madras high court Reporter. Mukesh : interview with RC paul kanakaraj regarfing 30 days jail term issue

[25/08, 15:45] madras high court Reporter. Mukesh : interview with RC paul kanakaraj regarfing 30 days jail term issue

தவறு செய்தால் உடனடியாக தண்டிக்கப்படுவோம் என அரசியல்வாதிகள் உணரும் வகையிலேயே, 30 நாட்கள் சிறையில் இருந்தாலே பதவியை பறிக்கும் மசோதா மத்திய அரசால் கொண்டுவரப்பட்டு உள்ளதாக பிஜேபி மாநில துணைத் தலைவரும், பிரபல வழக்கறிஞருமான ஆர். சி. பால் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

பிரதமர், முதலமைச்சர், அமைச்சர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் குற்ற வழக்கில் 30 நாட்கள் சிறையில் இருந்தாலே பதவியை பறிக்கும் வகையிலான புதிய மசோதாவை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றால் மட்டுமே மக்கள் பிரதிநிதிகளை பதவியிலிருந்து நீக்க முடியும் என்ற நடைமுறை இருந்துவருகிறது. கைது நடவடிக்கைக்கு முன்பாக அமைச்சர்கள் ராஜினாமா செய்துவரும் சூழலில், இதை மாற்றும் வகையில், ஊழல் உள்ளிட்ட கடுமையான குற்றச்சாட்டில் கைது செய்யப்படும் பிரதமர், முதல்வர், அமைச்சர் என எவராக இருந்தாலும், 30 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டால், 31வது நாளன்று பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனவும், இல்லாவிட்டால் பதவியை பறிக்கும் வகையில் புதிய சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், இந்த சட்டத்திருத்த மசோதா குறித்து பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவரும், பிரபல வழக்கறிஞருமான ஆர். சி. பால் கனகராஜ் அவர்களிடம் பேசியபோது, அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் மீதான ஊழலை வெளிக்கொண்டுவந்து, விசாரணை நடத்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ள லோக் பால், லோக் ஆயுக்தா சட்டம் ஏற்கனவே இருக்கும் நிலையில், அதைவிட கூடுதல் அதிகாரம் வழங்கும் வகையில்0 தான் தனிச் சட்டமாக கொண்டுவருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும் என குறிப்பிட்டார். மத்திய அரசு மேற்கொண்டுள்ள இந்த நடைமுறை உண்மையிலேயே பாராட்டக்கூடிய ஒன்றுதான் என்றும், ஒவ்வொரு குடிமகனும் இந்த சட்டத்தை வரவேற்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

குறிப்பாக இந்த மசோதாவின் நோக்கம் குறித்து விளக்கிய பால் கனகராஜ், பொதுமக்கள், அமைச்சர், முதலமைச்சர், பிரதமர் என எவர் செய்தாலும் தவறு தவறுதான் என்கிற நிலையில், சாதாரண பாமர மனிதன் முதல் பிரதமர் வரை அனைவருக்கும் ஒரே சட்டம் தான் என்பதை சட்டம் தெளிவுபடுத்துவதாக குறிப்பிட்டார்.

பொதுமக்கள் தவறு செய்தால், என்ன தண்டனை, எந்த வேகத்தில் கிடைக்குமோ, அதே தண்டனை அதே வேகக்கில் நமக்கு கிடைக்கும் என்ற பயத்தில், அரசியல்வாதிகள் ஊழலற்ற ஒர் ஆட்சியை தருவார்கள் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

குறிப்பாக, அமைச்சர், முதலமைச்சர், பிரதமர் என யாராக இருந்தாலும், தவறு செய்யாவிட்டால் அவர்கள் ஏன் பயப்பட வேண்டும் என கேள்வி எழுப்பிய பால் கனகராஜ், தவறு செய்யாமல் இருப்பேன் என்று சொல்வதை விட்டுவிட்டு, தவறு செய்தாலும் தன்னை தண்டிக்கக்கூடாது என்பதில் நியாயமே இல்லை என்றும் தெரிவித்தார்.

விசாரணை அமைப்புகள் தவறாக பயன்படுத்தப்படுவார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பதிலளித்த வழக்கறிஞர் பால் கனகராஜ், இது முற்றிலும் தவறான குற்றச்சாட்டு என்றும், இதை பொதுவான, சமமான சட்டமாக பாவிக்கவேண்டும் என்றும், தவறுக்கு ஏற்றவாறு உடனடியாக தண்டிக்கப்படுவோம் என அரசியல்வாதிகள் உணர வேண்டும் என்றும் அவர் கூறினார்.

உடனடியாக பதவி பறிக்கப்படும், தண்டிக்கப்படுவோம் என்ற அச்ச உணர்வு தவறு செய்யும் அரசியல்வாதிகளுக்கு ஏற்படும் நோக்கிலேயே இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், லோக் பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டத்தில் இல்லாத காலக்கெடு இந்த புதிய சட்டத்திற்கான மசோதாவில் நிர்ணயிக்கப்பட்டுள்ளதுதான் சிறப்பான ஒன்று என சுட்டிக்காட்டினார்.

முறையான ஆவனங்களை சேகரித்த பிறகான விசாரணையின் முடிவில்தான் ஒருவர் கைது செய்யப்படும் நிலையில், ஜாமீன் கிடைக்காதபோது தான், 31வது நாள் தானாகவே பதவி இழப்பார் என்பதையும் பிஜேபி மாநில நிர்வாகியான பால் கனகராஜ் தெளிவுபடுத்தினார்.

ஒவ்வொரு இந்தியா குடிமகனும் சட்டதிற்கு முன் சமமானவர்கள் என்பதையும், அதிகாரத்தில் இருந்தாலும் தவறு செய்தால் உடனடியாக அங்கீகாரம் பறிக்கப்படும் என்பதையும், இந்த சட்டம் உணர்த்துகிறது என விளக்கம் அளித்த அவர், தங்களது கட்சியை சார்ந்தவர்கள் மீதும் வழக்குகள் இருப்பதாக கூறும்நிலையில், அப்படிப்பட்ட சூழலில் இந்த சட்டத்தை கொண்டுவருபவர் தான் சிறந்த ஜனநாயகவாதி என்றும், சிறந்த அரசியல்வாதி என்றும் விளக்கினார்.

தன் கட்சிக்காரர்கள் மீதும் வழக்குகள் இருப்பதையெல்லாம் பொருட்படுத்தாமல், நாளைய இந்தியா நல்ல இந்தியாவாக மலர வேண்டும் என்ற நோக்கத்துடன் கொண்டுவரப்பட்ட இந்த மசோதாவை முழுமனதுடன் வரவேற்பதாகவும் வழக்கறிஞர் ஆர். சி. பால் கனகராஜ் தெரிவித்தார்.
[25/08, 15:45] Mukesh Reporter: RCP sir interview Sir

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com