Madras high court december 3rd day orders tamil court news news round up

[12/3, 11:16] Sekarreporter 1: அதிமுக தேர்தலுக்கு தடைவிதிக்கக் கோரி கே.சி.பழனிசாமி வழக்கு

நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும், தேர்தலுக்கு தடைவிதிக்க வேண்டும், ஓய்வுபெற்ற நீதிபதி மூலம் தேர்தல் நடத்த வேண்டும் என கோரிக்கை..

டிசம்பர் 1ல் நடந்த பொதுக் குழுவில் கட்சி விதிகளில் புதிய திருத்தம் கொண்டு வரப்பட்டு, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப்படுவார்கள் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இது ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற கட்சியின் நிறுவனர் மற்றும் உறுப்பினர்களின் நோக்கத்திற்கு விரோதமாக அறிவிக்கபட்டுள்ளது.

இந்த பதவிகளுக்கான தேர்தல் 7ஆம் தேதி நடத்தப்படும் என 2ஆம் தேதி அறிவிக்கப்பட்டு, பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோரை தேர்தல் அதிகாரிகளாக நியமிக்கின்றனர்.

தேர்தலுக்கு முன்பாக 21 நாட்களுக்கு முன் நோட்டீஸ் கொடுக்க வேண்டுமென்ற விதிகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது..

சங்கங்கள் பதிவுச் சட்டம், அதிமுக கட்சி விதிகள் ஆகியவற்றின் கீழ் தேர்தல் நடத்தும் விதிகளை பின்பற்றாமல் பொது செயலாளர் அதிகாரத்தை அபகரிக்கும் நோக்கில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் செயல்படுகிறார்கள்

உறுப்பினர்கள் முறைபடுத்தப்படவில்லை, உறுப்பினர் அட்டை வழங்குவதில் முறைகேடு நடந்துள்ளது.

வாக்களிக்க தகுதியான உறுப்பினர்களின் பட்டியல் இதுவரை முறையாக தயாரிக்கப்படவில்லை.

தேர்தல் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி நியமித்து, 21 நாட்கள் நோட்டீஸ் வெளியிட்டு தேர்தல் நடத்த வேண்டும்

2018 பிப்ரவரியில் தன்னை நீக்கிய பிறகு, ஏப்ரலில் தான் ஓ.பி.எஸ், இ.பி.எஸ். ஆகியோரை கட்சி நிர்வாகிகளாக தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது.

எனவே தன்னை நீக்கியது செல்லாது என்ற அடிப்படையில் வழக்கு

நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும், தேர்தலுக்கு தடைவிதிக்க வேண்டும், ஓய்வுபெற்ற நீதிபதி மூலம் தேர்தல் நடத்த வேண்டும்

இன்று நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு முறையீடு

மதியம் விசாரணை
[12/3, 11:44] Sekarreporter 1: அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கான தேர்தலுக்கு தடைவிதிக்கக் கோரி கே.சி.பழனிசாமி வழக்கு

நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும், தேர்தலுக்கு தடைவிதிக்க வேண்டும், ஓய்வுபெற்ற நீதிபதி மூலம் தேர்தல் நடத்த வேண்டும் என கோரிக்கை..

டிசம்பர் 1ல் நடந்த செயற்க் குழுவில் கட்சி விதிகளில் புதிய திருத்தம் கொண்டு வரப்பட்டு, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப்படுவார்கள் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இது ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற கட்சியின் நிறுவனர் மற்றும் உறுப்பினர்களின் நோக்கத்திற்கு விரோதமாக அறிவிக்கபட்டுள்ளது.

இந்த பதவிகளுக்கான தேர்தல் 7ஆம் தேதி நடத்தப்படும் என 2ஆம் தேதி அறிவிக்கப்பட்டு, பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோரை தேர்தல் அதிகாரிகளாக நியமிக்கின்றனர்.

தேர்தலுக்கு முன்பாக 21 நாட்களுக்கு முன் நோட்டீஸ் கொடுக்க வேண்டுமென்ற விதிகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது..

சங்கங்கள் பதிவுச் சட்டம், அதிமுக கட்சி விதிகள் ஆகியவற்றின் கீழ் தேர்தல் நடத்தும் விதிகளை பின்பற்றாமல் பொது செயலாளர் அதிகாரத்தை அபகரிக்கும் நோக்கில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் செயல்படுகிறார்கள்

உறுப்பினர்கள் முறைபடுத்தப்படவில்லை, உறுப்பினர் அட்டை வழங்குவதில் முறைகேடு நடந்துள்ளது.

