Madras high court october 31 ist orders

[10/30, 13:05] Sekarreporter1: பத்திரப்பதிவு தொடர்பான புகார்களை விசாரிக்க மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.

போலியான பத்திரப்பதிவுகளை ரத்து செய்ய வேண்டும், அசல் ஆவணங்களை பத்திரப்பதிவை செய்ய பத்திரப்பதிவாளருக்கு உத்தரவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பத்திரப்பதிவு தொடர்பான பல்வேறு வழக்குகளின் விசாரணை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் முன்பு நடைபெற்று வந்தது .. இந்த வழக்கு விசாரணையின் போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரிச்சர்ட்வில்சன், தமிழக சட்டமன்றத்தில் பத்திரப்பதிவு திருத்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டதை சுட்டிக்காட்டினார்.
மோசடியாக பதிவு செய்யப்பட்ட பத்திரப் பதிவுகளை ரத்து செய்யும் அதிகாரத்தை பதிவாளர்களுக்கு வழங்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதா பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது என்றும், முறைகேடான பதிவுகளை செய்த பதிவு அலுவலருக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் தெரிவித்தார். இந்த சட்ட மசோதாவில்,பத்திரப்பதிவு ஐஜியிடம் மேல்முறையீடு செய்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி ஆர். சுரேஷ்குமார்,
பதிவு செய்யப்பட்ட ஆவணத்தை ரத்து செய்ய உத்தரவிடக்கோரிய அனைத்து ரிட் மனுக்களும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். ஒரு ஆவணத்தை பதிவு செய்தவுடன் அதை ரத்து செய்ய பதிவுத்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லை என்பதால் மனுதாரர்கள் சிவில் நீதிமன்றத்தை அணுகுமாறு உத்தரவிட்டுள்ளார்.மேலும்
ஆவணங்களை ரத்து செய்வதற்கான வழிமுறைகளை, பத்திரப்பதிவுச் சட்டத்தில் பிரிவுகள் 77-ஏ 77-பி ஐ அறிமுகப்படுத்தி சமீபத்தில் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பதிவுச் சட்ட திருத்த மசோதாவையும் உயர்நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக்கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.. புதிதாகச் உருவாக்கப்பட்ட விதிகளின் கீழ், மோசடியான ஆவணங்களை ரத்து செய்ய பதிவுத்துறை அதிகாரிகளை அணுகலாம் என்றும் தீர்ப்பளித்துள்ளார.. மேலும் திருத்தச்சட்ட பிரிவு 77-ஏ மற்றும் 77-பி நடவடிக்கைகளில் மேல்முறையீடுகளை விசாரிக்க சட்டப்பூர்வ நபர்களைக் கொண்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அமைக்கப்படலாம் என்று தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார். அந்த தீர்ப்பாயத்தில் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி மற்றும் பத்திரப்பதிவு துறை ஐஜி வருவாய்த்துறை அதிகாரிகள் இடம்பெறவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
[10/30, 13:38] Sekarreporter1: வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி இயற்றப்பட்ட சட்டத்தை ரத்து செய்யக் கோரிய வழக்குகளில் சென்னை உயர் நீதிமன்றம், வரும் திங்கள் கிழமை (நவம்பர் 1) தீர்ப்பளிக்க உள்ளது.

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 சதவீத ஒதுக்கீட்டில், 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி, கடந்த பிப்ரவரி மாதம் 26ம் தேதி தமிழக சட்டமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்டத்தை ரத்து செய்யக் கோரி, சுவாமிநாதன் உள்பட 25க்கு மேற்பட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்த வழக்குகளை நீதிபதிகள் எம்.துரைசாமி மற்றும் கே.முரளிசங்கர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

விசாரணையின் போது, மனுதாரர்கள் தரப்பில், சாதிவாரி கணக்கெடுப்பை முடிக்காமல் எப்படி இந்த சட்டம் இயற்றப்பட்டது எனவும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில், 68 சாதிகளைக் கொண்ட சீர் மரபினர் பிரிவினருக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி வரும் நிலையில், வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியதன் மூலம் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ள 22 சாதிகளுக்கு வெறும் 2.5 சதவீத இட ஒதுக்கீடு மட்டுமே கிடைக்கும் என்றும் வாதிடப்பட்டது.

