Madras high court orders april 13

[4

[4/13, 06:44] Sekarreporter: [4/13, 06:31] Sekarreporter: https://twitter.com/sekarreporter1/status/1514046141092208644?t=ceRsiUjT9cfjMPEM1VFWAQ&s=08
[4/13, 06:32] Sekarreporter: Detained vehicle ordered to be released on payment of 25 % of the penalty imposed, as the alleged violation, albeit being small, is recurring. Petitioner can still agitate the penalty before the appellate authority. THE HONOURABLE MR.JUSTICE R.SURESH KUMAR W.P.Nos.7882 & 7886 of 2022 and.      For Petitioner        : Mr.G.Natarajan   For Respondent    : Mr.C.Harsha Raj    Additional Government Pleader https://sekarreporter.com/detained-vehicle-ordered-to-be-released-on-payment-of-25-of-the-penalty-imposed-as-the-alleged-violation-albeit-being-small-is-recurring-petitioner-can-still-agitate-the-penalty-before-the-appell/
[4/13, 06:44] Sekarreporter: Sekarreporter: https://twitter.com/sekarreporter1/status/1513893489670766595?t=FTNIxoAEwmHtUDWSnyGtzg&s=08 [4/12, 20:25] Sekarreporter: [4/12, 20:23] Sekarreporter: C.M.A(MD)No.211 of 2018 [12.04.2022] His Lordship Hon’ble Mr.Justice RMT.TEEKAA RAMAN while explaining the judgment of the Hon’ble Supreme Court https://sekarreporter.com/sekarreporter-https-twitter-com-sekarreporter1-status-1513893489670766595tftnixoaewmhtudwsnygtzgs08-4-12-2025-sekarreporter-4-12-2023-sekarreporter-c-m-amdno-211-of-2018-12-04-2022/
[4/13, 06:44] Sekarreporter: [4/13, 06:39] Sekarreporter: https://twitter.com/sekarreporter1/status/1514048098498412545?t=RgDbtAObwWTaVC6wbAbRPQ&s=08
[4/13, 06:43] Sekarreporter: Madras High court extends the services of two principals of puducherry technological University, who were retired without following the AICTE Regulations https://sekarreporter.com/madras-high-court-extends-the-services-of-two-principals-of-puducherry-technological-university-who-were-retired-without-following-the-aicte-regulations/
[4/13, 06:58] Sekarreporter: Madras high court orders april 12 https://sekarreporter.com/madras-high-court-orders-april-12/
[4/13, 10:01] Sekarreporter: [4/13, 09:58] Wla Nalini Lawyer: As part of ongoing mediation day awareness celebrations, to create awareness about mediation to public a rally consisting of judges , mediators and advocates is scheduled tomorrow (13.04.22)between 11-to 11. 30 Am starting from ADR building . All are requested to assemble at ADR building tomorrow at 10. 50 AM
[4/13, 09:58] Wla Nalini Lawyer: Gate Number 6
[4/13, 10:14] Sekarreporter: Two professors from Indian Institute of Technology-Madras (IIT-M) have approached the Madras High Court seeking anticipatory bail https://sekarreporter.com/two-professors-from-indian-institute-of-technology-madras-iit-m-have-approached-the-madras-high-court-seeking-anticipatory-bail/
[4/13, 10:14] Sekarreporter: Two professors from Indian Institute of Technology-Madras (IIT-M) have approached the Madras High Court seeking anticipatory bail https://sekarreporter.com/two-professors-from-indian-institute-of-technology-madras-iit-m-have-approached-the-madras-high-court-seeking-anticipatory-bail/
[4/13, 11:35] Sekarreporter: இ சேவை #நீதிபதி  அனிதா சும்ந்த், நீதிமன்ற கருத்தினை உடனடியாக பரிசீலனை செய்து விரைந்து நடவடிக்கை எடுத்து மக்கள் பயனடையும் வகையில் நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு அரசின் நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். https://sekarreporter.com/%e0%ae%87-%e0%ae%9a%e0%af%87%e0%ae%b5%e0%af%88-%e0%ae%a8%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%be-%e0%ae%9a%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/
[4/13, 14:59] Sekarreporter: Ayothiya mandabam case full order. Sekarreporter: W.A.No.1057 of 2022 and C.M.P.Nos.6643 & 6646 of 2022 Heard Mr.Sathish Parasaran, learned senior counsel appearing for the appellant, Mr.R.Shanmugasundaram, learned Advocate General assisted by Mr.N.R.R.Arun Natrajan, Special Government Pleader (HR & CE) appearing for the respondents 1 & 2, Mr.Sriram, learned counsel appearing for the 3rd respondent and Mr.T.S.Rajamohan, learned counsel for the caveator/4th respondent. https://sekarreporter.com/ayothiya-mandabam-case-full-order-sekarreporter-w-a-no-1057-of-2022-and-c-m-p-nos-6643-6646-of-2022-heard-mr-sathish-parasaran-learned-senior-counsel-appearing-for-the-appellant-mr-r-shanmugas/
[4/13, 15:06] Sekarreporter: மசாஜ் நிலையங்களில் விபச்சாரம் நடப்பதாக புகார் வந்தால் சோதனை நடத்த உள்ளூர் போலீசாருக்கும் அதிகாரம் உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது state pp Ginna . https://sekarreporter.com/%e0%ae%ae%e0%ae%9a%e0%ae%be%e0%ae%9c%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%9a%e0%af%8d/
[4/13, 20:48] Sekarreporter: C.M.A(MD)No.729 of 2017 [dt.13.04.2022] His Lordship Justice RMT.TEEKAA RAMAN while dealing with  the point as to whether the amount reimbursed under medi-claim policy is deductable or not deductable has held that the amount reimbursed under medi-claim policy is deductable  and also held that the decision reported in 2013 (2) TNMAC 636 [National Insurance Company Limited v. C.Ramesh https://sekarreporter.com/c-m-amdno-729-of-2017-dt-13-04-2022-his-lordship-justice-rmt-teekaa-raman-while-dealing-with-the-point-as-to-whether-the-amount-reimbursed-under-medi-claim-policy-is-deductable-or-not-deduc/

