Justice banumathi நீதியின் மாண்பே !! எங்களின் வழிச்சுவடே !!! வாழிய வளமிகு நலமுடன் வளர்பிறை ஆண்டுகள் பலப்பல நீண்டு !! . . P.V.VINAYAKHAMURTHI, ADVOCATE, SALEM.
அழியாப் புகழ் ஈந்த அன்னை நீதியரசர் அம்மா பானுமதி அவர்களே !
நீதி தன் தலையை நிமிர்ந்திக்கொண்ட நிலைத்தக் கிரீடமே !
தங்களின் நீதிவழுவா பல்வேறு தீர்ப்புகளால் நீதி நிமிர்ந்தது !
உச்சநீதிமன்றமே உம்மால் உச்சிமோந்து பெருமை கொண்டது தமிழகம் தந்த முதல் பெண் வீரியமென !
நீதியென்றும் தங்கள் பெயரை உச்சரிக்கும் போதெல்லாம் சிலிர்த்துச் சிகரம் தொடும் . .
ஓய்வறியா நிந்தன் உழைப்புக்கு நன்றியுடன் நாடே கொடுக்கிறது விடை பணியில் மட்டும் . .
தங்கள் தீர்ப்புகளோ சுழன்று வரும் ஓய்வின்றி !
அன்னையே !
நீதியின் மாண்பே !!
எங்களின் வழிச்சுவடே !!!
வாழிய
வளமிகு நலமுடன்
வளர்பிறை ஆண்டுகள் பலப்பல நீண்டு !! . . P.V.VINAYAKHAMURTHI, ADVOCATE, SALEM.