Madras high court october 8th orders

[10/7, 11:14] Sekarreporter.: தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனையில் பணியாற்றிவரும் டாக்டர்கள் சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்கள் இந்த வழக்கில் டாக்டர் சார்பாக வக்கீல் ஜி சங்கரன் ஆஜராகி சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு தமிழக டாக்டர்களுக்கு வழங்கினால் தான் தமிழக மக்களுக்கு அவர்கள் சேவை செய்யமுடியும் இவர்களுக்கு இட ஒதிக்கீடு கொடுக்காவிட்டால் மற்ற மாநில டாக்டர்கள் படித்துவிட்டு வெளி மாநிலத்துக்கு சென்று விடுவார்கள் எனவே 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வாதாடினார் இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது அப்போது மனுதாரர் தரப்பு வக்கீல் ஜி சங்கரன் ஆஜராகி அரசாணையின்படி 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் அரசு மருத்துவமனைக்கு என்று வாதாடினார் இதைக் கேட்ட நீதிபதி அரசாணையை அமல்படுத்துவீர்களா இல்லையா என்பது குறித்து பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை தசா விடுமுறைக்கு பிறகு வருகிற 28ம் தேதிக்கு தள்ளி வைத்தார் அரசு தரப்பில் அரசு வக்கீல் செல்வேந்திரன் இந்த வழக்கில் ஆஜராகி வாதாடினார்
[10/7, 12:12] Sekarreporter.: கூட்டுறவு சங்கத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர், துணைத் தலைவர் ஆகியோர் முறைகேட்டில் ஈடுபட்டால், அவர்களை இடைநீக்கம் செய்ய கூட்டுறவு சங்கங்களின் பதிவாளருக்க் அதிகாரம் வழங்கி கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்தம் செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை பெரம்பூர் கூட்டுறவு கட்டிட சங்கத்தின் தலைவரான கிருஷ்ணமூர்த்தி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ஒரு சங்கத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகியோர் முறைகேட்டில் ஈடுபட்டால் அவர்களிடம் விசாரணை நடத்தவோ, பணி நீக்கம் செய்யவும் ஏற்கனவே விதிகள் உருவாக்கப்பட்டு உள்ளதாகவும், அவர்களை ஊதியம் பெறும் ஊழியர்களாக கருதி இடைநீக்கம் செய்யும் வகையில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளருக்கு அதிகாரம் வழங்கி கொண்டுவரப்பட்ட கூட்டுறவு சங்க சட்டத்திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம் மற்றும் சத்திகுமார் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் பி.ஹெச்.அரவிந்த் பாண்டியன், எல்.பி.சண்முகசுந்தரம் ஆகியோர் ஆஜராகி, எம்பி, எம்எல்ஏ-க்கள் போன்று தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை அரசு அதிகாரிகள் இடைநீக்கம் செய்ய முடியாது என்றும், இதற்கு முரணாக கொண்டுவரபட்ட சட்ட திருத்தம் செல்லாது என அறிவிக்க வேண்டும் எனவும் வாதிட்டனர்.

