Madras high court orders november 25

[11/25, 12:08] Sekarreporter 1: தக்காளி விலை அதிரடியாக குறைக்க முடியும். கிலோ 40 முதல் 50 வரை பொதுமக்களுக்கு விற்பனை செய்து தமிழக அரசுக்கு உதவ எங்கள் சங்கம் தயார்….

கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி மைதானத்தை திறந்தால் சாத்தியம் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் முன்பு தக்காளி மொத்த வியாபாரிகள் சங்கம் முறையீடு

கோயம்பேட்டில் கொரோனாவால் மூடப்பட்ட மைதானத்தை திறந்தால் ஜெய்பூர், உதய்பூர், நாக்பூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து ஆந்திரா, கர்நாடகம் வழியாக தக்காளி லாரிகள் இங்கு கொண்டு வந்து, மைதானத்தில் நிறுத்தி சரக்குகளை இறக்க முடியும். எனவே தக்காளி மைதானத்தை திறக்க உத்தரவிட வேண்டும் என அகஸ்ட் மாதம் தொடர்ந்த வழக்கில் இன்று முறையீடு
[11/25, 12:36] Sekarreporter 1: லஞ்ச ஒழிப்பு வழக்கில் சிக்கிய சார் பதிவாளர் மீதான துறை ரீதியான விசாரணையை விரைந்து முடிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை வில்லிவாக்கம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தியதில், கணக்கில் வராத 70 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து, அங்கு பணியாற்றிய சார் பதிவாளர் கோபால கிருஷ்ணன், தூத்துக்குடிக்கு இட மாற்றம் செய்யப்பட்டார். 

ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளான அவர், மீண்டும் சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டதாகவும், அதுசம்பந்தமான உத்தரவை ரத்து செய்யக் கோரி, கருப்பு எழுத்து இயக்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத்பண்டாரி,நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது அப்போது அரசு தரப்பு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆஜராகி, சம்பந்தப்பட்ட பதிவாளர் மீது துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார். இதை எதிர்த்து, சார்பதிவாளர் தனியாக வழக்கு தொடர்ந்துள்ளதாக தெரிவித்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள்,
சார்பதிவாளர் கோபாலகிருஷ்ணன் மீதான துறை ரீதியான நடவடிக்கையை விரைந்து மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
[11/25, 12:36] Sekarreporter 1: கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி மைதானத்தை திறந்தால்
ஒரு கிலோ தக்காளி 40 ரூபாய்க்கு பொதுமக்களுக்கு வழங்க தயார் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தக்காளி மொத்த வியாபாரி சங்கம் முறையீடு செய்துள்ளது.

