Madras high court orders january 8 th

[1/7, 12:18] Sekarreporter 1: தனக்கு எதிரான அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி நடிகர் விஜய் சேதுபதி தொடர்ந்த வழக்கின் இறுதி விசாரணையை ஜனவரி 11ஆம் தேதிக்கு தள்ளிவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த மகா காந்தி மருத்துவ பரிசோதனைக்காக மைசூர் செல்வதற்காக நவம்பர் 2ஆம் தேதி இரவு பெங்களூர் விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதியை எதிர்பாராத விதமாக சந்தித்தபோது, அவரின் சாதனைகளை பாராட்டி வாழ்த்து தெரிவித்ததாகவும், ஆனால் தனது வாழ்த்துகளை ஏற்க மறுத்த விஜய் சேதுபதி பொதுவெளியில் தன்னை இழிவுபடுத்தி பேசியதுடன், தன்னையும் தனது சாதியையும் பற்றி தவறாக பேசியதாக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

அந்த மனுவில் உண்மை சம்பவங்கள் இவ்வாறிருக்க, மறுநாள் ஊடகங்களில் தான் தாக்கப்பட்டதாக விஜய் சேதுபதி தரப்பில் அவதூறு பரப்புவதாக மனுவில் குற்றம் சாட்டியுள்ளார். எனவே நடிகர் விஜய் சேதுபதி மற்றும் அவரது மேலாளர் ஜான்சன் ஆகியோர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.

அந்த வழக்கை விசாரித்த சென்னை சைதாப்பேட்டை 9வது பெருநகர உரிமையியல் நீதிமன்றம், ஜனவரி 4ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் சம்மனை ரத்து செய்யக் கோரியும், வழக்கை ரத்து செய்யக்கோரியும் இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, விஜய் சேதுபதி தரப்பில் வழக்கறிஞர் நர்மதா சம்பத் ஆஜராகி பெங்களூரு எல்லை தொடர்புடைய வழக்கை சென்னையில் தொடர்ந்தது, அதை சைதாப்பேட்டை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது, இயந்திரத் தனமாக உடனடியாக சம்மன் அனுப்பியது, சமரசம் ஏற்பட்டதை மறைத்து அவதூறு வழக்கு என அடுத்தடுத்த தவறுகள் நடந்துள்ளதாக வாதிட்டார். விளம்பர நோக்கத்துடன், மூன்று கோடி இழப்பீடு கேட்டுள்ளதால், அதிகப்படியான அபராதத்துடன் அந்த வழக்கை ரத்து செய்ய வேண்டுமென வாதிட்டார். வழக்கு விசாரணைக்கு வருவதற்கு முன்பாகவே பதில் மனுத்தாக்கல் செய்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.

மகா காந்தி தரப்பில் வழக்கறிஞர் ஆனார் இன்பேன்ட் தினேஷ் ஆஜராகி, நோட்டீஸ் வந்ததால்தான் பதில் மனுதாக்கல் செய்ததாகவும், விளம்பரத்திற்காக தொடரப்பட்ட வழக்கு அல்ல என்றும், விஜய் சேதுபதியும் அவரது மேலாளரும் தன்னை திட்டி தாக்கியதால்தான் வழக்கு தொடர்ந்ததாக விளக்கம் அளித்தார்.

இதையடுத்து வழக்கின் இறுதி விசாரணைக்காக ஜனவரி 11ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்துள்ளார்.
[1/7, 15:08] Sekarreporter 1: பெண் எஸ்பி-க்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத் துறையின் முன்னாள் ஐஜி தொடர்ந்த மேல்முறையீடு வழக்கின் விசாரணையை ஜனவரி 28ஆம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

லஞ்ச ஒழிப்பு துறை பணியாற்றிய ஐஜி ((முருகன்)) தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அதே துறையில் பணியாற்றிவந்த பெண் எஸ்பி ((ஜெயலட்சுமி)) கடந்த 2018ஆம் ஆண்டில் புகார் அளித்தார். அந்த புகாரின் மீது அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என உயர் நீதிமன்றத்தில் பெண் எஸ்பி வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் சிபிசிஐடி விசாரணை தொடரலாம் என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் ஐ.ஜி. மேல்முறையீடு செய்தார்.

அந்த வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, சிபிசிஐடி மற்றும் விசாகா குழு விசாரணைகளை தெலுங்கானாவிற்கு மாற்றியும், அதன் விசாரணை அறிக்கைகளை 6 மாதத்தில் தாக்கல் செய்யவும் 2019 ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மேல் வழக்கில் பாலியல் புகார் தொடர்பான வழக்கு விசாரணையை தெலங்கானாவுக்கு மாற்றிய சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வின் உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தது.

