Bala Murugan Admk: சசி கலா மீது அளிக்கப்பட்ட புகார் குறித்து என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என்ற விவரத்தை வரும் 20 ம் தேதி எழுத்துபூர்வமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய மாம்பலம் காவல் ஆய்வாளருக்கு சைதாப்பேட்டை 17 வது நீதித்துறை நடுவர் மன்றம் உத்தவிட்டுள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் என தன்னை தொடர்ந்து பிரகடனப்படுத்துவதாகவும், இது நீதித்துறையையும், இந்திய தேர்தல் ஆணையத்தையும் அவதிக்கும் செயல் எனவும், அப்படி செயல்படும் சசிகலா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
புகார் அளித்து 2 மாதங்களுக்கு
மாம்பலம் போலீஸார் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத்தால், கடந்த 6 ம் தேதி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அதிமுக தரப்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை இன்று விசாரித்த 17 வது நீதித்துறை நடுவர் மன்றம், அதிமுக சார்பில் மாம்பலம் காவல் நிலைத்தில் அளிக்கப்பட்ட புகாரில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை வருகிற 20 ம் தேதி எழுத்துபூர்வமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று மாம்பலம் காவல் ஆய்வாளருக்கும் 17 வது நீதித்துறை நடுவர் உத்தவிட்டுள்ளார்.
[1/12, 12:42] Sekarreporter 1: 🌹🌹