Madras high court news october 5th

[10/5, 06:40] Sekarreporter.: [10/4, 12:29] Sekarreporter.: நீலகிரியில் உலவும் ஆட்கொல்லி புலியை வேட்டையாட பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை நாளை விசாரிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நீலகிரி மாவட்டம், கூடலூர், தேவன் தனியார் எஸ்டேட் பகுதியை சேர்ந்த, சந்திரன், 51, என்பவரை, 24ம் தேதி தாக்கி கொன்ற புலியை, மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். ஆனால் புலியை பிடிக்க முடியவில்லை.

இதையடுத்து, புலியை சுட்டுக் கொல்வது  உள்பட அதை வேட்டையாடுவதற்கான  உத்தரவை முதன்மை தலைமை வன உயிரின பாதுகாவலர் சேகர்குமார்நீரஜ்  பிறப்பித்துள்ளார்.

இதை எதிர்த்து உத்தரபிரதேசம் நொய்டாவைச் சேர்ந்த சங்கீதா தோக்ரா என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், குறிப்பிட்ட அந்த புலி ஆட்கொல்லி என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை எனவும், புலியை வேட்டையாடுவது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்கும் முன் உரிய சட்டவிதிகளை பின்பற்றவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று இன்று தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி அமர்வு முன்பு முறையீடு செய்யப்பட்டது. அப்போது நீதிபதிகள் இந்த வழக்கை நாளை விசாரிப்பதாக தெரிவித்துள்ளனர்.
[10/4, 12:29] Sekarreporter.: தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் குடிநீர் வசதிகள் மற்றும் சுகாதாரமான கழிப்பறை வசதிகள் உள்ளனவா என்பது குறித்து அடிக்கடி ஆய்வு செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..

பெரம்பூரில் உள்ள எஸ் டூ ஸ்பெக்ட்ரம் மாலில் உள்ள திரையரங்கில்,  வாட்டர் பாட்டில்கள்  குளிர்பானங்கள், உணவு பொருட்கள் அதிக பட்ச விற்பனையை விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக சென்னை பெரம்பூரைச் சேர்ந்த தேவராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில்,நிர்ணயிக்கப்பட்ட விலையை விட  அதிக விலைக்கு விற்பனை செய்வது சட்டப்படி  தவறானது என்றும்   இதன் மூலம் பல லட்ச ரூபாய்  மக்களிடமிருந்து கொள்ளையடிக்கப்படுவதாகவும், இது தொடர்பாக முறையாக விசாரணை செய்து உரிய நபர்கள் மீது குற்றவியல் வழக்கு தொடர உத்தரவிட வேண்டும் என கோரியுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு விற்பது தொடர்பான புகார் குறித்து சோதனை செய்வதாகவும்,அதில் 2020 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் 2021 ஜூலை மாதம் வரை 12 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது .

இதையடுத்து,தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் குடிநீர் வசதிகள் மற்றும் சுகாதாரமான கழிப்பறை வசதிகள் உள்ளனவா என சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, உணவு பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுவது தொடர்பாக புகார் வந்தால் அதன் மீது உடனடியாக  நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
[10/4, 12:29] Sekarreporter.: கடந்த அதிமுக ஆட்சியின்போது தரமற்ற பேட்டரி வீல் சேர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் ஆறு வாரத்திற்குள் தமிழக அரசு அறிக்கை அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தண்டுவட காயமடைந்தோர் அமைப்பு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கில்,
தசைச் சிதைவு மற்றும் முதுகு தண்டுவட பாதிக்கப்பட்டவர்களுக்கு 2015 முதல் வழங்கப்பட்ட பேட்டரியால் இயக்கப்படும் வீல் சேர்கள் தரமற்றவை என்று தெரிவித்துள்ளனர் .பெங்களூரைச் சேர்ந்த குறிப்பிட்ட நிறுவனத்திற்கு மட்டுமே அந்த டெண்டர் வழங்கப்பட்டதாகவும் வாங்கப்பட்ட பேட்டரியில் இயக்கப்படும் வீல் சேர்கள் தரமானவையா என்று சோதனை செய்து பார்க்க எந்த அறிவியல்பூர்வமான நடைமுறை பின்பற்றப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தரமற்ற வீல் சேர்கள் பயன்படுத்தியதால் மாற்றுத்திறனாளிகள் மேலும் பாதிக்கப்பட்டதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது .மேலும் பழுதடைந்த வீல் சேர்களை, சர்வீஸ் செய்வதற்கு எந்த சேவை நிலையங்களும் உருவாக்கப்படவில்லை என மனுதாரர் அமைப்பு தெரிவித்துள்ளது. எனவே கடந்த ஆட்சியின் போது வழங்கப்பட்ட பேட்டரி வீல் சேர்களை, திரும்பப் பெற வேண்டும், இதனால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தனர். இனிமேல் வாங்கக்கூடிய வீல்சேர்களை ஆய்வு செய்ய ஐஐடி அல்லது மற்றும் அண்ணா பல்கலைக்கழக நிபுணர் குழுவை அமைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பு மனு விசாரணைக்கு வந்தது .வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதுகுறித்து தமிழக அரசு 6 வாரத்துக்குள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளனர்..
[10/4, 13:32] Sekarreporter.: நீலகிரியில் உலவும் ஆட்கொல்லி புலியை வேட்டையாட பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை நாளை விசாரிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது https://sekarreporter.com/%e0%ae%a8%e0%af%80%e0%ae%b2%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b2%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%af%8a/
[10/4, 17:17] Sekarreporter.: உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷை விமர்சித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரி தேசிய மக்கள் கட்சி தலைவர் எம்.எல் ரவி, சென்னை உயர்நீதிமன்ற பதிவுத்துறையிடம் புகார் அளித்துள்ளார்.

கடந்த அக்டோபர் 1 ம் தேதி
மறைந்த நடிகர்திலகம் சிவாஜிகணேசனின் 93 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, சென்னை அடையாறில் உள்ள சிவாஜி மணி மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டதால்
போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது.

இதனால் அந்த சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் சிக்கிய உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், நீதிமன்றத்திற்கு வர 25 நிமிடம் காலதாமதமானது.

பொது ஊழியரான தன்னை தடுத்து நிறுத்த யாருக்கும் உரிமை இல்லை என தெரிவித்த நீதிபதி,
தனது பணி பாதிக்கப்பட்டதால் அது குறித்து உள்துறை செயலாளர் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டிருந்தார்

அதன்படி காணொலி காட்சி மூலம் உள்துறை செயலாளர் பிரபாகர் ஆஜராகி வருத்தம் தெரிவித்ததோடு, எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வு நடைபெறாது என உத்தரவாதம் அளித்ததை ஏற்றுக்கொண்டு,
முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு வழங்கப்படும் அதே மரியாதையை நீதிபதிகளுக்கும் அளிக்க வேண்டும் என தெரிவித்தார்

இதை விமர்சித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி வெளியிட்ட அறிக்கையில், அசாதாரண சூழலில் ஏற்பட்ட எதிர்பாரா நிகழ்வை இயல்பாக எடுத்துகொள்ளாமல் பொங்கி எழுந்துள்ளதாகவும், உள்துறை செயலாளரை வசை பாடியது கண்டனத்துக்குரியது எனவும் தெரிவித்திருந்தார்.

முதலமைச்சருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்குவதை நீதிபதி புரிந்து கொண்டாரா என்றும், நீதிபதி தன்னுடைய வரம்பை மீறி பேசியது வேதனை அளிப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

கே.எஸ் அழகிரியின் அறிக்கை நீதிமன்ற அவமதிப்பு எனவும், நீதிபதி மீது அவதூறு பரப்பும் வகையில் வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு செயல்பட்டுள்ள அவர்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரி தேசிய மக்கள் கட்சி தலைவரும்,வழக்கறிஞருமான எம்.எல் ரவி உயர்நீதிமன்ற பதிவுத்துறைக்கு மின்னஞ்சல் மூலம் புகார் அனுப்பியிருந்தார்.

