FIR quashed judge sunder mohan /பிளக்ஸ் பேனர்கள்
தவெக விஜய்
தங்கம் விலை
கரூர் சம்பவம்
வடகிழக்கு பருவமழை
தமிழ்நாடு
tamil nadu
நேரலை
தமிழ்நாடு
தேசம்
என்டர்டெயின்மெண்ட்
லைஃப் ஸ்டைல்
நலம் வாழ
சாம்பியன்
உலகம்
வீடியோ
புகைப்படங்கள்
வணிகம்
ETV Bharat / state
தவெக நிர்வாகிகள் மீதான வழக்கு ரத்து; உயர் நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி!
‘கோட்’ திரைப்படத்திற்கு பிளக்ஸ் பேனர் வைத்த விவகாரத்தில் தவெக நிர்வாகிகள் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது.
உயர் நீதிமன்ற மதுரை அமர்வு
உயர் நீதிமன்ற மதுரை அமர்வு (ETV Bharat Tamil Nadu)
author img
By ETV Bharat Tamil Nadu Team
Published : November 4, 2025 at 2:17 PM IST
1 Min Read
Choose ETV Bharat
மதுரை: தவெக நிர்வாகிகள் மீதான பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது.
தவெக தலைவரும், தமிழ் சினிமாவின் பிரபல நடிகருமான விஜய் நடிப்பில் வெளியான கோட் திரைப்படத்திற்கு பிளக்ஸ் பேனர் வைத்த விவகாரத்தில் தவெக நிர்வாகிகள் 8 பேர் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றும் விஷ்ணு என்பவர் மதுரை அமர்வில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ‘தமிழக வெற்றிக் கழகத்தின் வழக்கறிஞர் பிரிவில் உள்ளேன். எங்கள் தலைவர் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் கோட்(GOAT). இந்தத் திரைப்படத்தை வரவேற்கும் விதமாக, தேனி மாவட்டம் தென்கரை பகுதியில் பிளக்ஸ் பேனர்களை வைத்திருந்தோம். இவை பொது மக்களுக்கும், போக்குவரத்துக்கும் எவ்வித இடையூறும் இல்லாமல் வைக்கப்பட்டிருந்தன. மேலும் பிளக்ஸ் பேனர்கள் வைப்பதற்கு உரிய அனுமதி வழங்க காவல் துறைக்கு உயர் நீதிமன்ற மதுரை அமர்வும் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் காட்டு ராஜா, நாங்கள் சட்டம் – ஒழுங்கை கெடுக்கும் விதமாக சாலைகளில் பிளக்ஸ் பேனர்கள் வைத்திருப்பதாக தென்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் என் மீதும், தவெக தேனி மாவட்டடச் செயலாளர் லெஃப்ட் பாண்டி உள்ளிட்ட எட்டு பொறுப்பாளர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எங்கள் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும்’ என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையும் படிங்க:10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எப்போது? வெளியானது கால அட்டவணை!
இந்த மனு நீதிபதி சுந்தர் மோகன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது மனுதாரரான வழக்கறிஞர் விஷ்ணு ஆஜராகி. இந்தப் படத்திற்கு பிளக்ஸ் பேனர்கள்
வைப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையிலும் எங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பிளக்ஸ் பேனர் விஷயத்தில் நீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்துள்ள வழிமுறைகளை காவல்துறையினர் கடைபிடிக்கவில்லை. எனவே இந்த வழக்கு சட்டவிரோதமானது” என்று வாதிட்டார்.
இதனை பதிவு செய்த நீதிபதி, தாவெக நிர்வாகிகள் எட்டு பேர் மீது பெரியகுளம் தென்கரை போலீசார் பதிவு செய்த வழக்கை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தார்.
For All