Justice P. Velmurugan orders completion of investigation within four months in 13 cases and completion of trial within six months in 24 other cases aag Ravinthiren argued for police

[30/07, 08:07] Sekarreporter: Expedite investigation, trial in 37 cases pending against ‘Savukku’ Shankar: Madras High Court
Justice P. Velmurugan orders completion of investigation within four months in 13 cases and completion of trial within six months in 24 other cases

The Madras High Court, on Tuesday (July 29, 2025), directed Tamil Nadu police to speed up the investigation in 13 criminal cases pending against YouTuber ‘Savukku’ Shankar alias A. Shankar, before various police stations, and file the final reports before the jurisdictional magistrates within four months.

Justice P. Velmurugan also directed the trial courts, before whom 24 other criminal cases against him were pending pursuant to completion of investigation and filing of charge sheets by the jurisdictional police, to expeite the trial proceedings and complete them within six months.
[30/07, 08:07] Sekarreporter: பிரபல யூ-டியூபர் சவுக்கு சங்கர் மீதான வழக்குகளை ஆறு மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும் என விசாரணை நீதிமன்றங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தன்னுடைய யூ டியூப் சேனல் செயல்பட காவல் ஆணையர் அருண் தடையாக இருப்பதாக கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு கடந்த முறை நீதிபதி பி.வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, கருத்து சுதந்திரத்தை நல்ல நோக்கத்திற்காகவே பயன்படுத்த வேண்டுமே தவிர அதை பிளாக்மெயில், செய்ய பயன்படுத்த கூடாது எனவும், வழக்கு விசாரணையில் உள்ள போது ஊடக விசாரணை மேற்கொள்வது சரியானது அல்ல எனவும் இது தொடர்பாக சவுக்கு சங்கருக்கு உரிய அறிவுரை வழங்க அவர் தரப்பு வழக்கறிஞருக்கு அறிவுறுத்தி இருந்தார்.

மேலும், சவுக்கு சங்கர் மீது நிலுவையில் உள்ள குற்ற வழக்குகள் விவரங்களை தாக்கல் செய்ய தமிழக உள்துறை செயலாளர், டிஜிபி, சென்னை காவல்துறை ஆணையர் ஆகியோருக்கும் உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது காவல்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், சவுக்கு சங்கருக்கு எதிராக 13 வழக்குகளின் விசாரணை நிலுவையில் உள்ளதாகும், 24 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து சவுக்கு சங்கர் மீது உள்ள அனைத்து வழக்குகளில் நான்கு மாதத்திற்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் ஆறு மாதத்தில் வழக்குகளை விசாரித்து முடிக்க வேண்டும் என விசாரணை நீதிமன்றங்களுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும், சவுக்கு சங்கர் கோரிக்கை டிஜிபியால் ஏற்கனவே பரீசிலீத்து முடித்து வைக்கப்பட்டுள்ளதால் சவுக்கு சங்கத் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தும் நீதிபதி உத்தரவிட்டார்.
…..

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com