Supremecourt Advt Gs Mani: கரூர் சம்பவம் தொடர்பாக பாஜக வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு

[08/10, 10:08] Sekarreporter: 👍
[08/10, 10:08] Supremecourt Advt Gs Mani: கரூர் சம்பவம் தொடர்பாக பாஜக வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு.

தமிழக வெற்றி கழக தலைவரும் நடிகருமான விஜய் கடந்த செப்டம்பர் 27 அன்று கரூரில் அரசியல் கூட்டம் நடத்தினர்.

அந்த கூட்ட நெரிசலில் சிக்கி 41 அப்பாவி பொதுமக்கள் அடிபட்டும் மிதிபட்டும் மூச்சு திணறியும் உயிரிழந்தனர்.

இந்த துயர சம்பவம் நடப்பதற்கு முழுக்க முழுக்க காரணம் தமிழக கரூர் மாவட்ட காவல்துறை மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் அலட்சியமும் மெத்தனப்போக்கும் தான் காரணம் எனவும்.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அரசியல் பொதுக்கூட்டம் மற்றும் தேர்தல் பிரச்சாரம் நடத்துவதற்கு சரியான இடத்தை தேர்வு செய்யாததும் காவல்துறை சரியான இடத்திற்கு அனுமதி அளிக்காததும் கூட்ட நெரிசல் உள்ள சாலையில் அனுமதி அளித்தது தான் இந்தத் துயர உயிரிழப்பு சம்பவம் நடப்பதற்கு காரணம் எனவும்.

இது அரசியல் பழிவாங்கும் நோக்கத்தோடு நடந்த துயர சம்பவம் என்றும், ஆகையால் சம்பந்தப்பட்ட அனைத்து காவல்துறை, மாவட்ட நிர்வாக துறை, மின்சார துறை மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது வழக்கு பதிந்து முறையான நீதி விசாரணை நடக்க சிபிஐ அல்லது பதவியில் உள்ள அல்லது ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழு அமைக்க உத்திரவிட வேண்டுமென பாஜக வழக்கறிஞர் ஜிஎஸ் மணி உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்குகள் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு விடுமுறை கால அமர்வு நீதியரசர் தண்டபாணி அடங்கிய அமர்வு முன் 03.10.2025 அன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது வழக்கு விசாரணை ஆரம்ப நிலையில் உள்ளதால் மனுதாரர்கள் பாதிக்கப்பட்ட நபர்கள் இல்லை என்பதால் சிபிஐ மற்றும் சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு உத்தரவிட முடியாது என்றும் மேலும் உயிரிழந்த மற்றும் படுகாயம் அடைந்த மக்களுக்கு கூடுதல் இழப்பீடு தற்போது வழங்க முடியாது என்றும் அனைத்து பொதுநல மனுக்களையும் தள்ளுபடி செய்தனர்.

இந்த உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து பாஜக வழக்கறிஞரும் மனுதாரருமான ஜி எஸ் மணி உச்சநீதிமன்றத்தில் இன்று மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில் தமிழக காவல்துறையும் மாவட்ட நிர்வாகமும் வேண்டுமென்றே தீய எண்ணத்தோடு அரசியல் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலையில் அனுமதி அளித்துள்ளது.

இந்த சம்பவம் நடந்த இடத்தில் 5000 நபர்கள் கூட ஒன்று கூட முடியாத இடத்தில் முப்பதாயிரம் பேர் வருவார்கள் என்று தெரிந்தும் அனுமதி அளித்தது.

இந்த அனுமதியை ஏற்று அந்த இடத்தில் பொதுக்கூட்டம் நடத்தியது சட்டவிரோதம் மட்டுமல்ல மிகப்பெரிய கிரிமினல் குற்றமாகும்.

இது மரணத்தை உண்டாக்கும் நோக்கத்துடன் அல்லாத குற்றம் இழைக்க கூடிய கொலை குற்றமாகும்.

மேலும் உயிரிழந்த அப்பாவி குடும்பங்களுக்கும் காயமடைந்த நபர்களுக்கும் அரசும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்களது கவனக்குறை மற்றும் அலட்சியப் போக்கே காரணம் என்பதால்.

இருவரும் பொறுப்பேற்று அரசு தலா 50 லட்சமும் நடிகரும் தமிழக வெற்றி கழக தலைவருமான விஜய் அவரது கட்சி தலா ஒரு கோடி இறப்பீடு வழங்க வேண்டு உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதுபோன்ற மிகப்பெரிய உயிரிழப்பு சம்பவத்தை தனிநபர் ஆணையமோ, உள்ளூர் காவல் ஆய்வாளரோ அல்லது ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகளின் சிறப்பு புலனாய்வு விசாரணை நடத்தினால் சரியான, முறையான நீதி விசாரணை நடக்காது என்றும் கிரிமினல் விசாரணை என்பது அனைவருக்கும் கொடுக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமையாகும் அது நேர்மையாகவும் நியாயமாகவும் இருக்க நீதிமன்றம் உறுதி அளிக்கும் வகையில் தீர்ப்பு வழங்க வேண்டும் என்றும் இந்த அடிப்படை உரிமையை பெறுவதற்கு அனைத்து குடிமக்களுக்கும் உரிமை உண்டு என்றும் அதற்கு யார் வேண்டுமானாலும் நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவின் வழக்கு விசாரணை விரைவில் உச்சநீதிமன்றத்தில் வரவுள்ளது.

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com