உண்மையிலே வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று எண்ணம் இருந்திருந்தால் அதை முன்கூட்டியே செய்திருக்கவேண்டும் என்றும், தேர்தல் நெருங்கும் நிலையில் நிலையில் அரசியல் லாபத்திற்காக இந்த சட்டம் இயற்றப்பட்டு உள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

தமிழக அரசுத்தரப்பில், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் பரிந்துரை அடிப்படையிலேயே வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதாகவும்,
மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்களின் மக்கள் தொகைக்கேற்ப இட ஒதுக்கீடு கிடைக்க வேண்டுமென்ற கொள்கையின் அடிப்படையில் இந்த இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் 1983 ல் நடத்திய கணக்கெடுப்பின் படி, தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையில் 13.01 சதவீதம் பேர் வன்னியர்கள் உள்ளதாக கிடைக்கப்பெற்ற நம்பத்தகுந்த புள்ளிவிவரங்களின் அடிப்படையிலேயே இந்த இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாகவும் அரசுத்தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தேர்தல் அறிவிப்பதற்கு சற்று நேரத்திற்கு முன்பாக இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டதாக மனுதாரர்கள் கூறுவதை ஏற்க முடியாது எனவும், ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு கடைசி நிமிடம் வரை கொள்கை முடிவெடுக்கவும், சட்டம் இயற்றவும் அதிகாரம் உள்ளதாகவும், இதில்
அரசியல் காரணங்களோ அவசரமோ ஏதுமில்லை எனவும்
தெரிவிக்கப்பட்டது.

மற்ற சாதியினர் இந்த சட்டத்தின் மூலம் பாதிக்கப்படுவர் என மனுதாரர்கள் கூறுவது வெறும் கற்பனையே எனவும், குறிப்பிட்ட பிரிவுக்கு அதிகமான இட ஒதுக்கீடு வழங்கியதாக கருத முடியாது எனவும்,
அரசியல் சட்டத்தை பின்பற்றியே இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளதால் 10.5 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்த வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டுமென கோரப்பட்டது.

இந்த வழக்கில் இடையீட்டு மனுதாரராக பா.ம.க. தலைவர் ராமதாஸ் தரப்பில், வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீட்டால் மற்ற பிரிவினருக்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும், தேர்தலில் குறிப்பிட்ட ஜாதியினரின் வாக்குகளைப் பெற அரசியல் உள்நோக்கத்துடன் இந்த இட ஒதுக்கீடு வழங்குவதாக கூறுவது தவறு எனவும், முந்தைய ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சட்டத்தை அமல்படுத்த புதிய அரசு உத்தரவிட்டுள்ளதன் மூலம், இந்த சட்டத்தை நிறைவேற்றியதில் எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை என்பது நிரூபணமாகியுள்ளதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

மேலும், வன்னியர் ஜாதியினருக்கு மட்டும் 10.5 சதவீத ஒதுக்கீடு வழங்கப்படவில்லை எனவும், வன்னியகுல சத்திரியர் பிரிவில் ஏழு சாதியினர் உள்ளதாகவும், வன்னியர் இட ஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளதாகவும் வாதிடப்பட்டது.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்த நிலையில், திங்கள் கிழமை இந்த வழக்குகளில் தீர்ப்பளிக்கப்பட உள்ளது.
[10/30, 16:08] Sekarreporter1: பொது சொத்துக்களை சேதப்படுத்தியதாக தற்போதைய தமிழக ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியின் 131வது வார்டுக்கு கடந்த 2005ம் ஆண்டு ஏப்ரல் 19ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது கே.கே.நகரில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடிக்குள் அத்துமீறி நுழைந்து, தேர்தல் அலுவலரிடம் இருந்து முத்திரையை பறித்துச் சென்றதாகவும், அதை தட்டிக்கேட்ட தன்னை துரத்தியதுடன், தனது காரை சேதப்படுத்தி, பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாகவும் கூறி, அதிமுக பிரமுகர் சந்தோஷ் என்பவர் புகார் அளித்தார்.

