போலி இன்ஸ்சூரன்ஸ் மோசடி குறித்து விசாரணை நடத்த கோரிய வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஸ்

போலி இன்ஸ்சூரன்ஸ் மோசடி குறித்து விசாரணை நடத்த கோரிய வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஸ் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இன்ஸ்சூரன்ஸ் நிறுவனம் சார்பில் ஆஜரான வக்கீல், தமிழகம் முழுவதும் போலி இன்ஸ்சூரன்ஸ் மோசடி குறித்து விசாரணை நடத்த உயர் போலீஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு குழு அமைக்கப்பட்டது. இந்த குழு விசாரணையை தொடங்கியது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இந்த தடையை தற்போது சுப்ரீம் கோர்ட் நீக்கி உள்ளது. எனவே இந்த இன்ஸ்சூரன்ஸ் மோசடி வழக்குகளை விரைவாக விசாரிக்க கோர்ட் சிறப்பு போலீஸ் குழுவுக்கு உத்தரவிட வேண்டும், மேலும் இன்ஸ்சூரன்ஸ் கம்பெனிகள் கொடுத்த ரூ.105 கோடி இன்சூரன்ஸ் மோசடி தொடர்பாக 467 புகார்கள் மீது இதுவரை போலீசார் எப்ஐஆர் பதிவு செய்யவில்லைை. எனவே எப்ஐஆர் பதிவு செய்து அதை சிறப்பு புலனாய்வு குழுவுக்கு அனுப்ப ஐகோர்ட் உத்தரவிட வேண்டும் என்றார்.
அப்போது போலீஸ் தரப்பில் அரசு வக்கீல் ராஜ்திலக் ஆஜராகி, போலி இன்ஸ்சூரன்ஸ் மோசடி சிறப்பு குழு விசாரணை நடத்த தயாராக உள்ளது என்றார்.இதை கேட்ட நீதிபதி, தமிழகம் முழுவதும் ரூ.105 கோடி இன்ஸ்சூரன்ஸ் மோசடி புகார்கள் 467 மீது இதுவரை தமிழகத்தில் பல இடங்களில் போலீசில் நிலையத்தில் கொடுத்த புகார்கள் மீது இதுவரை வழக்கு பதிவு செய்யவில்லை. எனவே இந்த புகார்கள் மீது உடனே எப்ஐஆர் என்ற வழக்குகளை பதிவு செய்து சிறப்பு புலனாய்வு குழுவுக்கு அனுப்ப வேண்டும். அந்த குழு இந்த எப்ஐஆரை விசாரிக்க வேண்டும் என்றும், ஓசூர் மோட்டார் வாகன கோட்டில் 82 போலி இன்ஸ்சூரன்ஸ் மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது , விசாரணை நடந்து வருகிறது.இதில் சம்பந்தப்பட்ட வக்கீல்கள் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும். மேலும் கோர்ட்டில் உள்ள ஆவணங்கள் கானாமல் போய்விட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கோர்ட்டில் உள்ள ஆவணங்கள் எப்படி கானாமல் போனது என்பது குறித்து ஓசூர் கோர்ட் நீதிபதிகள் உரிய விசாரணை நடத்தி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் புகார் அளிக்க வேண்டும். இந்த விசாரணையை குறித்த அறிக்கையை அடுத்த மாதம் 17ம்தேதி அறிக்கையாக ஐகோர்ட்டில் நீதிபதிகள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com