Madras high court orders marxh 1 ஐகோர்ட் உத்தரவுகள் மார்ச் 1

[3/1, 11:50] Sekarreporter 1: உள்ளாட்சி தேர்தலுக்காக சென்னை மாநகராட்சி பகுதியில் ஒட்டப்பட்ட 3705 சுவரொட்டிகள் அகற்றப்பட்டு, அதற்கான செவான 2 லட்சத்து 67 ஆயிரம் ரூபாயை சம்பந்தப்பட்ட வேட்பாளர்களிடமிருந்து வசூலிக்கப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்காக சென்னை மாநகராட்சி 117வது வார்டில் பிரச்சாரத்துக்காக ஒட்டப்பட்ட தனது சுவரொட்டி மீது திமுக-வினர் சுவரொட்டி ஒட்டியுள்ளதாக கூறி, கூடுதல் காவல்துறை பாதுகாப்பு வழங்கக் கோரி அதிமுக வேட்பாளர் ஆறுமுகம் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத் சக்கரவர்த்தி அமர்வு தேர்தலுக்காக விதிகளை மீறி போஸ்டர் ஒட்டியவர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனவும், ஏற்கனவே ஒட்டப்பட்ட சுவரொட்டிகளை அகற்றி, அதற்கான செலவை சம்பந்தப்பட்ட வேட்பாளரிடம் வசூலிக்கவும் உத்தரவிட்டிருந்தனர்.

அந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மாநில தேர்தல் ஆணையம் மற்றும் சென்னை மாநகராட்சி தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் பிப்ரவரி 17 முதல் 19ஆம் தேதி வரை 3705 சுவரொட்டிகள் அகற்றப்பட்டு, அதற்கான செலவுத்தொகை 2 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய் சம்பந்தப்பட்ட வேட்பாளர்களிடமிருந்து வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

அந்த அறிக்கை குறித்து திருப்தி தெரிவித்த நீதிபதிகள், மீதமுள்ள சுவரொட்டிகளையும் ஒரு வாரத்தில் அகற்றி, சமந்தப்பட்ட வேட்பாளர்களிடமிருந்து அதற்கான செலவை வசூலிக்க வேண்டுமென உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.
[3/1, 12:12] Sekarreporter 1: சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நீதிபதி பொன்பாண்டியை, அலுவலக உதவியாளர் பிரகாஷ் கத்தியால் தாக்கினார்

நீதிபதி மருத்துவமனையில் அனுமதி

பணியிட மாற்றம் செய்ததால் நீதிபதி பொன் பாண்டியை அலுவலக உதவியாளர் பிரகாஷ் கத்தியால் குத்தியதாக தகவல்
[3/1, 14:35] Sekarreporter 1: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இருந்து திருடப்பட்டதாக கூறப்படும் மயில் சிலை, கோவில் குளத்தில் புதைக்கப்பட்டுள்ளது என விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல் துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் 2004ம் ஆண்டு குடமுழுக்கு விழாவுக்கு பின், புன்னைவனநாதர் சன்னதியில், லிங்கத்தை மலரால் அர்ச்சிக்கும் மயில் சிலை இருந்ததாகவும், அந்த சிலை மாயமானதாகவும்,   அதற்கு பதிலாக பாம்பை அலகில் வைத்திருக்கும் மயில் சிலை வைத்துள்ளது ஆகம விதிகளுக்கு எதிராக உள்ளதாக கூறி, ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

புதிய சிலையை அகற்றிவிட்டு, ஏற்கனவே இருந்த சிலையை வைத்து கும்பாபிஷேகம் நடத்தவும் மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, அறநிலையத் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், புன்னைவனநாதர் சன்னதியில் அலகில் மலருடன் தான் மயில் சிலை இருந்தது என்பதற்கு எந்த புகைப்பட ஆதாரமும் இல்லை என தெரிவிக்கப்பட்டது.

அதேசமயம், அலகில் பூவுடன் இருந்த மயில் சிலையே இலச்சினையாக இருந்ததாக நிபுணர்களும், அர்ச்சகர்களும் தெரிவித்துள்ளதாகவும், அதனால் அலகில் பாம்புடன் உள்ள மயில் சிலையை மாற்றி விட்டு, அலகின் பூவுடன் இருந்த மயில் சிலையை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கு அவகாசம் வழங்க வேண்டும் எனவும் அறநிலையத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