தமிழ்நாடு அரசு தரப்பில் அரசு பிளீடர் பி.முத்துக்குமார் சங்கங்களின் நலனுக்காகவே சட்டத்திருத்தம் கொண்டுவரப்படதாகவும், பல்வேறு முறைகேடுகளால் சங்கங்கள் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தார். எனவே இந்த சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது அரசியலமைப்பு சட்டத்திற்கு புறம்பானது என கூற முடியாது என்றும் அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், அதிகாரமின்மை அடிப்படையிலும், அடிப்படை உரிமை மீறல் அடிப்படையிலும் மட்டுமே ஒரு சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர முடியும் எனவும், தலைவர் துணைத் தலைவர் ஆகியோரை இடைநீக்கம் செய்ய சங்கங்களின் பதிவாளருக்கு அதிகாரம் வழங்கியதில் தவறில்லை என்றும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர். கையாடல், நம்பிக்கையின்மை, தவறான நிர்வாகம் தொடர்பான புகார்கள் வரும்பொழுது இந்த சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் நடத்திய விசாரணையில் ஆரம்பக்கட்ட முகாந்திரம் இருந்தால் மட்டுமே இடைநீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்றும் தெளிவுபடுத்தினர். கூட்டுறவு சங்கத்தில் தலைவர் மற்றும் துணைத் தலைவராக பதவி ஏற்பவர்கள் அதன் சட்ட விதிகளுக்கு கட்டுப்பட வேண்டும் என்றும், தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் விதிமீறலில் ஈடுபட்டால் அதிகாரிகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்றும் தெரிவித்ததுடன், அதன் அடிப்படையில் இந்த சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டதில் தவறில்லை என தெரிவித்து, சட்டத் திருத்தத்தை ரத்து செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
[10/7, 12:33] Sekarreporter.: தமிழகம் முழுவதும் பொது இடங்கள், நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட இடங்களில் உள்ள சிலைகளை 3 மாதங்களில் அடையாளம் கண்டு அகற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது…

வேலூர் மாவட்டம் அரக்கோணம் தாலுகா கோனுர் கண்டிகை கிராமத்தில் உள்ள மேய்கால் புறம்போக்கு நிலத்தில் அம்பேத்கர் சிலை நிறுவ பஞ்சாயத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அனுமதி பெறாமல் சிலை வைக்கப்பட்டுள்ளதால் சிலையை அகற்ற தாசில்தார் உத்தரவு பிறப்பித்தார்.இதை எதிர்த்து அந்த கிராமத்தை சேர்ந்த வழக்கறிஞர் வீரராகன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, நெடுஞ்சாலைகளில்
சிலைகள் வைக்க கூடாது என உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் சிலையை அகற்றியதில் எந்த தவறும் இல்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, சட்ட விதிகள் மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை பின்பற்ற வேண்டியது அவசியம் என தெரிவித்த நீதிபதி,தமிழகம் முழுவதும் பொது இடங்கள், நெடுஞ்சாலைகள், அரசு நிலங்கள்,பொது சாலைகள், மேய்கால் புறம்போக்கு  ஆகிய இடங்களில் உள்ள சிலைகளை 3 மாதங்களில் அடையாளம் கண்டு அகற்ற வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டார்.

மேலும்,பொதுமக்கள் உரிமைகளை பாதிக்காத வகையில்  சிலைகள் மற்றும் கட்டுமானங்களை அமைக்க அனுமதி வழங்குவது தொடர்பாக விரிவான விதிகளை வகுக்க அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் தலைவர் பூங்கா உருவாக்கி சாலைகள் மற்றும் பொது இடங்களில் இருக்கும் தலைவர் சிலைகளை பூங்காவில் வைத்து பாரமரிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி,சிலைகள் பராமரிப்பதற்கான செலவுகளை சிலை வைக்க அனுமதி பெற்றவர்களிடம் வசூலிக்க வேண்டும் எனவும் சிலைகள் பராமரிப்பு தொகை செலுத்தாதவர்களிடம் இருந்து, அத்தொகையை வசூலிக்க சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு இந்த உத்தரவுகளை அமல்படுத்தியது தொடர்பாக 6 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு  உத்தரவிட்டார்.

அரசியல் கட்சிகள்,மதம்,சாதி,மொழி சார்ந்த அமைப்புகள் தங்கள் விருப்பப்படி சிலைகளை அமைப்பதாக குற்றம்சாட்டிய நீதிபதி,தலைவர்கள் சிலைகளை வைக்க அனைவருக்கும் உரிமைவுண்டு அதே சமயம் பொது இடங்களில் சிலைகள வைக்கக்கூடாது என தெரிவித்தார்.

