Madras high court nov 24 th order

 

[11/24, 14:43] Sekarreporter 1: கடந்த அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனத்தில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தக்கோரிய வழக்கு

ஊழல் கண்காணிப்பு துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

2018 -2021ம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சியில் நடந்த முறைகேடுகளால் அரசுக்கு பல நூறு கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மனு

 

நிறுவனத்தின் மேலாளர், துணை மேலாளர், உதவி மேலாளர் பணி நியமனங்களிலும் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு

கொள்முதல் மற்றும் ஒப்பந்தங்களுக்கான ஈ டெண்டரிலும் முறைகேடு நடைபெற்றதால் கோடிக்கணக்கான ரூபாய் பண இழப்பு : மனு

முறைகேடுகள் குறித்து ஊழல் கண்காணிப்பு துறையிடம் அளிக்கப்பட்ட புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் குற்றச்சாட்டு

மனு குறித்து ஊழல் கண்காணிப்பு துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை டிசம்பர் 7ம் தேதிக்கு தேதிக்கு ஒத்திவைப்பு

 

 

கடந்த அதிமுக ஆட்சியின் போது தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனத்தில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடத்தக்கோரிய வழக்கில் ஊழல் கண்காணிப்பு துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனத்தின், அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கத்தின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் எஸ்.செல்வகுமார் தாக்கல் செய்துள்ள மனுவில், தமிழக தொழில் துறையின் கீழ் இயங்கி வரும் தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனம் மூலம் நான்கு லட்சம் மெட்ரிக் டன் சிமெண்ட் உற்பத்தி செய்யப்படுவதாகவும், அதேபோல் இரண்டாவது சிமெண்ட் ஆலையில் ஐந்து லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.

மக்களின் வரிப்பணத்தில் நடைபெற்றுவரும் இந்த நிறுவனத்தில், கடந்த 2018 முதல் 2021ம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சியில் நடந்த முறைகேடுகளால் அரசுக்கு பல நூறு கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

நிறுவனத்தின் மேலாளர், துணை மேலாளர், உதவி மேலாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியிட்ட போது, நிபந்தனைகளை மீறி பணியாளர்கள் நியமிக்கப்பட்டதாகவும் பதவி உயர்வு உள்ளிட்டவைகளிலும் விதி மீறல் நிகழ்ந்ததாகவும் கூறியுள்ளார்.

கொள்முதல் மற்றும் ஒப்பந்தங்களுக்கான ஈ டெண்டரிலும் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும் இதனால் தமிழ்நாடு சிமென்ட் நிறுவனத்திற்கு கோடிக்கணக்கான ரூபாய் பண இழப்பு ஏற்பட்டதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.

டென்டரில் குறிப்பிடப்பட்ட தொகையை மீறி அதிக தொகைக்கு டெண்டர் வழங்கப்பட்டுள்ளதாகவும் அம்மா சிமெண்ட் திட்டத்தின் கீழ் மற்ற சிமெண்ட் நிறுவனங்களிடமிருந்து சிமெண்ட்களை வாங்கி, சலுகை விலையில் சிமெண்ட் வழங்கும் திட்டத்தின் கீழ், பயன்படுத்தப்பட்ட மென்பொருளை நிர்வகிப்பதற்கான ஒப்பந்தம் தகுதி இல்லாதவர்களுக்கு வழங்கப்பட்டதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த முறைகேடுகள் குறித்து ஊழல் கண்காணிப்பு துறையிடம் அளிக்கப்பட்ட புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்த போது, மனு குறித்து ஊழல் கண்காணிப்பு துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிசம்பர் மாதம் 7ம் தேதிக்கு தேதிக்கு ஒத்திவைத்தார்.
[11/24, 16:52] Sekarreporter 1: குழந்தைகள் பாதுகாப்பு சட்டங்கள் தெளிவாக இருந்தும் சிறார் குற்றங்கள் தொடர்பான விவகாரத்தில் காவல்துறையினர் வரைமுறையின்றி கைது நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் 16 வயது மாணவிக்கு, சக மாணவன் மஞ்சள் கயிற்றை கட்டும் காட்சிகள், சமூக வலைதளத்தில் பரவியது. மாணவனுக்கு எதிராக சிதம்பரம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதேபோல, மாவட்ட குழந்தைகள் நலக்குழு, மாணவியை அரசு காப்பகத்தில் சேர்த்தது.

இதையடுத்து மாணவியை மீட்கக் கோரி மாணவியின் தந்தை தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மாணவியை பெற்றோரிடம் ஒப்படைக்கவும், மாணவனுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கு குறித்து அறிக்கை அளிக்கவும் காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் பி.என். பிரகாஷ், ஜி.சந்திரசேகர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது, சமூக வலைதளங்கள் மூலம் உருவாகும் அழுத்தம் காரணமாக என்ன செய்வதென்று தெரியாமல் ஆட்சியரும், எஸ்.பி.யும் இது போன்ற நடவடிக்கைகளை எடுப்பதாகவும், இருவரையும் கைது செய்ததன் மூலம் நீங்கள் என்ன சாதித்து விட்டீர்கள் என. கேள்வி எழுப்பினர்.