காவல் துறை தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, சிலை திருட்டு வழக்கு தொடர்பான விசாரணையை முடிக்க உயர் நீதிமன்றம் வழங்கிய ஆறு வார அவகாசம் அடுத்த வாரம் முடிவடைவதாகவும், இதுவரை மேற்கொண்ட விசாரணையில் கோவில் குளத்தில் மயில் சிலை புதைக்கப்பட்டுள்ளது என தெரிய வந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

சிலையை கண்டறிய குளத்தை தோண்டுவதற்கு பதில் வேறு தொழில் நுட்பத்தை பயன்படுத்தலாமா என்பது தொடராக அண்ணா பல்கலைக்கழகத்தின் உதவியை அணுகியுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதை ஏற்று, குளத்தில் சிலை உள்ளதா என்பதை கண்டறிய இரண்டு வார காலம் அவகாசம் வழங்கிய நீதிபதிகள், சிலை மீட்கப்பட்ட பின் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் எனக் கூறி வழக்கை தள்ளிவைத்தனர்.

முன்னதாக சமீபத்தில் கோவிலுக்கு சென்றதாகவும், மயில் சிலையை பார்வையிட்டதாகவும் கூறிய தலைமை நீதிபதி, இந்த வழக்கை விசாரிப்பது முறையாக இருக்காது எனத் தெரிவித்தார். ஆனால் மனுதாரர் ரங்கராஜன் நரசிம்மனும், எதிர்மனுதாரர்களும் வழக்கை தொடர்ந்து விசாரிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டதை அடுத்து, தலைமை நீதிபதி விசாரணையை துவங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
[3/1, 17:00] Sekarreporter 1: அதிமுக-வினரால் கடத்தப்பட்டதாக கூறப்படும், ராணிப்பேட்டை நெமிலி பேருராட்சியின் பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த வார்டு உறுப்பினர் சந்திரசேகரனை மார்ச் 7ஆம் தேதி ஆஜர்படுத்தும்படி காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நெமிலி பேரூராட்சிக்கான 15 வார்டுகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 6 வார்டுகளில் அதிமுக, 5 வார்டுகளில் திமுக, 3 வார்டுகளில் சுயேட்சைகள், 1 வார்டில் பாமக என வெற்றி பெற்றுள்ளனர்.

3வது வார்டில் பாமக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற சந்திரசேகர் என்பவரை அதிமுக-வினரால் கடத்தி சென்றுவிட்டதாகவும் அவரை மீட்கக் கோரி பாட்டாளி மக்கள் கட்சியின் ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட செயலாளர் சரவணன் நெமிலி காவல் நிலையத்தில் பிப்ரவரி 22ஆம் தேதி புகார் அளித்துள்ளார்.

அதன்மீது நடவடிக்கை எடுக்காத நிலையில், தன் கணவர் சந்திரசேகர் காவல்துறையின் சட்டவிரோத காவலில் உள்ளதால், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக் கோரி, சந்திரசேகரின் மனைவி உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கை அவசர வழக்காக நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஏ.ஏ.நக்கீரன் ஆகியோர் விசாரித்தனர்.

அப்போது காவல்துறை தரப்பில் நெமிலி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சங்கர் ஆஜராகி, பாமக நிர்வாகி சரவணன் அளித்த புகாரில் விசாரணை மேற்கொண்டு, சந்திரசேகர் காவல் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டு பிப்ரவரி 27ல் விசாரிக்கப்பட்டதாக தெரிவித்தார். தான் சட்டவிரோத காவலில் இல்லை என்றும், தலைவர் பதவிக்கு நடைபெறவுள்ள மறைமுக தேர்தலில் தனது விருப்பப்படி வாக்களிக்க இருப்பதாக சந்திரசேகர் தெரிவித்தாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. காவல் நிலையத்திலிருந்து அவர் சென்றுவிட்டதால், தங்களது சட்டவிரோத காவலில் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர் * தரப்பில், காவல் நிலையத்திலிருந்து வெளியேறவிட்டார் என்றாலும், இன்னும் வீட்டிற்கு வந்துசேரவில்லை என்றும், எங்கிருக்கிறார் என தெரியவில்லை என்பதால் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டுமென கோர்க்கை வைக்கப்பட்டது.

இதையடுத்து காவல்துறையின் சட்டவிரோத காவலில் இல்லை என்பதால், வழக்கை மார்ச் 7ஆம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், அன்றைய தினம் சந்திரசேகரை ஆஜர்படுத்த உத்தரவிட்டு வழக்கை தள்ளிவைத்தனர்.
[3/1, 17:33] Sekarreporter 1: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஜாமின் மனுவை அவசர வழக்காக விசாரிக்க மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், வரும் வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்துள்ளது.

