Docter bail dismissed

கொரோனா சிகிச்சையில் அளித்த பெண் மருத்துவருக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த மேலும் ஓரு அரசு மருத்துவரின் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கொரோனா சிகிச்சை பணியில் ஈடுபட்டு வருவதால், அவர்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக தேனாம்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியிலும் சில மருத்துவர்கள் அரசு செலவில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதேபோல சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் பணிபுரியும் 28 வயதான அரசு மருத்துவர் மோகன்ராஜும் தங்க வைக்கப்பட்டிருந்தார். அவரை போல தங்கவைக்கப்பட்ட பெண் மருத்துவரின் அறைக்குள் வெற்றிச்செல்வன் புகுந்து, பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார்.

இதுகுறித்த பெண் மருத்துவர் மற்றும் விடுதி நிர்வாகம் அளித்த புகாரில், வழக்குப்பதிவு செய்த தேனாம்பேட்டை காவல் நிலையத்தினர் மோகன்ராஜை அக்டோபர் 18ஆம் தேதி கைது செய்தனர்.

இந்நிலையில் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனு நீதிபதி செல்வக்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் ஆஜரான நகர தலைமை குற்றவியல் வழக்கறிஞர் தேவராஜ் ஆஜராகி, ஜாமீன் வழங்க கடும் ஆட்சேபம் தெரிவித்ததையடுத்து, மருத்துவர் மோகன்ராஜின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதேபோல அரசு மருத்துவர் வெற்றிச்செல்வனின் ஜாமீன் மனு கடந்த வாரம் தள்ளுபடியானது.

You may also like...