Madras high court orders june 17 nalini case admk case முதலை வழக்கு

[6/17, 11:35] Sekarreporter: நளினி தரப்பு வழக்கறிஞர் எம்.ராதாகிருஷ்ணன் பேட்டி…

சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு எங்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளிக்கிறது.

ஏற்கனவே இந்த கோரிக்கையுடன் ஆட்கொணர்வு மனுவாக தாக்கல் செய்து தள்ளுபடி செய்யப்பட்டுவிட்ட நிலையில், அதே கோரிக்கையுடன் தொடரப்பட்ட வழக்கு என கூறி தள்ளுபடி செய்துள்ளார்கள். ஆனால் நாங்கள் ஆளுனரின் செயல்பாட்டைத்தான் சட்ட்விரோதம் என அறிவிக்க கோரினோம்.

ஒரே ஒரு சாதகம் இந்த தீர்ப்பில் என்னவென்றால் நாங்கள் உச்சநீதிமன்றதிற்கு செல்லலாம். ஆனாலும் உச்ச நீதிமன்றத்திற்கு இருக்கும் அதிகாரம் உயர் நீதிமன்றத்திற்கு இல்லை என்று இந்த தீர்ப்பில் நீதிபதிகள் கூறியுள்ளதும் தவறு. உயர் நீதிமன்றத்திற்குத்தான் வானளாவிய அதிகாரம் உள்ளது.

7 பேரில் ஒருவரை விடுதலை செய்துவிட்டீர்கள், என்னை விடுதலை செய்யாமல் இருப்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு புறம்பானது என்று உச்சநீதிமன்றத்தில் நாங்கள் முறையீட இருக்கிறோம். வெகுவிரைவில் உச்சநீதிமன்றம் செல்வோம். நளினி விடுதலை செய்யப்படுவார்.
[6/17, 11:57] Sekarreporter: ஆளுனரின் ஒப்புதலுக்கு காத்திருக்காமல் விடுதலை செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி ராஜீவ் காந்தி கொலை வழக்கு ஆயுள் கைதி நளினி மற்றும் ரவிச்சந்திரன் தாக்கல் செய்த வழக்குகளை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டு மூலம் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய ஏழு பேரையும் விடுதலை செய்ய 2018 செப்டம்பர் 9ம் தேதி தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி, 2018 செப்டம்பர் 11ம் தேதி ஆளுனர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அரசு அனுப்பிய தீர்மானத்தில் முடிவு எடுக்காமல் காலம் ஆளுனர் தாமதிப்பதால், அவரது ஒப்புதலுக்கு காத்திருக்காமல் விடுதலை செய்யக்கோரி நளினி, ரவிசந்திரன் ஆகியோர் சார்பில் தனித்தனியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி தலைமையிலான முதல் அமர்வில் விசாரிக்கப்பட்டது.

அப்போது, நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், அமைச்சரவை தீர்மானத்தின் அடிப்படையில் ஆளுநர் முடிவு எடுக்காமல் இருந்ததும், இரண்டரை ஆண்டுகளுக்கு பின் அமைச்சரவை பரிந்துரையை குடியரசு தலைவருக்கு அனுப்பியதும் அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என தெரிவித்தார். அரசால் தண்டனை குறைப்பு செய்யப்பட்ட தன்னை விடுதலை செய்ய அரசு முடிவெடுத்த பிறகு, விடுவிக்கப்படாத ஒவ்வொரு நாளும் சட்டவிரோத காவலில் இருப்பதாக கருதி தன்னை விடுவிக்க வேண்டுமென வாதிட்டார். அரசியல்சாசனத்துக்கு விரோதமாக ஆளுநர் செயல்பட்டிருந்தால் உயர் நீதிமன்றம் தலையிட்டு, அதை சட்டவிரோதம் என அறிவிக்கலாம் எனவும், இரண்டரை ஆண்டுகள் அமைச்சரவை பரிந்துரை மீது எந்த முடிவும் தெரிவிக்காமல் குடியரசு தலைவருக்கு அனுப்பியதால் இந்த விவகாரத்தை மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைக்க கூடாது எனவும் குறிப்பிட்டார். தாமாக விடுதலை செய்யக் கோரவில்லை எனவும், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி ஆளுநரின் ஒப்புதலுக்கு காத்திருக்காமல் விடுதலை செய்யும்படி அரசுக்கு உத்தரவிட தான் கோருவதாகவும், அநீதியை அழிக்க உயர் நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்கலாம் எனவும் தெரிவித்தார்.

