Madras high court orders march 7 ஐகோர்ட் உத்தரவுகள் மார்ச் 7

[[3/7, 06:43] Sekarreporter 1: Justice R.Mahadevan and Justice J.Satyanarayana Prasad set aside the order of the ITAT and remanded to the AO to examine, whether IL&FS is a public financial institution; full order https://www.sekarreporter.com/justice-r-mahadevan-and-justice-j-satyanarayana-prasad-set-aside-the-order-of-the-itat-and-remanded-to-the-ao-to-examine-whether-il-full-order/
[3/7, 06:52] Sekarreporter 1: The Madras High Court has held that clubbing Transgender persons who self-identified as females under the quota for women is unconstitutional. https://www.sekarreporter.com/the-madras-high-court-has-held-that-clubbing-transgender-persons-who-self-identified-as-females-under-the-quota-for-women-is-unconstitutional/
[3/7, 06:52] Sekarreporter 1: Madurai Bench of Madras High Court has issued a slew of directions to prevent government school teachers from flouting the Tamil Nadu Government Servants (Conditions of Service) Act, 2016 and Service Rules. https://www.sekarreporter.com/madurai-bench-of-madras-high-court-has-issued-a-slew-of-directions-to-prevent-government-school-teachers-from-flouting-the-tamil-nadu-government-servants-conditions-of-service-act-2016-and-service/
[3/7, 07:27] Sekarreporter 1: https://youtu.be/WwdDZzCL1AY
[3/7, 07:54] Sekarreporter 1: https://twitter.com/sekarreporter1/status/1500507295565770753?t=BIlIPsmBzyIP07nbFp82IQ&s=08
[3/7, 11:38] Sekarreporter 1: Life sentence for muder case Counsel for the Complainant Ms.B.Aarathi, B.A., B.L., Special Public Prosecutor. Counsel for the Accused M/s. R. Vijayan, D. Chittrarasi and P. Kumaravel Sd/- T.H. Mohammed Farooq, Sessions Judge, Mahalir Neethimandram, Chennai. https://www.sekarreporter.com/life-sentence-for-muder-case-counsel-for-the-complainantms-b-aarathi-b-a-b-l-special-public-prosecutor-counsel-for-the-accusedm-s-r-vijayan-d-chittrarasi-and-p-kumaravel-sd-t-h-moh/
[3/7, 11:58] Sekarreporter 1: Around two years after shuttling between virtual and hybrid courts due to COVID-19, the Madras High Court has begun to function fully on physical mode from today. Here you see a well lit white marble statue of Justice Tiruvarur Muttuswami Iyer https://www.sekarreporter.com/around-two-years-after-shuttling-between-virtual-and-hybrid-courts-due-to-covid-19-the-madras-high-court-has-begun-to-function-fully-on-physical-mode-from-today-here-you-see-a-well-lit-white-marble/
[3/7, 11:58] Sekarreporter 1: https://twitter.com/sekarreporter1/status/1500719796216037376?t=nK7L6lv0rgmvH0PYYgCSrQ&s=08
[3/7, 12:21] Sekarreporter 1: Tasmak bar case tn govt filed appeal in mhc against the order of justice saravanan for close the bar https://www.sekarreporter.com/tasmak-bar-case-tn-govt-filed-appeal-in-mhc-against-the-order-of-justice-saravanan-for-close-the-bar/
[3/7, 13:26] Sekarreporter 1: Tasmac full order of HONOURABLE MR.JUSTICE C.SARAVANAN W.P. Nos.27352, 27357, 27361, 27936, 27602, 27605, 27613, 27617, 27619, 27621 27625, 27703, 27711, 27719, 27723, https://www.sekarreporter.com/tasmac-full-order-of-honourable-mr-justice-c-saravanan-w-p-nos-27352-27357-27361-27936-27602-27605-27613-27617-27619-27621-27625-27703-27711-27719-27723/
[3/7, 13:26] Sekarreporter 1: https://youtu.be/_MeuKJYiVp4
[3/7, 13:26] Sekarreporter 1: https://youtu.be/zAu2Artv43A
[3/7, 13:26] Sekarreporter 1: https://youtu.be/vQEDG-HRVAw
[3/7, 13:38] Sekarreporter 1: Justice P Velmurugan of Madras HC dismisses CM MK Stalin’s son-in-law V Sabarisan’s plea to strike off his name from a defamation suit filed by former Deputy Speaker Pollachi V Jayaraman for reportedly linking his name with Pollachi sexual abuse case. https://www.sekarreporter.com/justice-p-velmurugan-of-madras-hc-dismisses-cm-mk-stalins-son-in-law-v-sabarisans-plea-to-strike-off-his-name-from-a-defamation-suit-filed-by-former-deputy-speaker-pollachi-v-jayaraman-for-reporte/
[3/7, 15:56] Sekarreporter 1: https://youtu.be/zTSLbjhaJXw
[3/7, 19:20] Sekarreporter 1: https://youtu.be/gMrECiswzOE
[3/7, 19:22] Sekarreporter 1: https://youtu.be/h61Skex-Bp4
[3/7, 19:30] Sekarreporter 1: [3/7, 19:28] Sekarreporter 1: SUBRAMANIYA BHARATHI, SOUL BORN TOO SOON Justice N. Anand Venkatesh t The name Bharathi evokes admiration, no doubt; But to many, it is more of a veneration. But we ignored him for long. An anguished free verse on Bharathi that goes, https://www.sekarreporter.com/subramaniya-bharathi-soul-born-too-soon-justice-n-anand-venkatesh-t-the-name-bharathi-evokes-admiration-no-doubt-but-to-many-it-is-more-of-a-veneration-but-we-ignored-him-for-long-an-anguish/
[3/7, 19:28] Sekarreporter 1: [3/7, 18:58] Vijayaragan Mhc Advt: Good Evening. First of the Special Contributions- in my bag- I have sought for my anecdotal vision on Bharathi. Waiting for the rest. To add lustre and substance to my effort- which Kalaimagal Publications has agreed to publish in English. And Alliance Publications in Tamil. Looking forward to the rest. Thanks in advance.
[3/7, 19:01] Sekarreporter 1: 🌹
[3/7, 19:30] Sekarreporter 1: https://twitter.com/sekarreporter1/status/1500833450131361793?t=4y4aoZeI7EcAHOja4LETcg&s=08
[3/7, 20:15] Sekarreporter 1: V sabaresan strike of petition copy in defamation suit filed by admk https://www.sekarreporter.com/v-sabaresan-copy-in-defamation-suit-filed-by-admk/

