கை விடுத்ததை அடுத்து விசாரணையை நாளை பிற்பகல் 2.15 மணிக்கு தள்ளிவைத்தார்.
விசாரணையை திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கும் பன்னீர்செல்வம் தரப்பின் கோரிக்கையை நீதிபதி நிராகரித்தார்..
[8/4, 16:54] Sekarreporter1: இன்று பிற்பகலில் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி தெரிவித்த கருத்துகள் குறித்து தலைமை நீதிபதியிடம் ஓ.பி.எஸ். தரப்பில் வழக்கறிஞர் என்.ஜி.ஆர். பிரசாத் முறையீடு

நீதிபதியை மாற்ற வேண்டுமென தங்களிட கடிதம் கொடுத்துள்ள நிலையில் நாளை வழக்கை விசாரிப்பதாக கூறியுள்ளார் – ஓ.பி.எஸ். தரப்பு

இன்று பிற்பகலிலும் கூட என்னுடைய நடவடிக்கைகளை கீழ்தரமான நடவடிக்கை என விமர்சித்துள்ளார் – ஓ.பி.எஸ். தரப்பு

நீதிபதியை மாற்றும் கோரிக்கையை கருத்தில் கொள்ள வேண்டும் – ஓ.பி.எஸ். தரப்பு

கடிதத்தை பார்ப்பதாக தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி விளக்கம்
[8/4, 17:08] Sekarreporter1: அதிமுக பொதுக் குழு வழக்கை விசாரிக்கும் தன்னை மாற்ற வேண்டுமென தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பிய ஓ.பி.எஸ்.- தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த கண்டனம் குறித்து தலைமை நீதிபதியிடம் ஓ.பி.எஸ். தரப்பு முறையிட்டுள்ளது.

ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக் குழுவுக்கு தடை விதிக்கக்கோரி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பொதுக் குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, உட்கட்சி விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது எனக் கூறி இடைக்கால மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்த உத்தரவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அ.தி.மு.க பொதுக்குழு விவகாரம் தொடர்பான வழக்கை உயர் நீதிமன்றமே விசாரிக்க வேண்டும் எனவும், வழக்கை 2 வாரத்தில் விசாரித்து முடிக்க வேண்டுமெனவும் தனி நீதிபதிக்கு உத்தரவிட்டு இருந்தது.

அதன்படி இந்த வழக்குகள் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு நாளை பிற்பகல் 2:15 மணிக்கு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளன.

இந்த நிலையில், நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, கடந்த ஜூலை 11ல் பிறப்பித்த உத்தரவில், பன்னீர்செல்வம் குறித்து தேவையில்லாத கருத்துக்களை தெரிவித்துள்ளதால், பொதுக்குழு தொடர்பான வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டுமென ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வைரமுத்து தரப்பில் தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரிக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்குகள் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பாக விசாரணைக்கு வந்தபோது, வழக்கு விசாரணையை நாளை தள்ளிவைக்கும்படி வைரமுத்து தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

அதனை ஏற்று நாளை பிற்பகலுக்கு வழக்குகளை நீதிபதி தள்ளிவைத்தபோது, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வழக்கை வரும் திங்கட்கிழமைக்கு தள்ளிவைக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது.

அப்போது நீதிபதி ஏன் என கேள்வி எழுப்பியபோது, ஓ.பி.எச். தரப்பில், ஜூலை 11ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில் தனக்கு எதிரான கடுமையான கருத்துக்களை தெரிவித்துள்ளதாலும், பொதுக்குழு நடக்க இருந்த கடைசி நேரத்தில் உத்தரவு பிறப்பித்ததாலும், இந்த வழக்குகளை வேறு நீதிபதிக்கு மாற்றக் கோரி தலைமை நீதிபதியிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

ஓ.பி.எஸ். தரப்பு விளக்கத்தால் அதிருப்தி அடைந்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, நீதிபதியை மாற்ற வேண்டுமென தலைமை நீதிபதியிடம் புகார் அளித்தது குறித்து கடும் கண்டனம் தெரிவித்தார்.