இதேபோல ரவிச்சந்திரன் தரப்பில் வழக்கறிஞர் சாமிதுரை ஆஜராகி, 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவிக்கும் வருவதாகவும் தமிழக அரசு 2018அம் ஆண்டு முடிவெடுத்தாலும் இதுவரை சிறைவாசம் அனுபவிப்பதாகவும், அரசின் முடிவை அமல்படுத்தும் வகையில் தங்களை விடுவிக்க உத்தரவிட வேண்டுமென வாதங்கள் முன்வைக்கப்பட்டது.

தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், நளினிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டதாகவும், ஏழு பேரையும் விடுதலை செய்ய 2018ல் அமைச்சரவை ஆளுனருக்கு பரிந்துரைத்ததாகவும் குறிப்பிட்டார். ஆளுநரின் அதிகாரத்தை உச்ச நீதிமன்றம் விளக்கியுள்ளதாக கூறிய அவர், விடுதலை செய்வது தொடர்பாக ஆளுநரின் கையெழுத்து அவசியம் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளதாகவும், இந்த வழக்கில் உயர் நீதிமன்றமே பரிசீலிக்கலாம் எனவும் வாதிட்டார். பேரறிவாளன் மட்டுமல்லாமல் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஏழு பேரையும் முன் கூட்டி விடுதலை செய்வது தொடர்பான ஆவணங்களையும் ஆளுநரிடமிருந்து கடந்த ஆண்டு ஜனவரி 27ஆம் தேதியே குடியரசு தலைவருக்கு அனுப்பியதாக தெரிவித்துள்ளதாக தெரிவித்தார்.

அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, நளினி மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் தொடர்ந்த வழக்குகளின் மீதான தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தனர்.

இந்த வழக்குகளில் இன்று தீர்ப்பளித்த தலைமை நீதிபதி முனீஸ்வரர் நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு, தமிழக ஆளுநரின் ஒப்புதல் இல்லமால் விடுதலை செய்ய கோரிய நளினி மற்றும் ரவிசந்திரன் மனுகளை தள்ளுபடி செய்வதாக தீர்ப்பளித்தனர். நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் நளினியை விடுதலை செய்ய கோரி ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. எனவே இந்த மனு நிலைக்கத்தக்கதல்ல. இந்திய அரசியலமைப்பு சட்டம் 142 உச்ச நீதிமன்றத்திற்கு உள்ள அதிகாரம் போல விடுதலை செய்வது குறித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட முடியாது என தங்களின் தீர்ப்பில் தீர்ப்பில் தெரிவித்துள்ள நீதிபதிகள் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.

@@@@@@@@@@@

*******நளினி தரப்பு வழக்கறிஞர் எம்.ராதாகிருஷ்ணன் பேட்டி…******

தீர்ப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நளினி தரப்பு வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு எங்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளிக்கிறது. ஏற்கனவே இந்த கோரிக்கையுடன் ஆட்கொணர்வு மனுவாக தாக்கல் செய்து தள்ளுபடி செய்யப்பட்டுவிட்ட நிலையில், அதே கோரிக்கையுடன் தொடரப்பட்ட வழக்கு என கூறி இந்த மனுவையும் தள்ளுபடி செய்துள்ளார்கள். ஆனால் தற்போதைய மனுவில் நாங்கள் ஆளுனரின் செயல்பாட்டைத்தான் சட்டவிரோதம் என அறிவிக்க கோரினோம். ஒரே ஒரு சாதகம் இந்த தீர்ப்பில் என்னவென்றால் நாங்கள் உச்சநீதிமன்றதிற்கு செல்லலாம். ஆனாலும் உச்ச நீதிமன்றத்திற்கு இருக்கும் அதிகாரம் உயர் நீதிமன்றத்திற்கு இல்லை என்று இந்த தீர்ப்பில் நீதிபதிகள் கூறியுள்ளதும் தவறு. உயர் நீதிமன்றத்திற்குத்தான் வானளாவிய அதிகாரம் உள்ளது.
7 பேரில் ஒருவரை விடுதலை செய்துவிட்டீர்கள், என்னை விடுதலை செய்யாமல் இருப்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு புறம்பானது என்று உச்சநீதிமன்றத்தில் நாங்கள் முறையீடு செய்ய இருக்கிறோம். வெகுவிரைவில் உச்சநீதிமன்றம் செல்வோம். நளினி விடுதலை செய்யப்படுவார் என தெரிவித்தார்.
……………………………..
[6/17, 13:43] Sekarreporter: அதிமுக உட்கட்சி தேர்தல் முறையாக நடத்தப்படாமல் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் மூலமாக நடத்தப்படும் பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஒன்றிய அதிமுக மாணவர் அணி முன்னாள் பொருளாளரான சி.பாலகிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் உட்கட்சி தேர்தலில் அடிப்படை உறுப்பினர்கள் போட்டியிட போதிய அவகாசம் வழங்கவில்லை எனவும், உட்கட்சி தேர்தலுக்கு முன்பு கட்சியின் அடிப்படை உறுப்பினர்களின் அடையாள அட்டையை புதுப்பிக்கவில்லை எனவும் கூறி, அதுதொடர்பாக கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மனுவில் தெரிவித்துள்ளார்.