3/7, 11:06] Sekarreporter 1: கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, காணொலி காட்சி மூலம் வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இரண்டு ஆண்டுகளுக்கு பின், நேரடி விசாரணை முறைக்கு திரும்பியுள்ளது.

கொரோனா தொற்று பரவலை அடுத்து அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, சென்னை உயர் நீதிமன்றம், கடந்த இரு ஆண்டுகளாக காணொலி காட்சி மற்றும் நேரடி விசாரணை மூலம் வழக்குகளை விசாரித்து வருகிறது.

தற்போது தொற்று பாதிப்பு பெருமளவில் குறைந்து வருவதை அடுத்து, இன்று முதல் காணொலி காட்சி விசாரணை நிறுத்தப்பட்டு, நேரடி விசாரணை துவங்கியுள்ளது.

காணொலி காட்சி மற்றும் நேரடி விசாரணை என கலப்பு விசாரணை மூலம் வழக்குகள் விசாரணை மேற்கொள்ளும் போது, இணையதள தொடர்பு உள்ளிட்ட பல சிக்கல்களை எதிர்கொள்வதாகவும், வழக்குகளை விரைந்து முடிக்க இயலவில்லை எனவும் சக நீதிபதிகள் தெரிவித்ததால், இன்று முதல் நேரடி விசாரணை துவங்கும் என தலைமை நீதிபதி முனீஷ்வர் பண்டாரி ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

அதன்படி, இன்று முதல் நேரடி விசாரணை துவங்கியது. இருப்பினும், காணொலி காட்சி விசாரணை தேவைப்படும் மூத்த வழக்கறிஞர்கள் மட்டும் காணொலி காட்சி மூலம் வாதிட அனுமதிக்கப்படுவர் என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
[3/7, 12:13] Sekarreporter 1: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை ஒட்டி அமைந்துள்ள பார்களை ஆறு மாதங்களுக்குள் மூட வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, டாஸ்மாக் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

தமிழகம் முழுவதும், டாஸ்மாக் சில்லறை மதுபான கடைகளின் அருகில் உள்ள பார்களில் , தின்பண்டங்கள் விற்பனை மற்றும் காலி பாட்டில்களை சேகரிப்பதற்கு புது டெண்டர் அறிவிப்பை டாஸ்மாக் நிறுவனம் வெளியிட்டது.

