Madras high court orders november 30 th day 15 orders in tamil

[11/30, 11:26] Sekarreporter 1: எடப்பாடி பழனிச்சாமி ஊழல் குறித்து பேட்டியளித்த அப்போதைய காங்கிரஸ் கட்சி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது போடபட்ட அவதூறு வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

கடந்த 2015ஆம் அப்போதைய நெடுஞ்சாலை துறை அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி ஊழல் குறித்து அப்போதைய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் பேட்டி அளித்திருந்தார்

இதை கலைஞர் தொலைக்காட்சியில் செய்தியாக வெளியிடப்பட்டது இந்த செய்தியின் அடிப்படையில் எடப்பாடி பழனிச்சாமி சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் மற்றும் கலைஞர் தொலைக்காட்சி நிர்வாக இயக்குனர் அமிர்தம் அவர்கள் மீது அவதூறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது

இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி நிர்மல்குமார் கலைஞர் தொலைக்காட்சி நிர்வாக இயக்குனர் அமிர்தம் மற்றும் ஈவிகேஎஸ் இளங்கோவன் அவர்களின் போடப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்
[11/30, 11:26] Sekarreporter 1: Note: சென்னையில் விசாரணை மதுரையில் உத்தரவு

பச்சையப்பன் அறக்கட்டளை  நிர்வாகிகள் தேர்தலை மூன்று மாதத்துக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
சென்னை பச்சையப்பன் அறக்கட்டளையின் கீழ் பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி, கந்தசாமி நாயுடு ஆண்கள் கல்லூரி, செல்லம்மாள் மகளிர் கல்லூரி உள்ளிட்ட 6 கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் பச்சையப்பன் அறக்கட்டளையில் முறைகேடுகள் நடப்பதாக எல்.செங்குட்டுவன் உள்ளிட்டோர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மேலும், அறக்கட்டளையின் அறங்காவலர் தேர்தல் நடத்த தடை கேட்டும் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.இந்த வழக்குகளை கடந்த ஆண்டு விசாரித்த தனி நீதிபதி அறக்கட்டளை நிர்வாகியாக உள்ள ஓய்வு பெற்ற நீதிபதி பி.சண்முகத்தை அறக்கட்டளை  தலைவராக இந்த நீதிமன்றம் நியமிப்பதாகவும், அறக்கட்டளை உறுப்பினர்கள் தேர்தலை 6 மாதங்களுக்குள் நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தார்.பச்சையப்பன் அறக்கட்டளைக்கு சொந்தமான அண்ணா அரங்கம், அம்மா அரங்கம் ஆகியவை முகூர்த்தம் ஈவன்ட் மேனேஜ்மென்ட் என்ற நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட குத்தகையை  ரத்து செய்து, குத்தகை எடுத்த நிறுவனம்  அரங்கங்களை 10 நாட்களுக்குள் அறக்கட்டளையிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்திருந்தார்.இந்த தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த முதன்மை அமர்வு, மீண்டும் இந்த வழக்கை நீதிபதி அனைத்து அம்சங்களோடு தனி நீதிபதி எம்.சுந்தர் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரித்த நீதிபதி எம்.சுந்தர் இருதரப்பு வாதங்களை கேட்டு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தார்.இந்த நிலையில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் உள்ள நீதிபதி எம்.சுந்தர் இன்று வழங்கியுள்ள தீர்ப்பில்,பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகிகள் தேர்தலை புதிய திட்டத்தின் கீழ், மூன்று மாதத்திற்குள் நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். அறக்கட்டளை தொடர்பான வழக்குகளை சிவில் வழக்காக தொடர வேண்டும்,
அறக்கட்டளை தேர்தலை சொத்தாட்சியர் அரசு தலைமை வழக்கறிஞர் உடன் கலந்து ஆலோசித்து நடத்தி முடிக்க வேண்டும் என்று
வழக்கை பைசல் செய்து உத்தரவிட்டுள்ளார்.
 
