Madras high court orders january 19

[1/19, 10:53] Sekarreporter 1: கொரோனா மூன்றாவது அலை உச்சத்தில் உள்ள நிலையில் நகர்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு

தமிழக அரசின் ஓய்வுபெற்ற மருத்துவர் நக்கீரன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன் முறையீடு

தேர்தலை நடத்தினால் கொரோனா பாதிப்பு மிக மோசமான நிலையை எட்ட நேரிடும் – பிரபாகரன்

அனைத்து கட்சி கூட்டம் இன்று நடத்தப்படுவதால், எந்நேரத்திலும் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு – பிரபாகரன்

நாளை அல்லது நாளை மறுநாள் அவசர வழக்காக எடுக்க பொறுப்புத் தலைமை நீதிபதி அமர்வில் அவரச கோரிக்கை

தற்போதைய நிலையில் நடத்தக்கூடாது, தள்ளிவைக்க கோரிக்கை

நாளை மறுதினம் விசாரிப்பதாக நீதிபதிகள் விளக்கம்
[1/19, 11:19] Sekarreporter 1: தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலை உச்சத்தில் இருப்பதால் தற்போதைய சூழலில் நகர்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது

இதுதொடர்பாக பொறுப்பு தலைமை நீதிபதி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பு தமிழக அரசின் ஓய்வுபெற்ற மருத்துவர் நக்கீரன் என்பவர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன் முறையிட்டார். அப்போது, தற்போதைய சூழலில் தேர்தலை நடத்தினால் கொரோனா பாதிப்பு மிக மோசமான நிலையை எட்ட நேரிடும் என குறிப்பிட்ட அவர், நகர்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவது தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் இன்று நடைபெறும் நிலையில், தேர்தல் தொடர்பாக எந்த நேரத்திலும் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளதாகவும் தனது முறையீட்டில் குறிப்பிட்டார்.

எனவே தேர்தலை தள்ளிவைக்க வேண்டுமென்ற கோரிக்கையுடன் தொடரப்பட்ட வழக்கை நாளை அல்லது நாளை மறுநாள் அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென பொறுப்புத் தலைமை நீதிபதி அமர்வில் கோரிக்கை வைத்தார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் நாளை மறுதினம் (ஜனவரி 21) மனுவை விசாரிப்பதாக தெரிவித்தனர்.

ஜனவரி 27ம் தேதிக்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அறிவிப்பு வெளியிட வேண்டுமென உச்ச நீதிமன்றம் கெடு விதித்துள்ள நிலையில், மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கான ஒதுக்கீடுகளும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தலை தள்ளி வைக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
[1/19, 11:25] Sekarreporter 1: சென்னையில் மழை நீர் தேங்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் நிபுணர் குழு அமைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்ற வழக்கறிஞரான ஜி.எஸ்.மணி தாக்கல் செய்திருந்த மனுவில், சென்னை முழுவதும் கடந்த நவம்பர் இறுதி வாரம் பெய்த பருவமழையால் 523 இடங்களில் தண்ணீர் தேங்கியதை சுட்டிக்காட்டி, உடனடியாக நடவடிக்கை எடுத்து, சரிசெய்யாவிட்டால் தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்க இருப்பதாக உயர் நீதிமன்றம் எச்சரித்ததை குறிப்பிட்டுள்ளார்.

உயர் நீதிமன்ற எச்சரிக்கைக்கு பிறகும், அதிகாரிகளின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்படாததால்தான், டிசம்பர் 30 ஆம் தேதி பெய்த கனமழையால் மீண்டும் சென்னையில் தண்ணீர் தேங்கியதாக மனுவில் குற்றம்சாட்டியுள்ளார்.