வாக்களிக்க தகுதியான உறுப்பினர்களின் பட்டியல் இதுவரை முறையாக தயாரிக்கப்படவில்லை.

தேர்தல் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி நியமித்து, 21 நாட்கள் நோட்டீஸ் வெளியிட்டு தேர்தல் நடத்த வேண்டும்

2018 பிப்ரவரியில் தன்னை நீக்கிய பிறகு, ஏப்ரலில் தான் ஓ.பி.எஸ், இ.பி.எஸ். ஆகியோரை கட்சி நிர்வாகிகளாக தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது.

எனவே தன்னை நீக்கியது செல்லாது என்ற அடிப்படையில் வழக்கு

நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும், தேர்தலுக்கு தடைவிதிக்க வேண்டும், ஓய்வுபெற்ற நீதிபதி மூலம் தேர்தல் நடத்த வேண்டும்

இன்று நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு முறையீடு

மதியம் விசாரணை
[12/3, 12:00] Sekarreporter 1: பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான இரண்டாவது கட்ட கலந்தாய்வு நடத்தும் அரசு முடிவுக்கு தடை கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

2021-22ம் கல்வியாண்டுக்கு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு கடந்த அக்டோபர் மாதம் நான்கு சுற்றுகளாக நடத்தப்பட்டது. இதில் மொத்தமுள்ள 1 லட்சத்து 51 ஆயிரத்து 870 இடங்களில், 70 ஆயிரத்து 437 இடங்கள் காலியாக உள்ளன.

காலியாக உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களை நிரப்பும் வகையில், இரண்டாவது கட்ட கலந்தாய்வு நடத்த முடிவு செய்துள்ளதாக கூறி நவம்பர் 25ம் தேதி உயர் கல்வித் துறை செயலாளர் அரசாணை பிறப்பித்தார்.

இரண்டாவது கலந்தாய்வு நடத்தினால் ஏற்கனவே தங்கள் கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்கள் வெளியேறக் கூடும் என்பதால் தனியார் கல்லூரிகள் பாதிக்க கூடும் எனக் கூறி,
இந்த அரசாணைக்கு தடை விதிக்க கோரியும், அதை ரத்து செய்யக் கோரியும் தமிழ்நாடு தனியார் சுயநிதி தொழில் கல்வி, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் கூட்டமைப்பின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த மனுவில், பொறியியல் கல்லூரிகளில் நடப்பு கல்வியாண்டில் நவம்பர் 30ம் தேதி வகுப்புகளை துவங்க வேண்டும் என அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமம் உத்தரவிட்டுள்ள நிலையில், தமிழக அரசு பிறப்பித்த அரசாணை தன்னிச்சையானது எனவும், கடந்த 17 ஆண்டுகளாக இரண்டாவது கலந்தாய்வு நடத்தப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு, நீதிபதி தண்டபாணி முன் விசாரணைக்கு வந்த போது, தொழில்நுட்ப கல்வி இயக்குனர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில்மனுவில், முக்கிய கல்வி நிறுவனங்களில் ஏராளமான இடங்கள் காலியாக உள்ளதால், மாணவர்கள் நலனைக் கருதி இரண்டாவது கலந்தாய்வு நடத்த முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

தகுதியான மாணவர்களுக்கு இடம் வழங்கும் வகையில் டிசம்பர் இறுதி வரை மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி கோரி ஏ ஐ சி டி இ -க்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதால், இரண்டாவதுப்கட்ட கலந்தாய்வு நடத்த அனுமதிக்க வேண்டும் என அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் கோரிக்கை விடுத்தார்.

அரசுத்தரப்பு வாதத்தை ஏற்ற நீதிபதி, தனியார் கல்லூரிகள் கூட்டமைப்பு தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
[12/3, 12:07] Sekarreporter 1: திமுக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தலையீட்டால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட மரக்காணம் ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் துணை தலைவர் பணி செய்ய தடை விதிக்கமுடியாது என மறுத்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், தேர்தல் வழக்கு தொடருமாறு உத்தரவிட்டுள்ளது .