சிலைகள் தாக்கப்பட்டு சட்ட ஒழுங்கு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்ட நீதிபதி,தலைவர்கள் பிறந்தநாள்,நினைவு நாள் நேரங்களில் நடைபெறும் நிகழ்வுகளால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக தெரிவித்தார்.

சமுதாயத்திற்காக தியாகம் செய்த தலைவர்களை எந்த ஒரு தருணத்திலும் சாதி ரீதியாக அடையாளப்படுத்த கூடாது அதை அவர்கள் கற்பிக்கவில்லை என்றும் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்
பல இடங்களில் சிலைகள் பராமரிக்கப்படுவதில்லை என்றும் சிலைகள் சேதப்படுத்தப்படுத்துதல், அவமரியாதை செய்தல் போன்ற செயல்களால் வன்முறை வெடிப்பதாகவும் இதை அனுமதிக்க கூடாது என அறிவுத்தினார்.

ஆட்சி அதிகாரத்துக்கு வரும் கட்சி, தங்கள் தலைவர்களின் சிலைகளை வைப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், தனியார் இடங்களில் சிலை வைப்பது அவர்களின் விருப்பம் என தெரிவித்த நீதிபதி உச்சநீதிமன்ற தீர்ப்பை திறமையாக அமல்படுத்தாததால் தான் சில இடங்களில் பதற்றமான சூழ்நிலை உருவாவதாக குற்றம் சாட்டிய நீதிபதி
மக்கள் நலனை கருத்தில் கொண்டு பல ஆண்டுகளாக நிலவும் சாதி மோதல்களை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

பொது இடங்கள்,சாலைகளில் சிலைகள் வைப்பதை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் இல்லையென்றால் மக்கள் மனதில் தற்போது நிலவும் அச்சத்தை போக்க முடியாது என தெரிவித்து வழக்கை முடித்து வைத்தார்…
[10/7, 14:52] Sekarreporter.: கோவில் நகைகளை உருக்கி தங்கக்கட்டிகளாக மாற்ற அறநிலையத் துறைக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தமிழக கோவில்களில் உள்ள நகைகளை உருக்கி தங்கக்கட்டிகளாக மாற்றி, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் டிபாசிட் செய்ய இந்து சமய அறநிலையத் துறை முடிவு செய்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இதுசம்பந்தமாக செப்டம்பர் 22ம் தேதி பிறப்பிக்கப்பட்ட சுற்ரறிக்கையை ரத்து செய்யக் கோரியும் சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வத்தாமன் பொது நல வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், இந்து சமய அறநிலைய சட்டத்தில், கோவிலுக்கு சொந்தமான நகைகளை உருக்க எந்த அனுமதியும் வழங்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறநிலையத் துறை, கோவில் நிர்வாகத்தில் மட்டும் தலையிட முடியுமே தவிர மத வழிபாட்டு விவகாரங்களில் தலையிட முடியாது எனவும், வருவாய் ஈட்டுவதற்காக நகைகளை உருக்கி டிபாசிட் செய்வதற்கு பதில், ஆக்கிரமிப்பில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் கோவில் நிலங்களை மீட்டு வருவாய் ஈட்டலாம் எனவும் மனுவில் யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவில் நகைகள் தொடர்பாக முறையாக எந்த பதிவேடுகளும் பராமரிக்கப்படாத நிலையில், நகைகளை உருக்கி வங்கிகளில் டிபாசிட் செய்வது கேள்வியை எழுப்பியுள்ளதாகவும், பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய நகைகளை உருக்க அதிகாரிகளுக்கு எந்த அதிகாரமும் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்துக்களின் மத உணர்வை புண்படுத்தும் வகையில் உள்ளதால் நகைகளை உருக்குவது தொடர்பான சுற்றறிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும், அதை ரத்து செய்ய வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
[10/7, 17:10] Sekarreporter.: பூங்காவுக்காக ஒதுக்கப்பட்ட பகுதியில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் குப்பைக்கிடங்குகளை அமைக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை மாநகராட்சியில் உள்ள வடவள்ளி பகுதியில் குழந்தைகள் விளையாடுவதற்காக திறந்தவெளி நிலம் மற்றும் பூங்கா அமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் குப்பைக்கிடங்கு அமைக்கும் முடிவை எதிர்த்து அப்பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் உள்ளிட்டோர் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கு இரு நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, பூங்காவுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் குப்பை கிடங்கு அமைக்க ஆதரவாகவும், எதிராகவும் தீர்ப்புகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது சுட்டிக்காட்டப்பட்டதை அடுத்து, வழக்கு 3 நீதிபதிகள் கொண்ட முழு அமர்வு விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டது.

