Madras high court orders october 1st

[9/30, 12:20] Sekarreporter.: ஒன்பது மாவட்டங்களில் நடக்க உள்ள உள்ளாட்சி தேர்தலுக்கு மத்திய அரசுப் பணியாளர்களை தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்க வேண்டும், பிரச்சாரம் முதல் முடிவுகள் அறிவிக்கப்படும் வரை வீடியோ பதிவு செய்ய வேண்டும், பறக்கும் படைகளை அமைத்து பணப் பட்டுவாடாவை தடுப்பதுடன் தேர்தல் பணிக்கு மத்திய ரிசர்வ் படையை அமர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை முன்வைத்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி அளித்த மனுவை பரிசீலிக்க மாநிலதேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி அதிமுக தேர்தல் பிரிவு துணைச்செயலாளர் இன்பதுரை வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த மனுவில், சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடத்தப்பட்ட நிலையில், ஒன்பது மாவட்ட உள்ளாட்சி தேர்தலை இரண்டு கட்டங்களாக நடத்துவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி தலைமையிலான அமர்வு, பிரதான எதிர்கட்சியின் கோரிக்கை மனுவை பரிசீலித்து முடிவை தெரிவிக்க மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, அதிமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலின் தொடர்ச்சிதான் இது எனவும் கடந்த தேர்தலின் போது பின்பற்றப்பட்ட நடைமுறைகளை இந்த தேர்தலிலும் பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மாநில தேர்தல் ஆணையம் அளித்த பதிலில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் மட்டும் நேரடி வெப் காஸ்டிங் செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், கடந்த தேர்தலைப் போல ஒவ்வொரு மாவட்டத்திலும் மூன்றில் ஒரு வாக்குச்சாவடியில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்றும் வாக்குப் பெட்டிகளை, ஸ்ட்ராங் ரூமுக்கு கொண்டு செல்வதையும் அங்கிருந்து வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு கொண்டு செல்வதையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

வாக்கு எண்ணிக்கை மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடவேண்டும் என்று கூறிய அவர், இந்த அம்சங்கள் பற்றி மாநில தேர்தல் ஆணையத்தின் பதிலில் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்று புகார் தெரிவித்தார்

இதையடுத்து தமிழகம் முதன்மை மாநிலம் என்ற பெருமைக்குரியது என குறிப்பிட்ட தலைமை நீதிபதி, தொழில் நுட்பம் வளர்ந்துள்ள நிலையில் தேர்தலில் எந்த புகாரும் வராத வகையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படுவது அவசியம் என்றும் கிராமங்களில் வீடியோ பதிவு அவசியம் என்றும் குறிப்பிட்டார்.

வெறும் ஒன்பது மாவட்டங்களில் மட்டுமே தேர்தல் நடக்க இருப்பதால் என்ன நடைமுறைகளை மேற் கொள்ளலாம் என்பது குறித்து அதிகாரிகளுடன் கலந்து பேசி நாளை பதில் அளிக்க தமிழக அரசு தலைமை வழக்கறிஞருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை நாளை தள்ளி வைத்துள்ளனர்.
[9/30, 13:47] Sekarreporter.: சிலைக்கடத்தல் வழக்குகளில் ஒரு வழக்கு மட்டுமே முடிவுக்கு வந்துள்ளதாகவும், மற்ற வழக்குகளில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு எந்த முன்னேற்றமும் இல்லை எனவும் சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் சிலை கடத்தல் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 41 வழக்குகளின் ஆவணங்கள் மாயமாகி உள்ளது குறித்து விசாரிக்க கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், காணாமல் போனதாக கூறப்பட்ட 41 வழக்குகள் தொடர்பான ஆவணங்களில், 25 வழக்குகள் தொடர்பான ஆவணங்களை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையை ஆய்வு செய்து பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என்று மனுதாரர்கள் இராஜேந்திரன் கோரிக்கை விடுத்தார்.

