Madras high court feb 16 evening. Orders

[2/16, 18:15] Sekarreporter 1: சீமை கருவேலம் மரங்களை அழிப்பதற்காக உருவாக்கப்பட்ட திட்டத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் பொதுத்தளத்தில் வெளியிடப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டுமென கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி நீதிபதி சதீஷ்குமார், பரத சக்கரவர்த்தி ஆகியோருடன் அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
ஏற்கனவே
தமிழகம் முழுவதும் கருவேல மரங்களை அகற்றுவது குறித்த திட்டத்தை இரண்டு வாரங்களில் வகுத்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்த நிலையில்,
சீமை கருவேலம் மரங்களை அழிப்பதற்காக உருவாக்கப்பட்ட திட்டத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் பொதுத்தளத்தில் வெளியிடப்படும் என்று தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் சிலம்பண்ணன் தெரிவித்தார். ஏற்கனவே ஆயிரக்கணக்கான மரங்கள் அழிக்கப்பட்டு விட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள்,சீமை கருவேலம் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படுகிறது என்பதால், தொழில்துறையினர் ஆதிக்கம் சக்திவாய்ந்ததாக இருக்கலாம் ஆனால் அதன் அழுத்தத்திற்கு நாம் அடிபணியக்கூடாது என்று குறிப்பிட்டனர்.
தான் வெளியில் இருந்து வரவில்லை தமிழகத்தைச் சேர்ந்தவன்தான் என்றும், இங்கு நடப்பவை அனைத்தும் எனக்குத் தெரியும் என தலைமை நீதிபதி குறிப்பிட்டார்.
அதிகாரிகள், தமிழக மக்களுக்கு தயவுசெய்து சேவை செய்ய வேண்டும் ,சீமை கருவேலத்தால் ஏற்படும் தீய விளைவுகள் குறித்து சுதந்திரமாக ஆய்வு செய்ய வேண்டும், மற்ற மாநிலங்களில் எப்படி கையாளப்படுகிறது என்பதை ஆய்வு செய்யுங்கள் என்றும் கேட்டுக்கொண்டனர்.. தொடர்ந்து வழக்கு விசாரணையை மார்ச் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்
[2/16, 18:15] Sekarreporter 1: தமிழகம் முழுவதும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் அறங்காவலர் காலியிடங்கள் மற்றும் அவற்றை நிரப்புவதற்கான நடைமுறைகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

கோவிலை நிர்வகிக்கும் நபர்களாக அறநிலையத்துறை அதிகாரிகளே நியமிக்கப்பட்டுள்ளனர். 97 சதவீத கோவில்கள் அறங்காவலர்கள் இல்லாமல் செயல்படுகின்றன : மனுதாரர்

அறங்காவலர்கள் பதவிகாலம் முடிந்த 6 மாவட்டங்களில் மீண்டும் குழு அமைக்கப்பட்டுள்ளது : அரசு

பல ஆண்டுகளாக முறையாக நிரப்பப்படாத அறங்காவலர் இடங்களை நிரப்ப தற்போதைய அரசு முன்வந்துள்ளதாகவும், அதற்கு சில காலம் காத்திருக்க வேண்டுமெனவும் மனுதாரருக்கு நீதிபதிகள் அறிவுறுத்தல்

கோவில் அறங்காவலர்கள் நியமனத்தை கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில், அறநிலையத்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவை அமைக்கக் கோரி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் தொடர்ந்த வழக்கு நான்கு வாரங்கள் தள்ளிவைப்பு
[2/16, 18:15] Sekarreporter 1: தமிழகம் முழுவதுமுள்ள நுகர்வோர் நீதிமன்றங்களின் காலியிடங்களை
நிரப்பும் வகையில் நேர்முகத்தேர்வை விரைந்து முடித்து பணியாணை வழங்க வேண்டும்

தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

25 மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையங்களில் காலியாக உள்ள தலைவர் மற்றும் உறுப்பினர் பணியிடங்களை நிரப்ப கோரி சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் சுனில் சேட் என்பவர் தொடர்ந்த வழக்கு

பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு முடிவடைந்து,தற்போது நேர்முகத் தேர்வு நடைபெற்று வருகிறது
அதன்பின் பணி ஆணை வழங்கப்படும் – தமிழக அரசு

அரசு தரப்பு விளக்கத்தை பதிவு செய்து கொண்டு வழக்கு முடித்து வைப்பு
[2/16, 18:15] Sekarreporter 1: பீப் பாடல் விவகாரம் தொடர்பாக நடிகர் சிம்புவுக்கு எதிராக கோவை காவல்துறையினர் பதிவு செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

கோவை மாஸிஸ்திரேட்டின் விசாரணை அறிக்கையில் நடிகர் சிம்புவுக்கு எதிரான புகாருக்கு ஆதாரம் இல்லை என்பதால் வழக்கு ரத்து – நீதிபதி.

கடந்த 2015ம் ஆண்டில் நடிகர் சிம்பு பெண்களை பற்றி ஆபாசமாக பாடியதாக கூறி இணையத்தில் பீப் சாங் வெளியானதற்கு எதிராக சிம்பு, அனிருத்துக்கு மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

புகாரின் அடிப்படையில் கோவை ரேஸ் கோர்ஸ் மற்றும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிவுசெய்து விசாரணை நடத்தினர்.

தனக்கு எதிரான இரு வழக்குகளையும் ரத்து செய்யக்கோரி நடிகர் சிம்பு மனு தாக்கல்.

சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்த வழக்கு தொடர்பாக காவல் துறை ஒரு வாரத்திற்குள் பதிலளிக்க உத்தரவு.
[2/16, 18:15] Sekarreporter 1: கோவில்களுக்கு வாரிசுகளை அர்ச்சகர்களாக நியமிப்பதை உச்ச நீதிமன்றம் ஏற்கவில்லை – சென்னை உயர் நீதிமன்றம்

அர்ச்சகர்கள் நியமனத்தை எதிர்த்த வழக்குகளில் விசாரணை தொடக்கம்

ஒவ்வொரு கோவிலுக்கும் ஒவ்வொரு ஆகமம் உள்ளது. அர்ச்சகர்களை நியமிக்க அறங்காவலர்களுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. ஆகம விதிப்படி குருகுல பயிற்சி பெற்றவர்களையே அர்ச்சகர்கள் நியமிக்கப்பட வேண்டும் – மனுதாரர் தரப்பு

தமிழகத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற தமிழக அரசின் விதிகளை எதிர்த்தும், அர்ச்சகர் பள்ளிகள் நடத்துவதை எதிர்த்தும், அர்ச்சகர் தேர்வுக்காக வெளியிடப்பட்ட விளம்பரங்களை எதிர்த்தும் தொடரப்பட்ட வழக்குகள் தள்ளிவைப்பு

You may also like...

Call Now ButtonCALL ME