மழை நீர் வடிகாலுக்கான முறையான நடைமுறையை சென்னை மாநகராட்சி பின்பற்றவில்லை என்பதாலேயே, மழை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டு, அவர்களின் அன்றாட வாழ்விலும் பாதிப்பு ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சென்னையில் மீண்டும் மழை நீர் தேங்கும் தேங்காத வகையில், பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் நிபுனர் குழு அமைக்க வேண்டுமெனவும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்

இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் வழக்கறிஞர் அனிதா ஆஜராகி இதேபோன்ற மற்றொரு வழக்கில் வைக்கப்பட்ட கோரிக்கை அறிக்கை அடிப்படையில், குழு அமைக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், மீண்டும் பிப்ரவரி 3ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கை வாபஸ் பெறுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
[1/19, 11:58] Sekarreporter 1: சுருக்குமடி வலைகளை பயன்படுத்தக் கூடாது என்ற உத்தரவை எதிர்த்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது

பூம்புகார் பாரம்பரிய மீனவர் நலச் சங்கத்தின் செயலாளர் ஜம்புலிங்கம் கபடிக்குஞ்சு என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், பாரம்பரிய மீன்பிடி எல்லையில் கட்டு மரங்கள் மற்றும் விசை படகுகளில் மீன்பிடிக்க செல்வோர் சுருக்குமடி மீன்பிடி வலைகளை பயன்படுத்தக்கூடாது என பிறப்பிக்கப்ப தவறு என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

அண்டை மாநிலங்களில் எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லாமல் மீன்பிடிக்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் மட்டும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு தரப்பில் அரசு பிளீடர் பி.முத்துக்குமார் ஆஜராகி, புதிய கட்டுப்பாடுகள் ஏதும் விதிக்கப்படவில்லை என்றும், 2000ஆம் ஆண்டில் உள்ள விதிகளை பின்பற்றியே புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும், 2000ஆம் ஆண்டு விதிகளை உச்ச நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார். 2000ஆம் ஆண்டு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து வழக்கு தொடராமல், அதன் பின்னர் பிறப்பிக்கப்பட்ட விதிகளை எதிர்த்துள்ளதாக தெரிவித்தார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
[1/19, 14:14] Sekarreporter 1: சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் உள்ள புன்னைவனநாதர் சன்னதியில் இருந்த மயில் சிலை மாயமானது குறித்த வழக்கின் புலன் விசாரணை நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் உள்ள புன்னைவனநாதர் சன்னதியில் உள்ள லிங்கத்தை மலரால் அர்ச்சிக்கும் மயில் சிலை இருந்ததாகவும், 2004ஆம் ஆண்டு குடமுழுக்கு விழாவிற்கு பிறகு அந்த சிலை மாயமானதாகவும், அதற்கு பதிலாக பாம்பை அலகில் வைத்திருக்கும் மயில் சிலை வைத்துள்ளது ஆகம விதிகளுக்கு எதிராக உள்ளதாக கூறி, ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

புதிய சிலையை அகற்றிவிட்டு, ஏற்கனவே உள்ள சிலையை வைத்து கும்பாபிஷேகம் நடத்தவும், கோவில் முறையாக நிர்வகிப்பதை உறுதிசெய்ய உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஆகம வல்லுனர்கள், சட்டவல்லுனர்கள் உள்ளிட்டோர் அடங்கிய குழுவை நியமிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, மயில் சிலை காணாமல் போனதாக கூறப்படும் 2004-ம் ஆண்டு நடத்தப்பட்ட கும்பாபிஷேகம் தொடர்பான 2100 ஆவணங்கள் 2009 மற்றும் 2013ஆம் ஆண்டுகளில் அழிக்கப்பட்டுவிட்டதாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சிலை மாயமானது தொடர்பாக அளித்த புகாரில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று மனுதாரர் ரங்கராஜன் தெரிவித்தார்.

மாயமான சிலை இன்னும் மீட்கப்படவில்லை என்றும், இதுசம்பந்தமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை நடைபெற்று வருவதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சிலை மாயமான விவகாரத்தில் உண்மை கண்டறியும் விசாரணை நடைபெற்று வருவதாக இந்து சமய அறநிலையத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள், அசல் மயில் சிலை மாயமானது குறித்த விசாரணையில் ஏற்படும் காலதாமதத்தை ஏற்க முடியாது என்று தெரிவித்ததுடன், வாயில் மலரை கொண்டு அர்ச்சிக்கும் மயில் சிலையை புதிதாக வைக்க வேண்டுமென அரசுக்கு அறிவுறுத்தினர்.