இந்த நடவடிக்கை நீதித்துறையை களங்கப்படுத்தும் செயல் மட்டுமல்லல், கீழ்த்தரமான செயல் எனவும் அதிருப்தியை பதிவு செய்த நீதிபதி, தீர்ப்பில் தவறு இருந்தால் மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளதாகவும், திருத்தம் இருந்தால் தன்னிடம் முறையீடு செய்திருக்கலாம் என்றும் தெரிவித்தார்.

மனுதாரர் (ஓ.பி.எஸ்.) குறித்து தன் உத்தரவில் குறிப்பிட்ட தனது கருத்துக்களை நியாயப்படுத்தும் வகையிலேயே தற்போதும் அவரது தரப்பு செயல்பாடு உள்ளதாகவும் அதிருப்தியை வெளிப்படுத்தினார்

அதன்பின்னர், நீதிபதியை மாற்ற வேண்டுமென்ற கோரிக்கை தொடர்பாக அளித்த கோரிக்கை குறித்த நடைமுறை தனியாக பார்த்துக் கொள்ளுங்கள் என நீதிபதி தெரிவித்துவிட்டார். உங்கள் மனுதரரரை தவறாக வழிநடத்தாதீர்கள் என்றும், நீதிபதி மீது நம்பிக்கை இல்லை என்று கூறிய வழக்குகளில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர முடியும் என்றும் ஓ.பி.எஸ். தரப்பிடம் அறிவுரை கூறினார்.

அப்போது ஈ.பி.எஸ். தரப்பு வழக்கறிஞர்,
அறியாமையால் ஒருசில வழக்கறிஞர்கள் செயல்படலாம் என்றும், தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள் என்றும் நீதிபதியிடம் தெரிவித்தார்.

பின்னர் வழக்கு விசாரணையை திங்கட்கிழமைக்கு தள்ளிவைக்கும் ஓ.பி.எஸ். தரப்பின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதி, மற்றொரு மனுதாரர் வைரமுத்து கோரிக்கையின் அடிப்படையில் அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்குகளை நாளை பிற்பகலில் விசாரிப்பதாக தெரிவித்து, வழக்கின் விசாரணையை தள்ளிவைத்துள்ளார்.

இன்று பிற்பகலில் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி தெரிவித்த கருத்துகள் குறித்து தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரியிடம் ஓ.பி.எஸ். தரப்பில் வழக்கறிஞர் என்.ஜி.ஆர். பிரசாத் முறையீடு செய்தார்.

நீதிபதியை மாற்ற வேண்டுமென தங்களிடம் கடிதம் கொடுத்துள்ள நிலையில் நாளை அவரே வழக்கை விசாரிப்பதாக கூறியுள்ளதாகவும், மனுதாரர் மற்றும் வழக்கறிஞர்களுக்கு எதிராக இன்று பிற்பகலிலும் கருத்துகளை பதிவு செய்துள்ளதால், வழக்கை உடனடியாக வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டுமென கோரிக்கை வைத்தார்.

அப்போது தலைமை நீதிபதி, நீதிபதியை மாற்ற வேண்டுமென்ற கோரிக்கை குறித்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வைரமுத்து ஆகியோரின் கடிதங்களை கவனத்தில் எடுத்துக்கொள்வதாக தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி தெரிவித்துள்ளார்.
[8/4, 17:13] Sekarreporter1: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக அமலாக்கத்துறை விசாரனை நடத்த விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை நீக்கிய சென்னை உயர் நீதிமன்றம், அமலாகத்துறையின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2002-2006ம் ஆண்டில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தமிழக லஞ்ச ஒழிப்புதுறை கடந்த 2006ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது.

இந்நிலையில் சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த அமலாக்கப் பிரிவு, அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அவரது குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணை நடத்தியது.