எனவே அதிமுக ஒருங்கிணைபாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான நியமனத்தை ரத்துச் செய்யக்கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், கட்சியின் பொதுக்குழு கூட்டம் ஜூன் 23ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த கூட்டத்தில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எட்ப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு ஆதரவான உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு மட்டும் பங்கேற்க அழைப்பு விடுக்கபட்டுள்ளதால், எனவே இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு தடைவிதிக்கக் கோரியும், அதிமுக உட்கட்சி தேர்தல் அலுவலர்களான பொன்னையன் மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன் தேர்தல் விதிமுறைகளை பின்பற்றி மீண்டும் தேர்தல் நடத்தக்கோரியும், நடந்து முடிந்த உட்கட்சி தேர்தலை ரத்து செய்யக்கோரியும் மனுவில் தெரிவித்துள்ளர்.

பாலகிருஷ்ணன் தாக்கல் செய்துள்ள இந்த மனுவின் எண்ணிடும் பணி நடைமுறைகள் முடிந்த பிறகு, அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
[6/17, 14:29] Sekarreporter: மாமல்லபுரம் முதலை பூங்காவில் இருக்கும் 1000 முதலைகளை குஜராத்திற்கு இடம் மாற்றம் செய்வதை எதிர்த்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை சிந்தாதிரிபேட்டையை சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர் ஏ. விஷ்வநாதன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், மாமல்லபுரத்தில் இயங்கி வரும் முதலை பூங்காவில் கூடுதலாக இருக்கும் ஆயிரம் முதலைகளை குஜராத் மாநிலம் ஜாம் நகர் மாவட்டத்தில் உள்ள விலங்கியல் மறுவாழ்வு மையத்திற்கு இடமாற்றம் செய்ய மத்திய மாநில அரசு துறைகள் அனுமதியளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

250 ஏக்கரில் சிறுத்தைகள், கரடிகள் உள்ளிட்ட 79 வகையான உயிரினங்களுடன் சிறிய அளவிலான வன விலங்கு பூங்கா அமைக்க 2019ஆண்டு விண்ணப்பித்து, 2023ஆம் அண்டு ஆகஸ்ட் வரைக்கு மட்டுமே அனுமதி பெற்றுள்ளதாகவும், 56 முதலைகளை மட்டுமே வைக்கக்கூடிய 7300 சதுர மீட்டர் இடத்தில் 1000 முதலைகள் அடைக்கப்போவதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இடமாற்றம் செய்ய அனுமதியளித்தது சட்டவிரோதம் என் அறிவித்து, அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென மனுவில் கோரிக்கை வைத்துள்ளார். மேலும், சட்ட விரோதமாக அனுமதியளிக்கப்பட்டதாக தொடர்பாக சி.பி.ஐ. அல்லது சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்த மனு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, வழக்கு குறித்து தமிழக அரசின் வன விலங்கு காப்பாளர், மத்திய வன உயிரின ஆணையம், குஜராத்தில் உள்ள கிரீன்ஸ் வனவிலங்குகள், மீட்பு, மறுவாழ்வு மையம், மாமல்லபுரம் முதலை பூங்கா உள்ளிட்டோர் 3 வாரங்களில் பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளிவைத்தனர்.
[6/17, 16:00] Sekarreporter: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவிக்கும் நளினி மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோரின் மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் இன்று காலை தீர்ப்பளித்தது.