இந்த நிலையில், இன்று தலைமை நீதிபதி அமர்வில், எம்.எல். ரவி சார்பில் பதிவுத்துறைக்கு அனுப்பிய புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு முறையிட்டார்.

இதை கவனத்தில் எடுத்துக் கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
[10/5, 06:39] Sekarreporter.: [10/4, 06:28] Sekarreporter.: https://youtu.be/yHBzXJ67aNk
[10/4, 07:25] Sekarreporter.: https://youtube.com/shorts/-Z9cxdMOjNc?feature=share
[10/4, 07:55] Sekarreporter.: THE HONOURABLE MR.JUSTICE N.KIRUBAKARAN and THE HONOURABLE MR.JUSTICE KRISHNAN RAMASAMY CMA.No.1204 of 2018 https://sekarreporter.com/the-honourable-mr-justice-n-kirubakaran-and-the-honourable-mr-justice-krishnan-ramasamy-cma-no-1204-of-2018/
[10/4, 12:00] Sekarreporter.: https://youtu.be/v0LyoCuCMtY
[10/4, 12:00] Sekarreporter.: https://youtu.be/FKixFkBd4ZY
[10/4, 12:43] Sekarreporter.: திரையரங்குகளில் குடிநீர் வசதிகள் மற்றும் சுகாதாரமான கழிப்பறை வசதிகள் உள்ளனவா என்பது குறித்து அடிக்கடி ஆய்வு செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது https://sekarreporter.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a8%e0%af%80/
[10/4, 13:24] Sekarreporter.: கடந்த அதிமுக ஆட்சியின்போது தரமற்ற பேட்டரி வீல் சேர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் ஆறு வாரத்திற்குள் தமிழக அரசு அறிக்கை https://sekarreporter.com/%e0%ae%95%e0%ae%9f%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%ae%e0%af%81%e0%ae%95-%e0%ae%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b/
[10/4, 13:24] Sekarreporter.: உள்ளாட்சி தேர்தலுக்கான வார்டு ஒதுக்கீட்டை மறு ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும், தற்போதைக்கு தேர்தலை நடத்தப்போவதில்லை என்றும் புதுச்சேரி அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது https://sekarreporter.com/%e0%ae%89%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%b5/
[10/4, 13:31] Sekarreporter.: நீலகிரியில் உலவும் ஆட்கொல்லி புலியை வேட்டையாட பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை நாளை விசாரிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது https://sekarreporter.com/%e0%ae%a8%e0%af%80%e0%ae%b2%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b2%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%af%8a/
[10/4, 14:06] Sekarreporter.: suo motu contempt proceedings against TNCC president, advocate urges HC https://sekarreporter.com/suo-motu-contempt-proceedings-against-tncc-president-advocate-urges-hc/
[10/4, 17:47] Sekarreporter.: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக டிஜிபி மூன்றாம் பாலினத்தவர் மற்றும், ஓரினச் சேர்க்கையாளர்களை துன்புறுத்தும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் விதிகளில் திருத்தங்கள் கொண்டு வர வேண்டும் என நீதிபதி தெரிவித்தார். https://sekarreporter.com/%e0%ae%a8%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%86%e0%ae%a9%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%af%87%e0%ae%b7%e0%af%8d/
[10/4, 19:20] Sekarreporter.: [10/4, 19:16] Sekarreporter.: https://youtu.be/KBUVobMC5MQ
[10/4, 19:16] Sekarreporter.: Sc advocate manoj interview
[10/4, 20:09] Sekarreporter.: [10/4, 20:07] Sekarreporter.: வன்னியர் 10%ஒதுக்கீடு வழக்கில் அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் சார் அவர்கள் அற்புதமாக பேசியதாக வழக்கறிஞர் கூறினார்கள் யாராவது தெரிந்தால் என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் அல்லது வீடியோ ஒன்று பேசி அனுப்பலாம் . madurai gp tilak sir not pickup phone நன்றி வணக்கம் sekarreporter
[10/4, 20:07] Sekarreporter.: ..
[10/4, 20:21] Sekarreporter.: Full order of WP No.7284 of 2021 N.ANAND VENKATESH. J., The Ministry of Home Affairs, represented by its Secretary, Ministry of Home Affairs, Connaught Place, New Delhi – 110 001, is suomotu added as the 25th    respondent in this writ petition. Mr.V.Chandrasekaran, learned counsel takes notice for the impleaded respondent. https://sekarreporter.com/wp-no-7284-of-2021-n-anand-venkatesh-j-the-ministry-of-home-affairs-represented-by-its-secretary-ministry-of-home-affairs-connaught-place-new-delhi-110-001-is-suomotu-added-as-the/
[10/4, 22:15] Sekarreporter.: https://youtu.be/9y1Er_nONJc
[10/5, 06:41] Sekarreporter.: [10/4, 11:56] Sekarreporter.: தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் குடிநீர் வசதிகள் மற்றும் சுகாதாரமான கழிப்பறை வசதிகள் உள்ளனவா என்பது குறித்து அடிக்கடி ஆய்வு செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..