இதையடுத்து, 2019ல் ஐ.ஜி. தொடர்ந்த மேல்முறையீடு வழக்கு நீதிபதிகள் எம்.துரைசாமி, ஜெ. சத்திய நாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் வாதங்களை முன்வைக்க அவகாசம் கோரியதை அடுத்து, வழக்கு விசாரணையை ஜனவரி 28ஆம் தேதி நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
[1/7, 15:11] Sekarreporter 1: சிலைக்கடத்தல் வழக்கில் சம்பந்தப்பட்ட சிலையை ஆய்வு செய்வதற்காக கடவுளை ஆஜர்படுத்த உத்தரவிட்ட கும்பகோணம் சிறப்பு நீதிமன்றத்துக்கு, சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

திருப்பூர் மாவட்டம், சிவிரிபாளையத்தில் உள்ள பரமசிவன் சுவாமி கோவிலில் இருந்த மூலவர் சிலை கடத்தப்பட்டிருந்தது. சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவினர், அந்த சிலையை மீட்டு, கும்பகோணம் சிலைக்கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

பின், அந்த சிலை, கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டு, மீண்டும் கோவிலில் நிறுவப்பட்டது.

இந்நிலையில், வழக்கு விசாரணையின் போது, ஆய்வு செய்வதற்காக சிலையை ஆஜர்படுத்தும்படி, கும்பகோணம் சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், சிலையை எடுக்க கோவில் செயல் அலுவலர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதை எதிர்த்து சிவிரிபாளையத்தைச் சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி உள்பட நான்கு பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், சிலையை கடவுளாக மக்கள் நம்பும் நிலையில், நீதிமன்றம், கடவுளை சம்மன் செய்ய முடியாது என்று கூறி, அதனை ஆஜர்படுத்தும்படி உத்தரவிட்ட நீதிமன்றத்துக்கு கண்டனம் தெரிவித்தார்.

மேலும், சிலையை ஆய்வு செய்ய வேண்டுமானால், வழக்கறிஞர் ஆணையரை நியமித்து ஆய்வு செய்ய வேண்டும் எனவும், சிலையை பீடத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டியதில்லை என்றும் உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளிவைத்தார்.
[1/7, 15:32] Sekarreporter 1: அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலை எதிர்த்த வழக்கை நிராகரிக்க கோரி அதிமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கடந்த 2016 ம் ஆண்டு மறைந்த நிலையில், கடந்த செப்டம்பர் 2017 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அதிமுக பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட்டது..
இந்த பொதுக்குழு கூட்டத்தில் பொதுசெயலாளர் பதவி நீக்கப்பட்டு
ஒருங்கிணைப்பாளர்,
இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன

தொடர்ந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 1 ம் தேதி நடைபெற்ற அதிமுக செயற்குழு கூட்டத்தில் அதிமுக வின் ஒருங்கிணைப்பாளர்,
இணை ஒருங்கிணைப்பாளரை பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்ற முந்தைய சட்ட விதியில் திருத்தம் செய்யப்பட்டு
ஒருங்கிணைப்பாளர்,
இணை ஒருங்கிணைப்பாளரை இனி கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் வாக்களித்து தேர்ந்தெடுப்பார்கள் என மாற்றப்பட்டது.
தொடர்ந்து ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப் பாளருக்கான தேர்தல் டிசம்பர் 7 ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது

இந்தநிலையில்,ஒருங்கிணைப்பாளர்,
இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலை ரத்து செய்யக் கோரி அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.சி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்

தேர்தலில் தலையிட நீதிமன்றம் மறுத்துவிட்ட நிலையில், டிசம்பர் 6 ம் தேதி அதிமுக ஒருங்கிணைப்பாளராக
ஒ. பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்

இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தேர்தல் முடிந்துவிட்ட நிலையில் இந்த வழக்கை தொடர்ந்து நடத்த விரும்புகீறீர்களா என மனுதாரர் தரப்பு வழக்கறிஞரிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார்

அதற்கு வழக்கை தொடர்ந்து நடத்த இருப்பதாக மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் தியாகேஸ்வரன் தெரிவித்தார்

அதிமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் விஜய் நாராயண்,அரவிந்த் பாண்டியன் ஆகியோர்,
தேர்தலை எதிர்த்து கே.சி பழனிசாமி தொடர்ந்த வழக்கை நிராகிரிக்க கோரி அதிமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்

அதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி வழக்கு விசாரணையை பிப்ரவரி 8ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்

You may also like...