Madras high court december 10th orders

[12/10, 12:00] Sekarreporter 1: மழைநீர் வடிகால்கள் அமைப்பது, தூர்வாருவது என்ற பெயரில் மக்கள் பணம் தவறாக பயன்படுத்துவது குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்க கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது

சென்னையில் மழைநீர் வடிகால்கள் அமைப்பது, தூர் வாருதல் என்ற பெயரில் மக்கள் பணம் தவறாக பயன்படுத்துவதை குறித்து சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க கோரி
சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் சூரியபிரகாசம் என்பவர் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், டெங்குவை கட்டுப்படுத்த கோரி 2019ல் வழக்கு தொடர்ந்த போது, அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருவதாக மாநகராட்சி உறுதியளித்ததை அடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். ஆனால் தற்போது டெங்கு பரவல் அதிகரித்துள்ளதாகவும், 2019ல் 139 பேருக்கு பாதிப்பு இருந்த நிலையில், 2021 ஜனவரி முதல் நவம்பர் வரை 744 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு மாநகராட்சி அதிகாரிகளின் மெத்தனப்போக்கு காரணம் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

சாலையோரங்களில் கழிவுகள் அப்புறப்படுத்தவில்லை என்றும்
கட்டிட இடிபாடுகள் கொட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் பெய்த மழையில் நகரில் 500 க்கும் மேற்பட்ட தெருக்களில் வெள்ளம் தேங்கியதாகவும், முந்தைய ஆட்சியில் 7000 கோடி ரூபாய் செலவில் 980 கி.மீ நீளம் கழிவுநீர் வடிகால் அமைத்ததாக கூறிய நிலையில், முதல்வர் இல்லம் அமைந்துள்ள சாலை உள்ளிட்ட பல இடங்களில் தண்ணீர் தேங்கியதுடன், பல நாட்கள் வெள்ளம் வடியவில்லை என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மழைநீர் வடிகால்கள் அமைப்பது, தூர்வாருதல் என்ற பெயரில் மக்கள் பணம் தவறாக பயன்படுத்துவது குறித்து சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார்.

மேலும், கொசு உற்பத்தியை கட்டுப்படுத்தி டெங்கு பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ராஜா மற்றும் பரத் சக்கரவர்த்தி அடங்கிய அமர்வு, மனு அளித்த எந்த தகவலும் இல்லை என்றும், உண்மையில் பொது நலனில் அக்கறை இருந்திருந்தால், முறையாக அரசுக்கு விரிவான மனு அளித்திருக்க வேண்டும் எனவும், அப்போது அரசு உரிய நடவடிக்கை எடுத்திருக்கும் என்றும் மனுதரருக்கு அறிவுறுத்தினர்.