மேலும் பழைய சிலை மாயமானது குறித்த புலன் விசாரணை மற்றும் உண்மை கண்டறியும் விசாரணையை ஆகியவற்றின் தற்போதைய நிலை குறித்த அறிக்கையை அரசும், அறநிலையத்துறையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜனவரி 24ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
[1/19, 14:37] Sekarreporter 1: கிராமப்புறங்களில் பணிபுரியக்கூடிய அரசு மருத்துவர்களுக்கு முதுகலைப் படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு மற்றும் 30 சதவீத ஊக்க மதிப்பண் என இரண்டுமே வழங்க தடையில்லை
என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..

அரசுசாரா மருத்துவர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் கிராமப்புறங்களில் பணிபுரியக்கூடிய அரசு மருத்துவர்களுக்கு எம் டி, எம் எஸ் முதுகலை மருத்துவப் படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு மற்றும் 30 சதவீதம் ஊக்கத்தொகை மதிப்பெண் வழங்கப்படும் என கடந்த 2021 அக்டோபர் மாதம் அரசு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்..
தமிழகம் முழுவதும் உள்ள முதுகலை மருத்துவப் படிப்பில் 1968ம் இடங்கள் உள்ளது என்றும், இதில் 50 சதவீதம் அகில இந்திய இட ஒதுக்கீடுக்கு சென்றுவிடும் என்றும் மீதமுள்ள 969 இடங்கள் உள்ளதாகவும், அதில் 50 சதவீதம் அரசு மருத்துவர்களுக்கு கொடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர் .மேலும் ஊக்க மதிப்பெண்ணும் கூடுதலாக வழங்குவதால் மீதமுள்ள 50 சதவீத இடங்களும் அரசு மருத்துவர்களுக்கே சென்றடைவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் இதனால் தனியார் மருத்துமனையில் படித்தவர்களுக்கு வாய்ப்பு பறிபோவதாக குறிப்பிட்டுள்ளனர். எனவே இதில் ஏதாவது ஒன்றைத்தான் வழங்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருந்தனர். இந்த வழக்கின் மீதான வாதப்பிரதிவாதங்கள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம். தண்டபாணி முன்பு நடைபெற்றது.
அப்போது அரசு சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன் மற்றும்
அரசு மருத்துவர்கள் சங்கம் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆகியோர், ஊக்க மதிப்பெண்ணை தகுதியாகதான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் ,அரசு மருத்துவர்கள், கிராமப்புறங்களில் ,மலைப்பகுதி அணுக முடியாத பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பணிபுரிவதாகவும் இதனால் பொதுமக்கள் தான் பயன் வருவதாகவும் தெரிவித்தனர். எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.
இந்த வழக்கில் தீர்ப்பளித்துள்ள நீதிபதி தண்டபாணி, கிராமப்புற மருத்துவமனைகளில் பணி புரியக கூடிய மருத்துவர்களுக்கு இரண்டுமே வழங்க எந்த தடையும் இல்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். பொதுப் பிரிவிலும் அவர்கள் பங்கேற்க தடை இல்லை என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
[1/19, 16:17] Sekarreporter 1: கோவில்களுக்கு பக்தர்கள் தானமாக அளிக்கும் பசுக்களை மறுதானம் செய்வதற்கு தடை விதிக்கக்கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவில்களுக்கு தானமாக வழங்கப்படும் பசுக்களை, தனிநபர்களுக்கு மறுதானம் வழங்க அனுமதியளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதை எதிர்த்து ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