மரக்காணம் ஒன்றிய குழு தலைவர்,துணை தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் கடந்த 22 ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அர்ஜூனன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்

அவர் தன் மனுவில், மரக்காணம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பதவிக்கு தானும், திமுக விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளரும், தற்போதைய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சருமான செஞ்சி மஸ்தானின் ஆதரவு பெற்ற தயாளன் என்பவரும் போட்டியிட்ட நிலையில், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்கள் அளித்த வாக்குகளின் படி தான் 14 ஓட்டுகளும்,தயாளன் 12 ஓட்டுகளும் பெற்றிருந்ததாக குறிப்பிட்டுள்ளார்

14 வாக்குகள் பெற்ற தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டிய நிலையில், தேர்தல் அலுவலருக்கும் வட்டார வளர்ச்சி அலுவலருக்கும்
அமைச்சர் செஞ்சி மஸ்தான் தலையீட்டின் காரணமாக 12 வாக்குகள் மட்டுமே பெற்றிருந்த தயாளன் வெற்றி பெற்றார் என அறிவிக்கப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்…
மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்ற தனது கோரிக்கை நிராகரிக்கப் பட்டதாகவும் எனவே
வெற்றிபெற்றதாக சட்டவிரோதமாக அறிவிக்கப்பட்ட மரக்காணம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மற்றும் துணை தலைவர் ஆகியோரை பதவி ஏற்கவும் பணி செய்யவும் இடைக்கால தடை விதிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டிருந்தார் ..இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த வழக்கை தேர்தல் வழக்காகத்தான் தொடர முடியும் என்றும் தற்போதைய மனுவில், எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று மறுத்தனர். இதையடுத்து மனுதாரர் தரப்பில் மனு திரும்பப் பெறப்பட்டதால் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
[12/3, 12:19] Sekarreporter 1: தமக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் மனுவை நிராகரிக்கக் கோரி அமைச்சர் துரைமுருகன் தாக்கல் செய்த மனு குறித்து பதிலளிக்குமாறு அதிமுக வேட்பாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஒரு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான ஓட்டுக்கள், எண்ணப்படவில்லை என்பது உட்பட பல்வேறு காரணங்களை சுட்டிகாட்டி காட்பாடி தொகுதிக சட்டமன்ற உறுப்பினராக துரைமுருகன் தேர்ந்தெடுக்கப்பட்டதை செல்லாது என அறிவிக்கக்கோரி அதிமுக வேட்பாளர் வி ராமு தேர்தல் மனு தாக்கல் செய்துள்ளார்.. இந்த வழக்கு நீதிபதி பாரதிதாசன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது துறைமுருகன் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி. வில்சன் ஆஜராகி,
குற்றச்சாட்டுகள் தெளிவற்றவை என்றும், அதில் எந்தவிதமான உண்மைகளும் இல்லை என்றும் சமர்பித்தார். அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் எந்த வித ஆதாரங்கள் இல்லாதவை மற்றும் பொதுவானவை என்று அவர் கூறினார். போலி வாக்குகளை நீக்கத் தவறிய வாக்குப்பதிவு இயந்திரத்தில், பதிவான வாக்குகளை விட வேட்பாளர் பெற்ற வாக்கு வித்தியாசம் அதிகமாக இருந்தால், பழுதடைந்த இயந்திரத்தை எண்ண வேண்டியதில்லை என்று தெரிவித்தார்…
இந்த வாதங்களைக்
கேட்ட நீதிபதி பாரதிதாசன், வழக்கு வரும் 21ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது, நோட்டீஸ் திரும்பப் பெற உத்தரவிட்டார்.
[12/3, 12:33] Sekarreporter 1: கவிஞர் லீனா மணிமேகலையின் பாஸ்போர்டை முடக்கி மண்டல பாஸ்போர்ட் அதிகாரி பிறபித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

தன் மீது பாலியல் புகார் தெரிவித்த கவிஞர் லீனா மணிமேகலைக்கு எதிராக இயக்குனர் சுசி கணேசன் தொடர்ந்த அவதூறு வழக்கு சைதாபேட்டை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவிட்டதன் அடிப்படையில், லீனா மணிமேகலையின் பாஸ்போர்ட்டை முடக்கி சென்னையில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அதிகாரி கடந்த செப்டம்பர் மாதம் உத்தரவிட்டிருந்தார்.