 

 

/13, 11:29] Sekarreporter: இ-சேவை முறையில் வாரிசு சான்றிதழுக்கு விண்ணப்பிக்கும்போது, அது நிராகரிக்கப்பட்டால் அதற்கான காரணங்களை 1000 எழுத்துகளில் தெரிவிக்கும் வகையில் சுற்றறிக்கை பிறப்பித்த தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.

சேலத்தை சேர்ந்த சின்னப்பையன் என்பவர் கடந்த 2021ல் இறந்தபிறகு வாரிசு சான்றிதழ் கோரி அரசின் இ-சேவை மூலம் அவரது தாயார் சின்னப்பிள்ளை என்பவர் அளித்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதை அடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அவரது மனுவில், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களை தெளிவாக அளிக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார். வட்டாட்சியர் பெயரில் வழங்கப்பட்ட உத்தரவில் “விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது” என்று மட்டுமே இருந்ததாக தெரிவித்துள்ளார்.

நேரடியாக விண்ணபித்து வாரிசு சான்றிதழ் விண்ணப்பிக்கும்போது, வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை ஆணையரின் 2019 ஆண்டு சுற்றறிக்கை அடிப்படையில், வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் மேற்கொள்ளும் நேரடி விசாரணையில் அளிக்கப்படும் அறிக்கை ஆகியவற்றை பரிசீலனை செய்து வட்டாட்சியர்கள் சான்றிதழ் வழங்கும் முறையில் குறிப்பிட்ட காரணங்களுக்காக சான்றிதழ் வழங்கப்படமாட்டாது என்று நிராகரிக்கப்படும் உத்தரவுகள் விளக்கமாக அளிக்கப்படும் என்றும், தற்போதுள்ள இ- சேவை முறையில் முழுமையாக கிடைக்கப்பெறவில்லை எனவும் மனுவில் தெரிவித்துள்ளார்

இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு கடந்த முறை விசானைக்கு வந்தபோது,
இந்த நடைமுறைச் சிக்கலை தமிழ்நாடு அரசு சரி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு அரசின் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை ஆணையர் சார்பில் அரசு வழக்கறிஞர் டி.என்.சி. கௌசிக் ஆஜராகி அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில் தமிழ்நாடு அரசு இ-சேவை மூலமாக வாரிசு சான்றிதழ்கள் கேட்டு விண்ணப்பிக்க மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கும்போது அதற்கான காரணங்களை 100 எழுத்துகளில் தெரிவிக்க வேண்டுமென்ற வரையறையை, 1000 எழுத்துக்கள் என மாற்றி அமைத்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுந்தது. இந்த நடைமுறை உடனடியாக செயல்படுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கபட்டிருந்தது.