[11/30, 11:27] Sekarreporter 1: நேற்று பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில்

கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி லாரிக்கு ஒரு ஏக்கர் நிலம் ஒதுக்கவில்லை

ஐகோர்ட்டில் வக்கீல் முறையீடு

,சென்னை, நவ30-
தக்காளி விலை உச்சம் அடைந்துள்ளதால், கோயம்பேடு மார்க்கெட்டில் மூடிக்கிடக்கும் தக்காளி கிரவுண்டை திறக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் தந்தை பெரியார் மொத்த தக்காளி வியாபாரிகள் சங்கம் வழக்கு தொடர்ந்தது.
அதில், தக்காளி கிரவுண்டை திறப்பதன் மூலம் வெளி மாநிலங்களில் இருந்து தக்காளிகளை லாரியில் கொண்டு வந்து இறக்கி, குறைந்த விலையில் மக்களுக்கு தக்காளியை விற்பனை செய்ய முடியும் என்று கூறி வந்தது.
இதை ஏற்றுக்கொண்ட சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார், தக்காளி விலை குறையும் வரை பொதுநலன் கருதி கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளிகளை கொண்டுவந்து இறக்குவதற்கு ஒரு ஏக்கர் நிலத்தை ஒதுக்க வேண்டும் என்று மார்க்கெட் கமிட்டி மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்துக்கு நேற்று உத்தரவிட்டார்.
அந்த உத்தரவில் இன்று காலை 4 மணி முதல் 4 வாரத்திற்கு தக்காளி லாரிகளை அந்த ஒரு ஏக்கர் நிலத்தில் அனுமதிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
ஆனால் ஐகோர்ட்டு உத்தரவின்படி தக்காளிக்கு ஒரு ஏக்கர் நிலத்தை அதிகாரிகள் இருக்கவில்லை இதுகுறித்து ஐகோர்ட்டு நீதிபதி சுரேஷ்குமாரிடம் மனுதாரர் வக்கீல் சிவா இன்று காலையில் முறையிட்டார். அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்ட போது அவர்கள் எந்தவிதமான பதிலும் தெரிவிக்கவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.
இதையடுத்து அதிகாரிகள் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி கோயம்பேடு மார்க்கெட் கமிட்டி சார்பில் ஆஜரான வக்கீலையும், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் சார்பில் ஆஜரான வக்கீலையும் நேரில் ஆஜராக உத்தரவிட்டார்.
[11/30, 12:46] Sekarreporter 1: திருச்சி விமான நிலைய சுற்றுச்சுவரில் விமான மோதிய சம்பவம் தொடர்பான சஸ்பெண்ட் செய்யப்பட்ட விமானியை மீண்டும் பணியில் அமர்த்துவது குறித்து, உரிய முடிவை எடுக்குமாறு ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2018 ம் ஆண்டு,திருச்சியில் இருந்து மும்பை வழியாக துபாய்க்கு 136 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட உடனேயே, தொழில்நுட்பகோளாறு காரணமாக குறைந்த உயரத்தில் பறந்தது. இதனால் விமானத்தின் சக்கரங்கள் 5 அடி உயர சுற்றுச்சுவர் மற்றும் அருகே இருந்த வான் கட்டுப்பாட்டு கோபுரத்திலும் விமானம் உரசி சென்றது.இதில் சுற்றுச்சுவர் இடிந்தது.
விமானியின் சாதுர்யத்தால் விமானத்தில் பயணித்த 136 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பின்னர் அந்த விமானம் மும்பையில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.இதைத்தொடர்ந்து,
சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநர் ஜெனரல், சம்பந்தப்பட்ட விமானி கணேஷ்பாபுவின் உரிமத்தை மூன்றாண்டுகளுக்கு ரத்து செய்து பிறப்பித்தது.இந்த உத்தரவை எதிர்த்து, விமானி தாக்கல் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கின் விசாரணை
நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு நடைபெற்றது.
விமானி தரப்பில் வழக்கறிஞர் ஹாஜா மொய்தி கிஸ்தி ஆஜராகி, 2018ம் ஆண்டு வரை 4,270 மணிநேரம் விபத்தில்லாமல் விமானம் ஓட்டியதாக சுட்டிக்காட்டியிருந்தார். தன் மீது எந்த குறைகளும் இல்லை என்றும்,
விபத்து தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடந்த தாக தெரிவித்திருந்தார்.
சிவில் விமானப் போக்குவரத்து கழகம் சார்பில்,விமானம்
டேக் ஆஃப்பின் போது என்ஜின் உந்துதலைக் கண்காணிக்கத் தவறியதாகவும், சுற்றுச் சுவரைத் தொடர்ந்து, கனரக போக்குவரத்து வாகனங்கள் இயங்கும் மாநில நெடுஞ்சாலை உள்ளதால், கனரக வாகனத்தில் மோதியிருந்தால் விபத்து ஏற்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டது.
விமானம் சேதம் அடைந்த போதிலும், விமானத்தை திருச்சியிலேயே மீண்டும் தரையிறக்காமல், தொடர்ந்து பறக்கவிட்டு, பயணிகள் மற்றும் பணியாளர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டார் என்று தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி ஆர். மகாதேவன் விமானியை மீண்டும் பணியில் அமர்த்துவது குறித்து ஏர் இந்தியா நிறுவனம் நான்கு வாரத்தில் உரிய முடிவு எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
[11/30, 12:53] Sekarreporter 1: திமுக அமைச்சர் செஞ்சி மஸ்தான் மிரட்டலின் காரணமாக சட்டவிரோதமாக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட மரக்காணம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மற்றும் துணை தலைவர் பணி செய்ய தடை விதிக்க கோரியும், தேர்தலை ரத்து செய்யக் கோரியும் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது

மரக்காணம் ஒன்றிய குழு தலைவர்,துணை தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் கடந்த 22 ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அர்ஜூனன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்

அவர் தன் மனுவில், மரக்காணம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பதவிக்கு தானும், திமுக விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளரும், தற்போதைய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சருமான செஞ்சி மஸ்தானின் ஆதரவு பெற்ற தயாளன் என்பவரும் போட்டியிட்ட நிலையில், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்கள் அளித்த வாக்குகளின் படி தான் 14 ஓட்டுகளும்,தயாளன் 12 ஓட்டுகளும் பெற்றிருந்ததாக குறிப்பிட்டுள்ளார்

14 வாக்குகள் பெற்ற தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டிய நிலையில், தேர்தல் அலுவலருக்கும் வட்டார வளர்ச்சி அலுவலருக்கும்
அமைச்சர் செஞ்சி மஸ்தான் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக 12 வாக்குகள் மட்டுமே பெற்றிருந்த தயாளன் வெற்றி பெற்றார் என அறிவிக்கப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்

இது ஒருபுறம் இருக்க, மரக்காணம் ஒன்றிய குழு துணை தலைவர் பதவிக்கு தேர்தல் அதிகாரிகள் வேட்பு மனு வாங்கும் நடைமுறையை கூட பின்பற்றாமல், நேரடியாக பழனி என்பவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவித்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளார்

மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்ற தனது கோரிக்கை நிராகரிக்கப் பட்டதாகமும், ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் வகையில் நடத்தப்பட்ட இந்த தேர்தலை பற்றி தேர்தல் முடிந்த மறுநாள் (23.11.21) வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெகதீசனிடம் அலைபேசியில் கேட்ட போது, தனது 35 ஆண்டு கால அரசு பணியில் இது போன்ற நிர்பந்தத்திற்கு உள்ளானதில்லை,தன்னால் நிம்மதியாக தூங்க முடியவில்லையென அவர் மனக்குமுறலை வெளிப்படுத்தியதாக சுட்டிக்காட்டியுள்ளார்

வெற்றிபெற்றதாக சட்டவிரோதமாக அறிவிக்கப்பட்ட மரக்காணம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மற்றும் துணை தலைவர் ஆகியோரை பதவி ஏற்கவும் பணி செய்யவும் இடைக்கால தடை விதிக்க வேண்டும் என கோரியுள்ள அவர், தேர்தலின் போது பதிவான சிசிடிவி மற்றும் வீடியோ பதிவுகளை அழிக்க வாய்ப்புள்ளதால், அவற்றை உயர் நீதிமன்றம் நியமிக்கும் அதிகாரியிடம் ஒப்படைக்குமாறு தேர்தல் அலுவலர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு உத்தரவிட வேண்டுமென கோரியுள்ளார்

மோசடியாக நடைபெற்ற தேர்தலை ரத்து செய்து விட்டு, மறு வாக்கு எண்ணிக்கை நடத்தி மரக்காணம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவராக தன்னை அறிவிக்க வேண்டுமெனவும், ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் பதவிக்கான தேர்தலை புதிதாக நடத்த உத்தரவிட வேண்டுமென கோரியுள்ளார்

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வில் ஓரிரு நாட்களில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது..
[11/30, 13:36] Sekarreporter 1: புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலில் ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் குறித்த கணக்கெடுப்பு நடத்த ஆணையம் அமைக்க உள்ளதாக புதுச்சேரி அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தலில் இதர பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின வகுப்பினருக்கு உரிய வகையில் சுழற்சி முறை இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை என கூறி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தேர்தல் அறிவிப்பை திரும்பப் பெற மாநில தேர்தல் ஆணையத்திற்கு அனுமதி அளித்தவுடன் 5 நாட்களில் புதிய தேர்தல் அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று கடந்த 5ஆம் தேதி உத்தரவிட்டது.

உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை சுட்டிக்காட்டி, உள்ளாட்சி தேர்தலில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 33.5 சதவீதமும், பழங்குடியினருக்கு 0.5 சதவீதமும் ஒதுக்கீடு வழங்கி 2019ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பாணையை திரும்பப் பெற்று புதுச்சேரி அரசு கடந்த 8ஆம் தேதி பிறப்பித்த அரசாணைகளை எதிர்த்து புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவரும், திமுக அமைப்புச் செயலாளருமான சிவா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இந்த அரசாணைகள் பிறப்பிக்கும்போது, அரசியல் சட்ட விதிகளை பின்பற்றவில்லை எனக் கூறி, தேர்தல் நடவடிக்கைகளை அக்டோபர் 21 வரை நிறுத்துவைக்க உத்தரவிட்டது.

இந்த வழக்குகள் பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது புதுச்சேரி அரசுத்தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், உள்ளாட்சி தேர்தலில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கீடு வழங்குவது என்பது அரசின் கொள்கை முடிவு எனவும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் குறித்த புள்ளி விவரங்கள் ஏதும் இல்லாததால், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் அரசியல் பின் தங்கிய நிலை குறித்து கணக்கெடுப்பு நடத்த ஆணையம் அமைக்க உள்ளதாகவும், இந்த ஆணையம் நியமனம் குறித்து ஒரு வாரத்தில் அறிவிப்பு வெளியிடப்படும் எனக் குறிப்பிட்டார்.

இந்த ஆணையம் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மனுதாரர் தரப்பில் வாதங்கள் முன் வைக்க அவகாசம் கோரியதை அடுத்து விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உள்ளாட்சி தேர்தலில் ஒதுக்கீடு வழங்குவது அரசியல் சட்டத்தில் கட்டாயப்படுத்தப்படவில்லை என்பதால், அதுகுறித்து விளக்கமளிக்க மனுதாரர்கள் தரப்புக்கு அறிவுறுத்தினர்.
[11/30, 15:10] Sekarreporter 1: எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பதற்காக அரசு நிலத்தை ஆக்கிரமிக்க அனுமதிக்கலாமா எனக் கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம், அரசு நிலங்களை பாதுகாக்க அதிகாரிகள் விழிப்புடன் இருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் உள்ள பென்னலூர் கிராமத்தில் உள்ள மயானத்துக்கு செல்லும் பாதையையும், மேய்க்கால் புறம்போக்கு நிலத்தையும் ஆக்கிரமித்து தேவாலயம் கட்டப்பட்டுள்ளதாக கூறி, கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் ஸ்ரீபெரும்புதூர் தாசில்தாரர் தாக்கல் செய்த பதில்மனுவில், தேவாலயம் கட்ட எந்த எதிர்ப்பும் வரவில்லை என்றும், பாதையை ஆக்கிரமித்து தேவாலயம் கட்டப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் பிறப்பித்த உத்தரவில், எந்த விவரங்களும் இல்லாமல், தேவாலயம் கட்டியவருக்கு ஆதரவாக பதில்மனு தாக்கல் செய்த தாசில்தாரருக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும், ஆட்சேபங்கள் இல்லை என்பதற்காக அரசு நிலங்களை ஆக்கிரமிக்க அனுமதிக்கலாமா என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, ஆக்கிரமிப்புகள் எந்த இடத்தில் இருந்தாலும் அவற்றின் அகற்ற நடவடிக்கை எடுத்து, அரசு சொத்துக்களை பாதுகாக்க விழிப்புடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

தேவாலயம் கட்டுவதாக இருந்தால் உரிய கட்டிட அனுமதியும், மாவட்ட ஆட்சியரின் அனுமதியும் அவசியம் எனத் தெரிவித்த நீதிபதி, இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட தேவாலயம் எந்த அனுமதியும் இன்றி கட்டப்பட்டுள்ளதால் அதை நான்கு வாரங்களில் இடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

மேலும், நீதிமன்றத்திற்கு உண்மைத் தகவல்களை மறைக்கும் வகையில் எந்த விவரங்களும் இல்லாமல் பதில்மனு தாக்கல் செய்த தாசில்தாரருக்கு எதிராக விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்ட நீதிபதி, ஆக்கிரமிப்புகள், சட்டவிரோதமாக மத வழிபாட்டுத் தலங்கள் கட்டியிருந்தால் அவற்றுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளார்.
[11/30, 16:18] Sekarreporter 1: வேலை வாங்கித் தருவது தொடர்பான மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி எதிராக அனைத்து ஆதாரங்களும் உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தெரிவித்துள்ளது.

ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி ரூபாய் பெற்று பணியும் வழங்காமல், பணத்தையும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியதாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் தமிழக பால்வளத்துறை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, என்.பாபுராய், வி.எஸ்.பலராமன், எஸ்.கே.முத்துப்பாண்டியன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
விஜய் நல்லத்தம்பி, ரவீந்திரன் ஆகியோர் அளித்த புகாரில் பதிவான வழக்கில் முன் ஜாமீன் கோரி  ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட நால்வரும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

தங்களுக்கு எதிராக புகார் அளித்தவர்கள் மீது அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி தொடர்பாக பல புகார்கள் உள்ளதாகவும், தங்களிடம் பணம் பறிக்கும் நோக்கில் அளிக்கப்பட்ட பொய் புகாரில் வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த மனுக்கள் மீது நீதிபதி நிர்மல்குமார் முன்பு இறுதி விசாரணை நடைபெற்றது. அப்போது ராஜேந்திர பாலாஜி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், விஜய் நல்லதம்பி என்பவர் தான் குற்றவாளி என்றும் ,அவரை காவல்துறை பாதுகாக்கிறது என்றும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு இதில் தொடர்பில்லை, விசாரணைக்கு ஒத்துழைக்க தயார் என்று வாதிட்டார். காவல் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு எதிரான புகாரில் இருபத்திமூன்று சாட்சிகளிடம் விசாரிக்க பட்டுள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு,அவரது உதவியாளர் பலராமன் என்பவர் மூலம் தான் இந்த பரிவர்த்தனை நடைபெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது . மேலும் நல்ல தம்பியும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளது என்றும் தெரிவித்தார். முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக அனைத்து ஆதாரங்கள் உள்ளதாகவும் தெரிவித்தார். அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி முன் ஜாமீன் மனுக்கள் மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.
[11/30, 17:11] Sekarreporter 1: முழுமையாக கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு வழங்கப்படும் மாற்றுச் சான்றிதழில் “கட்டண பாக்கி உள்ளது” என குறிப்பட தனியார் பள்ளிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

கொரோனா பேரிடர் காரணமாக வேலையிழந்த பலர் தங்களின் பிள்ளைகளை கட்டணம் குறைவான தனியார் பள்ளிகள் மற்றும் அரசு பள்ளிகளில் சேர்க்கின்றனர். வேறு பள்ளிகளில் சேர விரும்பும் மாணவர், மாற்றுச் சான்றிதழ் கோரும் போது, கட்டண பிரச்னை உள்ளிட்ட காரணங்களைக் கூறி, மாற்றுச் சான்றிதழ் வழங்க மறுப்பதாக புகார் எழுந்ததை அடுத்து, மாற்றுச் சான்றிதழ் இல்லாமல் மாணவர்களை சேர்த்துக் கொள்ள வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்தது.

அதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், கட்டணம் செலுத்த இயலவில்லை, மாற்றுச் சான்றிதழ் கிடைக்கவில்லை போன்ற காரணங்களுக்காக ஒருவரின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என தெரிவித்து, மாற்றுச் சான்றிதழை மாணவர்களுக்கு வழங்க உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் அகில இந்திய மற்றும் தமிழ்நாடு தனியார் பள்ளிகளின் சங்கங்கள் தொடர்ந்த வழக்கில், மாணவர்களின் முழுமையான கல்விக் கட்டணத்தை நம்பியே கல்வி நிறுவனங்களின் அனைத்து செலவினங்களும் உள்ளதாகவும், அவற்றை முழுமையாக வழங்காவிட்டால் தங்கள் நலன் பாதிக்கப்படும் என தெரிவிக்கபட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, சங்கங்களின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜி.சங்கரன், கட்டணத்தை முழுமையாக வசூலிக்காமல் மாற்றுச் சான்று வழங்கிவிட்டால், மீண்டும் வசூலிப்பது இயலாத நிலைக்கு உள்ளாவோம் என்பதால், கட்டண நிலுவையை குறிப்பிடும் வகையில் நீதிமன்றம் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்.

அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏ.செல்வேந்திரன், ஏற்கனவே தொடரப்பட்ட வழக்குகளில் நீதிமன்றம் தெளிவான உத்தரவுகளை பிறப்பித்துள்ளதால் மேற்கொண்டு உத்தரவுகள் பிறப்பிக்க தேவையில்லை என தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில், முழுமையாக கட்டணம் செலுத்திய மாணவர்களுக்கு உரிய மாற்றுச் சான்றிதழை வழங்க வேண்டுமெனவும், கட்டண பாக்கி உள்ள மாணவர்களுக்கு வழங்கப்படும் சான்றுகளில் “கட்டண பாக்கி உள்ளது” என் குறிப்பிடலாம் என உத்தரவிட்டுள்ளார்.

