ஆதிசைவ சிவாச்சாரியார் வழக்கானது இன்று உச்ச நீதிமன்றத்தில்

ஆதிசைவ சிவாச்சாரியார் வழக்கானது இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வழக்கு பட்டியலில் இருந்த நிலையில், இதனை அவசர வழக்காக விசாரிக்க கோரி அர்ச்சகர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் திரு P.வள்ளியப்பன் அவர்களால் கோரிக்கை வைக்கப்பட்டது.
அதனை ஏற்றுக் கொண்ட மாண்புமிகு நீதியரசர்கள் அமர்வு இந்த வழக்கினை மதியம் 1.00 மணி அளவில் விசாரிப்பதாக கூறினர்.

ஆகம கோயில்களை கண்டறியும் கமிட்டியில், திரு சக்தியவேல் முருகன் என்பவரை நீக்க உத்தரவிட்டு வேறு ஒருவரை நியமிக்க உச்சநீதிமன்றம் கடந்த முறை தீர்ப்பளித்தது. இவருக்கு பதிலாக திரு. முருகவேல் என்பவரை புதிய உறுப்பினராக தமிழக அரசு நியமித்தது. இவ்வாறு அவரை நியமித்தது தவறு என அர்ச்சகர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. மேலும் அவர் ஆகமத்திற்கு விரோதமாக பல கருத்துக்களை
கூறிவந்துள்ளார் எனவும், சர்ச்சைக்குரிய மனிதர்களை இந்த கமிட்டியில் நியமிக்க கூடாது எனவும் அர்ச்சகர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் திரு. ஜெயதீப் குப்தா, தமிழகத்தின் அட்வகேட் ஜெனரல் திரு பி எஸ் ராமன், திரு சண்முகசுந்தரம் ஆகியோர் இந்த வழக்கில் ஆஜராகினர்.

அர்ச்சகர்கள் தரப்பு வாதத்தை ஏற்றுக் கொண்ட மாண்புமிகு நீதியரசர்கள் அமர்வு உத்தரவு பிறப்பித்தது. நீதியரசர் எம் எம் சுந்தரேஷ் மற்றும் நீதியரசர் சதீஷ் சந்திர சர்மா அடங்கிய அமர்வு சர்ச்சைக்குரிய நபர்களை இந்த கமிட்டியில் உறுப்பினராக நியமிப்பது வேண்டாம் என்ற இரு தரப்பினரையும் கேட்டுக்கொண்டு, ஸ்ரீலஸ்ரீ நாராயண தேசிக சுவாமிகள் கோவிலூர் மடாலயம் அவர்களை இந்த கமிட்டியில் உறுப்பினராக நியமிப்பது தொடர்பாக இரு தரப்பு வாதங்களையும் கேட்க அடுத்த வெள்ளிக்கிழமை 26.09.2025 அன்று இந்த வழக்கினை ஒத்தி வைத்தனர்.

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com