Lps advocate : கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி செய்தி வெளியிட்ட தனியார் தொலைக்காட்சியிடம் 2 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் சேலம் புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் இளங்கோவன்.

[1/12, 16:56] lps: கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி செய்தி வெளியிட்ட தனியார் தொலைக்காட்சியிடம் 2 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்
சேலம் புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் இளங்கோவன்.

தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கியின் தலைவராகவும், சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவராகவும், சேலம் புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளராகவும் இருப்பவர் இளங்கோவன்

இவரை தொடர்புபடுத்தி சமீபத்தில் (நியூஸ் 18 தமிழ்நாடு) தனியார் தொலைக்காட்சி செய்தி ஒன்றை வெளியிட்டது. கொடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக தாங்கள் கள ஆய்வு நடத்தியதாகவும்,இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கேரளா மாவட்டம் திருச்சூரை சேர்ந்த சதீஷன் உள்ளிட்ட ஐவரை சந்தித்து பேசிய போது, தமிழக அரசியல் கட்சியை சேர்ந்த சிலர் தங்களிடம் பேரம் பேச வந்ததாகவும் சென்னையில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு ஏற்பாடு செய்கிறோம் நாங்கள் கூறுவதை அங்கே தெரிவிக்க வேண்டும் அதற்கு தேவையான பணம் கொடுக்கப்படும் என அவர்கள் தெரிவித்ததாகவும் யார் பேரம் பேசினார்கள் என சில புகைப்படங்களை காண்பித்து கேட்ட போது குற்றம்சாட்டப்பட்டவர்கள் அதிமுக பிரமுகர் சேலம் இளங்கோவன் தலைமையில் தான் பேரம் பேசினர் என தெரிவித்ததாகவும் அதில் கூறப்பட்டிருந்தது

இந்த நிலையில் இளங்கோவன் சார்பில் தனியார் தொலைக்காட்சியின் நிர்வாக ஆசிரியர் உள்ளிட்டோருக்கு எதிராக தனது வழக்கறிஞர் L.P சண்முகசுந்தரம் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது

அதில்,வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தான் பேரம் பேசியதாக உறுதிப்பட தெரிவிக்காத நிலையிலேயே,தன்னுடைய புகைப்படத்தை தொலைக்காட்சியில் போட்டு பேரம் பேசியதாக செய்தி வெளியிட்டதாகவும், உண்மைத் தன்மையை ஆராயாமல் ஊடக அறம் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது,சமூகத்தில் தனக்கு இருக்கும் பெயரையும் மரியாதையையும் சீர்குலைக்கும் நோக்கில் அவதூறு செய்தி வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த அவதூறு செய்தியை பார்த்து விட்டு கட்சிகாரர்கள் நன்பர்கள் என அனைத்து தரப்பினரும் தொலைபேசியில் அழைத்து விசாரிப்பதாகவும் தனக்கும் தனது குடும்பத்திற்கும் வாழ்நாள் முழுதும் துடைக்க முடியாத களங்கம் ஏற்பட்டுள்ளதாகவும்,கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி காவல்துறை விசாரணையில் தாக்கத்தை ஏற்படுத்தி தன்னையும் குற்றவாளியாக காட்ட வேண்டுமென்ற நோக்கில் இந்த செய்தி வெளியிடப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது

இத்தகைய செய்தி மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும்,மக்கள் மத்தியில் ஏற்படும் காவல்துறையின் நேர்மையான விசாரணையில் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும்,அனுமதியின்றி தன் புகைப்படம் பயன்படுத்தப்பட்டது தவறு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

அவதூறு செய்தியால் அவமானமும்,மன உளைச்சலும் ஏற்பட்டுள்ளதால் சம்மந்தப்பட்ட நிகழ்ச்சியை யூ டியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இருந்து நீக்க வேண்டுமெனவும்,உண்மைக்கு
புறம்பான அவதூறு செய்தி வெளியிட்டதற்காக தொலைக்காட்சியில்
மன்னிப்பு கோரி செய்தி வெளியிடுவதோடு,2 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டுமெனவும் கோரப்பட்டுள்ளது

15 நாட்களுக்குள் இதனை நிறைவேற்ற தவறும் பட்சத்தில்,அவதூறு மற்றும் மானநஷ்ட ஈடு வழக்கு தொடர நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
[1/12, 17:09] Sekarreporter 1: 🌹

You may also like...