அதன்படி இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், வி.பார்த்திபன், பி.டி.ஆஷா ஆகியோர் கொண்ட அமர்வு, திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை அமல்படுத்த வேண்டியது அவசியம் என்றும், கழிவுகள் மற்றும் குப்பைகள் இல்லாத சுத்தமான சுற்றுச் சூழலை உருவாக்க வேண்டியதும் அரசின் கடமை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை அமல்படுத்தும் வகையில் பூங்கா மற்றும் திறந்தவெளி நிலத்தில், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் குப்பை கிடங்கு அமைக்கும் முடிவு அனுமதிக்கக் கூடிய ஒன்றுதான் என்று தீர்ப்பளித்துள்ளனர்.

திடக்கழிவு மேலாண்மை விதிகள் முழுமையாக பின்பற்றப்படுகிறதா என்பதை ஆய்வு செய்வதற்கும், கண்காணிப்பதற்கும் மாநில, மாவட்ட, நகராட்சி மற்றும் பஞ்சாயத்து அளவிலான குழுக்களை அமைக்க வேண்டுமென்றும், விதிமீறல் இருப்பதாக தெரிந்தால் அதன் மீது நடவடிக்கை எடுக்க அந்த குழுக்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

பூங்காக்கள் முறையான பராமரிப்பில் உள்ளதா என்பதையும் அந்த குழுக்கள் தான் பரிசீலிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர். பூங்கா மற்றும் திறந்தவெளி நிலங்களில் அமைக்கப்படும் குப்பை கிடங்குகள் பயன்படாத நிலைக்கு போய்விடாமல் இருப்பதை அரசு அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டுமெனவும் உத்தரவிட்டு, அதற்கான விதிகளை வகுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர்.

குப்பை கிடங்குகளை முறையாக பராமரிக்காத அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி அரசுக்கு அறிவுறுத்தி வழக்கை முடித்துவைத்தனர்.
[10/7, 18:00] Sekarreporter.: ஒரு வழக்கில் மட்டுமே தண்டனை பெற்ற குற்றவாளிகள் புத்துணர்வு பெறுவதற்காக, குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடும் வகையில் விடுப்பு வழங்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தங்களது மகனுக்கு திருமண ஏற்பாடுகள் செய்வதற்காக, குற்ற வழக்கு ஒன்றில் ஆயுள் தண்டனை அனுபவிக்கும் 54 வயதான கணவர் பி.நாகேந்திரனுக்கு ஒரு மாத விடுப்பு வழங்க கோரி சிறை கண்காணிப்பாளரிடம் அவரது மனைவி மனு கொடுத்திருந்தார். நாகேந்திரன் மீது ஆயுத தடுப்பு சட்டத்தின் கீழான மற்றொரு குற்ற வழக்கு விசாரணையில் உள்ளதால் சுட்டிக்காட்டி விடுப்பு வழங்க சிறை நிர்வாகம் மறுத்தது.

