Madras high court news

[8/4, 10:56] Sekarreporter:

HON’BLE JUSTICE V. PARTHIBAN PASSED AN ORDER ON 30.07.2021 APPOINTING RETIRED HIGH COURT JUDGE HON’BLE JUSTICE THIRU. K. N. BASHA, AS JUDGE COMMISSIONER TO CONDUCT ELECTION TO THE EXECUTIVE COMMITTEE OF THE RAJAH ANNAMALAIPURAM SRI AYYAPASWAMY TEMPLE TRUST IN A. NOS. 342 AND 344 OF 2021 IN C.S. NO. 37 OF 2021. Mr.R. Srinivas for S. Sithirai Anandam, appeared for the Applicant in the Suit https://sekarreporter.com/honble-justice-v-parthiban-passed-an-order-on-30-07-2021-appointing-retired-high-court-judge-honble-justice-thiru-k-n-basha-as-judge-commissioner-to-conduct-election-to-the-executive/

தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களுக்கு தானமாக வழங்கப்பட்ட பசுக்களின் எண்ணிக்கை எவ்வளவு, அவற்றின் வயது, பாலினம் உள்ளிட்ட விவரங்களை விரிவான அறிக்கையாக 4 வாரங்களில் தாக்கல் செய்ய இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்சி, ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் தாக்கல் செய்த மனுவில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு தானமாக வழங்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பசுக்கள், தனிநபர்களுக்கு அரசு வழங்கியுள்ளது எனவும், பால் கொடுப்பதை நிறுத்திய இந்த பசுக்கள் அடிமாடுகளாக 25 ஆயிரம் ரூபாய் வரைக்கும் விற்கப்பட்டுள்ளதாகவும், இதுசம்பந்தமாக அளித்த புகார்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.

தனிநபர்களுக்கு பசுக்களை வழங்க வகை செய்யும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோவில்களுக்கு தானமாக வழங்கப்பட்ட கால்நடைகளை பாதுகாக்க உரிய விதிகளை வகுக்க உத்தரவிட வேண்டும் எனவும், 2000ம் ஆண்டு முதல் 2021 வரை கோவில்களுக்கு தானமாக வழங்கப்பட்ட பசுக்கள், காளைகள், கன்றுகளின் எண்ணிக்கையை கணக்கெடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரியுள்ளார்.

கோவில்களில் கால்நடைகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என கண்காணிக்க குழு அமைக்கவேண்டும் எனவும், கோசாலைகளுக்கு தானமாக வழங்கப்பட்ட பசுக்களை தனிநபர்களுக்கு இலவசமாக வழங்க தடை விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

கோவில்களின் சொத்துக்கள் அரசின் சொத்துக்கள் அல்ல எனவும், கோவில் சொத்துக்களை மதம் சார்ந்த விவகாரங்களைத் தவிர பிற பயன்பாட்டுக்கு பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு, கோவில்களுக்கு தானமாக வழங்கப்பட்ட பசுக்களை முறையாக பராமரிக்க வேண்டும் எனவும், தானம் வழங்கப்பட்டதன் நோக்கத்தை உணர்ந்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தி, மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

மேலும், தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களுக்கு தானமாக வழங்கப்பட்ட பசுக்களின் எண்ணிக்கை எவ்வளவு, அவற்றின் வயது, பாலினம் உள்ளிட்ட விவரங்களை விரிவான அறிக்கையாக 4 வாரங்களில் தாக்கல் செய்ய இந்து சமய அறநிலையத் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஐந்து வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.
[8/4, 12:22] Sekarreporter: பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் 9 பேர் குற்றவாளிகள் சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2013 ஆண்டு செப்டம்பர் 9ம் தேதி சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா கூலிப்படையினரால் வெட்டப்பட்டார். தலை, கழுத்து, கை, என்று 20க்கும் மேற்பட்ட வெட்டு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக சுப்பையாவின் மைத்துனர் ஏ.ஏ.மோகன் அளித்த புகாரில் வழக்குப்பதிவு செய்த அபிராமபுரம் காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்த சுமார் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு நிலத்தை சுப்பையாவும், பொன்னுச்சாமியும் உரிமை கோரி வந்த நிலையில் அந்த நிலம் டாக்டர் சுப்பையாவுக்கு சாதகமாக கீழ் நீதிமன்றத்தில் தீர்பாகியுள்ளது. இந்த நிலப் பிரச்சினை தொடர்பாக இருந்து வந்த முன் பகை காரணமாக டாக்டர் சுப்பையா படுகொலை செய்யபட்டதும். இதற்கு அரசு பணியில் இருந்த ஆசிரியர்கள் பொன்னுசாமி, மேரி புஷ்பம், வழக்கறிஞர் பாசில், வில்லியம், டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார், என்ஜினீயர் போரிஸ், கூலிப்படையைச் சேர்ந்த கபடி வீரர் ஏசுராஜன், முருகன், செல்வபிரகாஷ், ஐய்யப்பன் ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