ஆனால் மனுதாரரின் விண்ணப்பத்தில் எந்த இடத்தில் டெங்கு அதிகம் உள்ளது, எந்த தேதியில் வெள்ள நீர் தேங்கியது போன்ற எந்த விவரங்களையும் குறிப்பிடவில்லை என்பதால், இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்க முடியாது என கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
[12/10, 13:41] Sekarreporter 1: வேதா இல்லத்தின் சாவி கிடைத்தது அத்தையின் ஆசீர்வாதம்: ஜெ.தீபா உருக்கம்..
[12/10, 13:54] Sekarreporter 1: மத்திய அரசின் இணையதளத்தில் பதிவு செய்து ஒப்புதல் பெறும்படி நிர்பந்திக்காமல், டிராக்டர் டிரைலர்களை பதிவுசெய்ய வேண்டுமென தமிழக போக்குவரத்து துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விவசாய பயன்பாட்டிற்கான டிராக்டர் டிரைலர் உற்பத்தி செய்யும் நிறுவனமான ஈரோட்டை சேர்ந்த சக்தி விநாயக இன்ஜினியரிங் நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், மத்திய மோட்டர் வாகன திருத்த விதிகளில், டிராக்டர் டிரைலரை பதிவு செய்ய, மத்திய அரசின் இணையதளத்தில் பதிவு செய்து ஒப்புதல் பெற வேண்டும் என கூறப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி தங்கள் நிறுவனம் தயாரிக்கும் டிரைலர்களை ஒப்புதலுக்காக விண்ணபித்தபோது, அந்த இணையதளத்தில் எந்த பதிலும் அளிக்கவில்லை எனவும், இந்த நடைமுறை தமிழகம் தவிர பிற மாநிலங்களில் நிறுத்திவைத்துள்ளதால், தமிழகத்திலும் விவசாயிகள் வாங்கும் டிராக்டர் டிரைலரை இணையதளத்தில் பதிவு செய்து ஒப்புதல் பெற வேண்டும் என கட்டாயப்படுத்தாமல் ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில், இணையதளத்தில் ஒப்புதல் பெறாமல் வாகனத்தை பதிவு செய்ய முடியாது என்றும், ஒப்புதல் பெறுவதில் தாமதமாகிறது என்பதற்காக அது இல்லாமல் பதிவு செய்யும்படி கோர முடியாது என வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, மோட்டார் வாகன இயந்திரத்தால் இயங்கும் டிராக்டருக்கு தான் இணையதள பதிவு கட்டாயம் என்றும், டிரைலரை மோட்டார் வாகனமாக கருத முடியாது எனக்கூறி, டிரைலர்களை இணையதளத்தில் பதிவு செய்து ஒப்புதல் பெறத் தேவையில்லை என்றும், மத்திய அரசின் இணையதளத்தில் பதிவு செய்து ஒப்புதல் பெறாமல் டிரைலர்களை பதிவுசெய்ய போக்குவரத்து துறைக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்தார்.
[12/10, 15:49] Sekarreporter 1: வனப்பகுதியில் சுற்று வட்டச்சாலை அமைப்பதற்காக மரங்களை வெட்ட கூடாது என ஆரோவில் அறக்கட்டளைக்கு தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக சுற்றுச்சூழல் ஆர்வலர் நவ்ரோஸ் கெர்சாஸ்ப் மோடி என்பவர் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஆரோவில் அறக்கட்டளை எந்தவித அனுமதியின்றி கட்டுமானங்களை மேகொண்டுள்ளதாகவும், தற்போது கிரவுண் சாலை என்ற பெயரில் சுற்றுவட்ட சாலை அமைப்பதற்காக வனப்பகுதி என்ற கருதப்படும் பகுதியில் ஏராளமான மரங்களை வெட்டியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.

மரங்களை வெட்ட தடை விதிக்க வேண்டும் எனவும், அதனால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்புக்கு இழப்பீடு வசூலிக்க வேண்டும் எனவும், அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாய நீதித்துறை உறுப்பினர் ராமகிருஷ்ணன், நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் அடங்கிய அமர்வு, மரங்களை வெட்டக் கூடாது என ஆரோவில் அறக்கட்டளைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

மேலும், மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசு, ஆரோவில் அறக்கட்டளைக்கு உத்தரவிட்ட தீர்ப்பாயம், விசாரணையை டிசம்பர் 17ம் தேதிக்கு தள்ளிவைத்தது.
[12/10, 15:50] Sekarreporter 1: மத்திய அரசின் இணையதளத்தில் பதிவு செய்து ஒப்புதல் பெறும்படி நிர்பந்திக்காமல், டிராக்டர் டிரைலர்களை பதிவுசெய்ய வேண்டுமென தமிழக போக்குவரத்து துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விவசாய பயன்பாட்டிற்கான டிராக்டர் டிரைலர் உற்பத்தி செய்யும் நிறுவனமான ஈரோட்டை சேர்ந்த சக்தி விநாயக இன்ஜினியரிங் நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், மத்திய மோட்டர் வாகன திருத்த விதிகளில், டிராக்டர் டிரைலரை பதிவு செய்ய, மத்திய அரசின் இணையதளத்தில் பதிவு செய்து ஒப்புதல் பெற வேண்டும் என கூறப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி தங்கள் நிறுவனம் தயாரிக்கும் டிரைலர்களை ஒப்புதலுக்காக விண்ணபித்தபோது, அந்த இணையதளத்தில் எந்த பதிலும் அளிக்கவில்லை எனவும், இந்த நடைமுறை தமிழகம் தவிர பிற மாநிலங்களில் நிறுத்திவைத்துள்ளதால், தமிழகத்திலும் விவசாயிகள் வாங்கும் டிராக்டர் டிரைலரை இணையதளத்தில் பதிவு செய்து ஒப்புதல் பெற வேண்டும் என கட்டாயப்படுத்தாமல் ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில், இணையதளத்தில் ஒப்புதல் பெறாமல் வாகனத்தை பதிவு செய்ய முடியாது என்றும், ஒப்புதல் பெறுவதில் தாமதமாகிறது என்பதற்காக அது இல்லாமல் பதிவு செய்யும்படி கோர முடியாது என வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, மோட்டார் வாகன இயந்திரத்தால் இயங்கும் டிராக்டருக்கு தான் இணையதள பதிவு கட்டாயம் என்றும், டிரைலரை மோட்டார் வாகனமாக கருத முடியாது எனக்கூறி, டிரைலர்களை இணையதளத்தில் பதிவு செய்து ஒப்புதல் பெறத் தேவையில்லை என்றும், மத்திய அரசின் இணையதளத்தில் பதிவு செய்து ஒப்புதல் பெறாமல் டிரைலர்களை பதிவுசெய்ய போக்குவரத்து துறைக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்தார்.
[12/10, 15:56] Sekarreporter 1: சோளிங்கர் லக்‌ஷ்மி நரசிம்மர் கோவிலின் பரம்பரை சாராத அறங்காவலர்கள் பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை ரத்து செய்யக்கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் லக்‌ஷ்மி நரசிம்மர் கோவிலின் நகைகள் பாதுகாப்பு அறையின் இரண்டு சாவிகளில் ஒரு சாவியை வைத்திருக்கக்கூடிய முதல் தீர்த்தகரரான கே.கே.சி.யோகேஷ் என்பவர் தொடர்ந்துள்ள வழக்கில், நவம்பர் 17ஆம் தேதி அறநிலையத் துறையின் வேலூர் இணை ஆணையர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் பரம்பரை சாராத அறங்காவலர்கள் பதவிகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளதாக தெரிவித்துள்ளார். அறங்காவலர்கள் நியமனம் தொடர்பாக கோவிலின் சாவியை வைத்திருக்கும் தீர்த்தங்கரர் என்ற முறையில் தனது தரப்பு ஆட்சேபத்தை முறையாக கேட்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.

