பார் கவுன்சில் உறுப்பினர்கள் 32 ஆக உயர்த்த டெல்லியில் bci தீர்மானம்

இந்தியா பார் கவுன்சில் நேற்று நிறைவேற்றியுள்ள தீர்மானத்தின்படி, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 18 வெற்றியாளர்களுடன் மட்டுமல்லாமல், அடுத்த அதிக வாக்குகள் பெற்ற 7 வேட்பாளர்களையும் சேர்த்து, சட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட 25 உறுப்பினர்களைக் கொண்ட பார் கவுன்சில் அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது…

மேலும், அந்த 25 உறுப்பினர்களில் ஒரு பெண் உறுப்பினரும் இல்லாத நிலையில், தேர்தலில் போட்டியிட்ட பெண் வேட்பாளர்களில் அதிக வாக்குகள் பெற்ற முதல் 7 பேரை கூடுதலாக இணைத்து, மொத்த உறுப்பினர் எண்ணிக்கையை 32 ஆக உயர்த்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது…

இந்தத் தீர்மானம் நாளை உச்ச நீதிமன்றத்தில் நடைபெறவுள்ள விசாரணையில் பரிசீலிக்கப்பட உள்ளது. உச்ச நீதிமன்றம் இதனை ஏற்று உத்தரவிட்டால், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் 32 உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பாக உருவாகும் வாய்ப்பு உள்ளது…

இதுகுறித்த இறுதி முடிவு உச்ச நீதிமன்றத்தின் உத்தரவையே சார்ந்துள்ளது!!!

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com