கோவில்களுக்கு தானமாக வழங்கப்பட்ட கால்நடைகளை பாதுகாக்க உரிய விதிகளை வகுக்க உத்தரவிட வேண்டும் எனவும், கோவில்களில் கால்நடைகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என கண்காணிக்க குழு அமைக்கவேண்டும் எனவும், அந்த மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வு விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் ரங்கராஜன் நரசிம்மன், பால் கொடுக்கும் பசுக்களை மட்டுமே கோவில்களுக்கு தானமாக வழங்க வேண்டுமென அரசாணையில் உள்ள நிலையில் பால் கொடுக்காத பசுக்களும் தானமாக வழங்கப்படுவதாகவும், இதன் காரணமாக இவற்றை மறுதானம் செய்யும் போது அவற்றை அடி மாட்டிற்காக வெளி சந்தையில் விற்கப்படுவதாகவும் வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், பால் கொடுக்கும் மாட்டை மட்டுமே தானமாக வழங்க வேண்டுமென அரசாணையில் குறிப்பிடப்படவில்லை எனவும் அந்த பசுக்கள் அடிமாடாக விற்கப்படுவதாக கூறுவதற்கு ஆதாரம் இருக்கிறதா? என கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த ரங்கராஜன் நரசிம்மன், இது தொடர்பாக தம்மிடம் எந்த ஆதாரமும் இல்லை எனவும் பசுக்கள் காப்பாற்ற வேண்டும் என அரசியலமைப்பு சட்டத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவலை பெற்று தாக்கல் செய்ய அவகாசம் அளிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், சட்டப்படியும், அரசாணைப்படியும் பசுக்களை மறுதானம் வழங்குவதில் எந்த சட்டவிரோதமும் இல்லை எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
[1/19, 18:08] Sekarreporter 1: நிதி உதவி வழங்கினார்கள் என்ற ஒரே காரணத்திற்காக விளையாட்டு சங்கங்களில் எவரையும் நிர்வாகியாக நியமிக்க கூடாதென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேசிய அளவிலான தடகள போட்டியில் பங்கேற்க தமிழ்நாடு தடகள விளையாட்டு சங்கம் தன்னை அனுமதிக்கவில்லை எனக் கூறி வட்டெறிதல் வீராங்கனை நித்யா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்

அவர் தன் மனுவில், மாவட்ட மாநில தேசிய அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பவர்களின் பதிவை ஆன்லைன் மூலமாக மேற்கொள்ள வேண்டும், தேசிய விளையாட்டு மேம்பாட்டு விதிகளை கண்டிப்புடன் அமல்படுத்த உத்தரவிட வேண்டும், தமிழ்நாடு தடகள விளையாட்டு சங்கத்தை மாற்றியமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்திருந்தார்

இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பளித்துள்ள நீதிபதி மகாதேவன், இதுபோன்ற விளையாட்டு சங்கங்களை முறைப்படுத்த எந்த ஒரு சட்டமும் இல்லை என்றும், வெளிப்படைத் தன்மையை உறுதி செய்ய இந்த விளையாட்டு சங்கங்களை முறைப்படுத்த வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளார்.

ஒவ்வொரு விளையாட்டு சங்கத்தின் செயல்பாடுகளையும் முறைப்படுத்துவதற்கான சட்டவிதிகளை வகுப்பது குறித்து மாநில அரசு பரிசீலிக்க வேண்டுமெனவும், அவற்றை அரசிடம் பதிவு செய்வதை கட்டாயமாக்க வேண்டுமென்றும் உத்தரவிட்டுள்ளார்

இதுபோன்ற சங்கங்களின் உறுப்பினர்கள், விளையாட்டு வீரர்கள், சங்கங்களின் நிதிநிலை உள்ளிட்ட விபரங்களை மாநில அரசிடம் வழங்குவதை கட்டாயமாக்க வேண்டுமெனவும், தகுதியான விளையாட்டு வீரர்களை தேசிய அளவிலான போட்டிகளுக்கு அனுப்பாதது குறித்து புகார் அளிக்க ஏதுவாக தனி குறைதீர் பிரிவை ஏற்படுத்த வேண்டுமெறும் உத்தரவிட்டுள்ளார்