இப்புகாரின் அடிப்படையில் கே.கே.நகர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு, சென்னை எம்.பி. – எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியம் உள்ளிட்ட திமுகவினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி நிர்மல்குமார் முன் விசாரணைக்கு வந்தபோது, அரசியல் முன் விரோதம் காரணமாக இந்த பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், காவல் துறையினர் முறையான புலன் விசாரணையை நடத்தவில்லை எனவும், 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் துவங்கப்படவில்லை எனவும் மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

அதேசமயம், மனுக்கள் மீது மனுக்களை தாக்கல் செய்து விசாரணையை தாமதப்படுத்தியதாக காவல் துறை தரப்பில் வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கார் பெட்ரோல் ஊற்றி தீவைக்கப்பட்டதா என்பது குறித்து சேத மதிப்பீட்டு அறிக்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை எனவும், 10 ஆண்டுகளுக்கு மேலாக வழக்கு எந்த முன்னேற்றமும் இல்லை எனவும் கூறி, வழக்கை ரத்து செய்து தீர்ப்பளித்தார்.
[10/30, 18:05] Sekarreporter1: சுமார் 200 ஏக்கர் நிலத்துக்கு உரிமை கோரி, ஸ்ரீபெரும்புதூர் பாப்பான் சத்திரத்தில் உள்ள காசிவிஸ்வநாதர் மற்றும் வேணுகோபால சுவாமி கோவில் நிர்வாகம் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை மூன்று மாதங்களுக்குள் விசாரித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்கும்படி, தமிழக நில நிர்வாக ஆணையருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் தாலுகா, பாப்பான் சத்திரத்தில் உள்ள காசிவிஸ்வநாதர் மற்றும் வேணுகோபால சுவாமி கோவிலுக்கு சொந்தமாக இருங்கோட்டை மற்றும் பழஞ்சூர் கிராமங்களில் 200 ஏக்கர் நிலம் உள்ளது.

கடந்த 1884ம் ஆண்டு உயில் மூலம் கோவிலுக்கு எழுதி வைக்கப்பட்ட இந்த நிலத்துக்கு பட்டா வழங்கக் கோரியும், நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி மீட்கக் கோரியும் ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

கோவிலுக்கு வழங்கப்பட்ட இந்த நிலம், அனாதீன நிலமாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், வருவாய் ஆவணங்களில் அதை மாற்றி, கோவில் பெயருக்கு பட்டா வழங்கக் கோரி கோவில் நிர்வாகம் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு நில நிர்வாக ஆணையர் முன் நிலுவையில் உள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, கோவிலுக்கு சொந்தமான 21 ஏக்கர் நிலம் குயின்ஸ்லேண்ட் நிறுவனத்துக்கு குத்தகைக்கு விடப்பட்டிருந்ததாகவும், குத்தகை முடிந்து விட்டதால், அந்த நிறுவனம் ஆக்கிரமித்துள்ள நிலத்தை நான்கு வாரங்களில் மீட்க வேண்டும் என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை, இரு நிதிபதிகள் அமர்வு உறுதி செய்துள்ளதாகவும் கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, கோவில் நிலத்தின் உரிமை தொடர்பாக அரசுக்கும், கோவில் நிர்வாகத்துக்கும் இடையிலான பிரச்னை தொடர்பான மேல் முறையீடு, நில நிர்வாக ஆணையர் முன் நிலுவையில் உள்ளதால், இதுசம்பந்தமாக எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது எனக் கூறி வழக்கை முடித்து வைத்த நீதிபதிகள், கோவில் நிர்வாகத்தின் மேல் முறையீட்டு மனுவை மூன்று மாதங்களில் விசாரித்து முடிவெடுக்க நில நிர்வாக ஆணையருக்கு உத்தரவிட்டனர்.
[10/30, 20:14] Sekarreporter1: ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணமோசடி செய்த விவகாரத்தில் உயர் நிலை பள்ளி ஆசிரியருக்கு 2 ஆணு சிறை, ₹ 10000 அபராதம் – சென்னை சிபிஐ நீதிமன்றம்

பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை டெக்னீசியன் ஸ்ரீராமனுடன், கிருஷ்ணகிரி தோப்பூர் அரசு உயர் நிலை ஆசிரியர் பி.ஆதிமணி கூட்டு சேர்ந்து 26 பேரிடம் ரூ. 37 லட்சம் மோசடி என புகார்

2013, 2014ல் பொது மேலாளர், கோட்ட மேலாளர் ஆகியோர் ஒதுக்கீட்டின் கீழ் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக சிபிஐ வழக்கு

ஐசிஎஃப் ஸ்ரீராமன் தலைமறைவானதை தொடர்ந்து ஆசிரியர் ஆதிமணி மீதான வழக்கு தனியாக பிரிக்கப்பட்டு விசாரித்த நீதிபதி எல்.எஸ்.சத்தியமூர்த்தி தீர்ப்பு

You may also like...