மேலும், மாணவர்களுக்கான இ.எம்.ஐ.எஸ். இணையத்தில் உரிய திருத்தங்களை 2 வாரத்தில் மேற்கொள்ள வேண்டுமெனவும் உத்தரவிட்டு, பள்ளிகளின் சங்கங்கள் தொடர்ந்த வழக்கை முடித்துவைத்துள்ளார்.
[11/30, 17:14] Sekarreporter 1: மேல் மருவத்தூரில் உள்ள ஆதிபராசக்தி சித்தர் பீடம் ஆக்கிரமித்துள்ள நீர்நிலையை மீட்பது தொடர்பாக எடுக்கவுள்ள நடவடிக்கைகள் குறித்து நாளை விளக்கமளிக்க காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் மேல்மருவத்தூர் அடுத்த சோத்துபாக்கம் பகுதியில் ‘கீழ் மருவத்தூர்’ ஏரி இருந்து வந்தது. கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் இந்த ஏரி தனி நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது.

இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி அதே பகுதியை சேர்ந்த ராஜா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார்.

கடந்த முறை இந்த வழக்கை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் ஆதிகேசவலு அடங்கிய அமர்வு, ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக எடுத்த நடவடிக்கைகள் குறித்த நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தனர்.

இந்த வழக்கு இன்று பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் குறிப்பிடும் பகுதியில் உள்ள அரசு நிலங்களில் 300’க்கும் மேற்பட்ட வீடுகள், அரசு அலுவலகங்கள், இரயில் பாதைகள் உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த இடத்தில் ஒரு பகுதியை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் ஆக்கிரமித்து கட்டிடங்கள் எழுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கபட்டது.

கடந்த அதிமுக ஆட்சியில் தான் இந்த பகுதியில் ஆக்கிரமிப்புகள் நடைபெற்றதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதை ஏற்க மறுத்த நீதிபதிகள், ஆட்சிகள் மாறினாலும் அதிகாரிகள் மாறவில்லை என்பதால் ஆக்கிரமிப்பை அனுமதித்த அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும் என் தெரிவித்தனர்.

மேலும், இந்த வழக்கில் ஏற்கனவே கடந்த 2018 ஆம் ஆண்டு அப்போதைய அரசு நிலை அறிக்கை தாக்கல் செய்திருந்தாலும், தற்போது எடுக்க உள்ள நடவடிக்கை தொடர்பாக நாளை உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவித்து வழக்கை நாளை தள்ளி வைத்தனர்.
[11/30, 17:41] Sekarreporter 1: விதிகளை பின்பற்றாமல் எந்த பேனரும் வைக்க அனுமதிக்க கூடாது என தமிழக அரசு அதிகாரிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விழுப்புரத்தில் முன்னாள் எம் எல் ஏ இல்லத் திருமணத்திற்கு அமைச்சர் பொன்முடியை வரவேற்று பேனர் வைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட 12 வயது சிறுவன் தினேஷ் மின்சாரம் தாக்கி பலியானார்.

கடந்த ஆகஸ்டில் நடந்த இந்த சம்பவத்தை குறிப்பிட்டு விழுப்புரத்தில் சட்டவிரோதமாக பேனர்கள், பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட கோரியும், பலியான சிறுவனுக்கு உரிய இழப்பீட்டை வழங்க கோரியும் விழுப்புரத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசு, திமுக உள்ளிட்டோர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், இவ்வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், உயர் நீதிமன்றம் பேனர்கள் வைக்க கூடாது என உத்தரவிட்டுள்ளதால், பேனர்கள் வைக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளப் போவதில்லை என திமுக தலைவர் அறிவித்ததாகவும், அவர் முதல்வராக பதவியேற்ற போது கூட பேனர்கள் வைப்பது தவிர்க்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், விழுப்புரம் சம்பவத்தை பொறுத்தவரை சிறுவனை பணிக்கு அமர்த்தியது காண்ட்ராக்டர் தான் எனவும், அவர் தரப்பில் பலியான சிறுவனின் குடும்பத்துக்கு 1.50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, காண்ட் ராக்டர் கைது செய்யப்பட்டதாகவும், தற்போது அவர் ஜாமீனில் உள்ளதாகவும் தெரிவித்தார்.

