Madras high court two judges visit ooty forest two days

சென்னை உயர் நீதிமன்ற வனப்பாதுக்காப்பு சிறப்பு அமர்வு நீதிபதிகள்.சதிஷ்குமார், பரத சக்ரவர்த்தி ஆகியோர் கோவை தொண்டாமுத்தூர், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட வனப்பகுதிகள் இன்று மற்றும் நாளை என 2 நாட்கள் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்

தமிழக அரசு சார்பில் வனப்பகுதியில் யானை மற்றும் வனவிலங்குகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க அமைத்து வரும் எஃகு வேலி அமைக்கும் பணிகள் குறித்தும் அதன் சாதக பாதங்கள் குறித்தும் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்த உள்ளனர்…

இன்று மேட்டுப்பாளையம் பகுதியில் ஆய்வு மேற்கொள்ள இருப்பதாகவும், மதியம் ஒரு மணிக்கு மேல் போளுவாம்பட்டி வனசரக பகுதிகளிலும் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

இந்த ஆய்வில் தமிழக அரசின் வனத்துறைக்கான அரசு சிறப்பு வழக்கறிஞர் சீனிவாசன், நீதிமன்ற விசாரணைக்கு உதவியாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் மோகன் , ராகுல்பாலாஜி, சந்தானராமன்,ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version