விளையாட்டு சங்கங்கள் அமைப்புகளில் தலைவர், துணைத் தலைவர், செயலாளர் மற்றும் முக்கிய நிர்வாகிகள் விளையாட்டு வீரர்களாக இருத்தல் வேண்டுமெனவும், குறைந்தபட்சம் 75 சதவீதம் உறுப்பினர்கள் விளையாட்டு வீரர்களாக இருப்பதை உறுதி செய்ய வேண்டுமென்றும் உத்தரவிட்டுள்ளார்.

விளையாட்டு சங்கங்களுக்கு நிதி உதவி வழங்கினார்கள் என்ற ஒரே காரணத்திற்காக, அவர்களுக்கு நிர்வாகிகள் பதவிகள் வழங்கக் கூடாது என்றும், மாவட்ட, மாநில, தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளுக்கான பதிவை
ஆன்லைன் மூலம் மேற்கொள்வதோடு, இந்த விளையாட்டுப் போட்டிகளுக்காக ஒதுக்கப்பட்ட தொகை, செலவிடப்பட்ட தொகை ஆகியவற்றையும் ஆன்-லைனில் வெளியிட வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.

ஒவ்வொரு சங்கமும் தனித் தனியாக இணையதளம் ஆரம்பித்து, சங்கத்திற்கு வந்த நிதியுதவி குறித்த விவரங்களை ஆன்-லைனில் வெளியிட வேண்டும் எனவும், தகுதியற்ற விளையாட்டு வீரர்கள் யாரேனும் போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட்டார்கள் என தெரியவந்தால், சம்பந்தப்பட்ட சங்கத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு தடை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
[1/19, 20:07] Sekarreporter 1: நீதிமன்ற உத்தரவுப்படி தி.நகர் சரவணா ஸ்டோர்ஸ் கடை ஜப்தி

சென்னை: இந்தியன் வங்கியில் வாங்கிய 240 கோடி ரூபாய் கடன் மற்றும் அதற்கான வட்டித் தொகையைச் செலுத்தாத காரணத்தால், சென்னை எழும்பூர் பெருநகர தலைமை குற்றவியல் நீதிமன்ற உத்தரவுப்படி தியாகராய நகரில் உள்ள சரவணா கோல்டு பேலஸ் மற்றும் ப்ரைம் சரவணா ஸ்டோர் ஆகிய இரண்டு கடைகளை இந்தியன் வங்கி அதிகாரிகள் ஜப்தி செய்தனர்.

சரவணா கோல்டு பேலஸ் நிறுவனத்தின் சார்பில் 2017ஆம் ஆண்டு இந்தியன் வங்கியில் 240 கோடி ரூபாய் கடன் பெறப்பட்டது. அதன் பின்னர், இந்தக் கடன் தொகைக்கான அசல், வட்டித் தொகை கட்டப்படாதைத் தொடர்ந்து, வங்கி சார்பில் கடந்த 2020ஆம் ஆண்டு சென்னை எழும்பூர் பெருநகர தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த நிலையில் வங்கியில் பெற்ற கடன்தொகை 240 கோடி ரூபாய், அதற்கான வட்டித் தொகை 160 கோடி ரூபாய் என மொத்தமாக சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனம் 400 கோடி ரூபாய் வங்கிக்குச் செலுத்த வேண்டியிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தியாகராய நகரில் உள்ள இரண்டு சொத்துகளை ஜப்தி செய்ய 2021 டிசம்பர் மாதம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவின் அடிப்படையில் தியாகராய நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள சரவணா ஸ்டோர் மற்றும் வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள சரவணா கோல்டு பேலஸ் ஆகிய இரண்டு கடைகளையும் இந்தியன் வங்கி அதிகாரிகள் மற்றும் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்கள் முன்னிலையில் ஜப்தி செய்து கடைக்கு சீல் வைத்தனர்.

You may also like...