தமிழகத்தில் அண்மைக்காலமாக தக்காளி விலை அதிகரித்திருக்கிறது.ஒரு கிலோ தக்காளி 140 ரூபாய் முதல் 150 வரை விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஆர். சுரேஷ்குமார் முன்பு தந்தை பெரியார் மொத்த தக்காளி வியாபாரிகள் சங்கம் சார்பில், வழக்கறிஞர் சிவா என்பவர் ஆஜராகி முறையீடு செய்தார்.
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020-ஆண்டு மே 5-ந் தேதி கோயம்பேடு மொத்த காய்கறி மார்க்கெட் மூடப்பட்டு, பின்னர் செப்டம்பர் 28-ந்தேதி மீண்டும் திறக்கப்பட்டதாக தெரிவித்தார்.
கோயம்பேடு மார்க்கெட்டில் 86 சென்ட் நிலப்பரப்பில் தக்காளி கிரவுண்ட் என்ற மைதானம் உள்ளது என்றும் இங்கு தான் தக்காளி ஏற்றி வரும் லாரிகள் நிறுத்தப்பட்டு சரக்குகள் இறக்கப்படும்.
கோயம்பேடு மார்க்கெட்டை அரசு திறந்தாலும் இந்த மைதானத்தை திறக்கவில்லை என்றும், இந்த மைதானத்திற்குள் தக்காளியுடன் ஏற்றிவரப்பட்ட பதினொரு லாரிகள் முன்பு நிறுத்தப்பட்டபோது அதிகாரிகள் மைதானத்தை நுழைவு வாயிலை பூட்டி விட்டனர். இதனால் தக்காளிகள் அழுகிய நிலையில் பல நாட்களுக்குப் பின்னர், உயர்நீதிமன்ற உத்தரவின்படி லாரிகள் வெளியில் எடுக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார்..
இதனால் வெளி மாநிலங்களிலிருந்து தக்காளி ஏற்றி வரும் வாகனங்கள் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வருவதில்லை. இதன் காரணமாக தக்காளி விலை தமிழகத்தில் தாறுமாறாக உயர்ந்துள்ளது.
தற்போது இந்த மைதானத்தை திறந்தால் ஜெய்பூர், உதய்பூர், நாக்பூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து ஆந்திரா, கர்நாடகம் வழியாக தக்காளி லாரிகள் இங்கு கொண்டு வந்து, மைதானத்தில் நிறுத்தி சரக்குகளை இறக்க முடியும். இதன் மூலம் தக்காளி விலை அதிரடியாக குறைக்க முடியும். கிலோ 40 முதல் 50 வரை பொதுமக்களுக்கு விற்பனை செய்து தமிழக அரசுக்கு உதவ எங்கள் சங்கம் தயாராக உள்ளது என்று தெரிவித்தார். எனவே தக்காளி மைதானத்தை திறக்க உத்தரவிட வேண்டும் என்ற நிலுவையில் உள்ள வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இதற்கு பதிலளித்த நீதிபதி சுரேஷ்குமார் இந்த வழக்கை நாளை விசாரிப்பதாக தெரிவித்துள்ளார்.
[11/25, 12:37] Sekarreporter 1: திருத்தணி,திருச்சி மலைக்கோயில் உள்ளிட்ட ஐந்து மலைக்கோயில்களில் கேபிள் ரோப்கார் வசதி மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது..

வழக்கறிஞர் ஜெகநாத் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள பொது நல வழக்கில் ஏற்கனவே பக்தர்களின் வசதிக்காக பழனி முருகன் கோவிலில் கேபிள் ரோப்கார் வசதி உள்ளதாகவும் இதேபோல் தமிழகத்தில் உள்ள முப்பத்தி மூன்று மலைக்கோயில்களில் கேபிள் ரோப் கார் வசதி செய்ய தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்து நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் ஆர் சண்முகசுந்தரம் ஏற்கனவே ஐந்து மலை கோவில்களில் கேபிள் ரோப்கார் வசதி செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு, நடவடிக்கைகள் மேற்கொள்ள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், குறிப்பாக திருத்தணி மலை திருச்செங்கோடு மலை ,திருச்சி மலைக்கோட்டை, திருநீர்மலை,திருக்கழுக்குன்றம் உள்ளிட்ட ஐந்து மலை கோவில்களில் இந்த வசதி ஏற்பாடு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார். மற்ற கோவில்கள் எல்லாம் சிறிய மலைகளாக உள்ளதால் அதற்கான வாய்ப்பு இல்லை என்றும் குறிப்பிட்டார். அந்த மலைகள் கோயில்களில் துறை சார்பில் பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது சுட்டிக்காட்டினார். மேலும் சோளிங்கர் மற்றும் அய்யன் மலை ஆகிய இரண்டு கோயில்களில் வாய்ப்பு உள்ளதா என்பது குறித்து ஆராயப்பட்டு வருவதாக தெரிவித்தார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்துவைத்தனர்.
[11/25, 12:57] Sekarreporter 1: மாணவிகளுக்குபாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான சிவசங்கர்பபாவிற்கு சிறப்பு சிகிச்சை அவசியம் என அரசு மருத்துவர் பரிந்துரைத்தால், தனியார் மருத்துவமனையில் அனுமதிப்பது குறித்து சிறைத்துறை பரிசீலிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில்ஹரி சர்வதேச பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா ஜூன் 26ல் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கண்பார்வை, இதயநோய், நீரழிவு உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட தன்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கும்படி சிறைத்துறைக்கு உத்தரவிடக் கோரி சிவசங்கர் பாபா மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, சிறைத்துறை தரப்பில், சிவசங்கர் பாபாவுக்கு அவ்வப்போது உரிய சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், போதிய மருத்துவ உதவிகள் அளிக்கப்படுவதாகவும், சிறப்பு சிகிச்சை தேவைப்பட்டால் அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாகவும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதனால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் வலியுறுத்தப்பட்டது.