அந்த தீர்ப்பின் சாராம்சம்…..

ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை இரு நீதிபதிகள் அமர்வுகள் தள்ளுபடி செய்துள்ள நிலையில், அதே விவகாரம் தொடர்பான வழக்கு நிலைக்கத்தக்கதல்ல.

இந்திய அரசியல் சாசனம் 161 வது பிரிவின் கீழ் முன்கூட்டி விடுதலை செய்வது தொடர்பாக ஆளுநரின் கையெழுத்து அவசியம் என உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

ஆளுநருக்கு அமைச்சரவை தீர்மானத்தை அனுப்பியதன் மூலம், அவரது ஒப்புதல் இல்லாமல் அரசே விடுதலை செய்யலாம் என கூற முடியாது.

அமைச்சரவை தீர்மானத்தின் மீது முடிவெடுக்க தாமதித்தால் ஆளுநர் ஒப்புதல் தேவையில்லை என்ற நளினி தரப்பு வாதத்தை ஏற்க முடியாது.

பேரறிவாளன் வழக்கில் ஆளுநர் கையெழுத்து இல்லாமல் குற்றவாளிகளை விடுதலை செய்யலாம் என உச்ச நீதிமன்றம் கூறவில்லை. மாறாக, தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்துள்ளது. அதுபோன்ற சிறப்பு அதிகாரம் உயர் நீதிமன்றங்களுக்கு இல்லை.

ஆளுனருக்கு அமைச்சரவை ஆலோசனை வழங்கினாலும் அதன் மீது சட்டத்திற்கு உட்பட்டு முடிவெடுக்க அவருக்கு அதிகாரம் உள்ளது.

அதனால் அளுனருக்கு தனிப்பட்ட அதிகாரம் ஏதும் இல்லை என்றும் கூறிவிட முடியாது. இந்த வழக்கில் ராஜீவ் காந்தியுடன் 9 காவல்துறையினர் உள்ளிட்ட 15 அப்பாவி பொதுமக்களும் உயிரிழந்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை ஆளுனர் பரீசிலனைக்கு எடுத்துக்கொண்டு, அரசின் தீர்மானம் சரியா தவறா என முடிவெடுக்க வேண்டும்.

அமைச்சரவை தீர்மானத்தை ஆளுனர் ஏற்றுக்கொள்ளாத நிலையிலும், அமைச்சரவை தீர்மானம் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதால் 7 பேரையும் விடுதலை செய்யும்படி அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது.

வழக்குகள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.
[6/17, 20:41] Sekarreporter: பொது மக்களிடம் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடுகளை பெற்று மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவன இயக்குனருக்கு முன் ஜாமீன் வழங்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுத்து விட்டது.

சென்னை அமைந்தகரையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும், ஆருத்ரா கோல்டு டிரேடிங் என்ற நிறுவனம், தமிழகம் முழுவதும் 13 இடங்களில் கிளைகளை துவங்கி, தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு மாதம் தோறும் 10 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை வட்டி தருவதாகக் கூறி, 1,678 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது.

அவ்வாறு வசூலித்த பணத்தை டிபாசிட்தாரர்களுக்கு திரும்ப கொடுக்காமல் மோசடியில் ஈடுபட்டதாக முதலீட்டாளர்கள் அளித்த புகாரின் பேரில், சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், நிறுவனத்தின் இயக்குனர்கள் 14 பேர் மீதும், ஆருத்ரா என்ற பெயரில் செயல்பட்ட 5 நிறுவனங்கள் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் போலீசார் தன்னை கைது செய்யக் கூடும் எனக் கூறி, இயக்குனர்களில் ஒருவரான காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஹரீஸ்,31 என்பவர், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு, நீதிபதி எஸ்.அல்லி முன் விசாரணைக்கு வந்தபோது, சட்ட விரோதமாக, மனுதாரர் மட்டும் 1,100 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளதால், சாட்சிகளை கலைக்கும் வாய்ப்புள்ளதால் முன் ஜாமின் வழங்கக்கூடாது என காவல் துறை தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்ற நீதிபதி, ஹரீஸின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

You may also like...