இந்த உத்தரவை ரத்து செய்து கணவருக்கு விடுப்பு வழங்கக் கோரி நாகேந்திரனின் மனைவி தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.என்.மஞ்சுளா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கை விசாரித்து பிறப்பித்துள்ள தீர்ப்பில், விடுப்பில் செல்வதை குற்றவாளிகள் உரிமையாக கோர முடியாது என்பதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், அதற்காக தண்டனை காலம் முழுவதும் விடுப்பு வழங்காமல் மனிதாபிமானமற்ற முறையில் சிறையில் வைத்து, மறுமலர்ச்சி பெறுவதற்கான வழியை தடுக்கக்கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

ஒன்றும் மேற்பட்ட வழக்கு உள்ளவர்களுக்கு இந்த விதிகள் பொருந்தாது என்பதையும் குறிப்பிட்டுள்ள நீதிபதிகள், ஒரு வழக்கில் மட்டுமே தண்டனை பெற்ற குற்றவாளிகள் புத்துணர்வு பெறுவதற்காக, குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடும் வகையில் விடுப்பு வழங்க வேண்டுமென சிறைத்துறைக்கு அறிவுறுத்தி உள்ளனர்.

நாகேந்திரன் மீதான மற்றொரு வழக்கு நிலுவையில் இருபதாலேயே அவரை விடுப்பில் செல்ல அனுமதி மறுத்து பிறப்பித்த உத்தரவு சரியென குறிப்பிட்டு, நாகேந்திரனின் மனைவியின் கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டனர்.
[10/7, 18:01] Sekarreporter.: மக்களுக்கு எளிதில் கிடைக்கும் வகையில் தமிழக அரசே மதுபான விற்பனை செய்துவருவதை சுட்டிக்காட்டியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், பிராந்தி பாட்டில்கள் கடத்திய இரு சக்கர வாகனத்தை உரிமையாளரிடம் ஒப்படைக்க திருச்செங்கோடு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

கடந்த சுதந்திர தினத்தன்று திருச்செங்கோடு காவல் நிலையத்தினர் கருமக கவுண்டம்பாளையத்தில் உள்ள ராஜா சித்த மருத்துவமனை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த ஹோண்டோ டியோ வாகனத்தை சோதனை செய்துள்ளனர். கிருபாகரன் என்பவர் ஓட்டி வந்த அந்த வாகனத்தில் 96 பிராந்தி பாட்டில்கள் இருந்தது தெரிய வந்தது. டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்பட்டிருந்த நாளில் மதுபாட்டில்கள் கடத்தபட்டதால், அவற்றை பறிமுதல் செய்ததுடன், வாகனத்தையும் கைப்பற்றி கிருபாகரன் மீதும், வாகன உரிமையாளர் அய்யப்பன் மீதும் தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

மதுபானம் எடுத்து சென்றதற்கும் தனக்கும் தொடர்பில்லை என்பதால் வாகனத்தை மீண்டும் ஒப்படைக்கக்கோரி அய்யப்பன் திருச்செங்கோடு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு செப்டம்பர் 15ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த உத்தரவை மறு ஆய்வு செய்து, வாகனத்தை திருப்பி தர உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அய்யபன் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி பி. வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் மதுபாட்டில்கள் எடுத்துச் சென்றதற்கு தொடர்பில்லை என்பதாலும், பல்வேறு பருவநிலைகளிலும் திறந்தவெளியில் வாகனத்தை போட்டு போட்டுவைத்துள்ளதாலும் வாகனத்தை திருப்பி ஒப்படைக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது.

