1: [10/21, 22:22] Sekarreporter 1: [10/21, 21:12] Chandrasekar Mhc Advt: [10/21, 19:22] Sekarreporter 1: https://youtu.be/6_nmSTujQMQ [10/21, 19:27] Sekarreporter 1: THE HON’BLE MR.T.RAJA, ACTING CHIEF JUSTICE AND THE HON’BLE MR.JUSTICE D.KRISHNAKUMAR W.A.No.2364 of 2022 T.Udhaykumar            Madras high court october 21 order.

[10/21

[10/22, 06:31] Sekarreporter 1: The order of Hon’ble Madras High Court on the sensational NEET case in favour of a elligible canditate is most Appreciable. I also appreciate the Respected counsel pleaded in this case. Orders, like this will uprightly hold the faith of soceity on Justice.
#Fiat justitia ruat caelum

By,
R. Chandrasekaran, Adv MHC
Chandru Law Academy
[10/22, 06:31] Sekarreporter 1: [10/21, 22:22] Sekarreporter 1: [10/21, 21:12] Chandrasekar Mhc Advt: [10/21, 19:22] Sekarreporter 1: https://youtu.be/6_nmSTujQMQ
[10/21, 19:27] Sekarreporter 1: THE HON’BLE MR.T.RAJA, ACTING CHIEF JUSTICE AND THE HON’BLE MR.JUSTICE D.KRISHNAKUMAR W.A.No.2364 of 2022 T.Udhaykumar                    Appellant  v. Appellant :: Mr.R.Sankarasubbu for Mr.Ilayaraja Kanthasamy For Respondents :: Mr.K.Ramanamoorthy Central Government Counsel for R1 Mr.G.Rajagopalan Senior Counsel for Mrs.Sunitakumari for R2 Mrs.R.Anitha Special Government Pleader for R4 Mrs.M.Sneha for R5 JUDGMENT (Judgment of the Court was made by the Hon’ble Acting Chief Justice) . https://sekarreporter.com/the-honble-mr-t-raja-acting-chief-justice-and-the-honble-mr-justice-d-krishnakumar-w-a-no-2364-of-2022-t-udhaykumar/
[10/21, 21:12] Chandrasekar Mhc Advt: The order of Hon’ble Madras High Court on the sensational NEET case in favour of a elligible canditate is most Appreciable. I also appreciate the Respected counsel pleaded in this case. Orders, like this will uprightly hold the faith of soceity on Justice.
#Fiat justitia ruat caelum

By,
R. Chandrasekaran, Adv MHC
Chandru Law Academy
[10/21, 21:14] Chandrasekar Mhc Advt: Send R. Anitha also sir
[10/22, 06:31] Sekarreporter 1: The order of Hon’ble Madras High Court on the sensational NEET case in favour of a elligible canditate is most Appreciable. I also appreciate the Respected counsel pleaded in this case. Orders, like this will uprightly hold the faith of soceity on Justice.
#Fiat justitia ruat caelum

By,
R. Chandrasekaran, Adv MHC
Chandru Law Academy

 

 

, 06:56] Sekarreporter 1: பொருளாதார குற்றங்கள் இந்த சமுதாயத்தில் மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய குற்றம் என்று தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், 10 ஆயிரம் மோசடி தொடர்பாக சுரானா நிறுவனங்களின் முக்கிய நிர்வாகி ராகுல் தினேஷ் சுரானாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்துள்ளது..
.