சென்னை மாநகராட்சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பேனர்கள் வைப்பதை முறைப்படுத்த சட்டம் உள்ளதாகவும், அதன்படி விதிமீறி செயல்படுபவர்களுக்கு சிறை தண்டனையும், அபராதமும் விதிக்க வகைவகை செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதையடுத்து, சட்டவிரோதமாக பேனர் வைக்கும் நடைமுறைக்கு முற்றிப்புள்ளி வைக்க வேண்டும் என்றும், பேனர் வைக்கும் நிகழ்ச்சிகளில் முதல்வர் கலந்து கொள்ள மாட்டார் என கூறுவது மட்டும் போதாது என்றும் கடுமையான நடவடிக்கையும் எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், ஆளுங்கட்சி மட்டுமல்லாமல், அனைத்து கட்சிகளையும் சேர்த்து சொல்வதாகவும் தெரிவித்தனர்.

அனைவரும் அனுமதி பெற்றே பேனர்கள் வைப்பதாக நினைக்கவில்லை எனக் கூறிய நீதிபதிகள், அனுமதி பெறாதவர் மீது யாரிடம் புகார் அளிக்க வேண்டும்… அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது எனவும் கேள்வி எழுப்பினர்.

அரசியல்வாதிகள் மட்டுமல்ல மற்றவர்களும் பேனர்கள் வைப்பதாக கூறிய நீதிபதிகள், பலியான சிறுவனின் குடும்பத்துக்கு அரசு இழப்பீடு வழங்கி விட்டு, சம்பந்தப்பட்ட கட்சியிடம் வசூலிக்க வேண்டும் என மனுதாரர் கோருவது போல உத்தரவிட முடியாது என மறுத்து விட்டனர்.

பின்னர், விதிகளை பின்பற்றாமல் எந்த பேனரும் வைக்க அனுமதிக்க கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.
[11/30, 18:35] Sekarreporter 1: ,நீதிமன்றம் உத்தரவு படி கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி இறக்கும் வகையில் லாரிகளுக்கு ஒரு ஏக்கர் நிலம் ஒதுக்கபட்டுவிட்டதாக மார்கெட் கமிட்டி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தக்காளி விலை கிலோ 100 ரூபாய்க்கு மேல் சென்றதால் கோயம்பேடு மார்க்கெட்டில் மூடிபட்டுள்ள தக்காளி கிரவுண்டை திறக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தந்தை பெரியார் மொத்த தக்காளி வியாபாரிகள் சங்கம் வழக்கு தொடர்ந்தது.

அதில், கோயம்பேடு மார்க்கெட்டில் மூடப்பட்டுள்ள தக்காளி கிரவுண்டை திறப்பதன் மூலம் வெளி மாநிலங்களில் இருந்து தக்காளிகளை லாரியில் கொண்டு வந்து இறக்கி, குறைந்த விலையில் மக்களுக்கு தக்காளியை விற்பனை செய்ய முடியும் என்று கூறி இருந்தது.

இதை ஏற்றுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.சுரேஷ்குமார், தக்காளி விலை குறையும் வரை பொதுநலன் கருதி கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளிகளை கொண்டு வந்து இறக்குவதற்கு ஒரு ஏக்கர் நிலத்தை ஒதுக்க வேண்டும் என மார்க்கெட் கமிட்டி மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்துக்கு நேற்று உத்தரவிட்டார்.

அந்த உத்தரவில் இன்று காலை 4 மணி முதல் 4 வாரத்திற்கு தக்காளி லாரிகளை அந்த ஒரு ஏக்கர் நிலத்தில் அனுமதிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

ஆனால் நீதிமன்ற உத்தரவின்படி தக்காளிக்கு ஒரு ஏக்கர் நிலத்தை அதிகாரிகள் ஒதுக்கவில்லை என இன்று காலை நீதிபதி சுரேஷ்குமாரிடம் மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் சிவா முறையிட்டார்.

நீதிமன்ற உத்தரவு குறித்து அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்ட போது அவர்கள் எந்த விதமான பதிலும் தெரிவிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

இதையடுத்து அதிகாரிகள் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி,கோயம்பேடு மார்க்கெட் கமிட்டி சார்பில் ஆஜரான வக்கீலையும், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் சார்பில் ஆஜரான வக்கீலையும் பிற்பகல் நேரில் ஆஜராக உத்தரவிட்டார்.
இதனையடுத்து நீதிபதி முன் ஆஜரான வழக்கறிஞர்கள் 14 ஆவது நுழைவாயில் அருகில் இடம் ஓதுக்கபட்டுள்ளதாக தெரிவித்தனர்.