லீனா மணிமேகலை தொடர்ந்த வழக்கில் பாஸ்போர்ட்டை விடுவிக்க சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. எனினும், அவதூறு வழக்கு விசாரணையை காரணம் காட்டி லீனா மணிமேகலைக்கு பாஸ்போர்ட் வழங்க கூடாது என மண்டல பாஸ்போர்ட் அலுவலரிடம் சுசி கணேசன்
புகார் அளித்திருந்ததால், பாஸ்போர்ட் கிடைப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்தது

இந்நிலையில், ஆராய்ச்சி பணிக்காக கனடாவில் உள்ள யார்க் பல்கலைக்கழகம் செல்ல உள்ளதால் தனது பாஸ்போர்ட்டை வழங்க உத்தரவிட வேண்டுமென கோரி லீனா மணிமேகலை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தண்டபாணி இன்று பிறப்பித்த மண்டல பாஸ்போர்ட் அதிகாரி லீனா மணிமேகலையின் பாஸ்போர்டை முடக்கி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தார். மேலும், ஒரு வாரத்திற்குள் பாஸ்போர்டை திரும்ப வழங்க வேண்டுமென உத்தரவிட்டார்.
[12/3, 15:28] Sekarreporter 1: அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு தடை விதிக்க மறுப்பு…

முன்னாள் எம்.பி. – கே.சி.பழனிச்சாமி தொடர்ந்த வழக்கில் பதிலளிக்க அதிமுக, பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு…

முறைகேடுகள் நடந்துள்ளதாக நிரூபிக்கப்பட்டால் தேர்தலை ரத்து செய்ய தயங்க மாட்டேன் – நீதிபதி அப்துல் குத்தூஸ்…

கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பழனிச்சாமிக்கு வழக்கு தொடர அடிப்படை உரிமை இல்லை என அதிமுக தரப்பில் வாதம்…

வழக்கு விசாரணை மூன்று வாரம் தள்ளிவைப்பு…
[12/3, 15:28] Sekarreporter 1: ஜனவரி 7 ம் தேதி ஒத்திவைப்பு
[12/3, 16:00] Sekarreporter 1: அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு இடைக்காலத்தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது

விதிகளை பின்பற்றாமல் அதிமுக நிர்வாகிகள் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கான தேர்தலை ரத்து செய்யக்கோரி முன்னாள் எம்.பி.யும், அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவருமான கே.சி.பழனிசாமி தாக்கல் செய்த மனு அவசர வழக்காக நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, 2018ல் நீக்கப்பட்ட பிறகு அதை எதிர்த்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் எப்படி வழக்கு தொடரமுடியும் என கேள்வி எழுப்பினார்.

கே.சி.பழனிசாமி தரப்பில் வழக்கறிஞர் தியாகேஸ்வரன் ஆஜராகி தன்னை நீக்கிய பிறகுதான ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதால் தன்னை நீக்கம் செய்தது செல்லாது என்பதால் வழக்கு தொடர முடியும் என தெரிவிக்கப்பட்டது. விதிகளை மீறி தேர்தல் அறிவிக்கபட்டுள்ளதாகவும், தன்னைப்போல 27000க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் வழக்கில் இணைய தயாராக உள்ளதாக தெரிவித்தார்.

விருப்ப மனு வழங்கப்படாமல் வெளியேற்றப்பட்ட பிரசாத் சிங் ஆஜராகி விதிகளை பின்பற்றாமல் 5 நாட்களில் தேர்தல் நடைமுறையை முடிக்க முயற்சி நடப்பதாகவும், விருப்பமனு வாங்க சென்றபோது வெளியில் துரத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.

அப்போது நீதிபதி : இன்று வழக்கு தொடராவதவர்கள் வாதிட முடியாது என்றும், எதிர்தரப்பிற்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்காமல் எப்படி இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியும் என கேள்வி எழுப்பினார். மேலும், எதிர் தரப்பு விளக்கம் அளித்த பிறகு வழக்கு முகாந்திரம் இருந்தால் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க நீதிமன்றம் தயங்காது எனவும் தெரிவித்தார்.

அதிமுக மற்றும் அதன் நிர்வாகிகள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் விஜய் நாராயண், அரவிந்த் பாண்டியன், சதீஷ் பராசரன் ஆகியோர் ஆஜராகி மூன்றாண்டுகளாக கட்சியுடன் தொடர்பில்லாதவர் எப்படி வழக்கு தொடர முடியும் என்றும், நீக்கத்தை எதிர்த்து சிவில் வழக்காக தொடர்ந்த, வென்று, பின்னர் இந்த வழக்கை தொடரலாம் என விளக்கம் அளித்ததுடன், வழக்கில் பதிலளிக்க அவகாசம் கோரினர்.