சட்டங்கள் மற்றும் உத்தரவுகள் எல்லாம் தெளிவாக உள்ளதாகவும் அதனை அமல்படுத்துவதில் தான் சிக்கல்கள் உள்ளதாகவும் நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் சந்துரு விளக்கம் அளித்தார்.

இதுபோன்ற கைது நடவடிக்கைகளுக்கு உயர் அதிகாரிகளும் பொறுப்பேற்க வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள், சிறார் சம்பந்தப்பட்ட வழக்குகளை கையாள்வது குறித்து காவல்துறை, மருத்துவத்துறை, குழந்தைகள் நல வாரியம், நீதிமன்றத்திற்கு உதவ நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் ஆகியோர் இணைந்து ஆலோசனை செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
[11/24, 17:03] Sekarreporter 1: நீலகிரியில் அடையாளம் காணப்பட்ட 191 இடங்களில் உள்ள அந்நிய மரங்களை முழுமையாக அப்புறப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சென்னை உயர்நீதிமன்ற வனத்துறைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழக வனப் பகுதிகளில் பரவிக்கிடக்கும் அந்நிய மரங்களை அப்புறப்படுத்துவது தொடர்பான வழக்குகள் நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரதசக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீலகிரி மாவட்டத்தில் 191 இடங்களில் அந்நிய மரங்கள் பரவி இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அதில் 53 இடங்களில் அந்த அந்நிய மரங்களை அப்புறப்படுத்துவதற்கு டெண்டர் கோரப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், 16 இடங்களில் இருந்த அந்நிய மரங்களை அகற்றி விற்பனை செய்ததன் மூலமாக நான்கு கோடியே 2 லட்சம் ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து மொத்தமுள்ள அனைத்து பகுதிகளிலும் இருக்கக்கூடிய அந்நிய மரங்களை அடையாளம் காணும் நடவடிக்கைகளை 15 நாட்களில் முடித்து நான்கு வாரங்களில் டெண்டர் கோரி அவற்றை அகற்ற வேண்டுமென உத்தரவிட்ட நீதிபதிகள் இந்த உத்தரவை அமல்படுத்தாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள நேரிடும் எனவும் வனத்துறைக்கு எச்சரிக்கை விடுத்து வழக்கின் விசாரணையை டிசம்பர் 22ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

இதேபோல மசினகுடி மற்றும் முதுமலை ஆகிய பகுதிகளில் உள்ள அந்நிய மரங்களை அகற்றுவது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள டெண்டரை இறுதி செய்து மரங்களை அகற்றும் பணியை தொடங்க வேண்டும் என்று தமிழ்நாடு காகித நிறுவனத்திற்கு உத்தரவிட்ட நீதிபதிகள் அது சம்பந்தமாக டிசம்பர் 22ஆம் தேதி அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.
[11/24, 17:15] Sekarreporter 1: ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைவாசஸ்தலங்களுக்கு பிளாஸ்டிக் எடுத்துச் செல்லப்படுகிறதா என ஆய்வு செய்ய சோதனைச் சாவடிகளில் அரசு பேருந்துகளை நிறுத்தாவிட்டால், சம்பந்தப்பட்ட போக்குவரத்து கழக ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலை வாசஸ்தலங்க்ளில் பிளாஸ்டிக் பயன்பாட்டை முழுமையாக தடுப்பது தொடர்பான வழக்குகள், நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.

அப்போது, நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்கள் காணொலி காட்சி மூலம் ஆஜராகியிருந்தனர்.

நீலகிரியில் 15 இடங்களில் பிளாஸ்டிக் சேகரிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், பிளாஸ்டிக் பயன்படுத்தியதற்காக நடப்பாண்டு இதுவரை 23 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும், பசுமை நிதியில் இருந்து பிளாஸ்டிக் சேகரிப்புக்கு நிரந்தர கட்டமைப்பை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் விளக்கமளித்தார்.

அப்போது பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்வதை தடுப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகளில் பொது போக்குவரத்து வாகனங்கள் நிறுத்துவதில்லை என மனுதாரர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.

இதையடித்து, அனைத்து அரசு பேருந்துகளும் சோதனைச் சாவடிகளில் நிறுத்தும்படி மாவட்ட போக்குவரத்து அதிகாரியான ஆட்சியர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், சோதனைச் சாவடிகளில் பேருந்துகளை நிறுத்தாவிட்டால் சம்பந்தப்பட்ட போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டனர்.

