அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் அசையும் சொத்துக்களின் மதிப்பு ஓரளவு கூடியிருந்தாலும், அவரது

அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் அசையும் சொத்துக்களின் மதிப்பு ஓரளவு கூடியிருந்தாலும், அவரது மனைவியின் சொத்து இரட்டிப்பாகியிருப்பது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வருமான வரித்துறைகக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

திண்டுக்கல் தொகுதி வாக்காளர் பால்ராஜ் சுந்தரம் தாக்கல் செய்துள்ள வழக்கில், 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டபோது அசையும் சொத்துக்கள் 43,56,291 ரூபாய் 46 காசுகள் என தெரிவித்திருந்த திண்டுக்கல் சீனிவாசன், தற்போதைய வேட்புமனுவில் 46 லட்சத்து 7 ஆயிரத்து 22 ரூபாய் 83 காசுகள் சொத்துகள் இருப்பதாக கூறுவது ஏற்றுக்கொள்ளக்கூடிய உயர்வுதான்; ஆனால் அவரது மனைவியின் பெயரில் உள்ள அசையும் சொத்துக்களின் மதிப்பு 2021ல் 46 லட்சத்து 92 லட்சத்து ஆயிரத்து 338 ரூபாய் 29 காசுகளிலிருந்து, தற்போது 95 லட்சத்து 302 ரூபாய் 35 காசுகளாக உயர்ந்துள்ளதன் மூலம் , மனைவியின் சொத்து இரட்டிப்பாகியுள்ளதாக மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

வங்கி இருப்பு, முதலீடுகள், பங்குகள் ஆகியவற்றின் உயர்வும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவில் இருந்தாலும், சொத்து இரட்டிப்பாவதற்கான அளவுக்கு வருவாய் ஆதாரங்களை வெளிப்படுத்தாமல் மறைத்துள்ளார்; 2026ல் 17 கோடியே 67 லட்சத்து 11 ஆயிரம் மதிப்பிலான அசையா சொத்துக்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ள நிலையில், அவர் 2021ல் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுவில் இதுதொடர்பான தகவல் ஏதும் இடம்பெறவில்லை என்பதை மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

திண்டுக்கல் சீனிவாசனின் வருமானம் 7 லட்சத்து 50 ஆயிரத்து 560 ரூபாய் முதல் 16 லட்சத்து 96 ஆயிரத்து 370 ரூபாய் வரையிலும் இருப்பதாகவும், மனைவியின் வருமானம் 2 லட்சத்து 16 ஆயிரத்து 750 ரூபாய் முதல் 5 லட்சத்து 45 ஆயிரத்து 250 ரூபாய் வரையிலும் குறிப்பிட்டுள்ள நிலையில், அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் மதிப்பு அதிகரித்திருக்கும் அளவு இயல்புக்கு மாறானவை; பிற சொத்துகள், வங்கி வருமானம், நகை உள்ளிட்டவற்றின் தகவல்களும் முழுமையாக வெளிப்படுத்தப்படவில்லை

இந்த குற்றச்சட்டுகள் குறித்து ஏப்ரல் 15ல் அளித்த புகார்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை என்பதால், திண்டுக்கல் சீனிவாசனின் வேட்புமனுவுடன் தாக்கல் செய்துள்ள சொத்து விவரங்களில் உண்மை தகவல் மறைக்கப்பட்டது குறித்து வருமான வரித்துறை ஆரம்பகட்ட விசாரணை நடத்தி, தேர்தலுக்கு முன்பாக அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com