சிவசங்கர் பாபா தரப்பில், கண் தொடர்பான பிரச்சினைகளும், நெஞ்சுவலியும் இருப்பதாக கண்டறியப்பட்டதாகவும், ஒரு கண்ணில் முழுமையாக பார்வை இழந்துள்ளதாகவும், தனியார் மருத்துவமனையின் சிகிச்சை அவசியம் என வலியுறுத்தப்பட்டது.

பின்னர் நீதிபதி, அரசு மருத்துவமனையில் சில வசதிகள் இல்லை என கருதினால் அவர்களே வேறு இடத்திற்கு பரிந்துரை செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை சுட்டிக்காட்டியதுடன், சிறப்பு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டுமென அரசு மருத்துவர் பரிந்துரைத்தால், அதை சிறைத்துறை பரிசீலிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
[11/25, 13:54] Sekarreporter 1: மதம் மாறியவருக்கு கலப்பு திருமண சான்றிதழ் வழங்கினால், பலன்களை தவறாக பயன்படுத்த கூடும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சேலம் மாவட்டம், மேட்டூரை சேர்ந்த கிறிஸ்தவ ஆதி திராவிடர் வகுப்பைச் சேர்ந்த பால்ராஜ் என்பவர், அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த அமுதா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

கிறிஸ்தவ ஆதி திராவிடர் என்பதால் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என சாதிச் சான்று பெற்ற அவர், தனக்கு கலப்பு மணம் புரிந்து கொண்டவர்களுக்கான சான்றிதழ் வழங்கக் கோரி விண்ணப்பித்தார்.

இந்த விண்ணப்பத்தை பரிசீலித்த மேட்டூர் வட்டாச்சியர், மதம் மாறியவருக்கு கலப்பு மண சான்று வழங்க முடியாது என கூறி, அவரது விண்ணப்பத்தை நிராகரித்து உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து பால்ராஜ் தாக்கல் செய்த வழக்கு, நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்தபோது, கடந்த 1997 ஆண்டு அரசாணைப்படி
மதமாறிய நபர்களுக்கு கலப்பு மண சான்றிதழ் வழங்க முடியாது என்பதால், மனுதரார் கோரிக்கையை நிராகரித்தது சரியே என அரசுத்தரப்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து, மதம் மாறியவருக்கு கலப்பு மண சான்று வழங்க உத்தரவிட முடியாது என கூறி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

மதம் மாறுவதால் ஒருவரின் சாதி மாறுவதில்லை எனக் குறிப்பிட்ட நீதிபதி, ஒரேசாதியையோ, வகுப்பையோ சேர்ந்த கணவன் – மனைவிக்கு கலப்பு மண சான்று பெற தகுதியில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

மதம் மாறியவருக்கு கலப்பு மண சான்றிதழ் வழங்கினால், கலப்பு மணம் புரிந்தவர்களுக்கான சலுகைகள் தவறாக பயன்படுத்தக் கூடும் எனவும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
[11/25, 15:02] Sekarreporter 1: ஏரியில் சட்டவிரோதமாக வண்டல் மண் அள்ளப்படுவதை எதிர்த்து தொடரபட்ட வழக்கில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

