Madras high court order cj pil case order பொதுநலன் இல்லை என்று தள்ளுபடி செய்தார்

[11/23, 14:41] Sekarreporter 1: கபடி விளையாட்டில் நான்கு சர்வதேச தங்கப்பதக்கங்களை வென்ற வீராங்கனைக்கு அரசு வேலை கோரிய வழக்கில் பொதுநலன் இல்லை எனக் கூறி தமிழ்நாடு விளையாட்டு வீரர் சங்கம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காமென்வெல்த், ஏசியன் கேம்ஸ் போன்ற சர்வதேச விளையாட்டு போட்டிகளில், இந்தியாவுக்காக விளையாடி தங்கப்பதக்கம் பெற்றுக் கொடுத்த கவிதா என்ற வீராங்கனையை அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்க கோரிய விண்ணப்பத்தை பரிசீலிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழ்நாடு விளையாட்டு வீரர்கள் சங்கம் சார்பில் பொதுநல வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, இந்திய கபடி அணி கேப்டனாக இருந்த கவிதா ஆயுதப்படை பிரிவில் சேர்ந்தார். அவருக்கு உதவி ஆய்வாளராக பதவி உயர்வு மறுக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து பணிக்கு வரவில்லை எனக் கூறி பணி நீக்கம் செய்யப்பட்டதாகவும், அதை எதிர்த்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும் மனுதாரர் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தேர்வு மூலம் பெற்ற பணியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் அவர் வறுமையில் வாடுவதால், பிற மாநிலங்களைப் போல அவருக்கு அரசு வேலை வழங்க கோரிய விண்ணப்பத்தை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுதாரர் சங்கம் தரப்பில் கோரப்பட்டது.

இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், ஏற்கனவே அரசு வேலை வழங்கப்பட்ட நிலையில் அவருக்கு அங்கீகாரம் வழங்கவில்லை எனக் கூற முடியாது எனவும், தனி நபருக்காக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த பொது நல மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்றும் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
[11/23, 17:17] Sekarreporter 1: Trade mark copy right case full order of Application No.3675 of 2021 in C.S.(Comm.Div.) No.14 of 2021 N. ANAND VENKATESH. J. r of https://sekarreporter.com/trade-mark-copy-right-case-full-order-of-application-no-3675-of-2021-in-c-s-comm-div-no-14-of-2021-n-anand-venkatesh-j-r-of/
[11/23, 17:50] Sekarreporter 1: மைனர் பெண்ணை மணமுடித்து, அவருடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை முகநூலில் வெளியிட்ட வாலிபருக்கு சென்னை உயர் நீதிமன்றம் 75 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர், 18 வயது பூர்த்தியாகாத பெண்ணை காதலித்து கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்தார். இந்நிலையில் பெண்ணின் தாயார் குன்னம் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், சுரேஷ் மீது குழந்தை திருமண தடுப்புச் சட்டம் மற்றும் போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கைதாகி, பின்னர் உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றார்

சுரேஷ் சிறையில் இருந்தபோது, அந்த பெண்ணுக்கு 18 வயது பூர்த்தியானதால் வேறு ஒருவருக்கு என்பவருக்கு அவரது பெற்றோர் மணமுடித்தனர்.

இந்நிலையில் தனது மனைவி சட்டவிரோத காவலில் இருப்பதாகவும், அவரை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக்கோரி சுரேஷ் உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, பெண்ணுக்கு வேறு ஒருவருடன் மணமாகிவிட்டதால், வழக்கை வாபஸ் வாங்கிக்கொள்ள அறிவுறுத்தினர்.

ஆனால் குடும்பத்தினரின் சட்டவிரோத காவலில் இருக்கும் மனைவியை நேரில் ஆஜர்படுத்தி விசாரித்தால், தன்னுடன் வருவதற்கே விருப்பப்படுவார் எனவும், வழக்கை வாபஸ் பெற முடியாது எனவும் சுரேஷ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி அந்த பெண், தாயார், கணவன் ஆகியோர் ஆஜரானார்கள். அப்போது நீதிபதிகளிடம், தனது சொந்த விருப்பத்தில், பெற்றோரின் சம்மதத்துடன் தான், வேல்முருகனை மணமுடித்ததாக அந்த பெண் தெரிவித்தார். மேலும், சுரேஷ் ஏற்கனவே இரண்டு பெண்களுடன் தொடர்பிருப்பதாகவும், சுரேஷின் நடத்தை சரியில்லாததால் அவரை விட்டு பிரிந்துவிட்டதாகவும் தெரிவித்தார்.