காவல் துறை தரப்பில் சட்டவிரோத மதுபான கடத்தலுக்கு வாகனம் பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும், அதுதொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாகவும், விசாரணை முடியும்வரை வாகனத்தை கொடுக்கக்கூடாது என வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களுக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கவனிப்பாரின்றி கிடக்கும் வாகனத்தின் நிலையையும், மக்களுக்கு எளிதில் கிடைக்கும் வகையில் டாஸ்மாக் கடைகள் மூலம் அரசே மதுபான விற்பனை செய்துவருவதை கருத்தில் கொண்டும், அய்யப்பனின் வாகனத்தை திருப்பி கொடுக்கும்படி திருச்செங்கோடு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளார். வாகனத்தின் ஆவணங்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும், வாகனத்தில் மாற்றங்கள் செய்யக்கூடாது, விசாரணைக்கு தேவைப்படும்போது வாகனத்தை எடுத்துவர வேண்டும், முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் 25 ஆயிரம் ரூபாய் வைப்புத்தொகையாக செலுத்த வேண்டும், சட்டவிரோத செயல்களுக்கு வாகனத்தை பயன்படுத்த மாட்டேன் என உத்தரவாதம் அளிக்க சேண்டும் ஆகிய நிபந்தனைகளை விதித்துள்ளார். இவற்றின் அடிப்படையில், வாகனத்தை விடுவிக்க மறுத்த திருச்செங்கோடு நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தும் உத்தரவிட்டுள்ளார்.
[10/7, 18:15] Sekarreporter.: கோவில் நிலத்தை ஆக்கிரமித்துள்ள குயின்ஸ்லேண்டை அப்புறப்படுத்தி, நான்கு வாரங்களில் நிலத்தை மீட்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பூந்தமல்லியை அடுத்த பாப்பான்சத்திரத்தில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் வேணுகோபால் சாமி கோவிலுக்கு சொந்தமான 21 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்த ராஜம் ஹோட்டல்ஸ் நிறுவனம், குயின்ஸ்லேண்ட் பொழுதுபோக்கு பூங்கா மற்றும் ரிசார்ட் நடத்தி வருகிறது.

கடந்த 1998ம் ஆண்டுடன் குத்தகை காலம் முடிந்த நிலையில், நிலத்தை தொடர்ந்து பயன்படுத்தி வந்ததை அடுத்து, 2 கோடியே 75 லட்சத்து 46 ஆயிரத்து 748 ரூபாயை இழப்பீடாக செலுத்தும்படி குயின்ஸ்லேண்ட் நிர்வாகத்துக்கு ஸ்ரீபெரும்புதூர் தாசில்தார் கடந்த 2013ம் ஆண்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இந்த நோட்டீசை எதிர்த்து குயின்ஸ்லேண்ட்டை நிர்வகிக்கும் ராஜம் ஹோட்டல்ஸ் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

கடந்த 2013ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டு, நீண்டகாலமாக நிலுவையில் இருந்த இந்த வழக்கு நீதிபதி சுந்தர் முன் விசாரணைக்கு வந்தபோது, கடந்த 1995 ம் ஆண்டில், சம்பந்தப்பட்ட நிலங்கள் முதலில் செல்வராஜ் என்பவருக்கு, குத்தகைக்கு விடப்பட்டதாகவும், அதைத்தொடர்ந்து வருவாய்த் துறையினர் கோவில் பெயரில் இருந்த பட்டாவை ரத்து செய்ததால் இதைப் பயன்படுத்திக் கொண்டு, குயின்ஸ்லேண்ட் ரிசார்ட்ஸ் நிறுவனம் சட்டவிரோதமாக கோவில் நிலங்களை ஆக்கிரமித்துக்கொண்டிருந்ததாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், 1998ல் குத்தகை காலம் முடிந்த பிறகும் குயின்ஸ்லேண்ட் ஆக்கிரமித்திருந்ததாகவும் அரசுத்தரப்பில் வாதிடப்பட்டது.

அரசுத்தரப்பு வாதத்தை ஏற்று குயின்ஸ்லேண்ட் நிர்வாகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதி, கோவில் நிலத்தை ஆக்கிரமித்துள்ள குயின்ஸ்லேண்ட்டை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்து, 4 வாரங்களில் கோவில் நிலத்தை மீட்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் அந்த நிறுவனம் வருவாய் துறைக்கு 1 கோடியே 08 லட்சம் ரூபாயையும், கோவிலுக்கு
9 கோடியே 50 லட்சம் ரூபாயையும் இழப்பீடாக
செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.

You may also like...