பெரம்பூரில் உள்ள எஸ் டூ ஸ்பெக்ட்ரம் மாலில் உள்ள திரையரங்கில்,  வாட்டர் பாட்டில்கள்  குளிர்பானங்கள், உணவு பொருட்கள் அதிக பட்ச விற்பனையை விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக சென்னை பெரம்பூரைச் சேர்ந்த தேவராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில்,நிர்ணயிக்கப்பட்ட விலையை விட  அதிக விலைக்கு விற்பனை செய்வது சட்டப்படி  தவறானது என்றும்   இதன் மூலம் பல லட்ச ரூபாய்  மக்களிடமிருந்து கொள்ளையடிக்கப்படுவதாகவும், இது தொடர்பாக முறையாக விசாரணை செய்து உரிய நபர்கள் மீது குற்றவியல் வழக்கு தொடர உத்தரவிட வேண்டும் என கோரியுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு விற்பது தொடர்பான புகார் குறித்து சோதனை செய்வதாகவும்,அதில் 2020 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் 2021 ஜூலை மாதம் வரை 12 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது .

இதையடுத்து,தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் குடிநீர் வசதிகள் மற்றும் சுகாதாரமான கழிப்பறை வசதிகள் உள்ளனவா என சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, உணவு பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுவது தொடர்பாக புகார் வந்தால் அதன் மீது உடனடியாக  நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
[10/4, 12:28] Sekarreporter.: நீலகிரியில் உலவும் ஆட்கொல்லி புலியை வேட்டையாட பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை நாளை விசாரிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நீலகிரி மாவட்டம், கூடலூர், தேவன் தனியார் எஸ்டேட் பகுதியை சேர்ந்த, சந்திரன், 51, என்பவரை, 24ம் தேதி தாக்கி கொன்ற புலியை, மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். ஆனால் புலியை பிடிக்க முடியவில்லை.

இதையடுத்து, புலியை சுட்டுக் கொல்வது  உள்பட அதை வேட்டையாடுவதற்கான  உத்தரவை முதன்மை தலைமை வன உயிரின பாதுகாவலர் சேகர்குமார்நீரஜ்  பிறப்பித்துள்ளார்.