அப்போது, தன் மகளுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை சுரேஷ் முகநூலில் வெளியிட்டுள்ளதாக தாய் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

இவற்றை பதிவு செய்த நீதிபதிகள், அந்த பெண்ணை மீட்க கோரிய சுரேசின் வழக்கை தள்ளுபடி செய்தனர். மேலும், சுரேஷுக்கு 75 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதிகள், அந்த தொகையை 8 வாரத்தில் பெண்ணின் தாயாருக்கு கொடுக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளனர்.
[11/23, 20:13] Sekarreporter 1: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இடமாற்றத்தில் சென்றுள்ள சஞ்ஜிப் பானர்ஜிக்கு, சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி பி.என்.பிரகாஷ் பிரிவு உபச்சார கடிதம் எழுதியுள்ளார்.

அதில், 2020 டிசம்பர் 31வரை தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி இருந்தபோது கிரிக்கெட்டில் தோனி தலைமையிலான அணியை பார்ப்பதுபோல இருந்ததாகவும், அதன்பின்னர் வந்த சஞ்ஜிப் பானர்ஜியின் தலைமை விராட் கோலி தலைமையிலான டி.20 போல விறுவிறுப்பாக இருந்த்தாக குறிப்பிட்டுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றம் தலைமை ஏற்பதற்கு முன்பாக ஏ.பி.சாஹி இங்குள்ள சூழலை கற்க தொடங்கியதுபோலவே, சஞ்ஜிப் பானர்ஜியும் கற்றதாக தெரிவித்துள்ளார். நீதி பரிபாலனம், நிர்வாகம் என இரண்டிலும் திறம்பட செயல்பட்டதாகவும், தினமும் காலை 9:15 மணிக்கு நீதிமன்றம் வரும் பழக்கம் உடையவர் என்றும், இரவு 8 மணிக்கு மேலே வீடு திரும்புவார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நீதித்துறை நிர்வாகத்தில் திறம்பட செயல்பட்டதால், கோப்புகள் ஏதும் தேக்கம் அடையவில்லை என்றும், அனைத்து மாவட்ட கீழமை நீதிமன்றங்களுக்கும் சாலை மார்க்கமாகவே சென்று, ஒவ்வொரு மாவட்டத்தின் தேவையை புரிந்துகொண்டு சஞ்ஜிப் பானர்ஜி செயல்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

சேலம் மாவட்டத்தில் எடப்பாடி நீதிமன்ற கட்டிடத்திற்கு வாடகை வரவில்லை என தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியிடம் கட்டிட உரிமையாளரான ஒரு பெண் நேரடியாக புகார் அளித்தபோது, தன் கட்டுப்பாட்டில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தின் முக்கிய பிரச்சினை குறித்து கவனம் கொள்ளவில்லையே என தான் வருத்தம் அடைந்ததாக நீதிபதி பி.என்.பிரகாஷ் குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்ற விசாரணை அறையில் பிறப்பிக்கப்படும் உத்தரவாக இருந்தாலும், தீர்ப்புகள் தள்ளிவைக்கப்பட்டு பிறப்பிக்கப்படும் உத்தரவாக இருந்தாலும் சில நாட்களிலேயே கிடைத்துவிடும் வகையில், தன் பணியிடத்தில் கோப்புகள் தேங்காத வண்ணம் சுத்தமாக வைத்திருப்பார் என நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜிக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

வழக்கு விசாரணையின்போதும், மற்ற நேரங்களிலும் சஞ்ஜிப் பானர்ஜி முன்வைக்கும் கருத்துகள் அனைத்தும் மெல்லிய இறகு போலத்தான் இருக்கும் என குறிப்பிட்டுள்ளார். நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி ஒரு பக்கா பெங்காலி ஜெண்டில்மேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தலைமை நீதிபதியாக இருந்தபோது மாதமொருமுறை அனைத்து நீதிபதிகள் கூட்டத்தையும், மாதமிருமுறை நிர்வாக குழு கூட்டத்தையும் கூட்டத்தவறாதவர் என்பதையும் நீதிபதி பி.என்.பிரகாஷ் சுட்டிக்காட்டியுள்ளார்.