கே.சி.பழனிசாமி தரப்பில், தேர்தலை 5 நாளில் அதிமுக நடத்தும்போது, பதில்மனுவை 2 நாளில் தாக்கல் செய்ய முடியும் என்றும், வழக்கை திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கவும், அதுவரை இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென மீண்டும் வலியுறுத்தப்பட்டது. பதிலளிக்க நீண்ட அவகாசம் வழங்கினால், ஓய்வுபெற்ற நீதிபதி கண்காணிப்பிலும், காவல்துறை பாதுகாப்புடனும் தேர்தல் நடத்த வேண்டுமென இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென வலியுறுத்தினார்.

அதை ஏற்க மறுத்த நீதிபதி, வழக்கில் தொடர்புடைய அனைத்து தரப்ப்பையும் கேட்காமல் இடைக்காலத்தடை விதிக்க முடியாது என்றும், மனுதாரர் விருப்பப்பட்டால் மனுவை தள்ளுபடி செய்வதாகவும், மேல்முறையீடு செய்து கொள்ளுங்கள் என தெரிவித்தார்.

அதேசமயம் தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து நிர்வாகிகள் தேர்வு வரை சட்ட விதிமீறல் இருப்பது தெரியவந்தால், தேர்தல் முடிவுகளை ரத்துசெய்யப்படும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.

பின்னர் வழக்கு குறித்து அதிமுக, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, தேர்தல் அதிகாரிகள் பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் மூன்று வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஜனவரி 7ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
[12/3, 16:14] Sekarreporter 1: திருத்தம்
பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான இரண்டாவது கட்ட கலந்தாய்வு நடத்தும் அரசு முடிவுக்கு தடைவிதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு வாபாஸ் பெறப்பட்டுள்ளது.

2021-22ம் கல்வியாண்டுக்கு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு கடந்த அக்டோபர் மாதம் நான்கு சுற்றுகளாக நடத்தப்பட்டது. இதில் மொத்தமுள்ள 1 லட்சத்து 51 ஆயிரத்து 870 இடங்களில், 70 ஆயிரத்து 437 இடங்கள் காலியாக உள்ளன.

காலியாக உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களை நிரப்பும் வகையில், இரண்டாவது கட்ட கலந்தாய்வு நடத்த முடிவு செய்துள்ளதாக கூறி நவம்பர் 25ம் தேதி உயர் கல்வித் துறை செயலாளர் அரசாணை பிறப்பித்தார்.

இரண்டாவது கலந்தாய்வு நடத்தினால் ஏற்கனவே தங்கள் கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்கள் வெளியேறக் கூடும் என்பதால் தனியார் கல்லூரிகள் பாதிக்க கூடும் எனக் கூறி,
இந்த அரசாணைக்கு தடை விதிக்க கோரியும், அதை ரத்து செய்யக் கோரியும் தமிழ்நாடு தனியார் சுயநிதி தொழில் கல்வி, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் கூட்டமைப்பின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

அதில் பொறியியல் கல்லூரிகளில் நடப்பு கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைய நவம்பர் 30ம் தேதி முடிக்க அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமம் உத்தரவிட்டுள்ள நிலையில், தமிழக அரசு பிறப்பித்த அரசாணை தன்னிச்சையானது எனவும், கடந்த 17 ஆண்டுகளாக இரண்டாவது கலந்தாய்வு நடத்தப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு, நீதிபதி தண்டபாணி முன் விசாரணைக்கு வந்த போது, தொழில்நுட்ப கல்வி இயக்குனர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில்மனுவில், முக்கிய கல்வி நிறுவனங்களில் ஏராளமான இடங்கள் காலியாக உள்ளதால், மாணவர்கள் நலனைக் கருதி இரண்டாவது கலந்தாய்வு நடத்த முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும் அரசு தரப்பில், இரண்டாவது கவுன்சிலிங் நடத்துவதற்கான காலக்கெடு நவம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடைந்துவிட்டதாகவும், தகுதியான மாணவர்களுக்கு இடம் வழங்கும் வகையில் டிசம்பர் இறுதி வரை கலந்தாய்வின் மூலம் மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி கோரி ஏஐசிடிஇ-க்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த விளக்கத்தை ஏற்றுக்கொண்ட மனுதாரர் தரப்பு வழக்கை வாபஸ் பெறுவதாக தெரிவித்ததையடுத்து, மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் இரண்டாவது கவுன்சிலிங் நடத்துவது குறித்து மீண்டும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் புதிய வழக்கு தொடரலாம் என மனுதாரர் சங்கத்திற்கு அனுமதி அளித்துள்ளார்.
[12/3, 17:09] Sekarreporter 1: டாடா நிறுவனத்துக்கு விற்கப்படவுள்ள ஏர் இந்தியா நிறுவனத்தின் ஊழியர்களை குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றவும், மருத்துவ சேவையை நிறுத்தவும் இடைக்காலத் தடை…..

