Madras high court orders april 12

[4/12, 11:11] Sekarreporter: காணொளி காட்சி விசாரணையின்
போது பெண்ணிடம் ஒழுங்கீனமாக நடந்து கொண்டது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், வழக்கறிஞருக்கு இரண்டு வாரங்கள் சிறை தண்டனையும், 6 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

உயர் நீதிமன்ற காணொலி காட்சி விசாரணையின் போது, நீதிபதி ஒரு வழக்கில் உத்தரவு பிறப்பித்து கொண்டிருக்கையில்,
கேமரா ஆனில் இருந்தது தெரியாமல் வழக்கறிஞர் ஒருவர்,
பெண்ணுடன் ஒழுங்கீனமாக நடந்து கொண்டது காட்சிகள்,
வீடியோ சமூக வலைதளங்களில்  பரவியது.

இந்த விவகாரம் தொடர்பாக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த நீதிபதிகள் பி.என் பிரகாஷ் தலைமையிலான அமர்வு, சம்மந்தப்பட்ட வழக்கறிஞரை தொழில் செய்ய தடை விதிக்குமாறு பார் கவுன்சிலுக்கு  பரிந்துரைத்துள்ளதோடு, சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்
.
சம்மந்தப்பட்ட காட்சிகளை சமூக வலைத்தளங்களிலிருந்து நீக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தனர்.

இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிரகாஷ் மற்றும் நக்கீரன் அமர்வு, சம்பந்தப்பட்ட வழக்கறிஞருக்கு இரண்டு வாரங்கள் சாதாரண சிறை தண்டனையும், 6 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.

ஏற்கனவே இந்த வழக்கில் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர், 34 நாட்களாக சிறை தண்டனை அனுபவித்து வருவதால், தண்டனையை கழித்துக் கொள்ள உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கில் உடனடியாக நடவடிக்கை எடுத்த சிபிசிஐடி-க்கு பாராட்டு தெரிவித்தனர்.
[4/12, 13:38] Sekarreporter: சென்னை மேற்கு மாம்பலத்தில் ஸ்ரீ ராம் சமாஜ் என்ற அமைப்பின் மூலம் அயோத்யா மண்டபம் 1954 ஆம் ஆண்டு கட்டப்பட்டு, நிர்வகிக்கப்பட்டு வந்தது. அந்த அமைப்பு நிதி முறைகேடுகளில் ஈடுபடுவதாக புகார்கள் எழுந்த நிலையில், அயோத்யா மண்டபத்தை கடந்த 2013ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை கீழ் கொண்டுவந்து தமிழக அரசு உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து ,இராம சமாஜம் அமைப்பு சார்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் கடந்த வாரம் தனி நீதிபதி வி.எம். வேலுமணி விசாரித்தார். அவர் பிறப்பித்த உத்தரவில் ஸ்ரீ ராம் சமாஜ் தரப்பில் தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து ஸ்ரீ ராம் சமாஜ் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கு நீதிபதிகள் எம்.துரைசாமி, டி.வி.தமிழ்ச்செல்வி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் ஸ்ரீ ராம் சமாஜ் சார்பில் மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன் ஆஜராகி 2004ஆம் ஆண்டு வரை நிர்வாக குழுவில் இருந்தவர்கள் விலகியபின்னர், அதன் நிர்வாகிகள் மீது அறநிலையத் துறையிடமும், சி.எம்.டி.ஏ.-விடமும் தொடர் புகார்கள் வந்ததாக குறிப்ப்பிட்டார். அதன் அடிப்படையில், 2013ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 29ஆம் தேதி அற நிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டதாகவும் தெரிவித்தார். ஸ்ரீ ராம் சமாஜ் என்பது தேர்தல் மூலம் தேர்வாகும் 15 நபர்கள் மூலம் நடத்தப்படுகிறது என்றும், எந்த ஒரு குடும்பத்தை சேர்ந்த நபர்களால் நடத்தப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

அதை எதிர்த்து போராடிய மூத்த குடிமக்கள் உள்ளிட்டோரை கைது செய்து, காவல்துறை மேற்கு மாம்பலத்தை ஸ்தம்பிக்க வைத்துள்ளது என்றும், நிர்வாகிகளும் அறங்காவலர்களும் தனித்தனியாக மேல்முறையீடு செய்துள்ளதாகவும் வாதிட்டார். திருமண மண்டபமும் புக்கிங் செய்த நிலையில் உள்ளதால் அங்கு வருபவர்களை தடுக்கக்கூடாது எனவும் கோரிக்கை வைத்தார்.

