You may also like...
Follow:
- Next story Case against Rohini theater using projecter judge pt asha j granted stay advt dhanaram mhc c grantef
- Previous story கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்ட வீரசோழபுரம் அர்த்தநாரீஸ்வரர் கோவில் நிலத்தை குத்தகைக்கு எடுப்பதற்கு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. குத்தகை தொகை நிர்ணயிக்கும் வரை ஆட்சியர் அலுவலக கட்டுமான பணிகளை மேற்கொள்ள கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளது. புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைக்க, வீரசோழபுரம் எனும் இடத்தில் அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை அரசுக்கு ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஆட்சியர் அலுவலகம் அமைக்கும் பணிகளை நிறுத்தி வைக்க உத்தரவிட்டது. இந்நிலையில், கோவில் நிலத்தை நீண்டகாலத்துக்கு குத்தகைக்கு விடுவது தொடர்பாக கடந்த நவம்பர் 28 ஆம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் ரங்கராஜன் நரசிம்மன் ஆஜராகி முறையான சட்ட விதிகளை பின்பற்றாமல் குத்தகைக்கு வழங்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ள தாகவும், கள்ளக்குறிச்சியை சுற்றியே அரசுக்கு சொந்தமான 39 இடங்களில் நிலம் உள்ள போது, கோவில் நிலத்தை குத்தகைக்கு விடுவது ஏற்புடையதல்ல என தெரிவித்தார். இந்து சமய அறநிலைத்துறை சட்டப்படி கோவில் நிலங்கள்,கோவிலின் தேவை மற்றும் நலனுக்காகவே பயன்படுத்தப்பட வேண்டும் எனவும், என்னதான் குத்தகை மூலம் கோவிலுக்கு வருமானம் கிடைத்தாலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைக்கப்பட்டு விட்டால் அது நிரந்தரமாகிவிடும் எனவும், அந்த நிலம் மீண்டும் கோவிலுக்கு திரும்பக் கிடைக்கப் பெறாமல் போகும் எனவும் தெரிவித்தார். அரசு தரப்பில் ஆஜரான தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆஜரான சிறப்பு அரசு பிளீடர் கார்த்திகேயன் சம்பந்தப்பட்ட இடத்தின் மூலம் கோவிலுக்கு தற்போது எந்த வருமானமும் இல்லை எனவும், அந்த இடத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைப்பதன் மூலம் கோவிலுக்கு மாதம் 1.3 லட்சம் வாடகையாக கிடைக்கப்பெறும் எனவும் இதன்மூலம் கோவிலுக்கு வருவாய் பெருகும் எனவும் தெரிவித்தார். அதேபோல, வீரசோழபுரம் அர்த்தநாரீஸ்வரர் கோயிலை புனரமைக்க அரசு 2.7 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், ஒருங்கிணைந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நீதிமன்றங்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகமும் இடம் பெற உள்ளதாகவும், மனுதாரர் குறிப்பிடும் மற்ற இடங்கள் உகந்ததாக இல்லாததன் காரணமாகவே இந்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் எடுத்துரைத்தார். இந்த நிலையில் வழக்கு இன்று தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றுன் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.. அப்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைக்க கோவில் நிலத்தை குத்தகைக்கு எடுத்துக் கொள்ள அனுமதி அளித்த நீதிபதிகள், குத்தகை நிர்ணயம் செய்வது மற்றும் நிலத்தின் மதிப்பீட்டை நிர்ணயம் செய்வதற்காக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் விழுப்புரம் மாவட்ட நீதிபதியை நியமித்து உத்தரவிட்டுள்ளனர். இந்த இரு நபர் குழு நிலத்தின் மதிப்பீட்டை ஆராய்ந்து மூன்று வாரத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமெனவும், அந்த அறிக்கையின் அடிப்படையில் குத்தகை நிர்ணயம் செய்யப்படும் எனவும் தெரிவித்த நீதிபதிகள், அதுவரை கட்டுமானங்கள் எதுவும் மேற்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.
Recent Posts
- கே.சந்துரு மேனாள் நீதிபதி சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி டாக்டர் மரியா கிளீட் அளித்துள்ள பரபரப்பான தீர்ப்பு
- MR.JUSTICE N. SATHISH KUMAR A.S.No.586 of 2025 and CMP.No.10580 of 2025 Prema … Appellant
- நீதிபதி திரு சத்யநாராயண பிரசாத் அவர்கள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் துரைசாமியின் சார்பில், வழக்கறிஞர் வி. இளங்கோவன் ஆஜரானார். அரசு
- Case quashed against Big boss darsan advocate Thenmoli
- JUSTICE M.S.RAMESH and THE HONOURABLE MR. JUSTICE N.SENTHILKUMAR Criminal Appeal Nos.1128 of 2022 and 255 of 2023 and Crl. M.P. No.19507 of 2023 Sanjana … Appellant in Crl.A. No.1128/2022/A2 Balaji … Appellant in Crl.A. No.255/2023/A1 Vs. State represented by Inspector of Police, W-25, All Women Police Station, T. Nagar, Chennai. (Crime No.6/2019) .. Respondent in both the appeals
More