மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம், மருத்துவர்கள் 10 லட்ச ரூபாய் இழப்பீடு
மூக்கடைப்பு சிகிச்சைக்காக வந்த பெண் மூளைச்சாவு ஏற்பட்டு மரணமடையை, மருத்துவர்களின் அலட்சியமே காரணம் என தீர்மானித்த மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம், மருத்துவர்கள் 10 லட்ச ரூபாய் இழப்பீடு 
வழங்க உத்தரவிட்டுள்ளது.
பி. ஹெச். இ. எல். நிறுவன ஊழியரான சென்னை திருவான்மியூரை சேர்ந்த போஜய்யா என்பவரின் 38 வயதான மனைவி தேவேந்திரம், மூக்கடைப்பு மற்றும் தலைவலி காரணமாக பாதிக்கப்பட்டதால், 2005 ஆம் ஆண்டு வடபழனியில் உள்ள விஜயா மருத்துவமனையில் செயல்பட்டு வரும், சி. சத்யநாராயணா காது மூக்கு தொண்டை ஆராய்ச்சி அமைப்பின் மருத்துவர் ரங்கா ராவிடம் சிகிச்சைக்காக அழைத்தச்சென்றுள்ளார்.
மருத்துவக் குழுவின் ஆலோசனைப்படி எண்டாஸ்கோபிக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் இதயம் செயலிழந்துவிட்டதாகவும், மூளைச்சாவு அடைந்துவிட்டதாகவும் கூறி ஐ.சி.யூ.வுக்கு கொண்டுசெல்லப்பட்ட தேவேந்திரம், வெண்டிலேட்டரில் வைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் இறந்துவிட்டதாக 2005 அக்டோபர் 12ஆம் தேதி மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தனது மனைவி மரணத்துக்கு காரணமான அலட்சியம், கவனக்குறைவு. சேவை குறைபாடு ஆகியவற்றுக்காக விஜயா மருத்துவமனை, அறுவை சிகிச்சை நிபுணர்கள், மயக்கவிய்யல் நிபுணர் ஆகியோர் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடக் கோரி மாநில நுகர்வோர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு ஆணையத்தின் தலைவரான நீதிபதி ஆர். சுப்பையா முன்பு விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் போஜய்யா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தேன்மொழி சிவபெருமாள், தேவேந்திரம் அனுமதிக்கப்பட்ட நிலையில், அடிப்படை பரிசோதனைகளை மேற்கொள்ளாமலும், ஹீமோகுளோபின் அளவு குறைவு, ரத்த சர்க்கரை அளவு உயர்வு, காலை உணவுக்கு பிறகான இடைவெளி ஆகியவற்றை கருத்தில் கொள்ளாமல், மயக்க மருந்து கொடுக்கப்பட்டதாளா மூளை சாவு ஏற்பட்டுள்ளதாகவும், அதன்பிறகும் மறுத்துவமனை நிர்வாகம் முறையான சிகிச்சை அளிக்காததால் தான் மனுதாரர் தனது மனைவியை பறிகொடுத்து உள்ளதாகவும் வாதிட்டார். காது மூக்கு தொண்டை நிபுணர்களின் சிகிச்சையால் மரணமடைந்த பிறகே, ஐசியூ-வுக்கு மாற்றப்பட்டாரா என்ற பெருத்த சந்தேகம் இருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.
விஜயா மருத்துவமனை தரப்பில், தங்கள் வளாகத்தில் மருத்துவ ஆலோசனை அறைகளுக்கு மருத்துவர்கள் செலுத்தி இடத்தை பயன்படுத்திக்கொள்வதாகவும், தங்களுக்கிடையே முதலாளி தொழிலாளி நடைமுறை ஏதும் இல்லை என்பதால், அவர்கள் அளிக்கும் சிகிச்சை தொடர்பான எந்தவொரு பிரச்சினைக்கும் சம்பந்தப்பட்ட ஆலோசகரே பொறுப்பேற்க முடியும் என தெரிவிக்கப்பட்டது.
சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தரப்பில், தீவிர தலைவலி, சைனஸ் போன்றவற்றிற்காக பல மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்று, ஸ்டீராயடு எடுத்தும் பலனலிக்காதால்தான் தங்களை நாடியதாகவும், அதன்பிறகான சிகிச்சையில் அலட்சியமோ, கவனக்குறைவோ, குறைப்பாடோ இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. மூளை நரம்பில் உள்ள வீக்கம் அல்லது மூளைக் கட்டியிலிருந்து ரத்தம் கசிந்ததாலோ தான் நோயாளி இறந்ததாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்ககளையும் கேட்ட ஆணைய தலைவர், நீதிபதி ஆர்.சுப்பையா பிறப்பித்த உத்தரவில், காலை சிற்றுண்டிக்கு பிறகு 6 மணி நேரம் கழித்தே மயக்கி மருந்து கொடுக்கப்பட வேண்டும் என்ற நடைமுறை கடைபிடிக்கவில்லை என்பதையும். நோயாளிக்கு உள்ள உபாதைகளுக்கான செயல்முறைகளை மருத்துவர்கள் கருத்தில் கொள்ளவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். அறுவை சிகிச்சையை தொடங்குவதற்கு முன், நோயாளிக்கு அதிகரித்த சர்க்கரை அளவு, குறைந்த ஹீமோகுளோபின் அளவீடு, முழு அளவிலான காலை உணவுக்கு பிறகு சிகிச்சைக்கு வந்தது ஆகிய எதிர்மறைகளை மருத்துவர்கள் முழுமையாக மறந்துவிட்டனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
எனவே மருத்துவர்களின் அலட்சியமே மரணத்திற்கு காரணம் என்பது உறுதி செய்யப்படுவதாலும், மருத்துவமனையுடன் முதலாளி தொழிலாளி என்கிற தொடர்பு இல்லாததாலும், தேவாமிர்தம் இறப்புக்கு மருத்துவர்களே காரணம் என தீர்மானிப்பதாக அவர் உத்தரவிட்டுள்ளார். அதேசமயம், ஓராண்டுக்கு மேலாக உபாதைகள் இருந்துவந்து, அதற்காக எடுத்த சிகிச்சைகள் குறித்து மனுதாரர் குறிப்பிட தவறியதையும் கவனத்தில் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, சிகிச்சை அளித்தவர்களில் மருத்துவர் ரங்கா ராவ் இறந்துவிட்டதால், மற்றொரு அறுவை சிகிச்சை நிபுணர் எம்.ஜெயராமி ரெட்டி மற்றும் மயக்கவியல் நிபுணர் ஏ. கிருஷ்ணமூர்த்தி ஆகியோர், இழப்பீட்டு தொகையாக 10 லட்சம் ரூபாயும், வழக்கு செலவு தொகையாக 50 ஆயிரம் ரூபாயும் மனுதாரர் போஜய்யா மற்றும் அவரது 3 மகள்ளுக்கும் 8 வாரங்களில் வழங்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.