அனைவரையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நம்
கொரோனா வைரஸின் தீவிரத்தை தடுக்க தமிழக அரசு மேற்கொண்டு வரும் திறமையான செயல்பாடுகள் மற்றும் தமிழகத்தில் உள்ள திறமையான மருத்துவர்களின் அயராத சேவைகள் ஆகியவற்றுடன் ஏக இறைவனின் கிருபையாலும், ஆசியாலும் நிச்சயமாக மாண்புமிகு நீதியரசர்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார்கள் என்பதே நிதர்சனமான உண்மை.
மேலும், இது போன்ற சூழ்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தை திறப்பது மிகவும் தவறான முன்னுதாரணம் ஆகும்.
ஏற்கெனவே, கொரோனா தொற்றால் ஏப்ரல் மாதம் எஸ்பிளனேடு காவல் நிலையம் மற்றும் மே மாதம் பொதுப்பணித்துறை அலுவலகம் ஆகிய இடங்களினால் சென்னை
உயர்நீதிமன்ற வளாகம் முழுவதும் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கொரோனா காலத்திலும் விடாமல் பணியாற்றும்
மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் மத்திய மாநில அரசு வழக்கறிஞர்கள், உயர்நீதிமன்ற அலுவலர்கள், CISF வீரர்கள், தமிழக காவல்துறையினர் மற்றும் Overseers ஊழியர்கள் என அனைவரையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு என்பதை நாம் மறந்து விடக்கூடாது. – முஸ்தகீம் ராஜா Musthaqeem Raja