நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் சந்திரமோகன் மற்றும் நிதித்துறை செயலாளர் உள்ளிட்டோர் வரும் அக்டோபர் 10ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது

நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் சந்திரமோகன் மற்றும் நிதித்துறை செயலாளர் உள்ளிட்டோர் வரும் அக்டோபர் 10ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது

பி.தேவராஜுலு என்ற முதுகலை தெலுங்கு ஆசிரியர்,

இவர் தற்போது அதிமஞ்சேரிப் பேட்டை, திருவள்ளூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றி வருகிறார்,

இவர் கடந்த 14/8/2003 அன்று பட்டதாரி ஆசிரியராக பணி நியமனம் செய்யப் பட்டார்,

மேற்கண்ட பணி நியமன நடைமுறையானது கடந்த 7/9/2001 ல் காலிப் பணியிட அறிக்கை வெளியிடப்பட்ட நாளிலிருந்து தொடங்குகிறது. இந்நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் 2003 ல் ஆசிரியர் தேர்வினை அறிவித்தது.

எழுத்து தேர்வு கடந்த 20/7/2003 அன்றும் 31/7/2003 அன்று புரவிஷனல் தேர்வு ஆனை மனுதாரருக்கு அனுப்பி வைக்கப் பட்டது.இந்நிலையில் தமிழக அரசு 6/8/2003 அன்று அரசாணை எண் 259 ஐ வெளியிட்டு நாண்கு மாதங்களுக்கு முன்பிருந்தே அதாவது 1/4/2003 லிருந்தே அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் கிடையாது, பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மட்டுமே என அறிவித்தது,

இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆசிரியர் தேவராஜனும் வழக்கு தொடர்ந்தார் அவர் தனது வழக்கு மனுவில்
இதில் அரசு ஊழியர்களுக்கு பெரும் நிதியிழப்பு ஏற்பட்டது. இவ்வாறு முன் தேதியிட்டு பணப் பலன்களை குறைப்பது அரசியலமைப்பு சட்டம் 14 மற்றும் 16 க்கு எதிரானது என உச்ச நீதிமன்றம் பல்வேறு தீர்ப்புகளை வழங்கியுள்ளது.ரங்கதாமய்யா மற்றும் துஷார் ரஞ்சன் மொகந்தி போன்ற வழக்குகள் உள்ளன.மேலும் தமிழகத்தை சேர்ந்த ரஞ்சித ராஜ் என்பவர் வழக்கிலும் பணி நியமன நடைமுறைகள் 6/8/2003 க்கு முன்பே துவங்கி இருந்தால் அவர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டமே பொருந்தும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு வழங்கி உள்ளது என்று மனுவில் கூறி இருந்தார் .

மேலும் அந்த மனுவில் ,பணி நியமன நடைமுறைகள் 6/8/2003 க்கு முன்பே துவங்கி இருந்தால் அவர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டமே பொருந்தும் என தீர்ப்பு வழங்கி உள்ளது.இந்த வழக்குகளை முன்னுதாரணமாக கொண்டு தனக்கும் பழைய ஓய்வூதிய திட்டமே பொருந்தும் என மனுதாரர் தேவராஜுலு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதியரசர் ஆனந்த வெங்கடேஷ் முன்பு கடந்த 2024 அன்று விசாரணைக்கு வந்த போது மேற்கண்ட நீதிமன்ற தீர்ப்பு ஆனைகளை பின்பற்றி முடிவெடுக்குமாறு உத்தரவிட்டார்.

ஆனால் மனுதாரரின் மனுவை முறையாக விசாரணை செய்யாமல் கல்வி துறை அரசு முதன்மை செயலாளர் சந்திர மோகன் நிராகரிப்பு ஆனையினை பிறப்பித்தார்.

ஏற்கனவே உள்ள உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை முறையாக பரிசீலனை செய்து பழைய ஓய்வூதியத்தினை வழங்காத முதன்மை செயலாளர் சந்திர மோகனுக்கு எதிராக ஆசிரியர் தேவராஜூலு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது,

மனுதாரர் வழக்கறிஞர் வாதத்தினை கேட்ட மாண்புமிகு நீதிபதி, நீதிமன்ற தீர்ப்பினை செயல் படுத்தாத பள்ளி கல்வி துறை முதன்மைச் செயலாளர் சந்திர மோகன், மற்றும் நிதித் துறை செயலாளர், அக்கவுண்ட் ஜெனரல் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்,

இவ் வழக்கினை 10/10/2025 க்கு ஒத்தி வைக்கப்பட்டது

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com