தன் தரப்பு ஆட்சேபங்களை கேட்க வேண்டும் எனவும், இணை ஆணையரின் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டுமெனவும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த மனு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில், மனுதாரர் பரம்பரை அறங்காவலரோ, அங்கீகரிக்கப்பட்ட நபரோ அல்ல என்றும், நகைகள் பாதுகாக்கக்கூடிய பணிக்காக மட்டுமே ஒரு சாவி வழங்கப்பட்டு, பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. பரம்பரை சாராத அறங்காவலர்கள் தேர்வு முறையில் மனுதாரரின் கருத்தை கேட்க அவசியம் இல்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி சுரேஷ்குமார், உயர் நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்துள்ள உத்தரவுகளின்படி ஒரு சாவியை வைத்திருப்பது நிரந்தரமானதல்ல என்றும், இந்த நடைமுறையை மாற்றுவது குறித்து, ஆணையரோ, இணை ஆணையரோ முடிவெடுக்க அதிகாரம் உள்ளது என உத்தரவிட்டுள்ளார்.

அதனடிப்படையில் இந்த வழக்கை ஏற்க முடியாது என கூறி, யோகேஷின் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

அதேசமயம், அறங்காவலர் நியமனம் தொடர்பாக ஆட்சேபங்கள் இருந்தால் அதை மனுவாக அளிக்க மனுதாரருக்கும், அதை பரிசீலித்து முடிவெடுக்க அறநிலையத்துறைக்கும் உத்தரவிட்டுள்ளார்.
[12/10, 17:26] Sekarreporter 1: ரயிலில் அடிபட்டு யானைகள் இறப்பதை தீவிரமாக கண்காணிக்க போவதாக மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் எச்சரிக்கை…

இதுபோன்ற மரணங்களை தடுக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கையை ஜனவரி 21ல் தாக்கல் செய்ய உத்தரவு

யானைகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும், தந்தம், பல், முடிக்காக யானைகள் கொடூரமாக வேட்டையாடப்படுவதாக மனோஜ் இமானுவேல், நித்திய சவுமியா ஆகியோர் வழக்கு

அசாம், பீகார், கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநிலங்களில்தான் யானைகள் அதிக அளவில் உள்ளது. நாட்டில் 29000 யானைகள் இருந்த நிலையில், கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகிறது – நீதிபதிகள் பாரதிதாசன், சதீஷ்குமார் அமர்வு

யானைகள் இறப்பு குறித்து யாரும் கவலைப்படுவதில்லை. சம்பந்தப்பட்ட ரயில் ஓட்டுநர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. யானை வழித்தடங்களில் ரயில்களை மெதுவாக இயக்கினால் என்ன??? – நீதிபதிகள்