இதை எதிர்த்து உத்தரபிரதேசம் நொய்டாவைச் சேர்ந்த சங்கீதா தோக்ரா என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், குறிப்பிட்ட அந்த புலி ஆட்கொல்லி என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை எனவும், புலியை வேட்டையாடுவது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்கும் முன் உரிய சட்டவிதிகளை பின்பற்றவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று இன்று தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி அமர்வு முன்பு முறையீடு செய்யப்பட்டது. அப்போது நீதிபதிகள் இந்த வழக்கை நாளை விசாரிப்பதாக தெரிவித்துள்ளனர்.
[10/4, 12:29] Sekarreporter.: கடந்த அதிமுக ஆட்சியின்போது தரமற்ற பேட்டரி வீல் சேர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் ஆறு வாரத்திற்குள் தமிழக அரசு அறிக்கை அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தண்டுவட காயமடைந்தோர் அமைப்பு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கில்,
தசைச் சிதைவு மற்றும் முதுகு தண்டுவட பாதிக்கப்பட்டவர்களுக்கு 2015 முதல் வழங்கப்பட்ட பேட்டரியால் இயக்கப்படும் வீல் சேர்கள் தரமற்றவை என்று தெரிவித்துள்ளனர் .பெங்களூரைச் சேர்ந்த குறிப்பிட்ட நிறுவனத்திற்கு மட்டுமே அந்த டெண்டர் வழங்கப்பட்டதாகவும் வாங்கப்பட்ட பேட்டரியில் இயக்கப்படும் வீல் சேர்கள் தரமானவையா என்று சோதனை செய்து பார்க்க எந்த அறிவியல்பூர்வமான நடைமுறை பின்பற்றப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தரமற்ற வீல் சேர்கள் பயன்படுத்தியதால் மாற்றுத்திறனாளிகள் மேலும் பாதிக்கப்பட்டதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது .மேலும் பழுதடைந்த வீல் சேர்களை, சர்வீஸ் செய்வதற்கு எந்த சேவை நிலையங்களும் உருவாக்கப்படவில்லை என மனுதாரர் அமைப்பு தெரிவித்துள்ளது. எனவே கடந்த ஆட்சியின் போது வழங்கப்பட்ட பேட்டரி வீல் சேர்களை, திரும்பப் பெற வேண்டும், இதனால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தனர். இனிமேல் வாங்கக்கூடிய வீல்சேர்களை ஆய்வு செய்ய ஐஐடி அல்லது மற்றும் அண்ணா பல்கலைக்கழக நிபுணர் குழுவை அமைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பு மனு விசாரணைக்கு வந்தது .வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதுகுறித்து தமிழக அரசு 6 வாரத்துக்குள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளனர்..
[10/4, 13:14] Sekarreporter.: உள்ளாட்சி தேர்தலுக்கான வார்டு ஒதுக்கீட்டை மறு ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும், தற்போதைக்கு தேர்தலை நடத்தப்போவதில்லை என்றும் புதுச்சேரி அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

புதுச்சேரியில் அறிவிக்கப்பட்டுள்ள உள்ளாட்சி தேர்தலில் பட்டியல் இனத்தவருக்கும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்க்கும் வார்டுகள் ஒதுக்கீட்டில் குளறுபடிகள் உள்ளதாக கூறி முத்தியால்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பிரகேஷ் குமார் உள்ளிட்ட பலர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, உள்ளாட்சி தேர்தலை அவசரமாக நடத்த வேண்டும் என்பதற்காக சட்டத்தை மீற முடியாது என கருத்து தெரிவித்து புதுச்சேரி அரசு விளக்கம் அளிக்க உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, புதுச்சேரி அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தப்பட்டதாகவும், வார்டு ஒதுக்கீடு தொடர்பாக மறு ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. புதுச்சேரியில் இப்போதைக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்போவது இல்லை என்பதால், அக்டோபர் 21 முதல் நடத்த உள்ள தேர்தலை தள்ளிவைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதால், இந்த வழக்கை வழக்கை அக்டோபர் 7 தள்ளிவைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் முதல்வர் முடிவெடுக்க உள்ளாதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது.