பிப்ரவரி 19ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சியில் கள்ள ஓட்டு போட முயன்றதாக குற்றம்சாட்டி திமுகவை சேர்ந்த நரேஷ்குமார் என்பவரை தாக்கி, அரைநிர்வாணமாக்கியதாக தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் பதிவான வழக்கில் பிப்ரவரி 20ஆம் தேதி ஜெயக்குமார் கைது செய்யபட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

இந்த வழக்கில் ஜெயக்குமாரின் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த நிலையில் ஜெயக்குமார் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். புகார் அளித்தவர் தற்போது நல்ல நிலையில் உள்ளதாகவும், உடலில் காயங்கள் இல்லை எனவும், கொலை முயற்சி வழக்காக பதிவு செய்தது தவறு எனவும், மருத்துவ அறிக்கையையம் காயங்கள் இல்லை எனவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார். அரசியல் காரணங்களுக்காக இந்த வழக்கு பதிவு செய்யபட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு ஜெயக்குமார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென முறையீடு செய்தனர். ஆனால் நாளைய வழக்குகளுக்கான பட்டியலில் ஏற்கனவே தயாராகி விட்டதால் ஜெயக்குமாரின் மனுவை வரும் வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.
[3/1, 17:36] Sekarreporter 1: திமுக-வினரை தாக்கியதாக கோவை வெள்ளலூர் பேரூராட்சியின் அதிமுக-வை சேர்ந்த மூன்று கவுன்சிலர்களை கைது செய்ய சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

கோவை மாவட்டத்தில் வெள்ளலூர் பேரூராட்சிக்கு நடைபெற்ற தேர்தலில்15 வார்டுகளில் 8 வார்டுகளை அதிமுக கைப்பற்றியுள்ளது. அந்த வெற்றிக் கொண்டாட்ட ஊர்வலத்தின்போது, திமுக பிரமுகரையும், அவரது சகோதரரையும் தாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரில், போத்தனூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த வழக்கில் முன் ஜாமீன் கேட்டு அதிமுக கவுன்சிலர்கள் சந்திரகுமார், கருணாகரன், கணேசன் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அவர்களது மனுவில், வெற்றிக் கொண்டாட்டத்திற்கு இடையே இரு சக்கர வாகனத்தை நிறுத்தி, திமுக தொண்டர் தகராறு செய்த நிலையில், தாங்கள் தாக்கியதாகவும் மற்றும் ஆபாசமாக திட்டியதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

பேருராட்சி தலைவர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் உள்நோக்கத்துடன் புகார் அளிக்கப்பட்டு, வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த ஜாமீன் மனுக்கள் நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, நாளை பதவியேற்பு நடைபெற உள்ளதால் கைது செய்யக்கூடாது என்ற மனுதாரர்கள் கோரிக்கையை எற்று, மூவரையும் கைது செய்யத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். மேலும் வழக்கு குறித்து போத்தனூர் காவல் நிலையத்தினர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் 7ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.
[3/1, 18:06] Sekarreporter 1: பிரசவத்தின்போது மயக்க மருந்து செலுத்தியதில் ஏற்பட்ட கவனக்குறைவால் மகளை இழந்த தந்தைக்கு 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தஞ்சாவூரைச் சேர்ந்த ஆபிரகாம், கர்ப்பிணியான தனது மகள் ஷீலா செல்வராணியை, கடந்த 2009ம் ஆண்டு ஜனவரி 20ம் தேதி, ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்வதற்காக மயக்க மருந்து செலுத்திய மருத்துவர் குமரன், அறுவை சிகிச்சை முடியும் வரை காத்திருக்காமல் வெளியேறியுள்ளார்.

மயக்க மருந்து செலுத்தியதில் கவனக்குறைவாக செயல்பட்டதால், ஷீலா செல்வராணி, 2009, ஜனவரி 24ம் தேதி மரணமடைந்தார்.

மருத்துவர்களின் கவனக்குறைவால் தனது மகள் இறந்து விட்டதாக கூறி, நடவடிக்கை எடுக்க கோரி ஆபிரகாம் தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த ஆணைய உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன் தாஸ், நோயாளிக்கு உரிய சிகிச்சை அளிக்காமல் உரிமையை மீறியுள்ளதாக கூறி, பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தைக்கு 5 லட்சம் ரூபாயை எட்டு வாரங்களில் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.

இத்தொகையை மயக்க மருந்து மருத்துவர்கள் குமரன் மற்றும் முத்துகுமரன் ஆகியோரிடம் இருந்து தலா 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை வசூலிக்கவும் அரசுக்கு உத்தரவிட்டார்.

You may also like...