Case against Isha dismissed for Isha advocates Sathis parasaran , Gowtham adv chief justice bench
ஈஷா மையத்துக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை ஈஷா மையத்தில், கழிவு நீர் சுத்திகரிப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளாமல், விழாக்களை நடத்த தடை விதிக்க வேண்டும் என, கோவை செம்மேடு கிராமத்தை சேர்ந்த சிவஞானம் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு 2024 ஆம் ஆண்டு வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், ஈஷா யோகா மையத்திலிருந்து சுத்திகரிக்கப்படாமல், கழிவு நீரை அருகில் உள்ள தனது விவசாய நிலங்களில் விடுவதால் கால்நடைகள், மக்கள் பாதிக்கப்படுவதாகவும், நிலத்தடி நீர் மாசடைவதாகவும் தெரிவித்திருந்தார்.
கழிவு நீரை வெளியேற்ற முறையான வசதிகளை செய்யும் வரை விழாக்கள் நடத்துவதற்கும், பக்தர்கள் கூடுவதற்கும் அனுமதிக்க கூடாது என அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, இதே கோரிக்கையுடன் மனுதாரர் தாக்கல் செய்த வழக்கில், போதுமான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், ஒலி அளவு, அனுமதிக்கப்பட்ட அளவில் தான் பயன்படுத்தப்படுகிறது என மாசு கட்டுப்பாட்டு வாரியம் அளித்த அறிக்கையின் அடிப்படையில், கடந்த பிப்ரவரி மாதம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகக் கூறிய தலைமை நீதிபதி அமர்வு, இந்த வழக்கையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.