சென்னையை தலைமையிடமாக சுரானா இண்டஸ்ட்ரியல் லிமிடெட் நிறுவனம் மற்றும் சுரானா பவர் லிமிடெட் ஆகியவை ஐடிபிஐ வங்கியிடமிருந்தும், சுரானா கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் எஸ்.பி.ஐ. வங்கியிடமிருந்தும் பெற்ற 4000 கோடி ரூபாய் கடனை பெற்று திருப்பி செலுத்தவில்லை.இந்நிலையில், சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபடுத்தியதாக கூறி நிறுவனத்தின் இயக்குனர்கள், தினேஷ் சந்த் சுரானா, விஜயராஜ் சுரானா, ராகுல் தினேஷ் சுரானா ஊழியர்கள் பி.ஆனந்த் மற்றும் ஐ.பிரபாகரன் ஆகியோர் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து நால்வரும் கைது சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் நிறுவனத்தின் முக்கிய நிர்வாகியான ராகுல் தினேஷ் சுரானா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்திருந்தார்.அந்த மனு மீது நீதிபதி ஜெகதீஷ்சந்திரா முன்பு விசாரணை நடைபெற்றது.மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி, மனுதாரர் நிறுவனத்தின் தொழில்நுட்பபணிகைளை கவனிக்கும் துணைத்தலைவராக மட்டுமே இருந்துள்ளார் ,இயக்குனர் குழுவில் இடம்பெறவில்லை என்றும் தெரிவித்தார். நிறுவனத்தின் மறுசீரமைப்பிற்கு பிறகு அவர் ராஜினாமா செய்துவிட்டதாகவும், பல்வேறு வங்கிகளிடமிருந்து பெற்ற கடனுக்கும் அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று வாதிட்டார்.பலமுறை அவருக்கு அனுப்பப்பட்ட சம்மன்களுக்கு ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைத்ததாகவும்,எங்கும் தப்பி ஓடவில்லை என்றும் குறிப்பிட்டார்.தனது தந்தை தினேஷ் சந்த் சுரானா என்பதை தாண்டி இவருக்கும் குற்றத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவித்தார். தீவிர மோசடி புலனாய்வு பிரிவின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இது ஒரு கடுமையான பொருளாதார குற்றம் என்றும், மனுதாரர் சுரானா நிருவனங்களில் முக்கியப்பொறுப்பில் இருந்து நிறுவனத்தை நடத்துவதில் முக்கிய பங்கு வகித்துள்ளார் என்றும் தெரிவித்தார்.மனுதாரருக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு போதுமான ஆதாரங்கள் உள்ளதாகவும் எனவே ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்யவேண்டும் என்று வாதிட்டார்.இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, இதுபொதுமக்கள் சம்பந்தப்பட்ட 10 ஆயிரம் கோடி அளவிலான மோசடி என்றும் இது கடுமையான பொருளாதார குற்றம் என்றும்,சமூதாயத்திற்கு கேடு விளைவிக்ககூடிய குற்றங்கள் மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை என்றும் மேலும் மனுதாரர் நிறுவனத்தின் நிர்வாகத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.மேலும் வழக்கில் முன்கூட்டியே ஜாமீன் வழங்க முடியாது என்று கூறி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
[10/21, 13:37] Sekarreporter 1: நீட் தேர்வில் தவறான கேள்விக்கு பதிலளிப்பதை தவிர்த்த மாணவருக்கு கருணை மதிப்பெண்கள் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற நீட் தேர்வில் பங்கேற்ற திண்டிவனத்தைச் சேர்ந்த உதயகுமார் என்ற மாணவர், தவறான கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்காமல் தவிர்த்துள்ளார்.

பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு 93 மதிப்பெண்கள் கட் ஆப் மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்ட நிலையில், 92 மதிப்பெண்கள் பெற்ற அவர், விடையளிக்காமல் தவிர்த்த கேள்விக்கான கருணை மதிப்பெண் வழங்கக் கோரி மத்திய அரசுக்கும், தேர்வு முகமைக்கும் மனு அனுப்பினார்.

அவரது மனு பரிசீலிக்கப்படாததை அடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, கேள்வியை தவிர்க்காமல் ஏதாவது ஒரு விடையை அளித்திருந்தால் மட்டுமே கருணை மதிப்பெண்கள் வழங்கப்படும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்ததை அடுத்து, இதுசம்பந்தமான விதியை எதிர்த்து புதிதாக வழக்கு தொடர அனுமதி கோராமல், வழக்கு திரும்பப் பெறப்பட்டது.

புதிதாக வழக்கு தொடர அனுமதி பெறாமல், அதே கோரிக்கையுடன் மீண்டும் தொடரப்பட்ட வழக்கை தனி நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து மாணவர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி கிருஷ்ணகுமார் அமர்வு, பட்டியலின மற்றும் பழங்குடியினத்தவர்கள் போன்ற விழிம்புநிலை மக்களின் பொருளாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என அரசியல் சாசனம் தெரிவிக்கிறது எனச் சுட்டிக்காட்டி, பாதிக்கப்பட்ட மாணவருக்கு கருணை மதிப்பெண்களாக நான்கு மதிப்பெண்கள் வழங்க உத்தரவிட்டது.

மேலும், திருத்தி அமைக்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழை மாணவருக்கு வழங்க உத்தரவிட்ட நீதிபதிகள், மாணவருக்கு ஏற்பட்ட சூழலை கருத்தில் கொண்டு பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை முன்னுதாரணமாக கருதக் கூடாது எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
[10/21, 15:36] Sekarreporter 1: பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை தேனாம்பேட்டை காவல் நிலைய சரகத்துக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளிக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். அவரது மனைவி வீட்டு வேலை செய்து வருகிறார். மனைவி வேலைக்கு சென்ற பின், 12 வயது மகளை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.