இந்த அறிக்கைய ஏற்று வழக்கை முடித்துவைத்த நீதிபதி அனிதா சும்ந்த், நீதிமன்ற கருத்தினை உடனடியாக பரிசீலனை செய்து விரைந்து நடவடிக்கை எடுத்து மக்கள் பயனடையும் வகையில் நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு அரசின் நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
[4/13, 12:07] Sekarreporter: திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிடக் கோரிய மனு குறித்து விளக்கமளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் தேர்வு கட்டுப்பாட்டாளர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாகவும், பல்கலைக்கழக தேர்வு போன்ற ரகசிய பணிகளை தனியாருக்கு விடப்படுவதாகவும், பல்கலைக்கழக பணிகளுக்கு டெண்டர் கோரியதில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் கூறி, ஊரிஸ் கல்லூரி ஓய்வுபெற்ற பேராசிரியர் இளங்கோவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், பல்கலைக்கழகத்தில் தேர்வு முறைகேடுகள் நடப்பதாகவும், நிர்வாக, நிதி முறைகேடுகள் நடப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுசம்பந்தமாக பல்கலைக்கழக வேந்தர், உயர்கல்வித் துறை செயலாளர், நிதித்துறை செயலாளர் உள்ளிட்டோருக்கு புகார் மனு அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மனுவில் குறைகூறியுள்ளார்.

தனது புகார் மனுக்களின் நிலை குறித்து கேள்வி எழுப்பிய போது, அவை பல்கலைக்கழக துணை வேந்தருக்கும், பதிவாளருக்கும் அனுப்பி வைத்து, விசாரித்து அறிக்கை அளிக்க கேட்டுள்ளதாக உயர்கல்வித் துறை செயலாளர் பதிலளித்துள்ளதாகவும், யார் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதோ, அவர்களிடம் விசாரித்து அறிக்கை அனுப்ப அரசு கேட்டுள்ளதாகவும் புகார் தெரிவித்துள்ளார்.

அரசுத்தரப்பில் நடவடிக்கை எடுக்கப்படாததால், தனது புகார் மனுவை பரிசீலிக்கவும், முறைகேடுகள் சம்பந்தமாக விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார்.

மனுவை விசாரித்த நீதிபதிகள் துரைசாமி மற்றும் தமிழ்ச்செல்வி அமர்வு, இதுசம்பந்தமாக விளக்கமளிக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஏப்ரல் 20ம் தேதிக்கு தள்ளிவைத்தது.
[4/13, 12:40] Sekarreporter: ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே குரங்கன்பாளையம் ஓடையில் தடுப்பணை கட்ட தடை கோரிய மனுவிற்கு தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில், நபார்டு கடனுதவியுடன் 38 கோடியே 72 லட்சம் ரூபாய் செலவில் 14 தடுப்பணைகள் கட்டுவது தொடர்பாக கடந்த பிப்ரவரி 23ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இதில், ஈரோடு மாவட்டம், கொடுமுடி தாலுகா, கொம்பனைபுதூரில் குரங்கன்பாளையம் ஓடையில் தடுப்பணை கட்ட தடை விதிக்க கோரி கொளத்துபாளையம் கிராமத்தைச் சேர்ந்த தங்கவேலு என்பவர் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், தடுப்பணை கட்ட உத்தேசித்துள்ள பகுதியை ஆய்வு செய்த தொழில்நுட்ப குழு, இந்த இடம் தடுப்பணை கட்ட உகந்ததல்ல என தெரிவித்துள்ளதாகவும், மழை காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் இந்த பகுதியில் தடுப்பணை கட்டினால், அப்பகுதியில் உள்ள கிராமங்கள் நீரில் மூழ்கும் அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொளத்துபாளையத்தில் தடுப்பணையை மாற்றி அமைக்கும்பட்சத்தில் அங்கு நிலத்தடி நீர் உயர வாய்ப்புள்ளதாகவும், இதுசம்பந்தமாக அரசுக்கு மனுக்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் மனுவில் தெரிவித்துள்ளார்.