தமிழக அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் ஆர். சண்முகசுந்தரம் ஆஜராகி அறநிலையத்துறை இணை ஆணையரால் பிறப்பிக்கப்பட்ட
உத்தரவை கடந்த வாரம் தனி நீதிபதி உறுதி செய்துள்ளதாகவும், நிர்வாகம் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டதால் கைது நடவடிக்கை மேற்கொண்டு பின்னர் விடுவிக்கப்பட்டுவிட்டதாகவும் விளக்கம் அளித்தார். அயோத்தியா மண்டபம் திறக்கப்பட்டு பூஜைகள் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், பள்ளியை தொடவில்லை என்றும், கல்யாண மண்டபத்தை அவர்களே பயன்படுத்தலாம் என்றும் விளக்கம் அளித்தார். விரிவான பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டுமென்றும், விரைவில் இறுதி வாதங்களை முன்வைக்கவும் தயார் என்றும் தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களுக்கும் பிறகு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு குறித்து தமிழக அரசும், அறநிலையத் துறையும் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஏப்ரல் 21ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர். அதுவரை மேல்முறையீடு வழக்கில் எவ்வித இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளனர்.
[4/12, 17:13] Sekarreporter: சென்னை மேற்கு மாம்பலத்தில் ஸ்ரீ ராம் சமாஜ் என்ற அமைப்பின் மூலம் அயோத்யா மண்டபம் 1954 ஆம் ஆண்டு கட்டப்பட்டு, நிர்வகிக்கப்பட்டு வந்தது. அந்த அமைப்பு நிதி முறைகேடுகளில் ஈடுபடுவதாக புகார்கள் எழுந்த நிலையில், அயோத்யா மண்டபத்தை கடந்த 2013ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை கீழ் கொண்டுவந்து தமிழக அரசு உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து ,இராம சமாஜம் அமைப்பு சார்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் கடந்த வாரம் தனி நீதிபதி வி.எம். வேலுமணி விசாரித்தார். அவர் பிறப்பித்த உத்தரவில் ஸ்ரீ ராம் சமாஜ் தரப்பில் தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து ஸ்ரீ ராம் சமாஜ் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கு நீதிபதிகள் எம்.துரைசாமி, டி.வி.தமிழ்ச்செல்வி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் ஸ்ரீ ராம் சமாஜ் சார்பில் மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன் ஆஜராகி 2004ஆம் ஆண்டு வரை நிர்வாக குழுவில் இருந்தவர்கள் விலகியபின்னர், அதன் நிர்வாகிகள் மீது அறநிலையத் துறையிடமும், சி.எம்.டி.ஏ.-விடமும் தொடர் புகார்கள் வந்ததாக குறிப்ப்பிட்டார். அதன் அடிப்படையில், 2013ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டதாகவும் தெரிவித்தார். ஸ்ரீ ராம் சமாஜ் என்பது தேர்தல் மூலம் தேர்வாகும் 15 நபர்கள் மூலம் நடத்தப்படுகிறது என்றும், எந்த ஒரு குடும்பத்தை சேர்ந்த நபர்களால் நடத்தப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

[4/12, 17:22] Sekarreporter: முரசொலி அலுவலக இடம் குறித்து அவதூறு பேசியதாக திமுக எம்.பி. ஆர் .எஸ்.பாரதி தொடர்ந்த அவதூறு வழக்கில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வேலூரில் நடத்த கூட்டம் ஒன்றில் அப்போதைய தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன், முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் என்றும், மூல பத்திரத்தை காட்ட முடியுமா என்று பேசியிருந்தார். அவரது பேச்சு அவதூறு பரப்பியதாக உள்ளதாக முரசொலி அறக்கட்டளை நிர்வாகி என்ற முறையில் திமுக எம்.பி ஆர்.எஸ்.பாரதி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். பின்னர் முருகன் எம்பி ஆனதால் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி. எம்.எல்.ஏ.-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது .

இந்த நிலையில் நீதிபதி அலிசியா முன்பு இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது .
அப்போது எல்.முருகன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் வழக்கு குறித்த ஆவணங்களை பெற்றுக் கொண்டனர். இதையடுத்து நீதிபதி அடுத்த விசாரணைக்கு எல.முருகன் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 22ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

அன்றைய தினம் அவதூறு வழக்கு குறித்த நீதிமன்றத்தின் கேள்விகளுக்கு அவர் பதில் அளிக்க வேண்டும்.
[4/12, 20:01] Sekarreporter: ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் வி.என்.சுதாகரன் பெயரிலான நற்பணி மன்றத்தின் மாநில அமைப்பாளராக இருந்த கோபி ஸ்ரீதரன் என்பவரிடம் கடந்த 2001-ம் ஆண்டு பணம் கேட்டு துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக வி.என்.சுதாகரன் உள்பட 4 பேர் மீது சென்னை பாண்டிபஜார் காவல்துளை வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் வி.என்.சுதாகரன் காவல்துறையினறால் கைது செய்யப்பட்டார். பின்னர், அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்த வழக்கில் வி.என்.சுதாகரன் உள்பட 4 பேர் மீது சென்னை அல்லிகுளம் நீதிமன்றத்தில் காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

சொத்து குவிப்பு வழக்கில் சுதாகரன், பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டதால் இந்த வழக்கு விசாரணையின் போது அவர் ஆஜராகவில்லை. இதைத்தொடர்ந்து கடந்த 7.9.2021 அன்று சுதாகரனுக்கு ஜாமீனில் வரமுடியாத பிடிவாரண்டு பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்தநிலையில் இன்று இந்த வழக்கு நீதிபதி ஏ.எஸ்.ஹரிகரகுமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வி.என்.சுதாகரன் சரண் அடைந்தார்.

அவர், நீதிமன்றத்தில் ஆஜராக இயலாததற்கான காரணத்தை தெரிவித்து அவர் மீதான ஜாமீனில் வரமுடியாத வாரண்டை திரும்ப பெறக்கோரி அவரது வழக்கறிஞர் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை ஏற்க கூடுதல் குற்றவியல் அரசு வக்கீல் பி.சுரேஷ் ஆட்சேபம் தெரிவித்தார். விசாரணைக்கு பின்பு, சுதாகரன் மீதான வாரண்டை திரும்ப பெற்று நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் வழக்கு விசாரணையை ஜூன் மாதம் 17-ந் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.
[4/12, 20:01] Sekarreporter: சென்னை ஐஐடி மாணவி கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் முக்கிய குற்றவாளியிடம் விசாரணை நடத்த வேண்டும் என்பதால் அவரது முன் ஜாமீனை ரத்து செய்ய வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை கோரிக்கை விடுத்துள்ளது.

சென்னை ஐ.ஐ.டி.யில் மாணவி ஒருவர் கடந்த 2016-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை பி.எச்.டி. படித்தார். மேற்குவங்காளத்தை சேர்ந்த அந்த மாணவி ஐ.ஐ.டி. விடுதியில் தங்கி படித்து வந்தார்.
இதனிடையே, தன்னுடன் பயின்ற ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் சென்னை கோட்டூர்புரம் போலீஸ் நிலையத்தில் அந்த பெண் புகார் அளித்தார்.
மாணவியின் புகாரின் அடிப்படையில் 2 பேராசிரியர்கள் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வழக்கின் முக்கிய குற்றவாளியான மேற்குவங்காளம் டைமண்டு ஹார்பர் மாவட்டம் ராய்நகரை சேர்ந்த கிங்சோ தெப்சர்மாவை கொல்கத்தாவில் வைத்து தமிழக தனிப்படை போலீசார் கைது செய்தனர்.  அவரை மேற்குவங்க மாநிலம், டைமண்டு ஹார்பர் மாவட்ட நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தி, சென்னை அழைத்துவர போலீசார் அனுமதி கேட்டார்கள்.ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்றுள்ளதால் அதற்கு அனுமதி மறுத்த நீதிமன்றம் அவரை ஜாமீனில் விடுவித்து விட்டது. இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில்,
கிங்சோ தெப்சர்மாவுக்கு வழங்கப்பட்ட முன் ஜாமீனை ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் கோட்டூர்புரம் போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு நீதிபதி தமிழ்ச்செல்வி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது .அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முனியப்ப ராஜ், குற்றம் சாட்டப்பட்ட நபர் முன் ஜாமீன் நிபந்தனைகளை நிறைவேற்றவில்லை என்றும் மேலும் இந்த வழக்கில் வன்கொடுமை சட்டப்பிரிவின் கீழ் சில பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளதாக வாதிட்டார். அதனால் அவரை கைது செய்து விசாரணை நடத்த வேண்டியது அவசியம் உள்ளதால், அவருடைய முன் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இதுகுறித்து கிங்சோ தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை 22ஆம் தேதி ஒத்தி வைத்துள்ளார்.k

You may also like...