இதேபோல கடந்த 2017ம் ஆண்டு மே 20ம் தேதி மகனை கடைக்கு அனுப்பி விட்டு, மகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதை அறிந்த சிறுமியின் தாய், தேனாம்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகார் மீது வழக்குப்பதிவு செய்த நிலையில், தந்தை தலைமறைவாகி விட்டார். கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

இதுசம்பந்தமான வழக்கை விசாரித்த போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தந்தை மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அவருக்கு ஆயுள் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாயும் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
[10/21, 15:49] Sekarreporter 1: தடை செய்யப்பட்ட ஐ எஸ் ஐ எஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்ததாகக் கைது செய்யப்பட்ட ஈரோட்டைச் சேர்ந்தவருக்கு ஜாமீன் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

தடை செய்யப்பட்ட ஐ எஸ் ஐ எஸ் அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாக ஈரோட்டைச் சேர்ந்த ஆசிப் முஸ்தகீன் என்பவரை போலீசார், கடந்த ஜூலை 26ம் தேதி கைது செய்தனர். அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மொபைல் போனில் இருந்து அவர், அரபி மொழியில் ஐ எஸ் ஐ எஸ் அமைப்பை சேர்ந்தவர்களுடன் நடத்திய உரையாடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இதையடுத்து அவருக்கு எதிராக சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஜாமீன் கோரி ஆசிப் முஸ்தகீன் தாக்கல் செய்த மனுவை, ஈரோடு முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த உத்தரவை எதிர்த்து முஸ்தகீன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், கடுமையான நிபந்தனைகள் விதித்தும் கூட ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் டீக்காராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, கைது குறித்த தகவலில் பறிமுதல் செய்யப்பட்ட மொபைல், பென் டிரைவ், டைரி குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை எனவும், மொபைலில் இடம் பெற்றிருந்த அரபி மொழியில் நடந்த உரையாடல்களின் கூகுள் மொழிபெயர்ப்பு தவறானது எனவும், தொடர்புடைய மற்றவர்களை சேர்க்காமல் மனுதாரர் மீது பொய் வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த வாதங்களை ஏற்க மறுத்த நீதிபதிகள், மனுதாரர் கைது செய்யப்பட்டு, ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்ட பிறகே பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால், அவை குறித்து கைது தகவலில் குறிப்பிடவில்லை என்ற வாதத்தை ஏற்க முடியாது எனவும், வழக்கின் புலன் விசாரணை ஆரம்பகட்டத்தில் உள்ளதால் தற்போதைய நிலையில் ஜாமீன் வழங்க முடியாது எனவும் கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
[10/21, 17:09] Sekarreporter 1: கள்ளக்குறிச்சி மற்றும் பெரம்பலூர் சுங்கச்சாவடிகளில் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்த வழக்கில் மத்திய அரசு மற்றும் திருச்சி சுங்கச்சாவடி நிறுவனம் ஆகியவை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி அருகே செங்குறிச்சி மற்றும் பெரம்பலூர் அருகே திருமாந்துறை ஆகிய சுங்கச்சாவடிகளில் திருச்சி டோல்கேட் நிறுவனத்திற்காக ஒப்பந்ததாரர்கள் மூலம் 230 பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டனர்.

அவர்களுக்கான ஊதிய பேச்சுவார்த்தை குறித்து கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி தொழிலாளர் சங்கங்கள் கலந்து கொண்ட ஊதிய பேச்சுவார்த்தைக்கு பிறகு, 60 பேரை பணி நீக்கம் செய்வது குறித்து செப்டம்பர் 5ஆம் தேதி முடிவெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தில் எவ்வித முடிவும் எடுக்கப்படாத நிலையில் 56 ஊழியர்களை பணி நீக்கம் செய்து கடந்த அக்டோபர் 1ஆம் தேதி சுங்கச்சாவடி நிறுவனம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு சுங்கச்சாவடி ஊழியர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கே.காரல் மார்க்ஸ் என்பவர் வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் தொழில் தகராறுகள் சட்டத்தை பின்பற்றி பணி நீக்க நடவடிக்கைகளை மேற்கொண்ட நடைமுறை சட்டவிரோதமானது என வாதிடப்பட்டது.

திருச்சி சுங்கச்சாவடி நிறுவனம் வழக்கறிஞர் இந்து கருணாகரன் ஆஜராகி சுங்கச்சாவடி நிறுவனம் என்பது ஒரு தொழில் நிறுவனம் இல்லை என்பதால் தொழில் தகராறுகள் சட்டத்தை பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை என்றும், பணி நீக்க உத்தரவை ரத்து செய்யக்கூடாது என்றும் வாதிடப்பட்டது.

