Mylapore benafit fund case Ab dismissed

மைலாப்பூர் நிதி நிறுவன மோசடி பிணை மனு தள்ளுபடி

600 கோடி மைலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளி தேவநாதன்யாதவ் கூட்டாளியான மற்றொரு குற்றாவாளி சுதிர் சங்கர், தான் நீண்ட நாட்களாக சிறையில் இருப்பதாகவும், தான் நிதி நிறுவனத்தில் இயக்குனர் பொறுப்பில் இருந்ததை தவிர வேறு எந்த தவறும் செய்ய வில்லை எனவும் எனவே தனக்கு பிணை தர வேண்டுமென உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து 25/6/2026 அன்று வாதங்கள் முடிந்து இன்று உத்தரவுக்காக ஒந்திவைக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட வைப்பீட்டாளர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் திருமூர்த்தி பிணை கொடுக்க கூடாதென கடுமையான ஆட்சேபணை தெரிவித்தார், ஏராளமான ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதார மொத்த சேமிப்பை சூறையாடி, 100 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்த நிறுவனத்தினை திவாலாக்கியுள்ளனர் என்றும், ஏற்கனவே விதித்த 100 கோடி டெபாசிட் நிபந்தனையை நிறை வேற்றவில்லை எனவும் வாதிட்டார்.
நீதிபதி குமரப்பன் அவர்கள் பிணை மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தார்.

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com