ஏர் இந்தியா ஊழியர்கள் தொழிற்சங்கமான ஏர் கார்ப்பரேஷன் ஊழியர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

ஊழியர்களின் உரிமைகளை பாதுகாக்காமல் ஏர் இந்தியா நிறுவனத்தை டாடாவுக்கு வழங்க தடை விதிக்கக் கோரி வழக்கு

தொழிற்சங்கங்களுடன் கலந்தாலோசிக்கவில்லை, விற்பனை செய்தாலும் ஓய்வுபெறும் வரை ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும், குடியிருப்புகளில் இருந்து வெளியேற்ற கூடாது, மருத்துவ சலுகைகள் உள்ளிட்ட சலுகைகளை வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை அரசுக்கு மனு அனுப்பியும் கருத்தில் கொள்ளவில்லை – மனு

ஏர் இந்தியா ஊழியர்களை டாடா நிறுவனம், தற்போதைய ஊழியர்களை தக்க வைத்துக் கொள்வார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது – மனு

மனுவுக்கு மத்திய அரசு, ஏர் இந்தியா, டாடா நிறுவனம் பதிலளிக்க உத்தரவு. வழக்கு ஜனவரி 7 தள்ளிவைப்பு – நீதிபதி வி.பார்த்திபன்
[12/3, 17:50] Sekarreporter 1: ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தொடர்ந்த வழக்கில்,ஜெயில் திரைப்படத்தின் ஒடிடி உரிமை குறித்து எந்த முடிவும் எடுக்கக்கூடாதென தயாரிப்பு நிறுவனமான கிரெய்க்ஸ் சினி கிரியேசன்ஸ் க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், அபர்ணநிதி, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயில்’ திரைப்படத்தை, க்ரெய்க்ஸ் சினி கிரியேசன்சின் ஸ்ரீதரண் மாரிதாசன் தயாரித்துள்ளார்.
இத்திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க கோரி ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது

அந்த மனுவில், படத்தை தயாரித்துள்ள
கிரெய்க்ஸ் சினி கிரியேசன்ஸ் நிறுவனம் ஜெயில் திரைப்படத்தின் காப்புரிமை,
ஒடிடி உரிமை,சாட்டிலைட் உரிமை உள்ளிட்ட விநியோக உரிமையை ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்திற்கு வழங்கி கடந்த அக்டோபர் மாதம் 24 ம் தேதி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது
படத்தின் விநியோக உரிமையை தங்கள் நிறுவனம் பெற்றிருந்த நிலையில், திடீரென தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் ஜெயில் படம் வரும் டிசம்பர் 9 ம் தேதி வெளிவர உள்ளதாகவும், தமிழ்நாடு திரைப்பட விநியோக உரிமையை எஸ்.எஸ்.ஐ ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் பெற்றுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது

அதுதவிர தயாரிப்பு நிறுவனம் ஜெயில் திரைப்படத்தின் சாட்டிலைட் மற்றும் ஒடிடி உரிமையையும் விற்க முயற்சி மேற்கொண்டு வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
ஒட்டுமொத்த விநியோக உரிமையை தங்களுக்கு வழங்கிய ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள நிலையில்,தற்போது சட்டவிரோதமாக படத்தை வெளியிட முயற்சி நடப்பதால் அதற்கு தடை விதிக்க வேண்டுமென கோரப்பட்டிருந்தது

இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது,ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன்
படத்தின் விநியோக உரிமையை வழங்கிவிட்டு தற்போது வேறொரு நபர் மூலம் படத்தை வெளியிட முயற்சி செய்வதாக குற்றம்சாட்டினார்

