குக் வித் கோமாளி ரியாலிட்டி ஷோ chief justice bench

குக் வித் கோமாளி ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சிக்கு தடை விதிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரபல தனியார் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி என்ற பெயரில் சமையலுடன் நகைச்சுவை கலந்து ரியாலிட்டி ஷோ நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிகழ்ச்சியை ஒளிப்பரப்ப தடை விதிக்க வேண்டும் என செய்யது அலிம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கொடுக்கப்படும் சமையல் டாஸ்க்குகள் உணவுப் பொருட்கள் வீணடிக்கும் விதத்தில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக பிரபல தனியார் தொலைக்காட்சி, மத்திய தகவல் ஒளிப்பரப்பு துறை மற்றும் உணவுப்பாதுகாப்பு துறைக்கு மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் மனுவில் தெரிவித்துள்ளார்.

மேலும் உணவுப் பொருட்களை வீணடிப்பது அரசியலமைப்பு உரிமைகளை மீறும் செயல் என்பதால் அந்நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், தயாரிப்பாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா, அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கின் விசாரணைக்கு யாரும் ஆஜராகவில்லை.

இதையடுத்து உத்தரவிட்ட நீதிபதிகள், யாரும் ஆஜாரகாததால் பொது நல வழக்கு தள்ளுபடி செய்யப்படுவதாக உத்தரவிட்டனர்.

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com