 கொரோனா ஊரடங்கால் பார்கள் மூடப்பட்டுள்ளதால், புதிய டெண்டருக்கு பதிலாக பழைய டெண்டர் நீட்டிக்க வேண்டும், நில உரிமையாளர்களின் தடையில்லா சான்றை கட்டாயப்படுத்தக் கூடாது போன்ற கோரிக்கைகளுடன் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி சி.சரவணன்,அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

அதேசமயம், தமிழ்நாடு மதுவிலக்கு சட்டப்படி, பார் நடத்த டாஸ்மாக்குக்கு அதிகாரம் இல்லாததால், தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள பார்களை ஆறு மாதங்களுக்குள் மூட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

1937 தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்தின் கீழ் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பதற்கு மட்டுமே அனுமதி உண்டு என்றும், அங்கு வாங்கும் மதுபானங்களை வீடுகளிலோ அல்லது தனியான இடங்களிலோ அருந்தலாம் என்று தெரிவித்துள்ளார்.

தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து டாஸ்மாக் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

அதில், தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின் படி, டாஸ்மாக் கடைகளின் அருகில் பார்களுக்கு உரிமம் வழங்க டாஸ்மாக் நிறுவனத்துக்கு அதிகாரம் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

பார்கள் நடத்த டாஸ்மாக் நிறுவனத்துக்கு அதிகாரமில்லை என தனி நீதிபதி மேற்கோள்காட்டிய மதுவிலக்கு சட்டப்பிரிவு, பார் உரிமம் வழங்கும் விஷயத்துக்கு பொருந்தாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

டாஸ்மாக் பார் டெண்டரை எதிர்ர்து தான் வழக்கு தொடரப்பட்டதாகவும், டாஸ்மாக் கடைகள் அருகில் பார் அமைக்க கூடாது என எந்த வாதங்களும் முன் வைக்கப்படாத நிலையில், தனி நீதிபதி, பார்களை மூட வேண்டும் என பிறப்பித்த உத்தரவு தேவையற்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும், அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மேல் முறையீட்டு வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
[3/7, 13:27] Sekarreporter 1: பொள்ளாச்சி வன்கொடுமை விவகாரம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் தொடர்ந்த கிரிமினல் அவதூறு வழக்கில் இருந்து தம்மை விடுவிக்கக்கோரி சபரீசன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

பொள்ளாச்சியில் பெண்கள் மற்றும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது மற்றும் வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவங்களில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கும் தொடர்பிருப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியிருந்தார். ஸ்டாலினின் இந்த பேச்சு கலைஞர் தொலைக்காட்சியிலும், நக்கீரன் மற்றும் ஜூனியர் விகடன் இதழ்களிலும் செய்தியாக வெளியிடப்பட்டிருந்தது.

பொள்ளாச்சி சம்பவத்தில் தொடர்ந்து தன்னை தொடர்படுத்தி உண்மைக்கு புறம்பான தகவலை ஸ்டாலின் பேசிவருவதால் ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கோரி பொள்ளாச்சி ஜெயராமன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

தன்னை பற்றி ஸ்டாலின் பேசுவதற்கு நிரந்தர தடை விதிக்க வேண்டுமெனவும் மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.

பொள்ளாச்சி ஜெயராமன் தொடர்ந்த இந்த வழக்கில் திமுக தலைவர் ஸ்டாலின், அவரது மருமகன் வி.சபரீசன், கலைஞர் தொலைக்காட்சி, நக்கீரன் ஆசிரியர் கோபால், ஜூனியர் விகடன் ஆசிரியர் அறிவழகன் ஆகியோர் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டு, இவர்களுக்கு எதிராக கோரிக்கைகள் வைக்கப்பட்டிருந்தது.

பொள்ளாச்சி ஜெயராமன் வழக்கிலிருந்து தம்மை விடுவிக்கக்கோரி சபரீசன் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி வேல்முருகன் முன்பு இன்றைய தினம் விசாரணைக்கு வந்தது. சபரீசன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பொள்ளாச்சி விவகாரம் தொடர்பாக தனியார் பத்திரிகையில் செய்தி வெளியானதற்கு சபரீசன் மீது வழக்கப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த பத்திரிகைக்கும் , சபரீசனுக்கும் சம்பந்தமே இல்லாத நிலையில் சபரீசனை வழக்கில் இணைத்தது தவறு என்றும் வாதிடப்பட்டது.

சபரீசன் தரப்பு கோரிக்கை ஏற்க மறுத்த நீதிபதி, அவதூறு வழக்கை எதிர்கொள்ளுமாறு உத்தரவிட்டார். மேலும், பொள்ளாச்சி ஜெயராமனின் மனு தொடர்பாக பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி வழக்கின் விசாரணையை வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைத்தார்
[3/7, 15:43] Sekarreporter 1: தமிழக முதலமைச்சர்
மு .க. ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ததது தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் திருப்தி தெரிவித்துள்ளது..