யானைகள் வழித்தடங்களில் 45 கிலோ மீட்டர் வேகத்தில் தான் ரயில் இயக்கப் படுகிறது என்றும், 5 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில்களை இயக்கினாலும் யானை மீது மோதினால் அவை இறக்கத்தான் செய்யும். விரிவான அறிக்கை தாக்கல் செய்கிறோம் – மத்திய அரசு
[12/10, 17:59] Sekarreporter 1: ராமநாதபுரம் அருகே காவல் துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கல்லூரி மாணவன், மர்மமான முறையில் இறந்த விவகாரம் தொடர்பாக தென்மண்டல ஐஜி அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே வாகனச் சோதனையில் இருசக்கர வாகனத்தை நிறுத்தாமல் சென்றதாக நீர்க்கோழியேந்தலைச் சேர்ந்த மணிகண்டன் என்ற கல்லூரி மாணவரை, கீழத்தூவல் காவல்நிலைய காவலர்கள் அழைத்துச் சென்று விசாரித்தனர். பின்னர் வீடு திரும்பிய மணிகண்டன் திடீரென உயிரிழந்த நிலையில், அவரது மரணத்திற்கு காவல்துறையினரே காரணம் எனக் கூறி, உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு, உடலை வாங்கவும் மறுத்துவிட்டனர்.

அதே நேரம் மாணவரை தாக்கவில்லை என காவல்துறை தரப்பில் விளக்கம் அளித்து, சிசிடிவி காட்சிகளும் வெளியிடப்பட்டது. எனினும் உடலை வாங்க மறுத்து பெற்றோரும், ஊர் மக்களும் போராட்டம் நடத்தினர். உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவின்பேரில் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மறு உடற்கூராய்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உடலை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக வெளியான பத்திரிகைச் செய்தியின் அடிப்படையில் தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த ஆணையத்தின் தலைவரான நீதிபதி எஸ்.பாஸ்கரன், மாணவர் மரணம் தொடர்பாக தமிழக காவல்துறை தென்மண்டல ஐஜி 6 வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.
[12/10, 18:21] Sekarreporter 1: நீதிமன்றத்தில் போலி அறிக்கை தாக்கல் செய்ததாக பதிவு செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கிலிருந்து சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் அப்போதைய உறுப்பினர் செயலர் செந்தாமரைக் கண்ணனை விடுவித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம்,கடந்த 2018 ல் கைவிரல் ரேகை பிரிவில் உதவி ஆய்வாளர் பணிக்கு நடத்திய எழுத்து தேர்வில், கேள்வி ஒன்றுக்கு மதிப்பெண் வழங்க கோரி அருணாச்சலம் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
கேள்விக்கான சரியான விடையை கண்டுபிடிக்க நிபுணர் குழு அமைக்கப்பட்ட நிலையில்,
ஐ ஐ டி பேராசிரியர் என்ற பெயரில் மூர்த்தி என்பவர் அளித்த அறிக்கைபடி, அருணாச்சலத்தின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

மூர்த்தி என்ற பேராசிரியரே ஐஐடி யில் இல்லை என மனுதாரர் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் புகார் தெரிவிக்கப்பட்டதையடுத்து
போலி அறிக்கை தாக்கல் செய்த சீருடைப் பணியாளர் தேர்வாணைய
உறுப்பினர் செயலாளர் செந்தாமரை கண்ணன் மீது தானாக முன் வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் பதிவு செய்தது

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.என் பிரகாஷ் மற்றும் ஆர்.ஹேமலதா அமர்வு, செந்தாமரை கண்ணனோடு நேரடியாக தொடர்பில் இல்லை என ஆலோசகராக அறியப்பட்ட விஜயகுமார் மற்றும் கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆசிரியர் மூர்த்தி கூறியதை சுட்டிக்காட்டி சந்தேகத்தின் பலனை செந்தாமரை கண்ணனுக்கு அளித்து அவரை வழக்கில் இருந்து விடுவித்துள்ளனர்

மூர்த்தி மற்றும் விஜயகுமார் மீதான வழக்கையும் ரத்து செய்த நீதிமன்றம்,சம்பவத்தின் போது ஊட்டியில் இருந்த விஜயகுமாரை தவறுதலாக கைது செய்து 22 நாட்கள் சிறையில் அடைத்ததற்காக மூன்று மாதத்தில் தமிழக அரசு 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்ட நீதிமன்றம்,
சீருடை பணியாளர் தேர்வாணையம் செய்த தவறுக்காக 2 ஆயிரம் ரூபாய் அபராதத்தை உயர்நீதிமன்ற பதிவுத்துறையில்
4 வாரங்களில் செலுத்த உத்தரவிட்டுள்ளது

You may also like...