வழக்கறிஞர் செந்தமிழ்செல்வன் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ராணிப்பேட்டை மாவட்டம் அகரம் கிராமத்தில் உள்ள ஏரி, விவசாயிகளுக்கு வாழ்வாதாரமாக உள்ளதாகவும், மழை காலத்தில் இந்த ஏரிக்கு அதிக தண்ணீர் வரத்து ஏற்படும் என்பதால் ஏரிக்கரைகளில் வண்டல்மண் அதிகளவில் சேர்ந்துவிடுவதாக குறிப்பிட்டுள்ளார். இதை அகற்றுவதற்காக தனிநபர் ஒருவருக்கு நீர்வளத் துறை செயலாளர் அனுமதி அளித்து கடந்த அக்டோபர் மாதம் 26ஆம் தேதி உத்தரவு பிறப்பித்ததன் அடிப்படையில், ஜேசிபி இயந்திரங்கள் மூலம் அகரம் ஏரியில் கரையோரத்தில் உள்ள வண்டல் மண்ணை விதிமுறைக்கு முரணாக அதிக அளவில் எடுத்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

இதனால் ஏரியின் கரை பலவீனமாகும் நிலை ஏற்படுவதாகவும், இதுகுறித்து அளித்த புகாரில் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வரர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, வழக்கு தொடர்பாக இரண்டு வாரத்திற்குள் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை தள்ளிவைத்துள்ளனர்.
[11/25, 18:17] Sekarreporter 1: வருமான வரித்துறையினர் சேகர் ரெட்டி வீட்டை சோதனை நடத்தினர் அப்போது அவரிடம் இருந்து டைரி பறிமுதல் செய்தனர் இது தொடர்பாக வருமான வரித்துறை விசாரணை நடத்தினர் இந்த விசாரணையை தொடர்ந்து கடந்த 2017 2018 ஆம் ஆண்டுக்கு முன்னாள் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ரூ 82 கோடியே 12 லட்சத்து 44 ஆயிரத்து 455 வருமான வரி ஏன் வரி செலுத்த வில்லை என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டது இந்த இந்த நோட்டீஸ் ரத்து செய்யக்கோரி ஓ பன்னீர்செல்வம் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்த வழக்கை விசாரித்த தற்காலிக தலைமை நீதிபதி முன் ஈஸ்வர் பாண்டே நீதிபதி ஆதிகேசவலு அவர் விசாரித்து இந்த வழக்கில் எந்த தடையும் விதி்க்க முடியாது என உத்தரவிட்டு, ,,வருமான வரித்துறை இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். மேலும் வருமான வரிதுறை உத்தரவு வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுபட வேண்டும் என்று உத்தரவிட்டனர்
[11/25, 18:31] Sekarreporter 1: முன்னாள் துணை முதல்வர் பன்னீர்செல்வம், 82 கோடியே 32 லட்சம் ரூபாய் வரி செலுத்தக் கூறி வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீசுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

தொழிலதிபர் சேகர் ரெட்டி வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

இந்தச் சோதனையின்போது பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், முன்னாள் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வத்துக்கு வருமானவரித் துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

2015 – 16 ஆம் மதிப்பீட்டு ஆண்டுக்கு 20 லட்சம் ரூபாயும், 2017 – 18 ஆம் மதிப்பீட்டு ஆண்டுக்கு 82 கோடியே 12 லட்சம் ரூபாயும் வரியாக செலுத்த வேண்டும் என்றும் அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த நோட்டீசில் மேல் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கவும், அவற்றை ரத்து செய்யக்கோரியும் பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வு, வருமான வரித்துறையின் நோட்டீசுக்கு தடை விதிக்க மறுத்தததோடு, வருமான வரித்துறையின் மதிப்பீட்டு உத்தரவு உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என உத்தரவிட்டது.

மேலும், மனுவுக்கு பதிலளிக்கும்படி வருமானவரித்துறை உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.

You may also like...