https://youtu.be/3McVWXYchGw?si=04HAFNhF3Cum4KLu [29/07, 08:21] sekarreporter1: குடும்ப பிரச்சனையில் அமைச்சர் மரிய வில்சன் மற்றும் சகோதரருக்கும் இடையே சமரச பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படாததால் மீண்டும் ஆகஸ்ட் 12 ம் தேதி நேரில் ஆஜராக அமைச்சர் மரியவில்சனுக்கு சென்னை உயர் நீதிமன்ற சமரச தீர்வு மையம் உத்தரவிட்டுள்ளது.
[29/07, 08:21] sekarreporter1:
[29/07, 08:21] sekarreporter1: குடும்ப பிரச்சனையில் அமைச்சர் மரிய வில்சன் மற்றும் சகோதரருக்கும் இடையே சமரச பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படாததால் மீண்டும் ஆகஸ்ட் 12 ம் தேதி நேரில் ஆஜராக அமைச்சர் மரியவில்சனுக்கு சென்னை உயர் நீதிமன்ற சமரச தீர்வு மையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன், கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் தேதி புதுச்சேரி, எழில் நகரில் வசித்து வரும் அவரது சகோதரர் மரிய குலோத் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று மரிய குலோத், அவரது மனைவி கெரோலின் ஆகியோரை தாக்கியதாக லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.
புதுச்சேரி குற்றவியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்ய கோரி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்த வழக்கில் சமரச தீர்வு மையத்தை அணுகி தீர்வு காண சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சமரச தீர்வு மையத்தில் அமைச்சர் மரிய வில்சன் மற்றும் அவரின் சகோதரர் தரப்பில் ஏற்கனவே 2 முறை சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
ஆனால் அதில் தீர்வு எட்டப்படாததால் 3 வது முறையாக இன்று சமரச தீர்வு மைய நீதிபதி பாலசுப்பிரமணியம் முன் அமைச்சர் மரிய வில்சன், அவரின் சகோதரர் மரிய குலோத் ஆகியோர் நேரில் ஆஜராகி சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் இன்றும் தீர்வு எதுவும் எட்டப்படாமல் மீண்டும் வரும் ஆக்ஸ்ட் 12 ம் தேதி அமைச்சர் மரிய வில்சன், அவரின் சகோதரர் ஆகியோர் நேரில் ஆஜராக சமரச தீர்வு மையம் உத்தரவிட்டு பேச்சுவார்த்தையை ஒத்தி வைத்துள்ளது.
(( ஹாஜா மொகைதீன் கிஸ்தி, வழக்கறிஞர்))