வார்டுகள் ஒதுக்கீட்டில் உள்ள குளறுபடிகளுக்கு தீர்வு காண வேண்டும் என அறிவுறுத்திய தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வு, அதுவரை வேட்பு மனுக்கள் பெறுவதை தள்ளிவைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். புதுச்சேரி அரசின் முடிவை தெரிவிக்க உத்தரவிட்டு, வழக்கை நாளை (அக்டோபர் 5) மாலை தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.
[10/4, 17:00] Sekarreporter.: ப்ளஸ் 2 படிப்பில் வேளாண் தொழில்படிப்பு படித்தவர்களுக்கு வழங்கப்படும் 5 சதவீத இடஒதுக்கீட்டை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக இணைப்பு கல்லூரிகளுக்கும் நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் 18 உறுப்பு கல்லூரிகளும், 28 இணைப்பு கல்லூரிகளும் இயங்கி வருகின்றன. இக்கல்லூரிகளில் 10 பாடப்பிரிவுகள் வழங்கப்படுகின்றன.

ப்ளஸ் 2வில் வேளாண் தொழில் படிப்பு படித்தவர்களுக்கு, வேளாண் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில், நான்கு பாடப்பிரிவுகளில் மட்டும் 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

அதனால், இணைப்பு கல்லூரிகளிலும் இட ஒதுக்கீடு வழங்க கோரியும், பொதுப்பிரிவிலும், சாதிவாரியான இட ஒதுக்கீட்டின் கீழும் விண்ணப்பிக்க அனுமதி மறுத்த பல்கலைக்கழக கொள்கை விளக்க குறிப்பேட்டை எதிர்த்து இனியன் என்ற மாணவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார். மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் பி.வி.எஸ்.கிரிதர் ஆஜராகி, வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் 3 ஆயிரத்து 905 இடங்கள் உள்ள நிலையில் 44 இடங்கள் மட்டுமே தொழில்கல்வி மாணவர்களுக்கு ஒதுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

தொழில்கல்வி படித்தவர்களுக்கு பொதுப்பிரிவிலும், சாதிரீதியிலான இட ஒதுக்கீட்டின் கீழும் விண்ணப்பிக்க அனுமதிப்பது இரட்டை இட ஒதுக்கீடு வழங்குவதைப் போலாகி விடும் என அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வேளாண்மை குறித்து தொழில்கல்வி படித்தவர்களுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிய உத்தரவில், இணைப்பு கல்லூரிகளுக்கு மட்டும் இது பொருந்தும் எனக் கூறப்படாததால் இந்த இட ஒதுக்கீடு பல்கலைக்கழக இணைப்பு பெற்ற கல்லூரிகளுக்கும் பொருந்தும் என உத்தரவிட்டார்.

மேலும், தொழில் கல்வி படித்தவர்களை சாதிவாரியான இடஒதுக்கீட்டின் கீழ்ய்ம், பொதுப்பிரிவின் கீழும் விண்ணப்பிக்க அனுமதிப்பது குறித்து அரசு முடிவு செய்து புதிய அறிவிப்பை வெளியிடலாம் என யோசனை தெரிவித்த நீதிபதி, வழக்கை முடித்து வைத்தார்.
[10/4, 17:16] Sekarreporter.: உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷை விமர்சித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரி தேசிய மக்கள் கட்சி தலைவர் எம்.எல் ரவி, சென்னை உயர்நீதிமன்ற பதிவுத்துறையிடம் புகார் அளித்துள்ளார்.

கடந்த அக்டோபர் 1 ம் தேதி
மறைந்த நடிகர்திலகம் சிவாஜிகணேசனின் 93 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, சென்னை அடையாறில் உள்ள சிவாஜி மணி மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டதால்
போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது.

இதனால் அந்த சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் சிக்கிய உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், நீதிமன்றத்திற்கு வர 25 நிமிடம் காலதாமதமானது.