தான் மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது தெரிந்தபிறகும், தலைமை நீதிபதி என்ற பொறுப்புடன் தனது பணியை ஆர்வமுடன் தொடர்ந்தது தன்னை மிகவும் கவஎந்ததாக கடிததில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

2025ஆம் ஆண்டில் மாநிலத்தில் உள்ள நீதிமன்றங்கள் அனைத்தும் சொந்த கட்டிடத்தில் இயங்க வேண்டுமென்ற நோக்குடன் விசன் ப்ளான் 2025 என்ற திட்டத்தை வகுத்திருப்பதாக நவம்பர் 9ஆம் தேதி தன்னிடம் கூறிய அதேநாளில், அவரது இடமாற்றம் குறித்த அறிவிப்பு பொதுவெளியில் வந்ததாகவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அடுத்த நாள் பணியாற்றிபோதுகூட எவ்வித சலனமும் இல்லாமல் பணிபுரிந்ததாக நீதிபதி பிரகாஷ் குறிப்பிட்டுள்ளார்.

அப்படிப்பட்ட ஒரு கர்மயோகிக்கு, சென்னையை போல மேகாலயாவும் சிறப்பானதாக இருக்கும் என்றும், எங்கள் மனதில் எப்போதும் நிலைத்திருப்பீர்கள் என்றும் நீதிபதி பி.என்.பிரகாஷ் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
[11/23, 21:42] Sekarreporter 1: நீலகிரியில் குலதெய்வம் கோயிலுக்கு 7 வயது சிறுவனை பூசாரியாக நியமித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கிற்கு இந்து சமய அறநிலையத்துறை பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சிவன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், நெடுக்காட்டு கிராமத்தில் படுகர் இன மக்களின் குல தெய்வமான கெத்தை அம்மன் கோவிலில் பூஜை உள்ளிட்ட விழாக்களை அந்த இன மக்களே செய்து வந்த நிலையில், கடந்த 1994ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டதாகவும், அந்த கோயிலுக்கு அதே கிராமத்தை சேர்ந்த இரண்டாம் வகுப்பு படித்த 7 வயது சிறுவன் பூசாரியாக நியமிக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து இதுபோல பூசாரியாக நியமிக்கப்படும் சிறுவர்களால் பள்ளி செல்ல முடியாது என்றும், உணவை அவர்களே சமைத்து சாப்பிடுவது, கோவில் பசுக்களின் பாலை கறந்து நெய் எடுத்து விளக்குகளுக்குப் பயன்படுத்துவது போன்றவற்றால் கல்வி தடைப்படுகிறது என்றும், இது கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்திற்கு எதிரானது என குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி குழந்தைகள் பாதுகாப்பு நலத்துறை அதிகாரிக்கு மனு அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை என கோரியிருந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீலகிரி கல்வித் துறை அதிகாரி சார்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், கெத்தை அம்மன் கோயிலுக்கு பல நூற்றாண்டுகளாக 5 முதல் 14 வயது வரையுள்ள சிறுவர்களைப் பூசாரியாக நியமித்து வருகின்றனர் என்றும். பல நூற்றாண்டுகளாக நடந்து வரும் இந்த சடங்குகளை உடைக்க முடியாது என்றும்,
சிறுவனுக்கு தொடர்ந்து கல்வி வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதைப்பதிவு செய்த நீதிபதிகள், இந்த வழக்கிற்கு இந்த சமய அறநிலையத்துறை பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை இரண்டு வாரத்திற்கு தள்ளிவைத்தனர்.
[11/23, 21:43] Sekarreporter 1: மது அருந்தி விட்டு கணவன் தகராறு செய்ததால் மனமுடைந்து, 2 குழந்தைகளை கொன்று தற்கொலைக்கு முயன்ற தாய்க்கு ஆயுள்தண்டனை விதித்து சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த மம்தா என்பவர், கணவர் அடிக்கடி மது அருந்து விட்டு தகராறில் ஈடுபட்டு வந்ததால் விரக்தி அடைந்து தனது குழந்தைகளை கொன்று, தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

கடந்த 2015 அக்டோபர் 8 ம் தேதி கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் தனது 12 வயது மகள் யாக்‌ஷி, 7 வயது மகன் குர்ஷித் ஆகியோரை பாவாடை நாடாவால் கழுத்தை நெரித்துக் கொலை செய்தார்.