மேலும், அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான 6 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துகளை கடந்த பிப்ரவரி மாதம் முடக்கியது.

சொத்துகளை முடக்கியதற்கு எதிராகவும், தனக்கு எதிராக அமலாக்கப் பிரிவு பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக்கோரியும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் செய்திருந்தார்.

இந்த வழக்கு கடந்த முறை நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் சி.வி.கார்த்திகேயன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டப் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தது குறித்து அமலாக்கதுறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும் இந்த வழக்கின் விசாரணையை தொடர அனுமதி அளிக்க வேண்டும் எனவும் வாதிடப்பட்டது. ஆனால், அமலாக்கதுறை விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தபோது, இதே புகாரில் லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளதால், இந்த வழக்கின் விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து வழக்கு விசாரணையை செப்டம்பர் 11 ஆம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதிகள், அமலாக்கத்துறை விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிட்டனர்.

மேலும், விசாரணைக்கு அழைத்தால் நேரில் ஆஜராகி ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
……
[8/4, 17:44] Sekarreporter1: பிரசவத்தின் போது வயிற்றில் கத்திரிகோல் வைத்து தைத்ததால் 12 ஆண்டுகள் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு, மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகில் உள்ள வி.கே.ஆர்.புரம் பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவன காவலாளி பாலாஜி என்பவரின் மனைவி குபேந்திரி,
கடந்த 2008ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பிரசவத்துக்காக திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். அதன் பின் அவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் பரிசோதித்த போது, அவரது வயிற்றில் கத்திரிகோல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 12 ஆண்டுகளுக்கு பின், சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அறுவை சிகிச்சை மூலம் கத்திரிகோல் அகற்றப்பட்டது.

இதையடுத்து மனைவியின் வயிற்றில் கத்திரிகோலை வைத்து தைத்து அஜாக்கிரதையாக செயல்பட்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாலாஜி, முதல்வரின் தனிப்பிரிவுக்கு இ- மெயில் மூலம் புகார் அனுப்பியிருந்தார்.

இதுசம்பந்தமாக தினத்தந்தி நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் துரை.ஜெயச்சந்திரன் பிறப்பித்த உத்தரவில், திருவள்ளூர் சுகாதார பணிகள் இணை இயக்குனர் அளித்த அறிக்கை உள்ளிட்ட ஆதாரங்களில் இருந்து, மருத்துவர்கள் அஜாக்கிரதையாக செயல்பட்டுள்ளது நிரூபணமாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அறுவை சிகிச்சையை எச்சரிக்கையுடன் செய்திருந்தால், குபேந்திரி வயிற்றில் கத்திரிக்கோல் வைத்து தைத்திருக்க மாட்டார்கள்; 12 ஆண்டுகள் அப்பெண்ணும் வலியில் துடித்திருக்க மாட்டார் எனக் கூறிய ஆணைய உறுப்பினர், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 10 லட்சம் ரூபாயை இழப்பீடாக நான்கு வாரங்களில் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.
[8/4, 20:28] Sekarreporter1: Suo Motu CONT P(MD)No.1124 of 2022 G.R.SWAMINATHAN, J. & B.PUGALENDHI, J.
Thiru.Shankar @ Savukku Shankar, a suspended employee of the
Government of Tamil Nadu in an interview to a YouTube Channel, namely, Red Pix on 22.07.2022 had made the following statement :
“The entire higher judiciary is riddled with corruption”
2.Issue notice to Thiru.Shankar @ Savukku Shankar to show cause as to
why proceedings for criminal contempt should not be initiated against him.
(G.R.S, J.) & (B.P,J.) 04.08.2022
skm
1/2
G.R.SWAMINATHAN, J. & B.PUGALENDHI, J.
skm
Suo Motu CONT P(MD)No.1124 of 2022
04.08.2022
2/2

You may also like...