மேலும் அவர், ஆவணங்கள் மாயமானதாக கூறி வழக்குகளை கைவிட்ட அதிகாரிகளின் பெயரை குறிப்பிட வேண்டும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், சிலை கடத்தல் தொடர்பான வழக்கு ஆவணங்கள் காவல் நிலையங்களில் இருந்து காணாமல் போயுள்ளதாகவும், ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்ட வழக்குகளில் தொடர்ந்து விசாரணை நடத்துவதற்கு எந்த தடையும் இல்லை என்றும் விசாரணை தொடர்ந்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அறிக்கை குறித்து அதிர்ச்சி தெரிவித்த நீதிபதிகள், சிலை கடத்தல் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில், ஒரு வழக்கு மட்டும் முடிவுக்கு வந்துள்ளதாகவும், வேறு எந்த வழக்கிலும் சொல்லிக்கொள்ளும் வகையில் எந்த முன்னேற்றமும் இல்லை எனவும் குறிப்பிட்டனர்.

16 வழக்குகளில் ஆவணங்கள் கண்டுபிடிக்கப்படாதது குறித்து அதிர்ச்சி தெரிவித்த நீதிபதிகள் பல வழக்குகளில் சிலைகள் மீட்கப்படவில்லை என்றும் கடத்தப்பட்ட சிலைகளை மீட்கவும் குற்றவாளிகளை தண்டிக்கவும் தீவிரம் காட்டவில்லை எனவும் கூறிய நீதிபதிகள், மாயமான 16 வழக்குகளின் கோப்புகளை கண்டுபிடிக்க உத்தரவிட்டு, விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.
[9/30, 14:48] Sekarreporter.: புதுச்சேரி உள்ளாட்சி தேர்தலில் வார்டுகள் ஒதுக்கீடு தொடர்பான குறைபாடுகள் குறித்து நாளை விளக்கமளிக்க வேண்டும் என புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், குறைபாடுகளை நிவர்த்தி செய்யாவிட்டால் தேர்தலுக்கு தடை விதிக்க நேரிடும் என எச்சரித்துள்ளது.

புதுச்சேரியில், நகராட்சி மற்றும் பஞ்சாயத்துக்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் பட்டியலினத்தவர்களுக்கும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் வார்டுகள் ஒதுக்கீட்டில் குறைபாடுகள் உள்ளதாக கூறி, வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, புதுச்சேரி அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் வார்டுகள், சுழற்சி முறையில் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் நிலையில் சுழற்சிமுறை ஒதுக்கீடு என்பது இரண்டு முறை மட்டுமே வழங்கப்படும் என்பதால் இதில் தவறுகள் உள்ளதாகவும் இது சம்பந்தமான விதிகளை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மேலும் சுழற்சி முறை ஒதுக்கீடு என்பது விதிகளின் அடிப்படையில் இருக்க வேண்டுமே தவிர அரசாணையின் அடிப்படையில் இருக்கக் கூடாது என தெரிவித்த தலைமை நீதிபதி, வார்டு ஒதுக்கீடு பல குறைபாடுகள் உள்ளதாகவும், அதுகுறித்து பதிலளிக்காவிட்டால், தேர்தலுக்கு தடை விதிக்க நேரிடும் எனவும் கூறி, இதுசம்பந்தமாக நாளை விளக்கமளிக்க புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்
[9/30, 16:38] Sekarreporter.: தனது கருணை மனுவின் நிலை குறித்து தகவல் கோரி, தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் அனுப்பிய மனுவை பரிசீலிக்க கோரி முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவிற்கு பதிலளிக்க மாநில தகவல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2019 ஆம் ஆண்டு ஆளுநருக்கு கருணை மனு அனுப்பியுள்ளதாகவும், அந்த மனுவின் நிலை என்ன என்றும், தன்னை விடுதலை செய்வது தொடர்பாக அமைச்சரவையின் பரிந்துரையின் மீது முடிவெடுக்க ஆளுனருக்கு என்ன தடை உள்ளது ? உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதை காரணம் காட்டி தன் கருணை மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் வழக்கு தொடர்பான விவரங்களை தர வேண்டும் என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஆளுநர் அலுவலக தகவல் அதிகாரிக்கு விண்ணப்பித்ததாக கூறியுள்ளார்.

