Inbadura Former i Mla: *சபாநாயகர் அப்பாவு மீதான நில அபகரிப்பு வழக்கு!:* *சென்னை உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு!*

[3/4, 18:49] Inbadura Former i Mla: *சபாநாயகர் அப்பாவு மீதான நில அபகரிப்பு வழக்கு!:*

*சென்னை உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு!*

சபாநாயகர் அப்பாவு ரூ.80 லட்சம் மதிப்புள்ள தனது நிலத்தை அபகரித்துவிட்டதாக நெல்லையை சேர்ந்த வழக்கறிஞர் தாமோதரன் தொடுத்த வழக்கில் நீதிமன்ற உத்தரவின்படி நெல்லை நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார் சபாநாயகர் அப்பாவு மீது எப்ஐஆர் பதிவு செய்திருந்தனர்.

இந்த வழக்கில் குற்றபத்திரிகையை தாக்கல் செய்ய போலீசாருக்கு உத்தரவிடும்படி வழக்கறிஞர் தாமோதரன் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு செய்திருந்தார்.

இதற்கிடையில் இந்த நில அபகரிப்பு வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கும்படி சபாநாயகர் அப்பாவு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தனியாக மனு ஒன்றை தாக்கல் செய்தார். சபாநாயகர் அப்பாவு தாக்கல் செய்த இந்த மனு விசாரணைக்கு வந்தபோது வழக்கறிஞர் தாமோதரன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் செல்வம் இந்த வழக்கின் பிரதான குற்றவாளியான அப்பாவு தற்போது ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினராக உள்ளதால் இந்த நில அபகரிப்பு வழக்கை எம்எல்ஏ, எம்.பிக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம்தான் விசாரிக்க முடியும் என்று வாதிட்டதை தொடர்ந்து இவ்வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்திலுள்ள எம்எல்ஏ,எம்பிக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில் கடந்த இரு மாதங்களுக்கு முன் சபாநாயகர் அப்பாவு மீதான இந்த நில அபகரிப்பு வழக்கு நீதியரசர் நிர்மல்குமார் முன்பாக விசாரணைக்கு வந்தது.

அப்போது புகார்தாரர் தாமோதரனின் வழக்கறிஞர் செல்வம் ஆஜராகி , வழக்கின் குற்றவாளியான அப்பாவு தற்போது ராதாபுரம் தொகுதி எம்எல்ஏ மட்டுமன்றி தமிழக சட்டபேரவையின் சபாநாயகராகவும் உள்ளதாக தெரிவித்ததுடன் இந்த நிலஅபகரிப்பு புகார் தொடர்பாக கீழமை நீதிமன்றம் சபாநாயகர் அப்பாவு மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டதை தொடர்ந்துதான் நெல்லை மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு போலீசார் எப்ஐஆர் பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து வழக்கறிஞர் செல்வம் வாதிடுகையில் சபாநாயகர் அப்பாவு மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஆனால் விசாரணை நடத்தி இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என்றும் தெரிவித்தார்.

இதை தொடர்ந்து நீதியரசர் நிர்மல்குமார் இவ் வழக்கு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யும்படி நெல்லை மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்திருந்தார்.

இந்நிலையில் சபாநாயகர் அப்பாவு மீதான இந்த நிலஅபகரிப்பு வழக்கு நீதியரசர் ஜெகதீஷ் சந்திரா முன்பாக கடந்த இரு வாரங்களுக்கு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆஜரான மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கும்படி சபாநாயகர் அப்பாவு தாக்கல் செய்துள்ள மனு தொடர்பாக கடும் எதிர்ப்பு தெரிவித்து வாதாடினார்.

சபாநாயகர் அப்பாவு மீது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து கோர்ட் உத்தரவின் பேரிலேயே எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டதாகவும், இதில் அரசியல் நோக்கம் ஏதும் இல்லையெனவும் வாதிட்டார்.

இந்த வழக்கில் போலீசார் விசாரணை செய்து இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வசதியாக மூன்று வாரங்களுக்கு வழக்கை நீதியரசர் ஜெகதீஷ் சந்திரா ஒத்திவைத்திருந்தார்.

இந்நிலையில் இவ் வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தபோது நெல்லை மாவட்ட நிலஅபகரிப்பு தடுப்பு போலீசார் சார்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் சபாநாயகர் அப்பாவு மீதான இந்த வழக்கின் மேல் நடவடிக்கையை கைவிடுவதாக(action drop) தெரிவித்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாதிட்ட புகார்தாரர் தாமோதரனின் வழக்கறிஞர் செல்வம்” போலீசார் அவர்களாகவே விசாரித்து எப்ஐஆர் பதிவு செய்யவில்லை. கீழமை நீதிமன்றம் ஆவணங்களை அலசி ஆராய்ந்தபின் வழக்கு பதிவு செய்யும்படி போலீசாரருக்கு உத்தரவிட்டதன் பேரிலேயே வழக்கு பதிவு செய்துள்ளனர். எனவே வழக்கை கைவிடுவதாக போலீசார் தனிச்சையாக முடிவெடுக்க முடியாது.என தனது கடும் எதிர்ப்பை தெரிவித்து வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதியரசர் ஜெகதீஷ் சந்திரா ஏற்கனவே அப்பாவு மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்ட நெல்லையிலுள்ள கீழமை நீதிமன்றத்தில்தான் போலீசார் இந்த அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும். இந்த அறிக்கையை எதிர்த்து கீழமை நீதிமன்றத்தில் மனுதாரர் தனியாக எதிர்மனு (protest petition) தாக்கல் செய்து வாதிட்டு கீழமை நீதிமன்றத்தில் பரிகாரம் தேடிக்கொள்ள எந்த தடையுமில்லை என்று புகார்தாரர் தாமோதரனுக்கு அனுமதியளித்து உத்தரவிட்டார்.
[3/4, 18:58]

You may also like...