உயர் நீதிமன்றம் புகழேந்தியின் மனுவை ஏற்று அரசு தரப்பு பதில் அளிக்க உத்தரவு எடப்பாடி அரசால் புகழேந்தி மீது போடப்பட்ட வழக்கு ரத்து செய்ய கோரிய மனு ஏற்பு அரசு தரப்பிற்கு பதில் அளிக்க உத்தரவு for petner. Advt Thirumoorthy
உயர் நீதிமன்றம் புகழேந்தியின் மனுவை ஏற்று அரசு தரப்பு பதில் அளிக்க உத்தரவு
எடப்பாடி அரசால் புகழேந்தி மீது போடப்பட்ட வழக்கு ரத்து செய்ய கோரிய மனு ஏற்பு அரசு தரப்பிற்கு பதில் அளிக்க உத்தரவு
எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் போது அரசியல் பழிவாங்கும் நோக்கத்தோடு நீட் தேர்வு வேண்டாம் என்று போராட்டம் நடத்தியதாக வா புகழேந்தி மற்றும் பலர் மீது தேசத்துரோக வழக்கு தொடரப்பட்டது ஏழு வருடங்களாக அந்த வழக்கு காவல்துறையினரால் விசாரணை செய்யப்படாமல் கிடப்பில் போடப்பட்டது இதனால் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்படவில்லை எனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் புகழேந்தி மீது பொய் வழக்கு தொடரப்பட்டுள்ளது இதற்கு எந்த ஆதாரமும் இல்லை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை தேவையில்லாமல் இதை நிலுவையில் வைத்திருந்தார்கள் எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டது இந்த விவரங்களை வழக்கறிஞர் திருமூர்த்தி எடுத்துரைத்தார் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் பேரில் இதுபோன்ற வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதம் செய்தார் இதனை கேட்டு அறிந்த நீதிபதி இளந்திரையன் அவர்கள் மனுவை ஏற்றுக் கொண்டு அரசு தரப்பிற்கு பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளார்