CHANDRU LAW ACADEMY கொள்குறி வினாக்கள் 1.இந்திய ஒப்பந்தச் சட்டம், 1872-ன் கீழ் பின்வரும் எந்த ஒப்பந்தம் அமலுக்கு வராததாக (void) கருதப்படுகிறது?
CHANDRU LAW ACADEMY
கொள்குறி வினாக்கள்
1.இந்திய ஒப்பந்தச் சட்டம், 1872-ன் கீழ் பின்வரும் எந்த ஒப்பந்தம் அமலுக்கு வராததாக (void) கருதப்படுகிறது?
A. ஒரு சிறாருடன் செய்யப்பட்ட ஒப்பந்தம்
B. சுதந்திரமான சம்மதத்துடன் செய்யப்பட்ட ஒப்பந்தம்
C. சட்டபூர்வமான விருப்பத்துடன் செய்யப்பட்ட ஒப்பந்தம்
D. எழுத்துப்பூர்வமாக இல்லாத ஒப்பந்தம்
2. இந்திய ஒப்பந்தச் சட்டத்தின் கீழ் “செல்லா நிலை ஒப்பந்தம்”என்றால் என்ன?
A. சட்டத்திற்கு விரோதமான ஒப்பந்தம்
B. சட்டத்தால் அமல்படுத்த முடியாத ஒப்பந்தம்
C. இருவரது சம்மதத்துடன் செய்யப்பட்ட ஒப்பந்தம்
D. பகுதி அமல்தன்மையுடன் உள்ள ஒப்பந்தம்
3. இந்திய ஒப்பந்தச் சட்டத்தில் செல்லா நிலை உடன்படிக்கையை வரையறுக்கும் பிரிவு எது?
A. பிரிவு 2(e)
B. பிரிவு 2(g)
C. பிரிவு 10
D. பிரிவு 11
4. தவிர்தகு ஒப்பந்தம் என்பதன் அர்த்தம்:
A. சட்டத்தால் முற்றிலும் அமல்படுத்த முடியாதது
B. ஆரம்பத்திலிருந்தே சட்டத்திற்குப் புறம்பானது
C. ஒரு தரப்பால் மட்டுமே அமல்படுத்தக்கூடியது
D. செயல்பட முடியாததனால் அமலற்றதாக மாறுவது
5. தவிர்தகு ஒப்பந்தம் என்பது
A. எழுத்துப்பூர்வமாக செய்யப்படவில்லை
B. சுதந்திரமான சம்மதத்துடன் செய்யப்படுகிறது
C. கட்டாய சம்மதம், தகாத செல்வாக்கு மோசடி அல்லது திரித்து கூறப்படுதல் மூலம் பெறப்பட்டுள்ளது
D. ஒரு தரப்பினர் சிறாராக இருப்பது