அதனால் தடுப்பணையை கொளத்துபாளையத்தில் கட்ட உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் துரைசாமி மற்றும் தமிழ்ச்செல்வி அமர்வு, 4 வாரங்களில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் மாதத்திற்கு தள்ளிவைத்தனர்.
[4/13, 14:30] Sekarreporter: திரைப்பட தயரிப்பாளர் ஞானவேல் ராஜாவிற்கு எதிராக நடிகர் சிவகார்த்திகேயன் தொடர்ந்த வழக்கில் தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை எனவும் எனவே எதிர் மனுதாரராக உள்ள வருமானவரி துறையை வழக்கில் இருந்து நீக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மிஸ்டர் லோக்கல் படத்திற்காக தமக்கு பேசப்பட்ட சம்பளத்தில் சுமார் 4 கோடி ரூபாய் பாக்கியுள்ளது, அதனை வழங்க பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா உத்தரவிட கோரியும் அதுவரை அவர் படங்களை வெளியிட தடை விதிக்க கோரியும் நடிகர் சிவகார்த்திகேயன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கில் தயாரிப்பாளர்
ஞானவேல்ராஜா ஏற்கனவே தாக்கல் செய்திருந்த பதில் மனுவில், நடிகர் சிவகார்த்திகேயன் தொடர்ந்த வழக்கில் பல உண்மைகளை மறைத்துள்ளதாகவும், மிஸ்டர் லோக்கல் படத்தில் ஏற்பட்ட நஷ்டம், மற்றும் விநியோகிஸ்தர்களுடன் சிவ கார்த்திகேயனுக்கு ஏற்பட்ட பிரச்சனை குறித்து வழக்கில் எந்த தகவலும் இல்லை எனவே அவரது மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்யவேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி எம்.சுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சிவகார்த்திகேயன் வழக்கில் எதிர்மனுதாரரான வருமான வரித்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வருமான வரிதுறை அதிகாரி தாமோதரன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், சிவகார்த்திகேயன் மற்றும் ஞானவேல்ராஜா இடையே உள்ள பிரச்சனைகள் குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது. அது அவர்கள் இருவருக்கும் இடையிலானது. இதற்கும் வருமான வரித்துறைக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. எனவே சிவகார்த்திகேயன் தொடர்ந்த வழக்கில் இருந்து வருமான வரித்துறையை நீக்க வேண்டும் என அந்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து வழக்கு விசாரணையை வரும் திங்கட்கிழமைக்கு நீதிபதி தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளார்.
[4/13, 15:00] Sekarreporter: மசாஜ் நிலையங்களில் விபச்சாரம் நடப்பதாக புகார் வந்தால் சோதனை நடத்த உள்ளூர் போலீசாருக்கும் அதிகாரம் உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

சென்னை அண்ணாநகரில் உள்ள (வில்லோ ஸ்பா) மசாஜ் நிலையத்தில் விபச்சாரம் நடப்பதாக வந்த புகாரின் அடிப்படையில், அண்ணாநகர் மபோலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் உரிமையாளர் ஹேமா ஜூவாலினி உள்ளிட்ட நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மசாஜ் நிலையத்தின் உரிமையாளர் சார்பில் வழக்கு தொடரப்பட்டு, காவல்துறை தொடர்ந்து புலன் விசாரண செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது உயர் நீதிமன்றம்.