இதனை நீதிபதி பதிவு செய்து கொண்டார்.
[11/30, 19:50] Sekarreporter 1: ஆளில்லா ரயில்வே லெவல் கிராசிங்குக்கு மாற்றாக சுரங்கப் பாதை அமைப்பதை எதிர்த்து வழக்கு தொடர்ந்தவருக்கு சென்னை உயர் நீதிமன்றம் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

நாகை மாவட்டம் மணக்காடு கிராமத்தை சேர்ந்த எஸ்.டி.ஆறுமுகம் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், வேதாரண்யத்திற்கும் திருத்துறைப்பூண்டிக்கும் இடையில் ரயில் வழித்தடத்தில் நீர்நிலை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஆளில்லா லெவல் கிராசிங்குக்கு பதிலாக சுரங்கப் பாதை அமைக்கப்படுவதால், அந்த கட்டுமானத்தை அகற்ற வேண்டுமென கோரிக்கை.வைத்திருந்தார்.

இந்த மனு பொறுப்பு தலைை நீதிபதி முனீஷ்வரநாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு பிளீடர் பி.முத்துக்குமார் ஆஜராகி நாகை மாவட்ட ஆட்சியரின் பதில் மனுவை தாக்கல் செய்தார். அதில் பாதையின் இருபுறமும் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ள இடம் அரசு புறம்போக்கு மற்றும் ரயில்வேக்கு சொந்தமானது என்றும், நீர் நிலை அல்ல என்றும் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. நீர் நிலை என்பது சுரங்கப்பாதை உள்ள இடத்திலிருந்து தூரத்தில் உள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது.

ரயில்வே தரப்பு.வழக்கறிஞர் பி.டி.ராம்குமார் ஆஜராகி தெற்கு ரயில்வே பதில் மனுவை தாக்கல் செய்தார். அதில், சுரங்கப்பாதை அமைப்பதற்காக வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் ஆகியோரின் கள ஆய்விற்கு பிறகே சுரங்கப்பாதை கட்டப்பட்டு வருவதாகவும், பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு அமைக்கப்பட்டு வரும் சுரங்கப்பாதை தற்போது 90 சதவீத பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் பொதுமக்கள் பயன்படுத்த தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், சட்டத்தை தவறாக பயன்படுத்தும் வகையில் தொடரப்பட்டுள்ள வழக்கு எனக் கூறி, மனுதாரருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, வழக்கை தள்ளுபடி செய்தனர். அபராதத்தை டிசம்பர் 15ம் தேதிக்குள் தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணையக் குழுவிடம் செலுத்தவும் உத்தரவிட்டனர்.
[11/30, 20:23] Sekarreporter 1: கொரோனா சிகிச்சையில் அளித்த பெண் மருத்துவருக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த அரசு மருத்துவரின் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கொரோனா சிகிச்சை பணியில் ஈடுபட்டு வருவதால், அவர்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக தேனாம்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியிலும் சில மருத்துவர்கள் அரசு செலவில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதேபோல சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் பணிபுரியும் 35 வயதான அரசு மருத்துவர் வெற்றிசெல்வனும் தங்க வைக்கப்பட்டிருந்தார். அவரை போல தங்கவைக்கப்பட்ட பெண் மருத்துவரின் அறைக்குள் வெற்றிச்செல்வன் புகுந்து, பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார்.

இதுகுறித்த பெண் மருத்துவர் மற்றும் விடுதி நிர்வாகம் அளித்த புகாரில், வழக்குப்பதிவு செய்த தேனாம்பேட்டை காவல் நிலையத்தினர் வெற்றிச்செல்வனை அக்டோபர் 18ஆம் தேதி கைது செய்தனர்.

இந்நிலையில் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனு நீதிபதி செல்வக்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை விசாரணை ஆரம்பகட்டத்தில் உள்ளதாக கூறி அரசு மருத்துவர் வெற்றிச்செல்வனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
[12/1, 06:20] Sekarreporter 1: வருமானத்திற்கு அதிகமாக 22 லட்ச ரூபாய் சொத்து சேர்த்த முன்னாள் காவல் ஆய்வாளருக்கு மூன்றாண்டு சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றிய முகமது நசீர். கடந்த 1999-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரையிலான பணிக்காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக 22 லட்ச ரூபாய்க்கு சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு துறையினர் நசீர் மீதும், உடந்தையாக இருந்ததாக மனைவி பவுசியா பேகம் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. நீதிபதி ஓம்பிரகாஷ் பிறப்பித்த உத்தரவில் இருவர் மீதான குற்றச்சாட்டும் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி முகமது நசீருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை, 5 ஆயிரம் ரூபாய் அபராதமும், பவுசியா பேகத்துக்கு ஓரான்டு சிறை தண்டனை, 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

வில்லிவாக்கம் கொன்னூரில் உள்ள அவரது 3 வீடுகளை அரசுடமையாக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

You may also like...