வழக்கு நடைபெற்ற காலத்தில் ஐயப்பன் அப்ருவர் ஆகிவிட்டார்.

கடந்த 6 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி கொரோனா காலத்திலும் நேரடி விசாரணையாக தினம்தோறும் நடைபெற்றது.

அரசு தரப்பில் 57 சாட்சிகள் விசாரிக்கபட்டனர். 173 ஆவணங்கள், 42 சான்று பொருட்கள் குறியீடு செய்யப்பட்டது. எதிரிகள் தரப்பில் 3 சாட்சிகள் விசாரிக்கபட்டனர். 7 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டது.

சாட்சி விசாரணை மற்றும் இறுதி வாதங்கள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பினை ஜூலை 28 ஆம் தேதி
சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி தீர்ப்பை தள்ளிவைத்தார்.

இந்த நிலையில் இந்த வழக்கு இன்று தீர்ப்பளித்த நீதிபதி அல்லி குற்றஞ்சாட்டப்பட்ட ஐய்யப்பன் தவிர மற்ற 9 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தார். இவர்களுக்கான தண்டனை விபரங்கள் குறித்து பிற்பகல் அறிவிக்கபடும் என நீதிபதி தெரிவித்தார்.

9 பேரும் குற்றவாளி என அறிவிக்கபட்டதை அடுத்து அவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

பின்னர் குற்றவாளி தரப்பில் தண்டனை குறித்தும் குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என வாதிட்டனர்.
[8/4, 12:22] Sekarreporter: திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பக்தவத்சல பெருமாள் கோவிலில் காணாமல் போனதாக கூறப்படும் செப்பு தகடுகள் புராதான பொருளாக அறிவிக்கப்பட்டு நாகை மாவட்டம் அறநிலையதுறை இணை ஆணையர் கட்டுப்பாட்டில் உள்ளதாக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்தது…. 

இதுதொடர்பாக, வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தாக்கல் செய்த மனுவில், திருவாரூர் மாவட்டம் திருக்கண்ண மங்கை என்னும் இடத்தில் உள்ள பக்தவச்சல பெருமாள் கோவில், 108 திவ்ய தேசங்களில் ஒன்று எனவும், இக்கோவிலுக்கு சொந்தமாக 400 ஏக்கர் நிலங்கள் இருந்த நிலையில், தற்போது  ஏழு ஏக்கர் மட்டுமே கோவிலின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கோவிலுக்கு சொந்தமான 400 ஏக்கர் நிலத்தை அளவீடு செய்து எல்லை வரையறை செய்து நீதிமன்றத்திற்கு அறிக்கை தாக்கல் செய்ய கோவில் தனி அலுவலர் உத்தர விட வேண்டும் என்றும்  ஆக்கிரமிப்பில் உள்ள அந்த நிலங்களை மீட்பதுடன், கோவிலில் இருந்து மாயமான செப்பு தகடுகளை கண்டுபிடித்து மீட்க உத்தரவிட வேண்டும் எனவும் அவர் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது காணாமல் போனதாக கூறப்படும்  செப்பு தகடுகள் எங்கு உள்ளது என்பது குறித்து இன்று தெரிவிப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது…

 இந்த வழக்கு  தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில், மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது,தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், காணாமல் போனதாக கூறப்படும் செப்பு தகடுகள்,புராதான பொருளாக அறிவிக்கப்பட்டு நாகை மாவட்டம் அறநிலையதுறை இணை ஆணையர் கட்டுப்பாட்டில் உள்ளதாக தெரிவித்தார்..

