Dk Elango Duraisamy Junior: பேரறிஞர் அண்ணா பிறந்த நாளில் மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி பற்றிய செய்தி: 1967 தேர்தல் முடிந்து பிரதமர் இந்திரா காந்தி குடும்பத்தாருடன் ஓய்வெடுக்க கொடைக்கானலுக்கு டெல்லியிலிருந்து மதுரைக்கு விமானத்தில் வருகிறார்.

[9/13, 14:43] Dk Elango Duraisamy Junior: பேரறிஞர் அண்ணா பிறந்த நாளில் மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி பற்றிய செய்தி:
1967 தேர்தல் முடிந்து பிரதமர் இந்திரா காந்தி குடும்பத்தாருடன் ஓய்வெடுக்க கொடைக்கானலுக்கு டெல்லியிலிருந்து மதுரைக்கு விமானத்தில் வருகிறார். மதுரை விமான நிலையத்தில் முதலமைச்சர் அண்ணா இந்திராவை வரவேற்கிறார். திரும்பும் போது சென்னை வழியாக டெல்லி செல்வதாக தகவல். இதை அறிந்த இந்தி எதிர்ப்பு மாணவர் குழு செயலாளர் துரைசாமி(அப்போது சட்டக்கல்லூரி மாணவர் தற்போது சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் எஸ் துரைசாமி) சென்னை விமான நிலையத்தில் இந்திராகாந்திக்கு மாணவர்கள் கருப்பு கொடி காட்டுவோம் என அறிவிக்கிறார். செய்தி பத்திரிக்கைகள் வழியாக காட்டுத்தீயாய் பரவுகிறது. உடனடியாக மதுரையில் இருந்த அண்ணா அவர்கள் சென்னையிலுள்ள கலைஞரை தொடர்பு கொண்டு கருப்பு கொடி காட்டுவதை எப்படியாவது தடுத்து நிறுத்து, துரைசாமியை சமாதானப்படுத்து கூப்பிட்டு உடனடியாக பேசு என்கிறார். இரவு 11 மணி வரை கோபாலபுரம் வீட்டில் பேச்சு வார்த்தை நடக்கிறது. துரைசாமி சமாதானத்திற்கு உடன் படவில்லை என அண்ணாவிற்கு செய்தி போகிறது. அண்ணா உடனே கலைஞரை அழைத்து நான் சொன்னேன் என்று துரைசாமியிடம் சொல் என்கிறார். அண்ணாவே சமாதானப்படுத்தியதால் துரைசாமி கருப்புக்கொடி காட்டுவதை கைவிடுகிறோம் ஆனால் விமான நிலையத்தில் இந்திராகாந்தியிடம் மனு கொடுக்க அனுமதிக்கவேண்டும் என கோரிக்கை விடுக்கிறார். அதை ஏற்றுக் கொள்வதாக அண்ணா அறிவித்தார். துரைசாமி தலைமையில் 5 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டது. அப்போது எடுத்த புகைப்படம் தான் இது. ஏறத்தாழ 15 நிமிடம் துரைசாமி, இந்திரா காந்தியிடம் இந்தி எதிர்ப்பு பற்றியும் இந்தி திணிப்பு பற்றியும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதை அண்ணா, கலைஞர் மற்ற சக அமைச்சர்கள் மதியழகன் நெடுஞ்செழியன் உட்பட யாரும் குறுக்கிடவில்லை. இந்திராகாந்தி i will look into என்று ஒவ்வொரு முறையும் பதிலளித்துக் கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் அண்ணா துரைசாமியை சமாதானப்படுத்தி நீங்கள் மனு கொடுத்து விட்டீர்கள் பிரதமர் அவர்கள் கேபினட் கூட்டி முடிவு எடுப்பார் என்று சொன்னதன் அடிப்படையில் துரைசாமி அமைதியானார்.
[9/13, 14:50] Sekarreporter 1: Super

You may also like...