ஜனவர் 2021ல் வழக்கிய இடைக்கால உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென காவல்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கின் இறுதி விசாரணை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகதீஸ் சந்திரா முன்பு நடைபெற்றது. அப்போது மனுதாரர் தரப்பில் சுதந்திரமாக தொழில் நடத்தும் உரிமையில் காவல்துறை தலையிட முடியாது என்று வாதிட்டார்.
சோதனையின்போது
காவல்துறை உரிய நடைமுறைகளை பின்பற்றவில்லை என்றும் ஏற்கனவே மசாஜ் நிலையங்களில் சோதனை நடத்துவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை என்று வாதிடப்பட்டது. விபச்சார தடுப்பு சிறப்பு அதிகாரிக்குதான் சோதனை நடத்த உரிமை உள்ளது என்றும் தெரிவித்தனர்.. காவல்துறை சார்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, ஏற்கனவே சோதனைகள் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்குகளின்
போது உச்ச நீதிமன்ற தீர்ப்பு முழுமையாக எடுத்துரைக்கப்படவில்லை என்று குறிப்பிட்டார். சோதனை தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் உரிய நடைமுறைகளை பின்பற்ற வில்லை என்பதற்காக வழக்கை ரத்து செய்ய முடியாது என்று தெரிவித்து இருப்பதாகவும் சுட்டிக் காட்டினார்.
காவல் துறை விதிமுறைகளை பின்பற்றவில்லை என்றால் அதனால் குற்றவாளி எந்த வகையில் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை கீழ் நீதிமன்றத்தில் வழக்கை நடத்தி தான் முடிவு செய்ய முடியும் என உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளதாகவும்
மேலும் கடந்த 1987ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசு உத்தரவில் உள்ளூர் காவல் நிலைய அதிகாரிகளும் சோதனை நடத்துவதற்கான அதிகாரம் உள்ளது என்றும் விளக்கமளித்தார். நியாயமாய் தொழில் நடத்தும் உரிமையில் காவல் துறை தலையிடாது, ஆனால் தவறு நடக்கும் பட்சத்தில், அப்பாவி பெண்கள் பாதிக்கப்படும் போது காவல்துறை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காது, உரிய நடவடிக்கை எடுத்து அப்பாவி அபலை பெண்களை பாதுகாக்க நடவடிக்கை எடுப்போம் என பல உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள் காட்டி வாதாடினார். இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளார்.
[4/13, 16:37] Sekarreporter: அம்பேத்கர் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தடுக்க மயிலாடுதுறை, தலைஞாயிறு மதகடி பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக தமிழக காவல்துறை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம், மதகடி கிராம பஞ்சாயத்து தலைவரான டி. ராஜேந்திரன் தாக்கல் செய்துள்ள மனுவில், மதகடி தலைஞாயிறு பேருந்து நிறுத்தத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 6ம் தேதி அம்பேத்கரின் நினைவு தினத்தை அனுசரித்தவர்கள், பிற சமூகத்தை இழிவுபடுத்தி பேசியதால் இரு சமூகத்தினருக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் நாளை டாக்டர் அம்பேத்கரின் பிறந்த தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் மீண்டும் அதேபோன்ற பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதால், அப்பகுதியில் நிகழ்ச்சிகளை நடத்த தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் துரைசாமி மற்றும் தமிழ்ச்செல்வி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக காவல்துறை தரப்பில், மனுதாரர் குறிப்பிட்ட பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாத வகையில் தடுப்பதற்காக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
[4/13, 19:54] Sekarreporter: அதிமுக உள்கட்சி தேர்தலை எதிர்த்தும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் நியமனம் உள்ளிட்ட கட்சி நியமனங்களை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் பதில் அளிக்க மேலும் ஒரு வாரம் அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பின், கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது, இது அதிமுகவின் சட்ட திட்டங்களுக்கு எதிரானது எனக் கூறி அக்கட்சி உறுப்பினர்களான ராம்குமார் ஆதித்தன் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில், பொதுச்செயலாளரின் அதிகாரங்களை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும் எனவும், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த அதிமுக உள்கட்சி தேர்தலை ரத்து செய்ய வேண்டும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்கள் புதிய நியமனங்களுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

இந்த மனு, உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அதிமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் அரவிந்த பாண்டியன், எஸ்.ஆர்.ராஜகோபால் ஆகியோர், இதுவரை மனுதார்கள் வழக்கு குறித்த ஆவணங்கள் கிடைக்கவில்லை. ஆவணங்கள் கிடைத்த பிறகு பதில் அளிக்க கால அவகாசம் வேண்டும் என கேட்டனர்.

அப்போது நீதிபதி வழக்கு தொடர்பான ஆவணங்களை மனுதரார்கள் வழங்க வேண்டும் என தெரிவித்தார். மேலும் இந்த வழக்கை ஆண்டு கணக்கில் நிலுவையில் வைக்க முடியாது எனவும் அடுத்த விசாரணையின் போது பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவித்த நீதிபதி அன்றே முடிவு எட்டப்படும் என தெரிவித்து விசாரணை ஏப்ரல் 22 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

You may also like...