அதன் மீது எந்த பதிலும் அளிக்காததால், இதே கேள்விகளுடன் மத்திய தகவல் ஆணையத்திற்கு மனு அளித்ததாகவும், அந்த மனு மாநில தகவல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், தற்போது வரை அம்மனு மீது எந்தவித பதிலும் வராததால், தனது மனுவுக்கு பதிலளிக்கும்படி மாநில தகவல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், மாநில தகவல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை அக்டோபர் 10ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
[9/30, 17:44] Sekarreporter.: தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தை தெலுங்கில் டப்பிங் செய்ய அந்த படத்தின் தயாரிப்பாளருக்கு உரிமை உள்ளது என்று சென்னை ஐகோர்ட் நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பு கூறினார் இதுதொடர்பான வழக்கை நடிகர் பிரசாந்த் தந்தை தியாகராஜன் அவரது மனைவி சாந்தி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.தானா சேர்ந்த கூட்டம் படத்தை தெலுங்கில் டப்பிங் செய்தது தவறானது தடைவிதிக்க வேண்டும் என்று கூறி இருந்தார்கள் இந்த வழக்கில் தானா சேர்ந்த கூட்டம் பட இயக்குனர் தயாரிப்பாளர்சார்பாக வக்கீல் விஜயன் சுப்ரமணியம் ஆஜராகி டப்பிங் செய்ய படத்தின் தயாரிப்பாளருக்கு உரிமை உள்ளது என்றார்.உதை நீதிபதி ஏற்றுக் கொண்டு தானா சேர்ந்த கூட்டம் படத்தை தெலுங்கு டப்பிங் செய்ய முழு உரிமை உள்ளது இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன் என்று தீர்ப்புக் கூறினார்
[9/30, 20:02] Sekarreporter.: ருத்ர தாண்டவம் திரைப்படத்திற்கு தடை விதிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

நடிகர் ரிச்சர்ட் ரிசி, கவுதம் மேனன் உள்ளிட்டோர் நடிப்பில் ஜிஎம் பிலிம் கார்பரேசன் தயாரிப்பில் அக்டோபர் 1 ம் தேதி வெளி வரவுள்ள திரைப்படம் ருத்ர தாண்டவம்.

இந்த படத்தின் டிரைலர் அண்மையில் வெளியிடபட்டது.

இந்நிலையில் இந்த படம் கிறிஸ்தவர்களுக்கு எதிரான இருப்பதாகவும், அவர்களை தவறாக சித்தரிக்கும் வகையில் இருப்பதாகவும், கூறி, படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என சிறுபான்மை மக்கள் நல கட்சியின் தேசிய தலைவர் சாம் யேசுதாஸ் என்பவர் சென்னை 15வது உதவி உரிமையில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில், திரைப்படத்தில் வசனம் மற்றும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது எனவும், சிறுபான்மை கிறிஸ்தவர்களை தவறாக சித்தரிக்கும் வகையில் காட்சிகள் உள்ளதாகவும், இது இரு மதத்தினர் இடையில் பிரச்னையை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டிஜிபியிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் படத்தில் உள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் எனவும், அதுவரை படத்தை திரையரங்கு மற்றும் ஓடிடி உள்ளிட்ட இணையதளத்தில் வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த 6 உதவி உரிமையில் நீதிமன்ற நீதிபதி, பிரபாகரன், முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதரார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரவின்குமார் படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டும் என வாதிட்டார். இதற்கு தயாரிப்பு நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பாலு எதிர்ப்பு தெரிவித்தார். படம் தணிக்கை முடித்து விட்ட நிலையில் படத்திற்கு தடை விதிக்க கூடாது என வாதிட்டார்.

அனைத்து தரப்பு வாதங்களுக்கு பிறகு உத்தரவிட்ட நீதிபதி படத்தின் டிரைலர் மட்டும் வெளிவந்துள்ளதாகவும் முழு படத்தையும் பார்க்காமல் மனுதரார் கருத்து யுகத்தின் அடிப்படையில் உள்ளது எனவும் மேலும் கடைசி நிமிடத்தில் இந்த மனு தாக்கல் செய்யபட்டுள்ளதால் தற்போதைய நிலையில் படத்திற்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என தெரிவித்து உத்தரவிட்டார். பின்னர் பிரதான வழக்கின் விசாரணை தள்ளிவைத்தார்.

You may also like...