பெண் கராத்தே பயிற்சியாளருக்கு, 20 ஆண்டு கடுங்காவல்
[07/10, 10:46] Sekarreporter: பள்ளி மாணவியை கடத்தி சென்று பாலியல் தொந்தரவு அளித்த பெண் கராத்தே பயிற்சியாளருக்கு, 20 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து, சென்னை மாவட்ட சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னையை பெரவள்ளூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து மாணவி கடந்த 2024ம் ஆண்டு, பள்ளிக்கு சென்ற வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து, சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், பெரவள்ளூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அதே பள்ளியில் பணிபுரிந்த 27 வயதான பெண் கராத்தே பயிற்சியாளர் கடத்தி சென்று, பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்தது தெரியவந்தது.
இதையடுத்து, கராத்தே பெண் பயிற்சியாளர் ஜெயசுதா என்பவரை, போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரித்த சென்னை போக்சோ’ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.பத்மா, பெண் கராத்தே பயிற்சியாளர் மீதான குற்றச்சாட்டு, அரசு தரப்பால் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளது என கூறி, அவருக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட குழந்தைக்கு ஒன்றரை லட்சம் இழப்பீடாக வழங்கவும் உத்தரவிட்டார்.
[07/10, 10:46] Sekarreporter: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை அவமதிக்கும் காலணி வீச முயன்ற செயலுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் கண்டனம்
பார்கவுன்சில் தலைவர் அமல்ராஜ் கண்டன அறிக்கை வெளியிடு
ஜனநாயகத்தின் தூணாக திகழும் நீதிமன்றங்கள், நீதிபதிகள் மீதான எந்தவொரு அவமதிப்பையும் கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது.
நீதித்துறையின் மாண்பை அவமதிக்கும் வகையில் செயல்பட்டவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்