இதையடுத்து வழக்கு குறித்து மத்திய அரசின் தொழிலாளர் நலத்துறை, மத்திய தொழிலாளர் நல உதவி ஆணையர், இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், திருச்சி டோல்கேட் நிறுவனம் ஆகியவை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அக்டோபர் 27ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.
[10/21, 17:25] Sekarreporter 1: அரசின் பெருந்தன்மையால் பணி நியமனம் பெற்ற 98 காவல் உதவி ஆய்வாளர்களுக்கு பணிமூப்பு வழங்க வேண்டுமென்ற தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 1995ஆம் ஆண்டு 1100 உதவி ஆய்வாளர்கள் காலிப் பணியிடங்களுக்கு நடந்த தேர்வில், பணி நியமனத்துக்கு தகுதி பெற்ற 1206 பேரில், 8 பேர் பட்டியலின மற்றும் பழங்குடியின பின்னடைவு காலிப் பணியிடங்களிலும், மற்ற பணியிடங்களில் 1092 பேரும் நியமனம் செய்யப்படடனர்.

பணி நியமனம் செய்யப்படாத 98 பேருக்கு தமிழக அரசு 1999ம் ஆண்டு பணி நியமனம் வழங்கப்பட்டது. இதுசம்பந்தமான அரசாணையில் 1997-98ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டவர்களுக்குக் கீழ் பணி மூப்பு பட்டியலில் சேர்க்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டது.

மேலும், 1994 – 95ல் தேர்வு செய்யப்பட்டவர்களுடன் தங்களுக்கு பணிமூப்பு கேட்க மாடோம் என உத்தரவாதமும் அளித்திருந்தனர்.

இந்நிலையில் 1994-95ல் படி பணி மூப்பு வழங்கக் கோரி 20 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் தனி நீதிபதியால் தள்ளுபடி செய்யப்பட்டன.

இதன்பின்னர் மேலும் சிலர் தொடர்ந்த வழக்குகளை விசாரித்த மற்றொரு தனி நீதிபதி, மனுதாரர்களுக்கு பணி மூப்பு வழங்க உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபி தரப்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய் மற்றும் பரத சக்கதவர்த்தி அமர்வு, இரண்டாவதாக தொடரப்பட்ட வழக்குகளை தனி நீதிபதி வழக்கை ஏற்றுக்கொண்டதன் மூலம் 1997-98ல் நியமிக்கப்பட்ட ஆயிரம் பேருக்கு முன் பணி மூப்பு அடைந்தவர்கள் ஆகிவிடுவார் என்பதால், அவர்களின் விளக்கத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பித்தது தவறு என குறிப்பிட்டுள்ளனர்.

ஏற்கனவே இதே கோரிக்கையுடன் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அந்த உத்தரவில் இருந்து மாறுபட்ட உத்தரவை பிறப்பிக்கும்போது, அதை மூன்று நீதிபதிகள் கொண்ட முழு அமர்விற்குத்தான் பரிந்துரைத்திருக்க வேண்டுமெனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

98 உதவி ஆய்வாளர்கள் நியமனம் என்பது அரசின் பெருந்தன்மை அடிப்படையிலானது என்றும், பணி மூப்பு கேட்க மாட்டோம் என உத்தரவாதம் அளித்துள்ளதையும் சுட்டிக்காட்டி, இவர்களுக்கு பணிமூப்பு வழங்க வேண்டுமென்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.
[10/21, 17:26] Sekarreporter 1: புதுச்சேரி ஆளுநருக்கு எதிராக தவறான கருத்துக்களோடு போஸ்டர் ஒட்டமாட்டோம் என்ற உறுதிமொழி அளித்தால் முன்ஜாமீன் வழங்குவதாக தந்தை பெரியார் திராவிடர் விடுதலை கழகத்தினருக்கு நிபந்தனை விதித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், அதுவரை கைது செய்யக்கூடாது என உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரியில் மின்சார துறையை தனியார்மயமாக்குவதாக கூறி, ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் அமைச்சர்களுக்கு எதிராக அம்மாநில தந்தை பெரியார் திராவிடர் விடுதலைக் கழகத்தினர் போஸ்டர்களை ஒட்டி இருந்தனர்.

இதுதொடர்பான புகாரில்
தபெதிக-வினர் மீது கிராண்ட் பஜார் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் முன்ஜாமின் கேட்டு தபெதிக மாநில தலைவர் லோகு ஐயப்பன் உள்ளிட்ட ஐந்து பேர்
சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

அந்த மனுக்கள் நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தபோது, போஸ்டரில் உள்ள கருத்துக்கள் அவதூறானது கிடையாது என்றும், மின் துறையை தனியாருக்கு தாரைவார்ப்பதை கண்டித்தே போஸ்டர் ஒட்டப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதி, அவதூறு கருத்துக்களோடு போஸ்டர் ஒட்ட மாட்டோம் என்று உறுதிமொழி பத்திரம் தாக்கல் செய்தால் நிபந்தனை முன்ஜாமீன் அளிப்பதாக தெரிவித்து, வழக்கு விசாரணையை அக்டோபர் 31ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

அதுவரை மனுதாரர்களை கைது செய்யக்கூடாது என்று புதுச்சேரி காவல்துறைக்கு இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளார்.madras high

You may also like...