இதையடுத்து,கோவிலுக்கு சொந்தமான 400 ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்து 5 வாரத்தில் அறிக்கை  தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள்,  விசாரணையை ஏழு வாரத்திற்கு தள்ளிவைத்தனர்….
[8/4, 12:39] Sekarreporter: ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் மூடப்பட்டிருக்கும் திருநங்கைகளுக்கான சிறப்பு பிரிவை திறந்து சிகிச்சை அளிக்க உத்தரவிடக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

திருநங்கைகளுக்கு பிரத்யோகமாக சிகிச்சை அளிக்கும் வகையில் சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிறப்பு பிரிவு இயங்கி வந்தது. இப்பிரிவு நீண்ட காலமாக இயக்கவில்லை என்றும் மீண்டும் திறந்து திருநங்கைகளுக்கு சிகிச்சை வழங்க கோரியும் சிவகுமார் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானார்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது வழக்கு தொடர்பாக ராஜூவ்காந்தி அரசு பொது மருத்துவமனை முதல்வரிடம் விவரங்களை பெற்று 4 வாரங்களில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.
[8/4, 14:44] Sekarreporter: Dr. சுப்பைய்யா கொலை வழக்கில் இன்று (04.08.2021) தீர்ப்பு வழங்கிய முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி திருமதி. அல்லி அவர்கள், குற்ற சாட்டப்பட்ட அனைவரும் குற்றவாளிகள் என்று அறிவித்துள்ளார். அரசுதரப்பில் அனைத்து குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கபட்டுள்ளதாக தெரிவித்துள்ள நீதிபதி
தண்டனை விவரம் பற்றி இன்னும் சில மணி நேரங்களில் அறிவிப்பார்.
தற்போது அரசு சிறப்பு வழக்கறிஞர் விஜயராஜ், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்று வாதாடினார்.

தண்டணை விவரம்

A-1- பொன்னுசாமி, (ஆசிரியர்)
A-2 மேரி புஷ்பம், (ஆசிரியை)
A-3 பாசில், (வக்கீல்)
A-4 போரிஸ், (என்ஜினீயர்)
A-5 வில்லியம், (வக்கீல்)
A-6 ஏசுராஜன், (பட்டதாரி)
A-7 ஜேம்ஸ் சதீஷ்குமார், (அரசு மருத்துவர்)
A-8 முருகன், (சட்டக்கல்லூரி மாணவர்)
A-9 செல்வப்பிரகாஷ், (டிப்ளமோ படித்தவர்).

A1 பொன்னுசாமி,
A3 பாசில்,
A4 போரிஸ்,
A5 வில்லியம்,
A7 ஜேம்ஸ் சதீஷ்குமார்,
A8 முருகன்,
A9 செல்வப்ரகாஷ் ஆகியோருக்கு இரட்டை தூக்கு தண்டனை மற்றும் தலா ரூபாய்.50000 அபராதம்.

A2 மேரி புஸ்பம் மற்றும் A6 ஏசுராஜன் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் தலா Rs.50,000 அபராதம்.

(10 எதிரி ஐயப்பன் அப்ரூவர் ஆகிவிட்டதால் அவர் அரசு சாட்சி. ஆகவே அவருக்கு தண்டனை எதுவும் கிடையாது.)
[8/4, 15:39] Sekarreporter: மருத்துவர் மனைவி சாந்தி ((கண்ணீர் மல்க பேட்டி))

நானும் கணவரும் எப்போதுமே நீதித்துறை மீது நம்பிக்கை வைத்திருந்தோம். அது வீண்போகவில்லை.

தாமதமானாலும் நல்ல தீர்ப்பு வந்துள்ளது.

தீர்ப்பினால் கணவர் திரும்பி வரப்போவதில்லை. ஆனால் இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க முன்னுதாரணமாக இருக்கும்.

கணவர் சுப்பையா மரண வேதனை அனுபவித்த 9 நாட்களில் மணமாகாத எங்கள் மகள்களை நினைத்து கலங்கினார்

அவர் கலங்கியதற்கு ஆறுதலான தீர்ப்பு
[8/4, 15:39] Sekarreporter: மருத்துவர் மனைவி சாந்தி ((கண்ணீர் மல்க பேட்டி))

நானும் கணவரும் எப்போதுமே நீதித்துறை மீது நம்பிக்கை வைத்திருந்தோம். அது வீண்போகவில்லை.

தாமதமானாலும் நல்ல தீர்ப்பு வந்துள்ளது.

தீர்ப்பினால் கணவர் திரும்பி வரப்போவதில்லை. ஆனால் இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க முன்னுதாரணமாக இருக்கும்.

கணவர் சுப்பையா மரண வேதனை அனுபவித்த 9 நாட்களில் மணமாகாத எங்கள் மகள்களை நினைத்து கலங்கினார்

அவர் கலங்கியதற்கு ஆறுதலான தீர்ப்பு
[8/4, 16:53] Sekarreporter: பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் 7 பேருக்கு தூக்குதண்டனையும் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2013 ஆண்டு செப்டம்பர் 9ம் தேதி சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா கூலிப்படையினரால் வெட்டப்பட்டார். தலை, கழுத்து, கை, என்று 20க்கும் மேற்பட்ட வெட்டு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக சுப்பையாவின் மைத்துனர் ஏ.ஏ.மோகன் அளித்த புகாரில் அபிராமபுரம் காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்த சுமார் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு நிலத்தை சுப்பையாவும், பொன்னுச்சாமியும் உரிமை கோரி வந்த நிலையில் அந்த நிலம் டாக்டர் சுப்பையாவுக்கு சாதகமாக கீழ் நீதிமன்றத்தில் தீர்ப்பாகியுள்ளது.

இந்த நிலப் பிரச்சினை தொடர்பாக இருந்து வந்த முன்பகை காரணமாக டாக்டர் சுப்பையா படுகொலை செய்யப்பட்டதும். இதற்கு அரசு பணியில் இருந்த ஆசிரியர்கள் பொன்னுசாமி, அவரது மனைவி மேரி புஷ்பம், வழக்கறிஞரான மகன் பாசில், என்ஜினீயரான மகன் போரிஸ், வில்லியம், டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார், கூலிப்படையைச் சேர்ந்த கபடி வீரர் ஏசுராஜன், முருகன், செல்வபிரகாஷ், ஐய்யப்பன் ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

வழக்கு நடைபெற்ற காலத்தில் ஐயப்பன் அப்ருவர் ஆகிவிட்டார்.

கடந்த 6 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி கொரோனா காலத்திலும் நேரடி விசாரணையாக தினம்தோறும் நடைபெற்றது.

அரசு தரப்பில் 57 சாட்சிகள் விசாரிக்கபட்டனர். 173 ஆவணங்கள், 42 சான்று பொருட்கள் குறியீடு செய்யப்பட்டது. எதிரிகள் தரப்பில் 3 சாட்சிகள் விசாரிக்கபட்டனர். 7 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டது.

சாட்சி விசாரணை மற்றும் இறுதி வாதங்கள் அனைத்தும் ஜூலை 28 ம் தேதி முடிவடைந்த நிலையில் சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி தீர்ப்பை தள்ளிவைத்தார்.

இந்த நிலையில் இந்த வழக்கு இன்று தீர்ப்பளித்த நீதிபதி அல்லி குற்றஞ்சாட்டப்பட்ட ஐய்யப்பன் தவிர மற்ற 9 பேர் குற்றவாளிகள் என அழைக்கப்படும் அறிவித்தார்.

9 பேருக்கும் அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

குற்றவாளிகள் தரப்பில் குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என வாதிட்டனர்.

இதையடுத்து தண்டனையை அறிவித்த நீதிபதி அல்லி, குற்றவாளிகள்
பொன்னுசாமி, அவரின் மகன்களான வழக்கறிஞர் பாசில், மற்றும் போரிஸ், வில்லியம், டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார், என்ஜினீயர் , முருகன், செல்வபிரகாஷ் ஆகிய ஏழு பேருக்கு கொலை மற்றும் கூட்டுசதி பிரிவுகளில் இரட்டை தூக்கு தண்டனையும், தலா 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார். இதனை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும், மேரி புஷ்பம் மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த கபடி வீரர் ஏசுராஜன் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், தலா 50 ஆயிரம் ரூபாய் அபராதமும்்
விதிப்பதாகவும் இதனையும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும்
தீர்ப்பளித்தார். ஐயப்பன் என்பவர் அரசு சாட்சியானதால் அவருக்கு தண்டனை எதுவும் வழங்கப்படவில்லை.