தயாரிப்பு நிறுவனம் தர்ப்பில்,ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்துக்கு காப்புரிமை வழங்கவில்லை எனவும்,
படத்தை வெளியிட தகுதியான விநியோகஸ்தரை தங்களுக்கு அறிமுகப்படுத்துமாறு மட்டுமே கமிஷன் அடிப்படையில் ஒப்பந்தம் மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது

தொடர்ந்து,ஜெயில் திரைப்படத்தின் ஒடிடி உரிமை குறித்து வரும் 6 ம் தேதி வரை எந்த முடிவும் எடுக்கக்கூடாதென தயாரிப்பு நிறுவனமான கிரெய்க்ஸ் சினி கிரியேசன்ஸ் க்கு உத்தரவிட்ட நீதிபதி,
திரையரங்க விநியோக உரிமை குறித்து வரும் திங்கள்கிழமை முடிவெடுக்கப்படும் என தெரிவித்து வழக்கு விசாரணையை அன்றைய தினத்திற்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்
[12/3, 18:10] Sekarreporter 1: கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த கல்லூரி காவலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் 26 வயது இளைஞர் நிர்பய்குமார், சென்னை அடையாறில் கல்வி நிறுவனம் ஒன்றில் காவலாளியாக பணியாற்றி வந்துள்ளார். கடந்த 2018ஆம் ஆண்டு அப்பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த வீட்டிற்குள் புகுந்து, அங்கிருந்த இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பாதிக்கப்பட்ட அந்த கல்லூரி மாணவியை அக்கம்பக்கத்தினர் மீட்டு, நிர்பய்குமாரை அடையாறு காவல் நிலையத்தினரிடம் ஒப்படைத்தனர்.

இத்தொடர்பான வழக்கு சென்னை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி டி.எச்.முகமது பாரூக் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு சிறப்பு குற்றவியல் வழக்கறிஞர் பி.ஆர்த்தி ஆஜராகி இளம்பெண்ணிற்கு காவலாளி நிர்பய்குமார் பாலியல் துன்புறுத்தல் செய்ததற்கான ஆதாரங்களும், சாட்சியங்களும் வலுவாக இருப்பதாக எடுத்துரைத்தார்

பின்னர் இந்த வழக்கில் நீதிபதி பிறப்பித்துள்ள தீர்ப்பில், நிர்பய்குமார் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி 10 ஆண்டு ஜெயில் தண்டனையும், 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளார்.

மேலும், பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவிக்கு அபராத தொகையிலிருந்து 10 ஆயிரம் ரூபாயை இழப்பீடாக வழங்கவும், கூடுதல் இழப்பீடு வழங்குவது குறித்து சென்னை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு உரிய முடிவெடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளர்.
[12/3, 18:53] Sekarreporter 1: கொரோனா சிகிச்சையில் அளித்த பெண் மருத்துவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அரசு மருத்துவரின் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கொரோனா சிகிச்சை பணியில் ஈடுபட்டு வருவதால், அவர்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக தேனாம்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியிலும் சில மருத்துவர்கள் அரசு செலவில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதேபோல சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் பணிபுரியும் 28 வயதான அரசு மருத்துவர் மோகன்ராஜும் தங்க வைக்கப்பட்டிருந்தார். அவரை போல தங்கவைக்கப்பட்ட பெண் மருத்துவரின் அறைக்குள் மோகன்ராஜ் புகுந்து, பாலியல் சீண்டல்களை செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்த பெண் மருத்துவர் மற்றும் விடுதி நிர்வாகம் அளித்த புகாரில், வழக்குப்பதிவு செய்த தேனாம்பேட்டை காவல் நிலையத்தினர் மோகன்ராஜை அக்டோபர் 18ஆம் தேதி கைது செய்தனர்.

இந்நிலையில் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனு நீதிபதி செல்வக்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் ஆஜரான நகர தலைமை குற்றவியல் வழக்கறிஞர் தேவராஜ் ஆஜராகி, ஜாமீன் வழங்க கடும் ஆட்சேபம் தெரிவித்ததையடுத்து, மருத்துவர் மோகன்ராஜின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதேபோல மற்றொரு பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் அரசு மருத்துவர் வெற்றிச்செல்வன் என்பவரின் ஜாமீன் மனு கடந்த வாரம் தள்ளுபடியானது.

You may also like...