பொது ஊழியரான தன்னை தடுத்து நிறுத்த யாருக்கும் உரிமை இல்லை என தெரிவித்த நீதிபதி,
தனது பணி பாதிக்கப்பட்டதால் அது குறித்து உள்துறை செயலாளர் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டிருந்தார்

அதன்படி காணொலி காட்சி மூலம் உள்துறை செயலாளர் பிரபாகர் ஆஜராகி வருத்தம் தெரிவித்ததோடு, எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வு நடைபெறாது என உத்தரவாதம் அளித்ததை ஏற்றுக்கொண்டு,
முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு வழங்கப்படும் அதே மரியாதையை நீதிபதிகளுக்கும் அளிக்க வேண்டும் என தெரிவித்தார்

இதை விமர்சித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி வெளியிட்ட அறிக்கையில், அசாதாரண சூழலில் ஏற்பட்ட எதிர்பாரா நிகழ்வை இயல்பாக எடுத்துகொள்ளாமல் பொங்கி எழுந்துள்ளதாகவும், உள்துறை செயலாளரை வசை பாடியது கண்டனத்துக்குரியது எனவும் தெரிவித்திருந்தார்.

முதலமைச்சருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்குவதை நீதிபதி புரிந்து கொண்டாரா என்றும், நீதிபதி தன்னுடைய வரம்பை மீறி பேசியது வேதனை அளிப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

கே.எஸ் அழகிரியின் அறிக்கை நீதிமன்ற அவமதிப்பு எனவும், நீதிபதி மீது அவதூறு பரப்பும் வகையில் வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு செயல்பட்டுள்ள அவர்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரி தேசிய மக்கள் கட்சி தலைவரும்,வழக்கறிஞருமான எம்.எல் ரவி உயர்நீதிமன்ற பதிவுத்துறைக்கு மின்னஞ்சல் மூலம் புகார் அனுப்பியிருந்தார்.

இந்த நிலையில், இன்று தலைமை நீதிபதி அமர்வில், எம்.எல். ரவி சார்பில் பதிவுத்துறைக்கு அனுப்பிய புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு முறையிட்டார்.

இதை கவனத்தில் எடுத்துக் கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
[10/4, 17:38] Sekarreporter.: மூன்றாம் பாலினத்தவர் மற்றும், ஓரினச்சேர்க்கையாளர்களை துன்புறுத்தும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளபட்டு வருவதாக உள்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கபட்டுள்ளது.

மதுரையை சேர்ந்த இரு பெண்கள், நட்புடன் பழகத் தொடங்கி, பின்னர் அது காதலாக மாறியதால், பிரிய மனமில்லாமல் சேர்ந்து வாழ விரும்பியுள்ளனர். இதற்கு இருவரின் பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்து, பிரிக்க முயற்சித்ததால், இருவரும் மதுரையில் இருந்து சென்னை வந்து, தொண்டு நிறுவன காப்பகத்தில் தங்கி வேலை தேடினர்.

இந்நிலையில், இருவரையும் காணவில்லை என பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் பதிவான வழக்கில் தங்களை துன்புறுத்தக் கூடாது என்றும், தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரியும் இரு பெண்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

ஓரினச் சேர்க்கையாளர்களின் உரிமைகளை அங்கீகரிப்பது தொடர்பாக பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்த நீதிமன்றம் அதை அமல்படுத்த எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக டிஜிபி மூன்றாம் பாலினத்தவர் மற்றும், ஓரினச் சேர்க்கையாளர்களை துன்புறுத்தும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் விதிகளில் திருத்தங்கள் கொண்டு வர வேண்டும் என நீதிபதி தெரிவித்தார்.

உள்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த சமுதாயத்தை சார்ந்தவர்களை துன்புறுத்தும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளபட்டு வருவதாக தெரிவித்தார்.

இதையடுத்து தேசிய மருத்துவ ஆணையம் அறிக்கை அளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை டிசம்பர் 6ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

You may also like...