பேட்டி :- 1.சாந்தி, டாக்டர் சுப்பையா மனைவி,
2. விஜயராஜ், அரசு தரப்பு வழக்குரைஞர்,
[8/4, 17:15] Sekarreporter: அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரைக்கு சொந்தமான பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துள்ள நிலங்களை,மீட்க கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு அறிக்கை அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையை அடுத்த கோனம்பேடு கிராம பொது நல சங்கத்தின் தலைவர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில், தங்கள் கிராம பகுதியில் தற்போது நில ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருவதாகவும் இதனால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்,
. மேலும் தங்களது கிராமத்தில் பாதாள சாக்கடை வசதியோ, ரேஷன் கடை கட்டிடமோ சமுதாய நலக்கூடம் என எந்த ஒரு அரசு கட்டிடங்களும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். குறிப்பாக முன்னாள் கல்வித்துறை அமைச்சரும் முன்னாள் நாடாளுமன்ற துணை சபாநாயகருமான தம்பிதுரையின் கலை அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகம், அருகில் உள்ள கிராம நிலங்கள் மற்றும் நீர்நிலைகளை ஆக்கிரமித்து மின்சார துணை நிலையம் ,மற்றும் தனியார் பாதை , மாணவ மாணவிகள் தங்கும் விடுதி கட்டி உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.அதேசமயம், அருகில் உள்ள அருகிலுள்ள ஆவடி நகராட்சி உயர்நிலைப்பள்ளி கடந்த 1949ஆம் ஆண்டு கட்டப்பட்டது என்று குறிப்பிட்டுள்ள மனுதாரர், ஆனால் அந்த பள்ளியில் எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக விளையாட்டு மைதானம், நூலகம், ஆய்வக வசதிகள் கிடையாது என்றும் அந்த மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை மீட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் அந்த நிலங்களை பள்ளியின் வசதிக்காக வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் நீதிபதி தமிழ்ச்செல்வி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது .வழக்கை விசாரித்த நீதிபதிகள் இதுகுறித்து மாவட்ட கல்வி அதிகாரி,மற்றும் மாவட்ட வருவாய் அதிகாரி ஆகியோர் விசாரித்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளனர்.
[8/4, 17:16] Sekarreporter: சத்துணவு மாணவர்களுக்கு உணவு வழங்குவதற்காக அங்கன்வாடி மையங்களை மீண்டும் திறக்க முடிவு செய்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் சத்துணவு மாணவர்களுக்கு சமைக்கப்பட்ட உணவை வழங்க உத்தரவிடக் கோரி சிட்டிசன் கன்ஸ்யூமர் அண்ட் சிவிக் ஆக்‌ஷன் குரூப் என்ற அமைப்பின் சார்பில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அங்கன்வாடி மையங்களை மீண்டும் திறப்பது குறித்து ஆலோசிக்க அறிவுறுத்தியிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், அரசு தலைமை வழக்கறிஞர்,தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் நடத்திய கூட்டத்தில், இரண்டு வயது முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு சத்துணவு மையங்களில் சமைக்கப்பட்டு மதிய உணவு அவர்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று வழங்குவது என முடிவெடுத்துள்ளதாகவும், இது 15 நாட்களுக்குள் செயல்படுத்தப்பட உள்ளதாக அரசு கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிவித்தார்.

மற்ற மாணவர்களை பொறுத்தவரை, செப்டம்பர் 1ம் தேதி முதல் அந்தந்த  பகுதியில் இருக்கக்கூடிய அங்கன்வாடி மையங்களின் மூலம் உணவு வழங்க திட்டமிடப்பட்டுள்ளாதாகவும் தெரிவித்தார்.

தமிழக அரசும், இதுதொடர்பான கடிதத்தை தாக்கல் செய்தது.

இதையடுத்து சத்துணவுத் திட்டத்தின் மூலம் மீண்டும் உணவு வழங்குவதை விரைவாக செயல்படுத்த நடவடிக்கை  எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், மீண்டும் எப்படி அங்கன்வாடி மையங்கள் திறக்கப்பட்டது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை செப்டம்பர் 3ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

You may also like...