FCRA wilson mp interview in chennai

[03/07, 19:01] Senior Advt Wilson: வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்கு முறைக்கான சட்ட திருத்த மசோதா
கிறிஸ்தவ, இஸ்லாமிய, ஜெயின் மக்களின் சொத்துகளை கொள்ளை அடிக்க கொண்டு வரப்பட்டுள்ளது என குற்றஞ்சாட்டியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் வில்சன்,
மசோதாவை கண்டித்து டெல்லியில் மிகப்பெரும் போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்துள்ளார்.

FCRA எனப்படும்
வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக
சென்னை மாவட்ட ஆட்சியரிடம்
சிறுபான்மையினர் கூட்டு நடவடிக்கை குழு தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான வில்சன் மனு அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், 2026 மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட வெளி நாட்டு பங்களிப்பு திருத்த மசோதா,
கொடூரமான மசோதா என விமர்சித்தார்.

சிறுபான்மை கிறிஸ்தவ, இஸ்லாமிய மக்கள் மட்டுமின்றி ஜெயின் மக்களின் சொத்துகளையும் கொள்ளை அடிக்க கொண்டு வரப்பட்டதே
FCRA என வில்சன் குற்றஞ்சாட்டினார்.

புதுப்பிக்கவில்லை என்றாலோ அல்லது கொடுக்க மறுத்தாலோ சொத்துகள் ஒன்றிய அரசிற்கு சென்று விடும் என்றும்
கிறிஸ்தவ, இஸ்லாமிய, ஜெயின் இயக்கங்கள் மற்றும் தன்னார்வலர்களின் சொத்துகளை ஒன்றிய அரசு விற்றுவிட்டு, அவற்றால் வரும் லாபத்தை அரசின் கஜானாவில் சேர்த்து விடும் வாய்ப்பு, இம்மசோதாவால் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் அச்சம் தெரிவித்தார்.
சிறுபான்மையினர் கூட்டு நடவடிக்கை குழு கடந்த ஏப்ரலில் துவங்கப்பட்டதை சுட்டிக்காட்டிய வில்சன்,
நாடு முழுவதும் பல்வேறு பிரார்த்தனைகள், உண்ணாவிரதம், கையெழுத்து இயக்கம் நடத்தும் வரிசையில் தற்போது,மாவட்ட ஆட்சியாளர் மூலமாக பிரதமருக்கு எதிர்ப்பினை அனுப்ப மனு கொடுத்துள்ளதாகவும் கூறினார்.
அந்தந்த மாவட்டங்களிலும் இது போன்ற புகார் மனு சமர்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், மசோதாவுக்கு எதிரான கையெழுத்து இயக்கம்
டிஜிட்டலிலும் தொடரும் என்றார்.

இதையடுத்து,
பிரதமர் மோடியை சந்தித்து அம்மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தவுள்ளதாக வில்லன் தெரிவித்தார்.

கல்வி நிலையங்கள்,
முதியோர் இல்லங்கள், ஆலயங்கள், காப்பகங்கள், மருத்துவமனைகள் என முறையாக சான்றிதழ் பெற்று கட்டப்பட்டுள்ள நிலையில்,
மீண்டும் உரிமம் பெறவில்லை என்றால் ஒன்றிய அரசிற்கு சொத்துகள் சென்று விடும் ஆபத்து, FCRA எனப்படும்
வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தால் ஏற்படும் என்று வில்சன் எச்சரித்தார்.

26 ஆயிரம் நிறுவனங்களுக்கு மோடி அரசு வந்த பின்பு உரிமம் வழங்காமல் தடுக்கப்பட்டுள்ளதாகவும் கிறிஸ்தவ அமைப்புகளை முடக்கும் வகையில்
தற்பொழுது அத்தனை நிறுவங்களின் சொத்துகளையும் அபகரிக்க ஒன்றிய அரசு முயல்வதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

படிப்படியாக இச்சட்டத்திற்கு எதிர்ப்பை தெரிவித்து வரும் வரிசையில்,
டெல்லியில் அடுத்த கட்டமாக பெரியளவில் போராட்டம் நடத்தவுள்ளதாக
மாநிலங்களவை உறுப்பினரும்
சிறுபான்மையினர் கூட்டு நடவடிக்கை குழு தலைவருமான
வில்சன்
எச்சரித்துள்ளார்…

Byte:
[03/07, 19:

🔴 Live: திமுக MP வில்சன் அவசர செய்தியாளர் சந்திப்பு | DMK Wilson Press Meet

[03/07, 20:08]

🔴 Live: திமுக MP வில்சன் அவசர செய்தியாளர் சந்திப்பு | DMK Wilson Press Meet

[03/07, 23:28]

FCRA இது ஒரு கொடூரமான மசோதா!  சொத்துக்கள் அரசுக்கு சென்றுவிடும்...| Wilson PM | DMK | N18V

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version