மேலும், பிளாஸ்டிக் பொருட்களை சேகரிக்க நிரந்தர கட்டமைப்பை ஓடந்துறையில் அமைக்கும் திட்டத்தை இறுதி செய்து அறிக்கை தாக்கல் செய்ய நீலகிரி மற்றும் கோவை மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை டிசம்பர் 22ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

இதேபோல வனக்குற்றங்கள் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழுவில் கேரளா மற்றும் கர்நாடகா மாநில அரசுகள் சார்பில் அதிகாரியை நியமிப்பது குறித்து விளக்கமளிக்க இருமாநில அரசுகளுக்கும் உத்தரவிட்ட நீதிபதிகள், இதுசம்பந்தமான வழக்கின் விசார்ணையை டிசம்பர் 22ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
[11/24, 17:25] Sekarreporter 1: கஞ்சிக்கோடு – வாளையாறு வழித்தடத்தில் இரவு நேரங்களில் ரயிலை 30 கிலோ மீட்டர் வேகத்திலேயே இயக்க வேண்டும்

தெற்கு இரயில்வேக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

யானைகள் பாதுகாப்பு தொடர்பான வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார், பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று மீண்டும் விசாரணை

இந்த விவகாரம் தொடர்பாக கடந்த முறை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளில் சோலார் விளக்கு அமைப்பதை தவிர மற்ற உத்தரவுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன : ரயில்வே

 

நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தவில்லை என்றால் கஞ்சிக்கோடு – வாளையாறு வழித்தடத்தில் இரவு நேர ரயில் சேவையை நிறுத்த உத்தரவிட நேரிடும் : நீதிபதிகள் எச்சரிக்கை

கடினமான மலைப்பாதையில் ரயிலை இயக்கும் தொழில்நுட்பம் உள்ள போது இந்த உத்தரவை உங்களால் செயல்படுத்த முடியாதா? என நீதிபதிகள் கேள்வி
[11/24, 17:32] Sekarreporter 1: கஞ்சிக்கோடு – வாளையாறு வழித்தடத்தில் இரவு நேரங்களில் ரயிலை 30 கிலோ மீட்டர் வேகத்திலேயே இயக்க வேண்டுமென தென்னக இரயில்வேக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யானைகள் பாதுகாப்பு தொடர்பான வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார், பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்த விவகாரம் தொடர்பாக கடந்த முறை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளில் சோலார் விளக்கு அமைப்பதை தவிர மற்ற உத்தரவுகள் அமல்படுத்தப்பட்டு விட்டதாக கூறினார். 18 கோடி ரூபாய் மதிப்பில் சோலார் விளக்கு திட்டத்தை செயல்படுத்துவதற்கான திட்ட அறிக்கை ரயில்வே வாரியத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறினார்.

நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தவில்லை என்றால் கஞ்சிக்கோடு – வாளையாறு வழித்தடத்தில் இரவு நேர ரயில் சேவையை நிறுத்த உத்தரவிட நேரிடும் என நீதிபதிகள் எச்சரித்தனர்.

கஞ்சிக்கோடு – வாளையாறு வழித்தடம் முக்கியமானது என்பதால் அது போன்ற உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டுமென ரயில்வே சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறினார்.

கடினமான மலைப்பாதையில் ரயிலை இயக்கும் தொழில்நுட்பம் உள்ள போது இந்த உத்தரவை உங்களால் செயல்படுத்த முடியாதா? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் குறிப்பிட்ட வழித்தடத்தில் ஏற்படும் விபத்துக்களால் வருடத்திற்கு ஐந்து, ஆறு யானைகள் உயிரிழப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

எனவே குறிப்பிட்ட வழித்தடத்தில் இரவில் ரயில்களை 30 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே இயக்க உத்தரவிட்டடு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.
[11/24, 19:56] Sekarreporter 1: தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனத்தில் போலி ரசீதுகள் தயாரித்து 4 கோடியே 33 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், அந்நிறுவனத்தின் கப்பல் மேலாண்மை பிரிவு மேலாளருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை பள்ளிக்கரணையில் செயல்பட்டு வரும் தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனத்தின் கப்பல் மேலாண்மை பிரிவில் மேலாளராக பணியாற்றியவர் ஜானகிராமன்.

இவர், கடந்த 2004ம் ஆண்டு நார்வே நாட்டு நிறுவனத்துடன் சேர்ந்து, கப்பல் மேலாண்மை தொடர்பான பணிகளை முடித்தது போல் போலி ரசீது தயாரித்து 4 கோடியே 33 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் மோசடி செய்ததாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி மெக்பூப் அலிகான், வழக்கில் ஜானகிராமன் மீதான ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, அவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

You may also like...