கடந்த 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சென்னையில்,
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி அப்போது திமுக தலைவர் மு. க .ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன், காங்கிரஸ் கட்சியின் அப்போதைய மாநில தலைவர் திருநாவுக்கரசு, தமுமுக கட்சியை சேர்ந்த காதர் மைதீன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா மற்றும் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை அடுத்து ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் மீது திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது .இந்த நிலையில் இந்த வழக்கள் திரும்பப்பெற்றதை அடுத்து, சென்னை எம்பி எம்எல்ஏக்கள் சிறப்பு நீதிமன்றம் வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டிருந்தது ..
இதற்கிடையே எம்பி எம்எல்ஏக்கள் சிறப்பு நீதிமன்ற வழக்குகள் விசாரணை தொடர்பான வழக்கில், தன்னிச்சையாக விசாரித்து வரும் தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி,நீதிபதி பரதசக்ரவர்த்தி முதன்மை அமர்வு முன்பு, கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது ,எதன் அடிப்படையில் இந்த வழக்குகள் ரத்து செய்யப்பட்டது, என்று காவல்துறைக்கு கேள்வி எழுப்பியிருந்தனர். இந்த நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது,
அரசு தரப்பு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன்முகமது ஜின்னா ஆஜராகி, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவே தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், இந்த போராட்டம் மக்களுக்கான போராட்டம்,விவசாயிகளுக்கான போராட்டம் என்பதனால் அந்த வழக்குகள் ரத்து செய்யப்பட்டதாக விளக்கமளித்தார். மேலும் உச்சநீதிமன்ற உத்தரவுக்கு முரணாக வழக்குகள் ரத்து செய்யப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டினார். இதற்கு தலைமை நீதிபதி அமர்வு திருப்தி தெரிவித்து வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
[3/7, 17:39] Sekarreporter 1: மதுரை டி.கல்லுபட்டி பேரூராட்சி 10 வது வார்டு தேர்தல் முடிவை மாற்றி அறிவித்த தேர்தல் அதிகாரியை சஸ்பெண்ட் செய்துள்ளதாகவும், சரியான தேர்தல் முடிவை அறிவித்து விட்டதாகவும் மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கமளிக்கப்பட்டது.

மதுரை மாவட்டம், டி.கல்லுபட்டி பேரூராட்சிக்கு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த மாதம் 22ம் தேதி எண்ணப்பட்டன. பேரூராட்சியின், 10 வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட சுப்புலட்சுமியும், சுயேட்சையாக போட்டியிட்ட பழனிச்செல்வியும் தலா 284 வாக்குகளை பெற்றனர்.

இதனால் குலுக்கல் மூலம் வார்டு உறுப்பினர் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் பழனிச்செல்வி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், திடீரென திமுக வேட்பாளர் சுப்புலட்சுமி வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார்.

இதுசம்பந்தமாக தேர்தல் அதிகாரி பிறப்பித்த அறிவிப்பை ரத்து செய்து, தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க கோரி பழனிச்செல்வி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி தலைமையிலான அமர்வு, குலுக்கல் நடந்த போது பதிவு செய்யப்பட்ட வீடியோ பதிவுகளை பார்வையிட்டு, தேர்தல் முடிவை மாற்றியது நிரூபணமாகியுள்ளதாகக் கூறி, சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதுடன், தேர்தல் அதிகாரியை ஆஜராகும்படி உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தேர்தல் முடிவை மாற்றி அறிவித்த தேர்தல் அதிகாரியை சஸ்பெண்ட் செய்துள்ளதாகவும், திமுக வேட்பாளரை வெற்றி பெற்றதாக அறிவித்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டு, டி.கல்லுபட்டி பேரூராட்சி 10 வது வார்டு கவுன்சிலராக மனுதாரர் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த தேர்தல் அதிகாரி, திமுக வேட்பாளரின் ஆதரவாளர்கள் அளித்த அழுத்தம் காரணமாக முடிவை மாற்றி அறிவித்ததாக தெரிவித்தார்.

இதை பதிவு செய்த நீதிபதிகள், அழுத்தம் குறித்து மனுவாக தாக்கல் செய்ய தேர்தல் அதிகாரி தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 10 நாட்களுக்கு தள்ளிவைத்தனர்.

You may also like...

Call Now ButtonCALL ME