Merraarumugam: கலைஞருக்கு நினைவஞ்சலி ……………………. ……………. இன்றோடு மூன்றாண்டு- நீ எங்களை விட்டுச்சென்று!! நீ விட்டுச்சென்ற மூச்சுக்காற்றை

[8/7, 18:09] Merraarumugam: கலைஞருக்கு நினைவஞ்சலி
……………………. …………….
இன்றோடு
மூன்றாண்டு- நீ
எங்களை விட்டுச்சென்று!!
நீ விட்டுச்சென்ற
மூச்சுக்காற்றை
இன்னமும் நாங்கள்
சுவாசித்துக்கொண்டுதான்
இருக்கிறோம்!!
மரணம்
இயற்கையின் நியதி
ஏற்றுக்கொள்கிறோம்..
ஆனாலும் தலைவா..
நீ வா வா எனக்கதறும்
மனங்களுக்கு பதிலில்லையே…
‘உயிரினும் மேலான
உடன்பிறப்பே” உன்
காந்தக்குரல் காதோரம்
இன்னும்
ஒலித்தவண்ணமேயிருக்கிறது!
வங்க கடலில் துயில் கொள்ளவில்லை – தலைவா
உதிக்கும் சூரியனுக்கு உத்தரவிட்டு பார்ர்த்திருப்பதாய்
உள் மனம் உவகை கொள்கிறது!!
உமக்கு எழுதிட மட்டும்
தமிழின் வார்த்தைகளே
சற்று தடுமறுகிறதே – ஐயா
எந்தன் கண்களில் நீர்கசிய
எழுதுகோழும் நடு நடுங்க
இலக்கணமும் தடுமாற
தமிழிங்கே தழுதழுக்க
உனக்கு
நினைவஞ்சலி
எழுதிட நிலைகுலைந்தேன்..
அய்யா எதை சொல்லுவது
எதை நானும் புகழுவது??
ஆளுகின்ற வடக்கும்
தெற்கு பார்த்து வணக்கம்
சொல்ல வைத்தவரே….
வாழ்ந்திட்ட காலம்வரை
எங்களை வாழ வைத்தவரே..
தமிழ் வாழும் காலம்வரை
உன் புகழ் வாழும்…
உங்களின் புதல்வனில்
நீங்களிருந்து
ஆளுமை செய்வதாய்
ஆறுதல் கொள்கிறோம்!!
வாழ்க உங்களின் புகழ்!!!!
மீரா ஆறுமுகம்
வழக்கறிஞர்
[8/7, 18:10] Sekarreporter: 🙏🙏💐

You may also like...

CALL ME
Exit mobile version