பின்னர், சர்க்கரை நோய்க்கான மாத்திரையை அதிகளவில் சாப்பிட்டு கை மணிக்கட்டில் பிளேடால் அறுத்துக்கொண்டு மம்தா தற்கொலைக்கு முயன்றார். அருகிலிருந்தவர்கள் உடனடியாக மம்தாவை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். சிகிச்சைக்கு பின்பு அவர் வீடு திரும்பினார்.

இதுதொடர்பாக மம்தாவுக்கு எதிராக கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை மாவட்ட 5 ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி டி.வி.ஆனந்த், தாய் மம்தா மீதான கொலை குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி அவருக்கு இரட்டை ஆயுள்தண்டனை விதித்து, தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கவும் தீர்ப்பளித்தார்.
[11/23, 21:43] Sekarreporter 1: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்து இல்லமான வேதா நிலையத்தை நினைவு இல்லமாக அறிவிக்கும் வகையில், அரசுடமையாக்கி பிறப்பிக்கப்பட்ட சட்டத்தை செல்லாது என அறிவிக்க கோரி, ஜெயலலிதாவின் வாரிசுகளாக அறிவிக்கப்பட்ட தீபா, தீபக் தாக்கல் செய்த வழக்குகள் மீது சென்னை உயர் நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்க உள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லமான வேதா நிலையம் நினைவு இல்லமாக மாற்றப்படும் என முந்தைய அதிமுக அரசு அறிவித்திருந்தது. அதை செயல்படுத்தும் விதமாக சட்டம் இயற்றப்பட்டு, வேதா நிலையத்தையும் அங்குள்ள அசையும் சொத்துக்களையும் அரசுடமையாக்கப்பட்டது.

இந்த சட்டத்தை எதிர்த்து ஜெயலலிதாவின் வாரிசுகளான தீபா, தீபக் ஆகிய இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அதேபோல, வேதா நிலையத்துக்கு 67 கோடியே 90 லட்சம் ரூபாயை இழப்பீடாக நிர்ணயித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்தும் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்குகள் அனைத்தையும் நீதிபதி சேஷசாயி விசாரித்தார். அப்போது, தீபா மற்றும் தீபக் தரப்பில், தனிநபர் சொத்துக்களை கையகப்படுத்துவது தொடர்பாக சட்டம் இயற்ற அரசுக்கு அதிகாரமில்லை எனவும் வேதா நிலையத்தை அரசுடமையாக்கி பிறப்பித்த சட்டத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும் எனவும் நினைவில்லமாக மாற்ற தடை விதிக்க வேண்டும் எனவும் வாதிடப்பட்டது.

வாரிசுகளாக அறிவிக்கப்பட்ட தங்களிடம் ஆலோசிக்காமல் நிலம் கையகப்படுத்தப்பட்டதை, வீட்டிற்கு 67 கோடியே 90 லட்ச ரூபாய் அளவிற்கு இழப்பீடு நிர்ணயித்து, அந்த தொகையை சென்னை மாவட்ட நீதிமன்றத்தில் நிலம் கையகபடுத்துதல் அதிகாரி செலுத்தியது தவறு எனவும் தீபா, தீபக் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

ஜெயலலிதா வாழ்ந்த இடத்தை புனிதமாக கருதி முறையாக பராமரிக்க திட்டமிட்டிருந்த நிலையில், தங்களின் கருத்துகளை கேட்காமல் நிலம் கையகப்படுத்தபட்டுள்ளதாகவும், முறையாக மதிப்பீடு செய்யாமல் 68 கோடி ரூபாய் என இழப்பீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

தமிழக அரசு தரப்பில், வேதா நிலையத்தை கையகப்படுத்தும் முன்பே அனைத்து தரப்பு கருத்துக்களையும் கேட்டறிந்ததாகவும், பெண்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்த ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையத்தை அரசு கையகப்படுத்தி நினைவு இல்லமாக மாற்ற நடவடிக்கை எடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட விதத்திலும் பல்வேறு பிரச்சினைகளை ஜெயலலிதா எதிர்கொண்டபோது தீபா, தீபக் ஆகியோர் உறுதுணையாக இல்லை எனவும் ஒருவர் குடியிருந்த வீட்டை நினைவில்லமாக மாற்ற சுற்றுச்சூழல் சான்றிதழ் எதுவும் தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஷேசசாயி வழக்குகளின் மீதான தீர்ப்புகளை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்த நிலையில், நாளை பிற்பகல் 2:15 மணிக்கு இந்த வழக்குகளில் தீர்ப்பளிக்கப்பட உள்ளது.

You may also like...